Sunday, November 04, 2007

ஜெவுக்கு நறுக்குன்னு நாலு யோசனைகள் !!

விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்க்கு முதல்வர் கலைஞர் இறங்கல் கவிதை எழுதியதால் அவர் பதவிவிலக வேண்டும் என வீன் முழக்கமிடும் ஜெயாம்மாவுக்கு எனது சில யோசனைகள்

1. இந்த படுகொலைக்கு இறங்கல் தெரிவித்த பிபிஸி இனி இந்தியாவில் ஒளிபரப்பை தடைசெய்ய வேண்டும் என ஒரு போராட்டம் நடத்தினால் ஒலகம் பூரா ஒங்க பேரு பரவி ஒரு பரபரப்பை உண்டாக்காது?

2. கலைஞர் கருணாநிதி கார்க்கியோட தாய் நாவலை காவியமாக்கி அதை இப்போ சினிமாவாவும் எடுக்கிறாங்க . ஆனா இது கார்க்கிக்கு தெரியுமா ? அவரோட அனுமதி இல்லாம அவர் கதைய திருடின மைனாரிட்டி கருணாநிதிக்கு எதிரா ரஷ்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கனும்னு மாஸ்கோவுல போய் ஒரு பேட்டி கொடுத்தா சும்மா பிச்சிகிட்டு போகாது?

3. என் வீட்டில் நுழைந்த தண்டபானி கலைஞர் சொன்னபடி தமிழ்ச்செல்வன்
அனுப்பிய விடுதலைப்புலி அவர் மாட்டிக்கொண்டதும் தமிழ்ச்செல்வனைகாட்டிக்கொடுத்து அதன் மூலம் தான் மாட்டிக்கொள்வோமோ என கயவன் கருணாநிதிதான் தமிழ்ச்செல்வனை கொன்றது என ஒரு குண்டை போட்டால் இலங்கை முதல் இந்தியா வரை ஒரு ஆழிப்பேரலை ஏற்பட்டு அப்படியே இந்த அரசும் கவிழ்ந்து ஆட்சிக் கட்டிலில் புரளலாமே அம்மா?
4. எல்லாத்தையும் விட புலிகளுக்கு ஆதரவா தமிழ்மணம் செயல்ப்பட்டு தனக்கு அடிக்கடி குட்டு வைக்கும் பாசிச வலைப்பதிவுன்னு சொல்லி அதையே தடை பன்னிட்டா ஒங்க பேரும் புகழும் ஒரே நேரத்தில பரவிடாதா ஒலகம் முழுக்க?
5. ஆமா பக்கத்துலயே ஒரு பல்லு புடுங்குன புலி(அதான் உங்க அண்ணன் வைகோ) யை வச்சிருக்கீங்களே ஒங்களுக்கு பயமா இல்ல?

11 comments:

Anonymous said...

அம்மாவின் அளவு தெரியாமல்
கேலி செய்யாதீர்கள்.

Anonymous said...

why you saying about vaiko in this issue.. inrum enrum vaiko will support LTTE.. Karunanidhi is a santharpavathii. unmayil anuthabam irunthal nedumaranin unnaviratham poraata vaakuruthi ennachu....? Ask kalaigar....

Anonymous said...

புலிகளின் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனின் மரணம்

யாருடைய மரணமும் மனித நாகரீகம் கொண்ட கண்ணியம் கொண்ட எவருக்கும் உவப்பானவையல்ல. வழிபடுதற்குரியனவல்ல.

நேற்றைய தினம்(02-11-2007) அதிகாலை 6.00 மணியளவில் கிளிநொச்சி இரணைமடு மற்றும் திருவையாற்றில் நிகழ்ந்த விமானக் குண்டு வீச்சில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு புலிகளின் முக்கியஸ்தர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகளின் சமாதான செயலகம் அறிவித்திருந்தது.

மனித மரணங்களை வன்முறை மனநோயாளிகள்தான் விரும்புவார்கள். நாம் அனைத்து வகைப்பட்ட மனித மரணங்களையும் வெறுக்கிறோம்.

ஆனால் புலிகள் மனிதர்களின் மரணங்களை மூலதனமாக்குபவர்கள். அதை வைத்து பணம் பண்ணுபவர்கள். அதை வைத்து தமது அதிகாரத்தை ஸ்தாபிப்பவர்கள். வாழ்வின் மீது நம்பிக்கையற்றவர்கள். மரணங்களை பூசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் மனிதர்களை வெறுத்து நடுகற்களை வழிபடுபவர்கள்.

சகோதர மாற்று தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொன்று விட்டு குதூகலித்தவர்கள். இந்தியாவின் முன்னாள் தலைவர் ரஜீவ்காந்தி அவர்களை படுகொலை செய்துவிட்டு அதனை வன்னியில் இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள். அப்பாவி தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லீம், சிங்கள மக்கள், நாட்டின் தலைவர்கள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள், சாதாரண பிரஜைகள் என பலரையும் கொன்றுவிட்டு குதூகலிப்பவர்கள். மக்களின் அவலங்களில் குளிர்காய்பவர்கள்.

மாற்று தமிழ் கட்சியினரை துணை இராணுவக் குழுக்கள் என விரோதமும் வன்மமும் தொனிக்க விளிப்பவர் பிரிகேடியர் சு.ப. இவர் எத்தனை பேரின் குரூர மரணங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர், எவற்றுக்கெல்லாம் குதூகலித்தவர் என்பதை இன்னோரிடத்தில் விரிவாக ஆராய்வோம்.

இந்திய அமைதி காப்பு படை இலங்கையில் நிலை கொண்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் புலிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல்களில் இவர் முன்னணியில் நின்றவர். இவருடைய குரூரங்களாலும், கொலை மனோபாவத்தாலும் பிரபாகரனின் விருபத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய ஆளாக தன்னை மாற்றிக் கொண்டார்.

தமிழ்ச்செல்வன் புலிகள் இயக்கத்தில் இருந்த மிதவாத தலைவரென சிலர் அவருக்கு முலாம் பூச முனைகிறார்கள். அவருடைய வசீகரமான முகத்தோற்றத்திற்கும் நஞ்சும் அயோக்கியத்தனமும் நிறைந்த அவருடைய மனதிற்குமிடையே பாரிய இடைவெளி நிலவியது என்பது பலருக்கு தெரியாத சங்கதி. அவர் ஒரு பாசிச இயக்கத்தின் அரசியல் பேச்சாளராக வெளிவேஷம் போட்டபடி உலா வந்தார் என்பதை பலரும் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.

இந்த பாசிச இயக்கத்தின் பிரமுகர்கள் அவர்களின் வெளிவேஷ சிரிப்பு இங்கிதம் என்பவற்றை வைத்துக் கொண்டு இனப்பிரச்சனையை அணுகுபவர்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையை தாம் நரக படுகுழிக்கு இட்டுச் செல்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதில்லை.

அவர் ஊடகவியலாளர்களுக்கு அதிகூடிய பேட்டிகளை அளித்தவர், அதிக பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியவர், சமாதானத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்று அகிம்சை முகம் ஒன்றை கொடுக்க பலரும் பிரயத்தனம் செய்கிறார்கள்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் ஏனைய சமூகங்களுடன் சகவாழ்விற்காகவும் இதயபூர்வமாக உழைத்த பல நூற்றுக்கணக்கான தலைவர்களை, சமாதான ஆர்வலர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்களை, போராட்டக்காரர்களை படுகொலை செய்த ஒரு பாசிச இயக்கத்தின் வேஷம் கட்டப்பட்ட பிரதிநிதி. இந்த அக்கிரமங்களையெல்லாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட, இந்த அக்கிரமங்களில் பல சந்தர்ப்பங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒருவர்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்.

ஒருவர் வெள்ளை உடையையும், முகத்தை மலர்வாகவும் வைத்திருந்தால் அவர்கள் சமாதானத் தூதுவர்கள் என்றில்லை. அயோக்கியர்களும் இத்தகைய வேடத்தை தாங்க முடியும்.

புலிகள் இயக்கம் சதிகளும், குழிபறிப்புக்களும் நிறைந்தவொரு இயக்கம் என்பதை நாம் மனதில் இருத்த வேண்டும். அண்மைக்காலமாக பல சதிகள் குழப்பங்கள் புலிகள் இயக்கத்தினுள் நிகழ்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரிந்த சங்கதிகளே. கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை படகு விபத்தில் படுகாயமடைந்தது ஒன்றும் தற்செயலான நிகழ்ச்சியல்ல என்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. இதேவேளை பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் புலிகளின் வேறு தளபதிகளுக்கிடையே முரண்பாடுகள், காழ்ப்புணர்வுகள் இருந்து வந்ததும் பரகசியம்.

குழிபறிப்பு என்பது புலிகளின் வரலாறு முழுவதும் காணப்படும் சமாச்சாரம். 70 களின் பிற்பகுதியில் பக்கத்தில் பாயில் படுத்திருந்த சகாக்களை நள்ளிரவில் கொல்லைபுற வாழை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தவர் தேசிய தலைவர் பிரபாகரன். அது மாத்திரமல்லாமல் அவர் முன்னர் அங்கத்துவம் வகித்த டெலோ இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 80 களின் முற்பகுதியில் தீவிரமாக அரச படைகளால் தேடப்பட்ட போது அவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயல்கையில் அவர்கள் பற்றிய தகவல்களை அளித்து அவர்கள் கைது செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்தவர். பிரதித்தலைவராக இருந்த மாத்தையா தனது பதவிக்கு சவாலாக எழுந்துவிடுவாரோ என அஞ்சி அவரை தீர்த்துக் கட்டியவா. யாழ்ப்பாணத்தில் புலிகள் நிகழ்த்திய தாக்குதலொன்றில் செல்லக்கிளியை பின்புறமிருந்து சுட்டவர்.

மன்னாரில் செல்வாக்குமிக்க புலி தளபதியான விக்டரை பின்புறமிருந்து சுட்டு படுகொலை செய்வதவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர். தேசியத் தலைவரின் இந்தக் கலையை, கைவண்ணங்களை புலிகளின் அடுத்த நிலை தலைவர்கள் கற்றிருக்கமாட்டார்கள் என்றில்லை.

தமிழ்ச்செல்வன் பரவலாக சின்டுமுடியும் ஆள் என பரவலாக புலிகள் இயக்கத்தினுள் கருதப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்படும் மித மிஞ்சிய முக்கியத்துவம் புலிகள் இயக்கத்தினுள்ளே காழ்ப்புணர்வுகளையும் குரோதங்களையும் அதிகப்படுத்தியிருந்தது. மற்றவர்களின் குற்றம் குறைகளை தலைவருக்கு போட்டுக்கொடுப்பவர் என பெயர் பெற்றிருந்தார்.

விமான குண்டுவீச்சை துல்லியமாக நடத்துவதற்கு வன்னியில் இருந்து கிடைத்த தகவல்களும் உதவியிருந்தன என படைத்தரப்பு செய்தி குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தகவல்களை அளிப்பதற்கு எத்தனையோ இலகுவான வழிகள் இருக்கின்றன. எனவே தமிழ்ச்செல்வனின் மரணத்தில் உள்வீட்டு பங்களிப்புக்களையும் மறுதலித்துவிட முடியாது.

தவிர மாற்று கட்சிகளின் தலைவர்களை, உறுப்பினர்களை, சர்வதேச தலைவர்களை, உள்நாட்டு தலைவர்களை படுகொலை செய்யும் போது அவர்கள் பெரும் எடுப்பில் மகிழச்சி ஆரவாரங்களை செய்வார்கள். அதேபோல் தமது கீழ்மட்டத்திலுள்ள உறுப்பினர்களை தற்கொலையாளிகளாக மாற்றி அவர்கள் வெடித்து சிதறும் போது அவர்களின் இரத்தமும் அவர்களால் கொல்லப்பட்டவர்களின் இரத்தமும் சங்கமமாகும் போது குதூகலிப்பார்கள். அண்மையில் அனுராதபுரத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலிலும் தமது குதூகலிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இந்த குதூகலங்களுக்கு இடையே குறிப்பிட்ட சில மரணங்கள் மட்டும் மிகைப்படுத்தப்பட்ட சோகத்துடன் நினைவு கூரப்படும். அண்மையில் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் மரணமும் தற்போது தமிழ்ச்செல்வனின் மரணமும் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றவர்களின் உயிர்கள் அற்பமானவை என்றும் புலிகளின் தலைவர்களின் உயிர்கள் உப்பரிகை துயரங்கள் போலவும் ஏதோ சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவும் சித்தரிக்கப்படுகின்றது. புலிகள் எட்டடி பாய்ந்தால் புலிகளின் ஊதுகுழலான தமிழ் ஊடகங்களோ பதினாறடி பாய்வார்கள். தமிழர்களுக்கு ஒரேயொரு ரட்சகர் இருந்தார் அவரும் போய்விட்டார் என்பது போல அரற்றுவார்கள்.

யாருடைய மரணமும் மனித நேயம் கொண்டவர்களுக்கு, நாகரீகமான மனிதர்களுக்கு உவப்பானவையல்ல. தமிழ்ச்செல்வனின் மனைவி பிள்ளைகள் உற்றச் சுற்றத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒரு துயரம். இதேபோன்றதுதான் புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களின் உறவுகளினதும், உற்ற சுற்றத்தாரினதும் துயரம்.

வஞ்சகமும், சூழ்ச்சிகளும் போலித்தனங்களும் முதலில் எமது சமூகத்தில் இல்லாதொழிய வேண்டும். சிலரது மரணங்களை ஈடு செய்ய முடியாதது என்பதும், பலரது மரணங்களை துச்சமாக எண்ணுவதுமான இழிநிலை எமது சமூகத்தில் ஒழிந்தாக வேண்டும்.

சிறிதோ பெரிதோ சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் உயிர்த்தியாகங்களும் மதிக்கப்பட வேண்டும். சமூகம் தொடர்பில் ஒழிவு மறைவற்ற செயற்பாடுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் எமது சமூகம் விமோசனத்தை நோக்கிச் செல்ல முடியும். திறந்த வெளிப்படையான அணுகுமுறையில்லாத ஏகபிரதிநிதித்துவ பாசிச கருத்தியல் செயற்பாடு என்பன தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக செழுமையான ஆக்கபூர்வமான, பல நூற்றுக்கணக்கான பங்களிப்புக்கள் கருத்துக்களை, செயற்பாடுகளை நிராகரிக்கிறது. உடல் மீதியின்றி அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது. இது சமூகத்தை மேலும், மேலும் அழிவை நோக்கியே நகர்த்துகிறது. அரசியல், மனித உரிமை, பொருளாதாரம், சமூகம், கல்வி என பல்துறை செயற்பாடுகளின் ஆக்கபூர்வமான தேடலுடனான இயக்கத்தை இது நிராகரிக்கிறது. இதுவே எமது சமூகத்தின் இன்றைய பேரவலம்.

யாருடைய மரணமும் மனித நாகரீகம் கொண்ட கண்ணியம் கொண்ட எவருக்கும் உவப்பானவையல்ல. வழிபடுதற்குரியனவல்ல.

நன்றி.தமிழ்நியூஸ்வெப்

குசும்பன் said...

ஆமா பக்கத்துலயே ஒரு பல்லு புடுங்குன புலி(அதான் உங்க அண்ணன் வைகோ) யை வச்சிருக்கீங்களே ஒங்களுக்கு பயமா இல்ல?"

பல்லை மட்டுமா புடுங்கினாங்க?

பனிமலர் said...

என்ன மகேந்திரன் இலைகாரரது சாயல் உங்கள் எழுத்தில் அப்படியே தெரிகிறது. என்ன அவருக்கு எதிர்மறையாக எழுதி இருக்கிறீர்கள். நல்ல குறிப்புகளை வழங்கி இருக்கிறீர்கள், பார்த்து அப்படியே அவர்கள் உச்ச நீதிமன்றம் போய் இந்த குறிப்புகளின் பெயரால் ஆட்சியை கலைத்தால் என்ன என்று சொல்ல சொல்ல போகிறார்கள். அவர்களும் சொன்னாலும் ஆச்சர்யம் கொள்ளுவதற்கு இல்லை தான்...

முகவைத்தமிழன் said...

இன்னும் ஆழமாக போய்..

1)திரு.தமிழ்செல்வன் அவர்களின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய புலி ஆதரவாளர் தி.திருமாவளவனை கைது செய்து விடுதலைச் சிறுத்தைகளை தடை செய் வேண்டும் என்றும்.

2) மேற்கூறிய அதே காரணத்திற்காக போராட்டம் நடத்திய பெறியர் திராவிடர் கழகத்தை தடைசெய்ய வேண்டும் என்றும்.

3) மேற்கூறிய அதே காரணத்திற்காக மருத்துவர் இராமதாசை கைது செய்து பாட்்டாளி மக்கள் கட்சியை கைது செய்ய வேண்டும் என்றும்.

4) மேற்கூறிய அதே காரணத்திற்காக திராவிடர் இயக்கத் தலைவர் வீரமணியை கைது செய்ய வேண்டும் என்றும் தி.க வை தடைசெய ய வேண்டும் என்றும்.

5) தன்னைப்போல் இவற்றையெல்லாம் தட்டிக் கேட்காமல் மெளனமாக இரக்கும் காரணத்திற்காக காங்கிரசை இந்தியாவில் தடை செய்து பிரபாகரனின் கள்ளக் காதலி சோனியா காந்தியை நாடு கடத்த வேண்டும் என்றும்.

தமிழகததில் அதிமுக வைத் தவிற அனைத்த கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்ற யோசனைகளை கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.

பி.கு: வாஜ்பேயி, அத்வானி எல்லாம் அம்மாவை தற்சமயம் ச்நதிப்பதற்கே தயக்கமாம், அம்மாவை கண்டாலே ஓட்டமாம் எங்கே சந்தித்து விட்டு வெளியே போய் தமிழக கவர்னர் மீது கூறியது போல் தங்கள் மீது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று புகார் தெறிவிப்பாரோ என்று.

வாக்காளன் said...

ஜெ க்கு மென்டல் முற்றிவிட்டது.. பாவம்.. நல்ல மருத்துவரை அனுகவும்.

jollupandi said...

தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை - கலைஞர்

முன்னாள் நடிகை / முதல்வர்.. செல்வி செயலலிதா.. === ஆ ஐயோ அம்மா... ஆட்சி கவிழ்க்கனும்...


தமிழர் வாழும் இடமெல்லாம், தமிழ்செல்வன் புகழ் பாடுவோம்... வை கோ

இதுக்கு என்ன சொல்லப்போது அம்மா..

RATHNESH said...

நான்கு யோசனைகளும் நயமான யோசனைகள். அதிலும் மூன்றாவது . . . EXTRAORDINARY.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

கிளுமத்தூர் கார பயல்கள் எல்லாம் அம்மாவுக்கு ஜடியா கொடுக்கிற அளவில அம்மா வந்திட்டாகளா? அம்மாவின் ஆழம்தெரியாம விடுரீரு நீரு.

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. said...

"பல்லை மட்டுமா புடுங்கினாங்க?"

குசும்பரே ஏன் இந்த சந்தேகம்?

அண்ணன் வைகோவின் அடிசரக்கு
அம்மாவின் கையில் பத்திரமாக உள்ளது.

வீண் கவலை வேண்டாம்.