Monday, November 05, 2007

எவன் செத்தா என்னா இந்து இல்லையே !

குஜராத்தில் நடந்த இன ஒழிப்புக்கு நிகரான கோத்ரா சம்பவத்துக்குப் பிந்தய படுகொலை, கலவரங்கள் பற்றிய தெகல்காவின் உளவுச் செய்திகள் இந்தியாவெங்கும் அதிர்வலைகளை துவக்கிய போதும் அது ஏனோ தமிழக அரசியலில் கள்ள மவுனம் சாதிக்கிறது. அத்வானி என்னும் இந்து வெறியனின் தலைமையின் கீழ் இயங்கும் பார"தீய" ஜனதா கட்சி யின் அதிகார பூர்வ ஊழியர்கள் தாங்களே இந்த கொலைகளை செய்ததாகவும் "உங்களுக்கு மூன்றுநாள் கால அவகாசம் தருகிறேன் அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் " என்று சொன்னதாகவும் ஒருத்தன் "கற்பவதியான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை அறுத்து அவளையும் கருவையும் கொன்றதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததாகவும்" தன் கொலைவாய் மலற்ந்திருக்கிறான்.

ராமர் பாலம் என்றதும் தன் குட்டி மீசை துடிக்க கலைஞர் மேல் காழ்ப்பை வெளிப்படுத்தும் பித்துவானி இந்த விவகாரம் குறித்து வாயில் கொழுக்கட்டையோ இல்லை வேறு என்னத்தையோ வைத்திருப்பது போல மூடிக்கிடப்பது ஏன்? ஒரு மறுப்புக்கூட இல்லாமல் ?

ராமன் எந்த காலேஜில் படித்தான் எனக் கேட்டதும் தன் "தெரு"வாய் மலர்ந்த எதிர்கால இந்தியாவின் பிரதமர் ஜெயா இந்த விவகாரத்தில் தன் பார்ப்பன இந்துப் புனிதம் கெட்டுவிடும் என்றோ என்னவோ ஒரு மண்ணும் சொல்லாமல் மவுணம் சாதிக்கிறார்.

இல்லாத ராமன் பற்றி என்னவர்கள் பேசினால் கனடாவில் இருந்து கொண்டு கண்டனம் தெரிவிக்கும் தன்னம்பிக்கை தம்பி விஜகாந்துக்கு இந்த விவகாரம் பற்றி கேட்டு வாய்திறக்கச் சொன்னாலோ அரசாங்கம் பட வேலைகளில் அரிதாரம் பூசுவதே என் தொழில் என்கிற மாதிரி எகிரி எட்டே போகிறார். அட ஒரு கண்டனம் வேண்டாம் வழக்கம் போல குஜராத்தில் அடுத்த 2011ல் எங்கள் ஆட்சிதான் பாஜக காங்கிரஸுக்கு ஒரு மாற்று ஜட்டி நாந்தான் என்றாவது ஒரு புள்ளிவிவரப் போர் தொடுக்கலாம்.

இன்னும் சரக்கு குமார், என நீளும் லிஸ்டில்

தமிழ்க்குடிதாங்கி அய்யா ஏனோ இன்னும் தன் கண்டனத்தை, ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை , திருமாவோ அன்புத் தோழி ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற கவலையில் அடுத்த ஜோடியாக மீனாவை நடிக்க வைக்க முயல்கிறார் போலும். கருணாநிதிக்கு வயதாகிவிட்டது இன்னும் அதனால் அவர் தனது முதல்வர் பதவியை துறக்க வேண்டும் எனச்சொன்ன ஞானியோ இந்த விவகாரம் பற்றி வாய் திறப்பதென்றான் ஒன்னுமே எனக்கு தெரியாது அத்வானியா அது யாருன்னே தெரியாது என தண்ணீருக்குள் வாயு பிரிக்கிறார். சோ ராமசாமிக்கு வயதாகிப் போனதாலோ என்னமோ இப்போதெல்லாம் தன் பேட்டிகள் தாறுமாறாக கிழிக்கப் படுவதாலோ மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு என ஒரு நாட்டாமையை கூப்பிட்டு
தீர்ப்பு சொல்லச் சொல்வதாக காற்று வாக்கில் செய்தி.

வைகோவுக்கு பொள்ளாச்சியை கட்டி இழுப்பதே பெரிய வேலை. சோனியாவும் மன்மோகனும் எங்கெல்லாம், வாய் திறக்கனுமோ அங்கெல்லாம் மவுனம் சாதித்தே ஓட்டு அறுவடை நடத்த கூட்டுத் திட்டம் போடுகின்றனர்.

மூச்சை வேகமாக விட்டால் கூட முக்கியதாக கூறி கேஸ் போடும் சுப்பிரமணியன் சாமி சேது சமுத்திரத்தை கவிழ்க்கும் வேலையில் ஆழ்ந்து கிடப்பதால் இது பற்றி பேசவே நேரம் இல்லை.

இவ்வளவு ஏன் குஜராத் சம்பவம் பற்றி பகுத்தறிவுப் பகலவன் பள்ளியிலே படித்த கலைஞர் ?

ம்ஹீம் என்னத்த சொல்ல செத்தது முஸ்லீகள் தானே நமக்கு என்னான்னு என்னா "இந்துசாதி" தலைவர்களும் முடிவு பன்னிட்டாங்க போல இருக்கு -

6 comments:

poraali said...

சரியான கேள்வி ஆனால் பதில் வறது

poraali said...

சரியான கேள்வி ஆனால் பதில் வறது

poraali said...

சரியான கேள்வி ஆனால் பதில் வறது

Anonymous said...

பார்த்தியா முஸ்லிம்களுக்கு ஏதும் ஆனா யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, நமக்கு நாமே பாதுகாப்பு ஏற்படுத்திக்க வேண்டும் என இளைஞர்களை தீவிரவாதத்திற்கு இழுத்து அதன்பிறகு ஏற்படும் குண்டு வெடிப்பிற்கு இவண்கள் எல்லோரும் வந்து நாய் மாதிரி கத்துவானுங்க. வரும் முன் காப்போம் என்கின்ற புத்தி கூட எங்க போச்சுன்னு தெரியல.

Anonymous said...

In 2002 DMK dismissed this issue as an internal matter of that state. Karunanidhi, Vaiko and Ramadoss were happy in the company of BJP as they had ministers in the centre.They did not even demand
dismissal of Modi's govt or his resignation. The English press and TV Channels exposed what was happening there even as Mayawatis and Karunanidhis were turning a blind eye to that. So how could
Karunanidhi, Vaiko and Ramadoss say anything now against Modi.
Gnani had never supported Modi or BJP. He had been opposing them always. Vijayakanth and Sarathkumar are least interested
in such issues. For those who knew what happened in 2002 the Tehelka expose only confirmed what was known already. Perhaps you were not born in 2002 and that is why you are asking such questions :).

Anonymous said...

http://manamay.blogspot.com/2007/11/blog-post.html#links