Monday, April 16, 2007

திண்ணையும் அருணகிரியின் அயோக்கிய எழுத்தும்


திண்ணை பற்றி எனக்கு ஒரு நல்ல கருத்து இல்லை என்பதால் பார்ப்பதில்லை.


காந்தி-பெரியார் பற்றி அருணகிரி என்பவர் எழுதியிருந்ததைச் சொன்னார்கள்.அதற்கு உள்ள மரியாதை தரப்பட வேண்டுமல்லவா?மரியாதை கெட்டவர்களுக்கும் மரியாதை தருவது பெரியாரின் வழக்கம்.


28-8-1927 குடியரசு தலையங்கம்.


"முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியேதான் ம்காத்மாவிடம் நானும்,நமது நண்பரான திரு எஸ்.ராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது,என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும் ,சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்கவேண்டுமென்றும்,அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது,ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது.இரண்டாவது ஜாதி ஒழிக்கப்படவேண்டும்.இதற்கு இந்துமதம் என்பதை ஒழிக்க வேண்டியது.மூன்றாவது,பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்ற்க்கூடியதாயில்லை யென்றும் சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்."


1-9-1939 ல் நவசக்தி ஆசிரியராக திரு.வி.க. என்று கையொப்பமிட்டு சாமி.சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு' நூலுக்கு முன்னுறை எழுதியுள்ளார்.


"இந் நூற்றலைவர் இராமசாமிப் பெரியார் அவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர்.அவர்தம் புகழோ தென்னாட்டிலும்,வடநாட்டிலும்,பிற நாடுகளிலும் மண்டிக்கிடக்கின்றன!காரணம் என்னை?தோழர் ஈ.வெ.ரா வின் உண்மையும்,வாய்மையும்,மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எது?அஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது? உரிமை வேட்கை.உரிமை வேட்கை ஓங்க ஓங்க அஞ்சாமை எழுந்து பெருகும்.அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்துகொண்டே போகும்.அகவுணர்வு வளர்ச்சியினூடே பிறங்கி வருவது உண்மையும்,வாய்மையும்,மெய்மையும் செறிந்த அற்த்தொண்டு.


உரிமை வேட்கை,அஞ்சாமை முதலியன் சீர்துருத்தத் துறையில் ஈ.வெ.ரா செய்து வரும் பணி நாடறிந்த தொன்று.இன்னோரன்ன சிறப்புக்கள் பல மிடைந்துள்ள வாழ்வினராகிய பெரியாரின் வரலாற்ரைக்கொண்ட இத் தமிழ் நூலை நாடு பொன்னே போல போற்றி ஏற்கும் என்பதில் அய்யமில்லை." ஈ.வெ.ராமசாமி காங்கிரசிற்காக கடுமையாக உழைத்தவர்.செயலாளர்,தலைவர் பதவிகள் வகித்தவர்.ஒரு கால்த்தில் காங்கிரசே தென்னாட்டில் நாயுடு(கிருஷ்ணசாமி},நாயக்கர்{ஈ.வெ.ரா},முதலியார்{திரு.வி.க} கட்சியாகத்தான் கருதப் பட்டது.இந்து மதமும்,பார்ப்பனீயமும் ஒன்றும் பெரியாரைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்கவில்லை.பேச்சில்,கூட்டங்களில் அடி தடி,செருப்பு மற்ற பாம்பு முதல் பலவும் வீசப்பட்டு,மாநாட்டில் தீவைத்து ,உயிருக்குக் குறி வைத்து என்று பலவிதமான எதிர்ப்புக்களை இந்து மதப் பழக்கப்படி செய்து பார்த்தனர்.ஒன்றும் பலனில்லாமல் அடங்கி விட்டனர் என்பது சரித்திரம். சரித்திரத்தை,


உண்மையை திரிப்பதும் அதற்கு திண்னை ஒரு ஆதரவு அளிப்பதும் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை.பெரியாரைப் பற்றி சிரியோரின் சின்ன புத்தி எழு்த்துக்கள் ஒன்றும் புதிதல்ல.பெரியார் அதுதான் எனக்கு விளம்பரம் என்றார்.


தொடரட்டும் திண்ணையில் விளம்பரம்.

2 comments:

╬அதி. அழகு╬ said...

//ராமசாமி நாயக்கர் கூட 60-வயதில் மகள் போன்ற ஒருத்தியை மணந்து 30 வருடங்களுக்கு மேல் இரண்டாம் மண வாழ்க்கை வாழ்ந்து 90- வயது தாண்டி இயற்கையாய்த்தான் இறந்தார். ஆனால் அவரது கு-க்ளக்ஸ் -கான் வகை பாசிச வெறுப்பியல் குண்டர்களால் இன்றும் கூட பார்ப்பனர்கள் ஆபாசமாகப் பேசப்பட்டும் , அடிக்கப்பட்டும், வெட்டப்பட்டும் , குண்டெறியப்பட்டும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
.
.
இந்து தர்மத்தின் இந்த இளகிய தன்மைதான் ஈவேராவுக்கு இந்து தெய்வங்களை அவமதிக்கவும், பிள்ளையார் சிலைகளை உடைக்கவும், இராமருக்கு செருப்பு மாலை போடவும் வசதியாகிப்போனது; இல்லாவிட்டால் , சல்மான் ருஷ்டியைப்போலவோ தஸ்லிமா நஸரீனைப்போலவோ பாத்வா விதிக்கப்பட்டு உயிருக்குப்பயந்து ஒளிந்து வாழ வேண்டி வந்திருக்கும். 60-வயதில் இளம்பெண்ணை மணந்து , 90-வயது தாண்டி நிம்மதியாய் வாழ்ந்திருக்க முடியாது.//

திண்ணையைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கு மகேந்திரன்?

பெரியாரைக் கொச்சைப் படுத்துவன் எங்கேயிருந்தாலும் தேடிப் பிடித்துப் பட்டம் சூட்டும் கூட்டம் அது. பெரியாரை, 'சிறியார்' என்று ஒருவன் எழுதுவான்; அதைத் திண்ணை அப்படியே வெளியிடும். அப்புறம் அதைக் கண்டிப்பதுபோல் ஒரு மானா மானா கடிதம் எழுதி பெரியாரைக இன்னும் கொஞ்சம் திட்டும் - நாகரிகமாக.

அதே இதழில் அண்ணாவை நாகரிகமாக இழித்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும்.

Unknown said...

//from mail :

தோழருக்கு

வணக்கம்! என் கணினி சொதப்புகின்றது; பின்னூட்டம் இட முடியவில்லை;எனவே மின்னஞ்சல்.......

'திண்ணையும்.........' எனும் பதிவில்,
நாயுடு(கிருஷ்னசாமி)......என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
இச்சொல், உண்மையில் டாக்டர் பி வரதராஜலு அவர்களைத்தான் குறிப்பிடும். அவர் தமிழ்நாடு இதழின்
நிறுவனர்-ஆசிரியார்

பேராயக்கட்சி தேர்தலில் தோற்ற 1967 ல் அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும்
ரா.கிருஷ்னசாமி நாயுடு எனும் வேறு ஒருவர் இருந்தார்.

குற்றங்காண்பதாகக் கருதவேண்டாம்...இதை வைத்துக்கொண்டு
சிலர் கும்மியடிக்க அனுமதிக்கக் கூடாது என்பதால் எழுதினேன்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி முதலில் தெரியாததால் திரு வி.க அவர்களுக்கு நேற்று மெயிலிட்டேன்; அவரிடமிருந்து உங்களுக்கு தகவல் வரவில்லை என்று கருதுகிறேன்

டாக்டர் வரதராஜலு பற்றி பெரியவர் ஆனைமுத்து அய்யாவிடமிருந்து அறிந்து ஒரு பதிவிடுங்களேன்

தோழமையுடன்,
கோ.சிவஞானம்//