அனுமன் பற்றி கதைகளில் படித்து இருக்கிறோம், அனுமன் எந்நேரமும் இராமனை நினைத்துக் கொண்டு இருப்பாராம். அப்படி இராமனையே நினைக்கும் அளவுக்கு இராமன் யோக்கியவானாக இல்லை.
இங்கே நடந்த ஒரு ஆப்பரேஷன் அனுமன் திட்டத்தில் கண்டரியப்பட்ட ராமனின் கதை.
1. இராமன் மறைந்திருந்து அம்பு எய்தினான் - அவன் மாவீரன் அல்ல
2. இராமன் மாயமானைக் கண்டு மதிமயங்கிய சீதையின் சொல்கேட்டு அதைப்பிடிக்க பின்னே சென்றான் - நல்ல அறிஞனும் அல்ல
3. இராமன் தன் மனைவியுடன் காட்டுக்கு வந்தாலும் தம்பி இலக்குவனை அவ்வாறு மனைவியுடன் வருவதற்கு அறிவுரைக் கூரவில்லை - நல்ல எண்ணம் கொண்ட சகோதரனும் அல்ல
4.இந்திரனிடம் மோசம் போன அகலிகையை கற்புக்கரசி என்றவன் உத்தமியை தூற்றியவன்
5. இவற்றிற்கெல்லாவற்றிற்கும் மேல் பொன் போன்ற குணவதியை அவதூறு கிளப்பி தீக்குளிக்க வைத்தான்- கடைந்தெடுத்த அயோக்கியன்
இவன் மறைந்து இருந்து வாலிமீது அம்பு செலுத்திய போது முகமிலியாகத்தான் இருந்திருக்கிறான். ஆனால் இராவணனிடம் வீரவசனம் பேசும் போது தாம் ஒரு வீரன் நிராயுதபாணியாக இருக்கும் உன்னை கொல்லவில்லை இன்று போய் நாளைவா என்று சொல்லி இருக்கிறான்.
ஜெயராமன் - ஒரு இரட்டை வேடதாரி ஒருபக்கம் வைதீகம் பேசினாலும் மறுபக்கம் ஆபாசமாகவே சிந்தித்து இருக்கிறான்
இல்லாவிடில் இலங்கையில் இருந்து மீட்டுவந்த சீதையை தீயில் இறக்கி சோதிப்பானா. சிறையில் வைத்திருந்தாலும் அவளைத் தொடாத ராவணன் ஆண்மகனா இல்லை இந்த ஆபாச ராமன் ஆண்மகனா அனுமனே சிந்தித்துப் பார்
அனுமனே இன்னும் நீ ஏன் ஜெய் ராம் என்று சொல்கிறாய் ? அவன் ஜெய்ராமன் இல்லை பொய்ராமன்
தனது வீரத்தை மறைந்திருந்து தாக்குவதில் மட்டும் காட்டும் ஒரு கயவன் விட்டொழி இனி அவன் வாய்ச்சவடால் வைதீகத்தை
Thursday, April 12, 2007
Tuesday, April 10, 2007
மிருகாதிபத்தியம்
மிருகாதிபத்தியம்: எம்.பி.நாராயணபிள்ளை (மலையாளம்)
தமிழில்: மு.குருமூர்த்தி
குற்றச்சாட்டை மறுக்கிறேன்.
ரேஞ்சர் மரிய பூதம் விசாரணைக் கமிஷன் முன்பாக உறுதியாகச் சொன்னார்.
டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைப் புலி தின்றது உண்மைதான். ஆனால் அதற்கு நான் காரணம் இல்லை.
சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் இருந்தீர்கள் இல்லையா? ஒரு நபர் விசாரணைக் கமிஷன் கேட்டது.
ஆமாம்.
உங்களுடைய கையில் துப்பாக்கி இருந்தது இல்லையா?
இருந்தது.
துப்பாக்கியில் குண்டுகள் இருந்தன..... இல்லையா?
நிறைய இருந்தது.
அப்புறம் ஏன் சுடவில்லை?
டி.எ•ப்.ஓ. ஒரு மனிதர். அவரைச் சுட்டால் என்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர் என்னுடைய மேலதிகாரி.
கமிஷன் ஒரு நிமிடம் மெளனமானது. மெளனத்தைக் கலைக்கும் வகையில் கமிஷன் பேசியது.
எனக்குத் தெரியவேண்டியது அது அல்ல. டி.எப்.ஓ.தாமோதரன் நாயரை புலி தாக்கியபோது நீங்கள் ஏன் புலியைச் சுட்டுக் கொல்லவில்லை? உங்களுடைய மேலதிகாரியின் உயிரை நீங்கள் ஏன் காப்பாற்றவில்லை? என்பதுதான் கேள்வி.
சார்... சம்பவத்தை நான் நேரில் பார்த்தவன். நீங்கள் சொல்வதுபோல் புலி டி.எப்.ஓ.வை தாக்கவில்லை. காட்டில் தன்வழியே போய்க்கொண்டிருந்த புலியைத் தாக்கியது டி.எப்.ஓ.தான். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த ஒரு உயிரும் செய்யக்கூடியதைத் தான் புலி செய்தது. நியாயம் புலியின் பக்கத்தில் இருந்தது. அதனால்தான் புலியை சுடுவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை.
உங்களுக்கும் டி.எப்.ஓ.விற்கும் ஏதாவது கருத்து வேற்றுமை இருந்ததா?
இல்லை.
மரிய பூதம் மறுத்தார்.
ஒரு மேலதிகாரி என்ற முறையில் அவர் கெட்டிக்காரராக இருந்தார். தனக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொடுத்தார். அவரைப் பற்றி எல்லா ரேஞ்சர்களுக்கும் நல்ல மரியாதை உண்டு. மனிதர்கள் மீது இரக்கம் காட்டக் கூடியவர்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் உங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாக நினைவு உண்டா?
நிச்சயமாக இல்லை.
அப்படியிருக்கும்போது அவரை புலியிடமிருந்து காப்பாற்ற வேண்டியது உங்களுடைய கடமையில்லையா?
அவருடைய பக்கமிருந்து யோசித்துப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான்.... புலியின் பக்கமிருந்தும் யோசித்துப் பாருங்கள்..... புலிக்கு நாடு என்பது காடுதான். மனிதர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் அங்கே வாழ்ந்து கொண்டிருந்த புலியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயர் சுட்டார். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கிக் குண்டு புலியின் காலில் தான் பட்டது. தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக புலி டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயர்மீது பாய்ந்தது. ஒண்டிக்கு ஒண்டி நடந்த சண்டையில் டி.எ•ப்.ஓ.தோற்றார். சண்டையில் தோற்கும் உயிரைத் தின்பது என்பது புலிக்கு வாடிக்கை. அதன்படியே புலி டி.எ•ப்.ஓ.வை தின்றது. அதுமட்டுமல்ல. ரேஞ்சர் என்ற நிலையில் என்னுடைய கடமை காட்டில் உள்ள மிருகங்களையும் மரங்களையும் பாதுகாப்பதாகும். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு புலி ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டுக் கொண்டிருக்கும்போது நான் எப்படி அதைக் கொல்ல முடியும்?
அதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?
சும்மா பார்த்துக்கொண்டு நின்றேன். புலி டி.எப்.ஓ.வின் உடலை இழுத்துக்கொண்டு போனதற்கப்புறம் அவருடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டுபங்களாவிற்கு திரும்பி வந்தேன்.
டி.எ•ப்.ஓ.புலியைத் தாக்காமல் புலி டி.எ•ப்.ஓ.வைத் தாக்கியதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?
புலியை சுட்டு இருப்பேன்.
நீங்கள் இதற்கு முன்பு என்றைக்காவது ஏதாவது விலங்கை சுட்டிருக்கிறீர்களா?
ஒரே ஒரு தடவை மட்டும்.... மதம் பிடித்து அலைந்த யானையை கலெக்டருடைய உத்தரவுப்படி சுட்டிருக்கிறேன்.
யானை மக்களைத் தொந்தரவு செய்கிறதா என்று யோசித்துத்தான் யானையைச் சுட்டீர்களா?
இல்லை. அப்படியெல்லாம் யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. கலெக்டர் உத்தரவு போட்டால் எந்த மிருகத்தையும் கொல்லலாம். ஹைகோர்ட் உத்தரவு போட்டால் எந்த மனிதனையும் கொல்லலாம். அதுவும் தூக்கில் போட்டுத்தான் கொல்ல முடியும். கலெக்டருடைய எழுத்துபூர்வமான உத்தரவு கிடைத்தபொழுதுதான் யானையை சுட்டுக்கொன்றேன்.
உயிருக்காக போராடிக்கொண்டிருந்த டி.எ•ப்.ஓ. புலியை சுட்டுக்கொல்லுமாறு உங்களிடம் சொன்னாரா?
ஆமாம், சொன்னார்....சட்டப்படி கலெக்டருடைய உத்தரவு இல்லாமல் புலியை சுட்டுக்கொல்ல முடியாது நான் சொல்லிவிட்டேன்.
நீங்கள் சட்டவிதிகளை எழுத்துக்கு எழுத்து பின்பற்றியதாக கமிஷன் பதிவுசெய்துகொள்கிறது. டி.எ•ப்.ஓ. தாமோதரன் நாயருடைய உயிருக்கும் ஒரு புலியினுடைய உயிருக்கும் ஒரே விலைதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
காட்டில் புலியின் உயிருக்கும் நாட்டில் மனிதனின் உயிருக்கும் மதிப்புண்டு.
டி.எ•ப்.ஓ. காட்டை ஆளுகின்ற ஒரு மனிதன் என்பதை நினைத்துப்பாருங்கள். நீங்கள் கூட காட்டை ஆளுகின்ற ஒரு மனிதர்தான்.
இல்லை சார்..... நாங்களெல்லாம் நாட்டை ஆளுகிறவர்களுடைய பிரதிநிதிகளாக காட்டிலே வேலை செய்கிறவர்கள் என்பதுதான் சரி...... பழைய காலத்தில் நாட்டை ஆளுகிறவன் ராஜாவாகவும் காட்டை ஆளுகிறவன் சிங்கமாகவும் இருந்தார்கள். காட்டில் வசிக்கும் காட்டுவாசிகள்கூட நாட்டை ஆளும் ராஜாவை ஏற்றுக்கொள்ளாதபோது ஒரு புலி அதை ஏற்றுக்கொண்டு சாவதற்கு தயாராகவேண்டும் என்று சொல்வது சரியில்லை.ஒரு புலி ஊருக்குள் வரும்போது அதைக் கொல்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. எந்தக் காரணமும் இல்லாமல் டி.எ•ப்.ஓ. தாமோதரன் நாயர் புலியைச் சுட்டது காட்டிற்குள்ளேதான்.
அதாவது புலி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைத் தின்றது என்றும் அதனால் புலி ஒரு தவறும் செய்யவில்லை என்றும் நீங்கள் சொல்கிறீர்கள். அப்படித்தானே?
அது மட்டுமில்லை சார்...... டி.எ•ப்.ஓ.தாமோதரன் நாயரைக் காப்பாற்றுவதற்காக நான் புலியை சுட்டிருந்தால் அது மிருகங்களுக்கு நான் செய்யக்கூடிய ஒரு அநீதியாக இருந்திருக்கும். ஓர் உயிர் என்ற உயர்வான சிந்தனையில் இருந்து ஒரு மனிதன் என்ற கீழான இடத்திற்கு என்னுடைய புத்தி போயிருக்கும். இதுபோல கீழான சிந்தனைகளுக்கு நான் அடிமைப்பட்டால் என்னோடு சேர்ந்து வாழும் உயிர்களுக்கு ஆதரவாக, வேறு உயிர்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். இந்தியாக்காரனாக இருக்கும்போது வேறுநாட்டுக்காரனுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். கேரளக்காரனாக இருக்கும்போது வேறு மாநிலக்காரனுக்கெதிராக துப்பாக்கியைத் தூக்குவேன். அதற்கப்புறம் திருவாங்கூர்காரனாக இருக்கும்போது கொச்சிக்காரனையும் மலபார்காரனையும் கொல்ல துப்பாக்கியைத் தூக்குவேன்.
ஊர்க்காரனாக இருக்கும்போது அடுத்த ஊர்க்காரனுக்கு அநியாயம் செய்யத் தயங்கமாட்டேன். இப்படி கிராமம், குடும்பம், சொந்தக்காரன் அப்புறன் நான் என்று ஒவ்வொரு நிலையிலும் நீதியை மறந்து ஆட்டம் போட ஆரம்பித்துவிடுவேன். மிருகங்களை பிரித்துப் பார்க்காமல் இருந்தால்தான் வேறுயாரையும் பிரித்துப் பார்க்க மனம் வராது.டி.எ•ப்.ஓ.வும் புலியும் ஒண்டிக்கு ஒண்டி சண்டைபோட்டபோது இதையெல்லாம் செய்து பார்க்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
இவ்வளவும் சிந்திக்கின்ற நீங்கள் டி.எ•ப்.ஓ.வை புலியிடம் போகவேண்டாம் என்று ஏன் தடுக்கவில்லை?
நான் சொன்னேன் சார்........ டி.எ•ப்.ஓ.தான் கேட்கவில்லை.
அவர் என்ன சொன்னார்?
புலி மற்ற மிருகங்களை கொன்று தின்பதாகவும், புலியைக் கொல்வது மற்ற மிருகங்களைப் பாதுகாப்பதற்காகவே என்றும், அத்துடன் காட்டுக்கு ராஜா சிங்கமில்லையென்றும், வனத்துறை அமைச்சர்தான் காட்டுக்கு ராஜா என்றும் சொன்னார்.
அவர் சொன்னதும் ஒருவகையில் சரிதானே? கமிஷன் திருப்பிக்கேட்டது.
இல்லை..... காடு மிருகங்களுக்கானது. காட்டில் வாழும் மனிதர்கள் ரொம்பவும் கொஞ்சம். அதாவது வேடர்கள். காட்டிற்கு உள்ளேபோய் யார் மிருகங்களைக் கொன்றாலும் அவர்களைக் கொல்லக்கூடிய அதிகாரம் மிருகங்களுக்கு உள்ளது. அதேபோல நாட்டிற்குள் வந்து மனிதர்களைக் கொன்று தின்னும் விலங்குகளைக் கொல்ல மனிதர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு சரியான உவமை சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்தில் கோலோனியன் செகரட்டரி எப்படியோ அப்படித்தான் நம்முடைய வனத்துறை அமைச்சர். அவருடைய அதிகாரம் மனிதரால் கொடுக்கப்பட்டதுதான்.
மிருகங்களுக்கு சுய ஆட்சி வேண்டுமென்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்?
சார்....... எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் வரலாறும் அரசியலும் படிக்கிறவன், எனக்குத் தெரிந்தவரையில் சுய ஆட்சி என்பது தனக்கு விருப்பமான இயல்பான ஆட்சிமுறையாகும். அதாவது சிங்கத்தை ராஜாவாக ஏற்றுக்கொண்ட வழக்கமான ஆட்சிமுறை. ஜனநாயகமில்லை. உதாரணமாக ஆப்பிரிக்காவில் சுய ஆட்சி கிடைத்தபோது மக்கள் அவர்களுக்கு மிகவும் இயல்பான இடி அமீனை ஆதரித்தார்கள். மிருகங்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஆனால் மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் வனத்துறை அமைச்சரை அவை ஏற்றுக்கொள்வதில்லை. மனிதர்களுடைய சட்டதிட்டங்களும் கூட இப்படியேதான்.
வனத்துறையின் சட்டதிட்டங்கள் உங்களுடைய மனசாட்சிக்கு ஒத்துப்போகவில்லை என்ற முடிவிற்கு கமிஷன் வரலாமா?
அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அப்படி நீங்கள் எடுக்கிற முடிவு என்னை வேலையைவிட்டு நீக்குவதற்கு காரணமாகும்.இல்லையா?
ஆகலாம்..... ஆகாமலும் இருக்கலாம்...... அதுபோகட்டும்....... இந்த விசாரணை முடிவதற்கு முன்பாக உங்களுக்கு ஆதரவாக சாட்சிசொல்லுவதற்கு யாராவது இருக்கிறார்களா?..... அவர்களை விசாரிக்கவேண்டுமா?....
ஒரே ஒரு சாட்சி இருக்கிறது.
இப்போதே வரச்சொன்னால் விசாரணையை இன்றைக்கே முடித்துவிடலாம்.
பக்கத்தில்தானே இருக்கிறார்?
வெளியில் மரத்தடியில் இருக்கிறார். கூப்பிட்டால் வந்துவிடுவார்.
சரி...... யார் அவர்?
இதுவரை நடந்த சம்பவத்தில் அவர்தான் சார் பிரதான குற்றவாளி. அவர்தான் டி.எப்.ஒ. தாமோதரன் நாயரைத் தின்ற புலி. கூப்பிடலாம்.

Sunday, April 01, 2007
Wednesday, February 28, 2007
கோணல் பக்கங்களில்
சமீபத்தில் சாருனிவேதிதாவின் குரு பட விமர்சனத்தை அவரின் கோணல் பக்கங்களில் படிக்க நேர்ந்தது அதில் அவர் குரு படத்தை ஆகா ஓகோவென்று பாராட்டியதை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தினை திகில் படமென்பதையும் கீர்த்தனாவின் அபார நடிப்பை பேய் வேடம் என்றும் சொல்லி மிகக் கீழ்த்தரமான் ஒரு விமர்சனம் எழுதியிருப்பது அவரின் கோணல் பக்கம் எழுதும் கேனப் புத்தியின் வெளிப்பாடாக உண்ர்கிறேன் அந்த விமர்சன அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் பீயை மிதித்ததுபோல் உணர்ந்தேன். சாய்பாபாவின் விபூதிக்கு அடிமைப் பட்ட தலித்திய சிந்தனை பேசும் ஒரு முகமூடி போட்ட மதியாளனின் சிறுபுத்தி எப்படியெல்லாம் வேடம் கட்டும் எனப்து இப்போது புரிகிறது
Tuesday, February 27, 2007
என்னதேன் நடக்குது இங்கே
ரொம்ப நாளுக்கு பிறகு தமிழ் மணத்தில என்னோட பதிவு (கட்டு பேஸ்டுதான்யா ) நேற்று போட்டதுக்கு ஒரு ரெஸ்பான்ஸும் இல்லே ஆனா தேன்கூடு போய் பாருங்க அதிகம் பார்வையிடப் பட்டவை லிஸ்டுல என்னோட ரெண்டுமே இருக்கு இது என்னா ஒரே காமெடியால்ல இருக்கு. என்னோட வலைப்பூ ஹிட் கவுண்டரும் ஒன்னும் அதிகமா எகிறலை ஆனா தேன்கூடு மட்டும் என்னுடையதை அதிகம் பேர் பாத்ததா சொன்னா யாராலயும் மட்டுமில்லை என்னாலையே நம்ப முடியலை இதுக்கு யாரும் விளக்கம் சொல்லுங்கப்பா. உன்மையிலேயே தேன்கூடு தானியங்கி திரட்டியா? இல்லை எதுவும் தேனீக்கள் வேலை செய்யுதா?
Monday, February 26, 2007
தமிழச்சிகள் ஏன் வெற்றி பெறுவதில்லை
"இப்பத்தான் தலைப்பிலேயே தமிழ் வந்திருக்குது. அதிலேயே ஆயிரத்தெட்டு பிக்கல் பிடுங்கல். அதுக்குள்ளே உங்க ஆராய்ச்சியை ஆரம்பிச்சிட்டீங்களா? நடிக்கிற பொம்பள தமிழா இருந்தா என்ன, மலையாளமா இருந்தா என்ன, மும்பையிலிருந்து இறக்குமதியானதா இருந்தா எங்களுக்கென்ன? நாங்க நடிப்பையா பார்க்குறோம். பார்க்குறதுக்கு எத்தனையோ சமாச்சாரங்கள் இருக்கு. அதைப் பார்ப்பீங்களா, அதை விட்டுப்புட்டு அந்த நடிகை தமிழ்நாடா, இந்த நடிகை தமிழச்சியான்னு எதுக்காக வேலை மெனக்கெட்ட ஆராய்ச்சி?" -இப்படித்தான் கேட்டார் நண்பர். அதற்கு முன் அவரிடம் நாம் கேட்டது இதுதான்: "அசின், த்ரிஷா, நயன்தாரா, ஜோதிகா, சிம்ரன், பாவனா, மீராஜாஸ்மின்னு தமிழ்ப் படங்களில் ஏராளமான நடிகைகள் இருக்காங்களே... இவங்களில் எத்தனை பேர் தமிழச்சிங்க?" மைசூர் போண்டாவுக்குள்ளே மைசூர் இருக்குமான்னு சாப்பாட்டு ராமன்கள் கேட்பாங்க. அதுமாதிரி, தமிழ்ப்படத்திலே தமிழும்.... என்ன தான் தேடினாலும் தென்படாது.
ஏதோ பாட்டு கட்டுற கவிஞருங்க இருக்குறாங்க. அவங்க தயவிலேதான் இங்கிலிபீசுக்கு நடுவிலே தமிழு கொஞ்சம் தலையைக் காட்டுது. படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டா, தியேட்டருக்குப் போயி டிக்கெட் வாங்கணும், இல்லைன்னா திருட்டு வி.சி.டி வாங்கி டெக்கிலே போட்டுப் பார்க்கணும். படம் நல்லாயிருந்தா ரசிக்கணும்.
குப்பையா இருந்தா, மெட்ராஸ் பாஷையிலே திட்டணும். அதுக்கப்புறம் நம்ம பொழைப்பைப் பார்க்கணும். அதை விட்டுப்போட்டு நடிக்கிற பொம்பள தமிழச்சியா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணிப் பொழுதை வீணடிக்கக் கூடாது"-நண்பர் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனார். திருட்டுக் குறுந்தகடுகளுக்கு நடுவிலும் தமிழ்த் திரையுலகத்தை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் மனநிலையைத்தான் நண்பர் பிரதிபலித்திருக்கிறார். ஆராயும் மனமோ, அதற்கான நேரமோ இல்லாத ரசிப்புப் பித்தர்கள் பெருகியுள்ள திருநாட்டில், சினிமாவின் ஆதிகால சூப்பர் ஸ்டாரினி டி.ஆர்.ராஜகுமாரியில் தொடங்கி அண்மைக்கால சூப்பர் ஸ்டாரினி அசின் வரை பச்சைத் தமிழச்சிகளை அரிது அரிது காண்பது அரிது. அதற்கான விளக்கத்தையும் நண்பரே சொன்னார்.
"பச்சைத் தமிழனான ரசிகனுக்கு எப்போதும் அக்கரைப் பச்சையில் ஆசை அதிகம். உள்ளூர் கருவாச்சியைவிட, வெளியூர் வெள்ளைத்தோல்காரி மீது ஒரு மயக்கம் உண்டு. அதைச் சினிமாக்காரங்க ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டாங்க. அதனாலதான் பானுமதி, பத்மினி, அஞ்சலிதேவி, சாவித்திரி, சரோஜாதேவி, ஜெயலலிதா, வாணிஷ்ரீ, மஞ்சுளா, சுஜாதா, அம்பிகா, ராதா, ரேவதி, நதியா, குஷ்பு, கௌதமி, மீனா, நக்மா, ரம்பா, சிம்ரன், ஜோதிகா, சினேகா, த்ரிஷா, நயன்தாரா, அசின், ஸ்ரேயான்னு பட்டியல் போட்டால் வெளி மாநிலத்து நடிகைகள்தான் அதிகமா கொடி நாட்டியிருப்பாங்க. எப்போதாவது ஒரு ஷ்ரீப்ரியா, ராதிகான்னு தமிழ்த் திரையுலகத்தில் தமிழச்சிகளுக்கும் கொஞ்சம் இடம் கிடைத்திருக்கும்.
ஷ்ரீதேவி மாதிரி தமிழ்நாட்டில் பொறந்திருந்தும் வீட்டிலேயும் விருந்தாளிகள்கிட்டேயும் வேற மொழி பேசுறவங்களும், தமிழைவிட சமஸ்கிருதம் தான் பெருசுன்னு சொல்ற கூட்டத்தைச் சேர்ந்த பொண்ணுங்களும்தான் தமிழ்ச் சினிமாவில் நிறைய சாதிச்சிருக்காங்க. அவங்களையெல்லாம் தமிழச்சிங்க கணக்குல சேர்க்கிறதும் சேர்க்காததும் உங்க விருப்பம். ஆனா, ஒட்டுமொத்தமா பார்த்தா, 90% வெளிமாநிலப் பொண்ணுங்கதான் தமிழ் பீல்டில் நிலைக்கும். அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் இதுதான் நிலைமை" என்றார் நண்பர். அப்படின்னா, தமிழ்ப்படத்தில் தமிழ் நடிகைகள் கொடி நாட்டுறதுக்கு வாய்ப்பேயில்லையா என்றோம். நண்பர் நம்மை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் பேச ஆரம்பித்தார். "தமிழ்ப் பொண்ணுங்களுக்கும் சினிமாவுக்கும் ரொம்பத் தூரம்.
நீ நயன்தாரா மாதிரி இருக்கேன்னு எந்தப் பொண்ணுகிட்டேயாவது சொன்னா ரொம்ப உற்சாகமாயிடும். தன்னோட அழகு, ஒரு சினிமா நடிகை அளவுக்கு இருக்குன்னு பெருமைப்படும். அதே நேரத்தில், சினிமாவிலே நடிக்க வர்றியான்னு கேட்டா, சட்டுன்னு முகத்தைக் காட்டும். சில நேரங்களில் செருப்பைக் கூடக் காட்டலாம். ஏன்னா, சினிமா நடிகைன்னா மக்கள்கிட்டே ஒரு தவறான எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கு. ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயம்னு இருக்கிற நாட்டிலே ஆணாதிக்கம் அதிகமாகத்தான் இருக்கும். சினிமாத் துறையிலும் அந்த ஆதிக்கம் இருக்கு. அதனால நடிகைகளை வேற கோணத்தில் அணுகும் ஆண்களுக்குச் சினிமாத்துறையில் பஞ்சமில்லை. இதற்காகவே படத்தயாரிப்பாளர்ங்கிற பேரிலே வெங்காய வியாபாரி, வெள்ளை வேட்டி-சட்டை அரசியல்வாதி, பங்கு மார்க்கெட் பணக்காரன், பல்லுப்போன கிழட்டுப்பயல் இப்படிப் பலபேரும் பணத்தை மூட்டை கட்டிக்கிட்டு வந்திடுறாங்க. அவங்க நோக்கம் படம் எடுக்கிறதில்லை. நடிகைகளைப் பார்க்குறதுதான். இதுக்கெல்லாம் பயந்துதான் தமிழ்நாட்டுப் பொண்ணுங்க சினிமாவில் நடிக்க வருவதற்கு தயங்குதுங்க.
திறமையிருந்தாலும் முதலிடத்துக்கு வர முடியாது. ஆச்சி மனோரமாவுக்கு இல்லாத திறமையா? ஆனா, பத்மினியையும் சரோஜாதேவியையும் கதாநாயகிகளா ஆக்கிட்டு, மனோரமாவைக் காமெடி நடிகையாக்கிட்டோமே! தமிழ்ப் பொண்ணுதான் கோவை சரளா. அந்த நடிகைகிட்டே எவ்வளவு திறமை இருக்குங்கிறது கமலஹாசனுக்கு ஜோடியா சதிலீலாவதியிலே நடிக்கும்போதுதான் தெரிஞ்சுது. ஆனாலும், அதற்கு முன்னாடியும் பின்னாடியும் கோவை சரளா நகைச்சுவை நடிகைதானே! தமிழச்சி தமிழச்சின்னு பேசி என்ன பிரயோஜனம்? நம்ம சீமான்கூட தாகம் 15ஆம் ஆண்டு விழா மேடையிலே, தமிழ்நாட்டுப் பொண்ணுங்க நடிக்க வரத் தயங்குவதைப் பற்றி பேசினாரு. இப்படிப்பட்ட நிலைமை இருக்கிறதாலதான் அவரு பூஜாவை நாயகியாக்கி அந்த நடிகைக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டியதாயிடிச்சி. பாரதிராஜா, சீமான், சேரன், தங்கர்பச்சான் போலத் தமிழ் மண்ணைத், திரைப்படத்தில் அடையாளம் காட்ட நினைக்கிறவங்களுக்கே இந்த நிலைமை. தமிழ்நாட்டு மக்களுக்கு, நல்ல சினிமாவையும் சரியா கொடுக்கலை. சினிமா வுலகத்தின் நிலைமையைும் சரியா புரிய வைக்கலை.
ஆனா,வெளிமாநிலத்திலிருந்து வாய்ப்புத் தேடி வரும் பொண்ணுங்க, நம்ம தமிழ் சினிமாவுலகத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்குங்க. எதை எதை எதிர் பார்க்குறாங்கங்கிறதையும், அதற்கு எப்படி எப்படி நடந்துக்க வேண்டுங்கிறதையும் புரிஞ்சு வச்சிருக்குங்க. இப்ப நடிக்க வரும் வெளிமாநிலத்து பெண்களெல்லாம் நல்லா படிச்சிருக்கிறதாலே சினிமாவுலக ஆண்கள்கிட்டே சுலபமா ஏமாறுவதில்லை. நடிப்பு, அதற்கான பணம், தொடர்ச்சியான வாய்ப்பு, அதற்குரிய சிபாரிசு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொழிலதிபருடன் புது வாழ்க்கைன்னு தெளிவா இருக்காங்க. தமிழ்நாட்டைப் பற்றி அவங்களுக்கு இருக்கும் தெளிவு நம்மகிட்டே இல்லை.
இதையெல்லாம் கவனிக்காம, தமிழ்ச் சினிமாவில் தமிழச்சிகளே இல்லைன்னு அழுதா மட்டும் போதுமா?" -போட்டுத் தாக்கிவிட்டுப் போனார் நண்பர். அதுவுஞ் சரிதானே!

- கோவி.லெனின்
Thursday, February 15, 2007
சொல்ல மறந்த கதை.
முதலில் தமிழ் மணம் என்ற ஒன்றே இருப்பது தெரியாது. ஒரு முறை டோண்டு விவகாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்ததை படித்து ஆவலுடன் எட்டிப் பார்த்ததில் அங்கே இங்கே என இல்லாமல் எங்கும் நடக்கும் அரசியல் குழப்பம் இங்கேயும் இருப்பது தெரியவர ஆவல் தொற்றிக் கொண்டது .
கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் கதம்பம் கவிதைகள், வனவாசம் என எழுதியதில் முதல் ஹிட் சட்டமன்ற சன்டியர்கள் பின் அடியாள் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு சிக்கல் வர கதம்பம் தமிழ் மணத்தில் இருந்து தூக்கப் பட்டது.
மீண்டும் இணைத்தபின் எல்லாம் கலாய்த்தல், கற்பு திராவிடம் பெரியார் என தொடர்ந்து எழுதியதில் வலையில் இருக்கும் முகம் காட்ட விரும்பாத அனானிகளுக்காக ஆரம்பமானது அனானிகள் முன்னேற்ற கழகம். பின் விடாது கருப்புவின் பால் கொண்ட நட்பில் அதிலும் எழுதும் வாய்ப்பு நான் ஒரு பதிவுக்கு மேல் எழுதவில்லை..
கடைசியார் கதம்பத்தில் பார்ப்பண பன்றியும், பைரவனும் எழுதிய அன்றே என் வேலை போனது. மீண்டும் வேலை தேடி அலைய ஆரம்பித்த காரணத்தால் சுமார் பல மாதம் எழுத முடியாமல் போனது. வலையெழுதா காரணம் நேரமில்லை. அதற்குள் நான் கானாமல் போனதாக கழுகார் வத்திவைத்த காமெடியும் அரங்கேரியது.

பின் சில காலம் சென்று ஒரு நாள் எட்டிப் பார்த்தால் டோண்டுவே அப்போது பிரபலமாய் இருக்கிறார் இப்போது விவகாரம் வேறு . தனக்குத் தானே பொறி வைத்த எலியை பார்ப்பது போன்ற ஒரு பரிதாப பார்வையை தவிர என்னால் வேறு எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. (எலிச் சுட்டியை பிடித்து வானலில் வருத்து சாப்பிடச் சொன்ன திரு. போலியாரின் கமெண்ட் நிணைவுக்கு வருகிறது)
அப்படி இப்படி யென்று ஒரு நல்ல வேலையாக கிடைத்ததும் மீண்டும் கலமிறங்க தயாரான போது பிளாகர் பீட்டாவுக்கு மாறு என நச்சரிக்க கடுப்பேறி மாற்றியதில் டெம்ப்ளேட் காலி. அதை மாற்ற கொஞ்சம் சிரமமாகி ஒரு நல்ல அமைப்புக்கு கொண்டு வந்து மல்லிகா ஷெராவத்தை ஆடச் சொல்லி அனுப்பியதில் நாமக்கல் சிபி மட்டும் அவுட்டானார், இன்னும் மல்லிகாவுக்கு இருக்கும் மவுசு தமிழ் மணத்துக்கு தெரியவில்லை போலும். எப்படியோ சில சொல்ல வேண்டிய கதைகள் மிச்சம் இருப்பதால் இந்த கதையை இத்துடன் முடிக்கிறேன்.
அப்புறமென்ன... ஆள் வந்தாயிற்று அடித்து ஆடுங்கள் நண்பர்களே

Subscribe to:
Posts (Atom)