Monday, November 05, 2007

எவன் செத்தா என்னா இந்து இல்லையே !

குஜராத்தில் நடந்த இன ஒழிப்புக்கு நிகரான கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தய படுகொலை, கலவரங்கள் பற்றிய தெகல்காவின் உளவுச் செய்திகள் இந்தியாவெங்கும் அதிர்வலைகளை துவக்கிய போதும் அது ஏனோ தமிழக அரசியலில் கள்ள மவுனம் சாதிக்கிறது. அத்வானி என்னும் இந்து வெறியனின் தலைமையின் கீழ் இயங்கும் பார"தீய" ஜனதா கட்சி யின் அதிகார பூர்வ ஊழியர்கள் தாங்களே இந்த கொலைகளை செய்ததாகவும் "உங்களுக்கு மூன்றுநாள் கால அவகாசம் தருகிறேன் அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் " என்று சொன்னதாகவும் ஒருத்தன் "கற்பவதியான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை அறுத்து அவளையும் கருவையும் கொன்றதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததாகவும்" தன் கொலைவாய் மலற்ந்திருக்கிறான்.

ராமர் பாலம் என்றதும் தன் குட்டி மீசை துடிக்க கலைஞர் மேல் காழ்ப்பை வெளிப்படுத்தும் பித்துவானி இந்த விவகாரம் குறித்து வாயில் கொழுக்கட்டையோ இல்லை வேறு என்னத்தையோ வைத்திருப்பது போல மூடிக்கிடப்பது ஏன்? ஒரு மறுப்புக்கூட இல்லாமல் ?

ராமன் எந்த காலேஜில் படித்தான் எனக் கேட்டதும் தன் "தெரு"வாய் மலர்ந்த எதிர்கால இந்தியாவின் பிரதமர் ஜெயா இந்த விவகாரத்தில் தன் பார்ப்பன இந்துப் புனிதம் கெட்டுவிடும் என்றோ என்னவோ ஒரு மண்ணும் சொல்லாமல் மவுணம் சாதிக்கிறார்.

இல்லாத ராமன் பற்றி என்னவர்கள் பேசினால் கனடாவில் இருந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கும் தன்னம்பிக்கை தம்பி விஜகாந்துக்கு இந்த விவகாரம் பற்றி கேட்டு வாய்திறக்கச் சொன்னாலோ அரசாங்கம் பட வேலைகளில் அரிதாரம் பூசுவதே என் தொழில் என்கிற மாதிரி எகிரி எட்டே போகிறார். அட ஒரு கண்டனம் வேண்டாம் வழக்கம் போல குஜராத்தில் அடுத்த 2011ல் எங்கள் ஆட்சிதான் பாஜக காங்கிரஸுக்கு ஒரு மாற்று ஜட்டி நாந்தான் என்றாவது ஒரு புள்ளிவிவரப் போர் தொடுக்கலாம்.

இன்னும் சரக்கு குமார், என நீளும் லிஸ்டில்

தமிழ்க்குடிதாங்கி அய்யா ஏனோ இன்னும் தன் கண்டனத்தை, ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை , திருமாவோ அன்புத் தோழி ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற கவலையில் அடுத்த ஜோடியாக மீனாவை நடிக்க வைக்க முயல்கிறார் போலும். கருணாநிதிக்கு வயதாகிவிட்டது இன்னும் அதனால் அவர் தனது முதல்வர் பதவியை துறக்க வேண்டும் எனச்சொன்ன ஞானியோ இந்த விவகாரம் பற்றி வாய் திறப்பதென்றான் ஒன்னுமே எனக்கு தெரியாது அத்வானியா அது யாருன்னே தெரியாது என தண்ணீருக்குள் வாயு பிரிக்கிறார். சோ ராமசாமிக்கு வயதாகிப் போனதாலோ என்னமோ இப்போதெல்லாம் தன் பேட்டிகள் தாறுமாறாக கிழிக்கப் படுவதாலோ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு என ஒரு நாட்டாமையை கூப்பிட்டு
தீர்ப்பு சொல்லச் சொல்வதாக காற்று வாக்கில் செய்தி.

வைகோவுக்கு பொள்ளாச்சியை கட்டி இழுப்பதே பெரிய வேலை. சோனியாவும் மன்மோகனும் எங்கெல்லாம், வாய் திறக்கனுமோ அங்கெல்லாம் மவுனம் சாதித்தே ஓட்டு அறுவடை நடத்த கூட்டுத் திட்டம் போடுகின்றனர்.

மூச்சை வேகமாக விட்டால் கூட முக்கியதாக கூறி கேஸ் போடும் சுப்பிரமணியன் சாமி சேது சமுத்திரத்தை கவிழ்க்கும் வேலையில் ஆழ்ந்து கிடப்பதால் இது பற்றி பேசவே நேரம் இல்லை.

இவ்வளவு ஏன் குஜராத் சம்பவம் பற்றி பகுத்தறிவுப் பகலவன் பள்ளியிலே படித்த கலைஞர் ?

ம்ஹீம் என்னத்த சொல்ல செத்தது முஸ்லீகள் தானே நமக்கு என்னான்னு என்னா "இந்துசாதி" தலைவர்களும் முடிவு பன்னிட்டாங்க போல இருக்கு -

Sunday, November 04, 2007

ஜெவுக்கு நறுக்குன்னு நாலு யோசனைகள் !!

விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்க்கு முதல்வர் கலைஞர் இறங்கல் கவிதை எழுதியதால் அவர் பதவிவிலக வேண்டும் என வீன் முழக்கமிடும் ஜெயாம்மாவுக்கு எனது சில யோசனைகள்

1. இந்த படுகொலைக்கு இறங்கல் தெரிவித்த பிபிஸி இனி இந்தியாவில் ஒளிபரப்பை தடைசெய்ய வேண்டும் என ஒரு போராட்டம் நடத்தினால் ஒலகம் பூரா ஒங்க பேரு பரவி ஒரு பரபரப்பை உண்டாக்காது?

2. கலைஞர் கருணாநிதி கார்க்கியோட தாய் நாவலை காவியமாக்கி அதை இப்போ சினிமாவாவும் எடுக்கிறாங்க . ஆனா இது கார்க்கிக்கு தெரியுமா ? அவரோட அனுமதி இல்லாம அவர் கதைய திருடின மைனாரிட்டி கருணாநிதிக்கு எதிரா ரஷ்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கனும்னு மாஸ்கோவுல போய் ஒரு பேட்டி கொடுத்தா சும்மா பிச்சிகிட்டு போகாது?

3. என் வீட்டில் நுழைந்த தண்டபானி கலைஞர் சொன்னபடி தமிழ்ச்செல்வன்
அனுப்பிய விடுதலைப்புலி அவர் மாட்டிக்கொண்டதும் தமிழ்ச்செல்வனைகாட்டிக்கொடுத்து அதன் மூலம் தான் மாட்டிக்கொள்வோமோ என கயவன் கருணாநிதிதான் தமிழ்ச்செல்வனை கொன்றது என ஒரு குண்டை போட்டால் இலங்கை முதல் இந்தியா வரை ஒரு ஆழிப்பேரலை ஏற்பட்டு அப்படியே இந்த அரசும் கவிழ்ந்து ஆட்சிக் கட்டிலில் புரளலாமே அம்மா?
4. எல்லாத்தையும் விட புலிகளுக்கு ஆதரவா தமிழ்மணம் செயல்ப்பட்டு தனக்கு அடிக்கடி குட்டு வைக்கும் பாசிச வலைப்பதிவுன்னு சொல்லி அதையே தடை பன்னிட்டா ஒங்க பேரும் புகழும் ஒரே நேரத்தில பரவிடாதா ஒலகம் முழுக்க?
5. ஆமா பக்கத்துலயே ஒரு பல்லு புடுங்குன புலி(அதான் உங்க அண்ணன் வைகோ) யை வச்சிருக்கீங்களே ஒங்களுக்கு பயமா இல்ல?

Friday, November 02, 2007

'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. -தமிழ்ச்செல்வனின் இறுதி உரை


'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் 'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுவைத்த பின்னர் சிறப்புரையாற்றுகையிலேயே தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்தார்.

'இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.' எனவும் அவர் தனது சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.

'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கணிநுட்பக்கூட்டு நிறுவனமும்இ ரி.ஆர் ரெக் நிறுவனமும் இணைந்து இந்த இதழை வெளியிட்டன.

பொதுச்சுடரை தமிழீழ மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கண்ணன் ஏற்றினார். தமிழீழ தேசியக்கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.

மாவீரர் பொதுக்கல்லறைக்கு ஈகச்சுடரை அன்னை இல்லம் பணிப்பாளர் அருட்திரு எட்மண்ட் றெஜினோல்ட் ஏற்றினார். தொடர்ந்து கருத்துரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையை இதழாசிரியர் லலிதாமதி நிகழ்த்தினார். முதல் படியை சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டு வைக்கஇ தமிழீழ கல்விக்கழக துணைப்பொறுப்பாளர் அருள் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.

நூலின் ஆய்வுரையை விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப்பொறுப்பாளர் யோ.செ.யோகி நிகழ்த்தினார்.

சு.ப.தமிழ்ச்செல்வன் இங்கு உரையாற்றுகையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

'அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் அதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றார். எங்களுடைய தேசத்தில் புதிய தலைமுறை அறிவியல்துறையில் தொழில்நுட்பத்துறையில் மேம்பட்ட சமூகமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற தமிழீழத் தேசியாத்தலைவர் அவர்களின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் வடிவம் கொடுக்கும் வகையில் கணிநுட்பப்பிரிவு எழுத்துள்ளது. அதன் ஒரு வெளிப்பாடாக எமது தாய்மொழியில் கணிநுட்பம் தொடர்பான ஒர் அறிவியல் சஞ்சிகையை அவர்கள் தொடக்கியுள்ளனர். இதனை மிகவும் மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கை தரும் முயற்சியாக நாங்கள் பார்க்கின்றோம்.

மனிதனின் அசைவியக்கத்தின் ஓர் உறுப்பாக இன்று கணினி மாறிவிட்டது கணினி யுகத்திற்குள் நாங்கள் புகுந்து கொள்ளாவிட்டால் இந்த உலகப்பந்தில் எங்களை நிலைப்படுத்திக் கொள்ளமுடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுவிடுவோம். அடுத்தது இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

போர்ச் சூழலுக்குள் அது சாத்தியமாகுமா என்பது கேள்வி. போர் திணிக்கப்படும் போது எங்களுக்கு எல்லாமே தடுக்கப்படும்இ தடைசெய்யப்டும். அதற்கான வாய்புகள் மறுக்கப்படும். ஆகவே இந்தக்கட்டத்தில் நாம் நின்று கொண்டு உலகப்பந்திலே அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் நாங்கள் இருக்கின்றோம். அது சாத்தியமாகுமா என்பதுதான் கேள்வி இதனையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாத்தியமாக்கியிருக்கின்றார்.

எல்லாருக்கும் அதுதான் அதிசயம். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது உலகில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. எல்லாவற்றையும் அதிசயமாக பார்க்கிறார்கள். அதற்கு காரணம் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் வழிநடத்தல்களும்தான். இன்று எதிரி எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்து எங்களின் தேசத்தை அழிப்பதற்கு தமிழினத்தின் விடுதலைப் போரை இல்லாமல் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கின்றான். அதற்குள் எதிர்நீச்சல் போட்டு அதை எதிர்கொண்டு அதை முறியடித்து எங்களுடைய விடுதலைப் போராட்டம் முன்னகர்த்தப்படுகின்றது என்றால் எமது தலைவர் அவர்களின் சிந்தனைதான்.

எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு மலரப்போகும் எங்களுடைய தமிழீழம் இந்தஉலகப்பந்தில் உயர்ந்து நிற்கும் என்ற உன்னதமான நம்பிக்கையை இன்று ஏற்படுத்தியுள்ளது அதனுடைய உயர்ச்சியும் தொடர்ச்சியுமாகத்தான் இச்சஞ்சிகையின் வெளியீடு அமைந்துள்ளது' எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

Thursday, November 01, 2007

செக்ஸ் டாய்ஸ் கடையில் சாருநிவேதிதா

இன்று கடந்த வார இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வே பற்றிய கவர்ஸ்டோரி கொண்ட புத்தகத்தின் விருந்தினர் பக்கத்தில் கழிவறைகளில் கிடக்கும் ஆணுறைகள் என்ற தலைப்பில் ஒரு நல்ல கட்டுறை எழுதியிருக்கிறார் அதாவது ......

"பிபிஓ அலுவலக கழிவறைகள் ஆணுறைகளால் நிரம்பி அடைத்துக் கொண்டு கிடப்பதாகவும் இதில் இருந்தே மத்திய தர மக்களின் பாலியல் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்" என்றும் எழுதிஉள்ளார். மேலும் பதினாறு வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்ள அணுமதி வழங்க வேண்டும் எனவும் பாலியல் தொழிலை அங்கீகாரப் படுத்த வேண்டும் செக்ஸ் டாய்ஸ் எனப்படும் பாலுறவு பொம்மைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விரைவான விவாகரத்துக்களுக்கு சட்டம் இடம் தர வேண்டும் எனவும் எழுதியுள்ளார். வழக்கம் போல (குஷ்பு சொன்னதை) தவறாக புறிந்து கொள்ளப்படும் அபாயங்கள் நிறைந்த கருத்து !!

சாருவின் கொடும்பாவியை யாராவது கலாச்சார காவலர்கள் கொளுத்தும் முன் அவரே சொன்ன மாதிரி எங்காவது பாரீஸில் அவர் நண்பர் நடத்தும் செக்ஸ் பொம்மைகள் விற்கும் கடையில் வேலை பார்ப்பது நல்லது

:)

Monday, October 29, 2007

மோடி என்ற நரமாமிச ஓநாய் !!

கருணாநிதி உண்ணாவிரத பந்தலில் உச்சா போய் நீதிமன்றத்தை அவமானப்படுத்திவிட்டார் ஆட்சியைக் கலைக்கனும் என்று சொல்லிய பார்பன பத்திரிக்கைகளும், பார்பனர்களும், தெகல்காவால் அம்பலப்பட்டுக் கிடக்கும் மோடி என்ற நரமாமிச ஓநாய் குறித்து பேசாதது ஏன் ?

நிறைமாத கர்ப்பிணியினை புணர்ந்து, அவள் வயிற்றை கீறி, கருவை வெளியே எடுத்து வீசிவிட்டு அவளை கொன்று தீவைத்து எரித்தோம் என்று பஜ்ரங்தள் என்ற இந்துத்துவ தீவிரவாத கூட்டத்தை சேர்ந்த ஒருவன் வாக்குமுலம் கொடுத்திருக்கிறான். பயங்கரவாதி மோடியின் ஆசிர்வாதத்துடன், விருப்பத்துடன் நடைபெற்றதாக் சொல்கிறான். தமிழக நாளிதழ்களில் இது பற்றி பேசப்படுவதில்லையே ஏன் ? செத்துப் போனது இந்து இல்லை என்பதாலா ?

அதே துணிச்சலில் குஜராத் கும்பல்கள் தமிழ்நாட்டில் ஊடுறுவி செயல்பட எவ்வளவு நாள் ஆகும் ? வாய் மூடி கிடந்தால் சிறுபாண்மையினர் அச்சத்தை போக்கவில்லை என்றால் கோவை குண்டுவெடிப்புகள் போல் தமிழ்நாட்டில் இந்து மத வெறியர்களும் நடத்த மாட்டார்களா என்ன?

நேற்று இஸ்லாமியர்களை அழித்தான், நாளை கிறித்துவர்களை அழிப்பான். அதன் பிறகு திராவிடர்களை அழிப்பான். தமிழர்கள் இந்துத்துவா இனவெறி பாசிச கும்பல்களுக்கு தமிழகத்தில் என்னாளும் துணை போகக்கூடாது.

இந்துமத வெறியர்களுக்கு எதிரான கண்டம் ! மோடிகளும் அவனுடைய கேடிகளும் தூக்கில் இடப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டு கோசமாக இருக்கவேண்டும்! எல்லாவற்றுக்கும் ஓ போடும் சோவும், ஞானியும் இதற்கும் ஒருவேளை ஓ மட்டுமே போடுவார்களோ இல்லை
உச்சா போன நீதி மன்றம் மோடியை பார்த்து மூடிக்கொண்டிருக்கிறதா வாயையும் இன்னொன்றையும்?

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்புக்கு ஆதரவாக இந்துத்துவாவின் கொடுமைகளை தண்டிக்காவிட்டால், கண்டிக்காவிட்டால், இஸ்லாமியர்கள் நம்பிக்கை இழந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினால் அதற்கு நாமும் நம் மெத்தனமும் பொறுப்பு

வாழ்க இலைக்காரன் வணங்கும் 80 கோடி பாசிச வெறிகொண்ட பயங்கரவாத இந்துக்கள்!!

Friday, October 19, 2007

நான் வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் !

மதுரையில் ஒரு தலித் வழக்கறிஞர் ஒருவருடன் ஏற்பட்ட தகராற்றில் அந்த வழக்கறிஞருக்கு, வாயில் மலத்தை பாமகவை சேர்ந்த மாவட்ட செயலர் திணித்திருக்கிறான்.

எல்லோருமே பெண்ணுறுப்பில் இருந்துதான் பிறந்தோம். ஆனால் மனுவேதம் பிரித்துப் போட்ட அடிப்படையில் வன்னியர்கள் பிரம்மாவின் மார்பில் இருந்து பிறந்த சத்திரியர்கள் என்றும், பிராமனர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் கருதிக் கொண்டு தம்முடன் கூடி வாழும் தலித் சமூகத்தை அவ்வப்போது அவமரியாதை செய்து வருகின்றனர். வன்னியனாக இருந்தாலும், தலித்தாக இருந்தாலும் உழைத்தால் தான் சோறு கிடைக்கும், வன்னியன் உழைக்காமல் உண்டு வாழும் பார்பானைப் போல் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டு தலித்துகளை கீழாக நடத்துகின்றனர். கோவிலுக்குள் விடுவதில் பிரச்சனை செய்வதில் இருந்து தீண்டாமை வரை பாப்பானைப் போலவே வன்னியர்களும் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பானுக்கு வன்னியன் தாழ்த்தப்பட்டவன் என்றும் வன்னியனுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் தமக்கு கீழே ஒருவனை தாழ்த்தி வைத்திருக்கும் மனுவக்கிரத்திற்கு ஏஜெண்டுகளாகவே செயல்படுகிறார்கள்.

தென் தமிழகத்தில் தேவர்கள் தலித்துக்கு எதிராக செயல்படுவது போலவே வடதமிழகத்திலும் பிற இடங்களிலும் வன்னியர்கள் ஆண்டைகள் போல் செயல்பட்டு வருகின்றனர். எல்லோரும் மனுசன் தானய்யா ? ஒருத்தன் காலில் பிறந்தான், ஒருத்தன் வாயில் பிறந்தான் ? எவனும் பெண் உறுப்பில் இருந்து பிறக்கவில்லையா ? தலித் ஏர்பிடிக்கவில்லை என்றால் ஏதய்யா சோறு ? சுடுகாட்டுக் போனாலும் கட்டையை அவன் தானய்யா வேகவைக்கிறான். கேடுகெட்ட சாதி வச்சிக்கிட்டு என்ன மயித்தை புடுங்கப் போறிங்க ?

வன்னியர்கள் தொடர்ந்து தலித்துகளை அவமரியாதை செய்துவருவதைப் பற்றி படிக்கும் போது வன்னியனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன். மனுச தன்மை மறந்து சாதி பெருமை பேசுகிறவனுங்க எல்லோருக்கும் காயடிக்கனும்.

தமிழச்சிக்கும் தமிழனுக்கும் !!

இன்று எதோச்சையாக வெப்பில் (வழக்கமாக மேய்ந்து வந்தபோதும் பதிவுகள் எழுதுவதில்லை.) வ"லை"ய வந்த போது ஒரு விசயம் அதிர்ச்சியை அளித்தது. சில நாட்களாய் நான் தமிழ் மணத்தில் எழுதாமல் இருந்தாலும் இங்கே தமிழச்சியை தலைப்பாக கொண்ட பதிவுகளை படித்து சிரிக்க நேரம் இல்லாமல் போனது. எதும் எழுதலாம் என்றால் ஒன்னும் நடக்கவே இலை கீற்று இணைய தளம் வேறு நெட் ஒருக் எரராம் :)

சரி வெப் தமிழனில் எதும் தேடலாம் என்றால் வந்தது சைட்டு ப்ளாக்குடு!!





என்ன கொடுமைங்க இது? அவன் அவன் காமலோகம் காதல் லோகம்னு கதை எழுதறான் அதையெல்லாம் ப்ளாக் பன்னல இன்னும் பல தொல்லகாட்சி சேனல் ஓப்பனாத்தான் இருக்கு வெப் தமிழனை ப்ளாக் பன்னிட்டானுங்க !!

இதை யெல்லாம் யாரு கேக்குறது?

நாமதான் இந்த லிங்கை புடிச்சி போனா அங்கே முறையிடலாம் அமீரக ஆளுங்ககிட்ட ஒலக மக்களான நாமதான் கொறைய சொல்லி மொறையிடனும் செய்ங்கப்பா!!