மதிமுக வில் இருந்து கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் ஏறக்குறைய கூடாரத்தை காலிசெய்துகொண்டு தே.மு.தி.க விலும் திமுகவிலும் தங்களின் முகவரிதேடி போய்க்கொண்டிருக்கும் நிலையில் வைக்கோ மாத்திரம் தனியாக அங்கே இருந்து என்ன செய்யப் போகிறார்?.
அவரும் மதிமுகவை விட்டு வெளியேறிவிட்டால் எல்.ஜி. நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் அவர் அவர் வேலையை( வேறென்ன எதாவது ஒரு கட்சில சேர்றதுதான்) பார்க்க போய்விடுவார்கள். ஒருவேளை இருக்கும் எம் எல் ஏ க்களை என்ன செய்வது என்று யோசிக்கிறாறோ என்னவோ?. நான் அதற்க்கொரு ஐடியா சொல்வேன்
தலைக்கு இவ்வளவு என்று விலைபேசி திமுகவிடமோ அல்லது அதிமுக விடமோ விற்றுவிட்டால் போச்சு? ;))அவர்களுக்கும் ஆள்பற்றாக்குரைதானே. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு பா.ஜ.க. அவர்கள்தான் பாவம் எம்புருசனும் கச்சேரிக்கு போனான் கதையாக தேர்தல்தோரும் மண்ணை கவ்வுகிறார்கள். அவர்களுக்கு ஒரு ஆறுதல். ஆகா நம்ம கட்சியில சேரவும் ஆளிருக்கு நாம இனிமே வேகமா உள்ளாட்சி தேர்தல சந்திக்கலாம்னு. ஆசை வரும்.
அறிவிக்கபடாத பகுதிநேர வேலையா அதிமுகவுக்கு கொ.ப.செ வா இருக்கறத விட அதிலேயே சேந்துட்டா? முழுநேர வேலையும் கிடைக்கும் அடிக்கடி தயாநிதி மாறன திட்ட மேடையும் கிடைக்கும். அப்படியே புதுசா அதிமுகவுல சேந்தவங்க எல்லாரையும் கூட்டிகிட்டு சென்னைல இருந்து காஷ்மீர் வரைக்கும் ஒரு நடைபயனம் போனா ( அட சர்வாதிகார கருணாநிதி ஆட்சிய ஒழிக்கன்னு சொல்லவேண்டிதுதான) ஜெயாடிவில போட்டு ஒங்கள தமிழகத்தின் விடிவெள்ளி நடைபயன காட்சி பாகம் பதினாறு அப்டீன்னு எப்பிசோட் போட்டு காட்டுவாங்க. நீங்களும் காஷ்மீர் நடந்து போயிட்டு வாரதுக்குள்ள அடுத்த எலக்ஸன் வந்திரும்.
ஒருவேள செயா டிவில காட்டுலன்னா நடந்தது வேஸ்ட் அப்டின்னு நீங்க நெனச்சா அதுக்கும் அய்டியா இருக்கு அடுத்து திமுகவுல சேந்து என்னய செயா டிவீல காட்டுல அதால வந்துட்டன் அதோட இது தாய்க்கழகம்னு ஒரு உடு வுட்டா தலைவரும் ஒங்கள சேத்துக்க மாட்டாறா?. அட அவரு இல்லன்னாலும் மாறன்கிட்ட சொல்லி கொஞ்சம் ரெகமண்ட் பன்னா அதெல்லாம் சேத்துக்குவாரு.
அடுத்து மேடைல ஏறி அது அடிமைகளின் கூடாரம் மன்னார்குடியின் மணல்மேடு அப்டீன்னு அறிக்க வுட வேண்டீதுதான். நமக்கென்ன பேசவா தெரியாது. நீங்க பாட்டுக்கு அமெரிக்க வெள்ளை ஏகாதிபத்தியம் ஒழிக அதிமுக ஒழிக கோஷம் போட்டா கூட்டம் பின்னி பெடலெடுக்காது?.அப்டியே ஜெயா பிர்லாவை மிரட்டினார்னு ஒருகுண்ட போட்டா அதிமுகவே நூறா செதரிபோகாது? சசிகலாவுக்கும் மிடாசுக்கும் சொத்துதகராறு அதால நான் வந்துட்டன்னு சொல்லுங்க நின்னுபாக்க எடம்பத்தாது, ஆனா ஒன்னுங்க போறதா இருந்தா சொல்லிட்டு போங்க இல்லன்னா அவ அவன் ஊடால எந்திரிச்சு அந்த நாப்பது கோடி என்னாச்சுன்னு கேப்பான்.
நாஞ்சில் சம்பத்து வேர கிட்டதட்ட அதிமுகவுல சேரப்போறாரு. அந்தம்மா விஜயா தாயன்பன் தலைவா சரணம்னு திமுகவுக்கு வந்துடுச்சு அப்றம் இன்னொருத்தர் விஜயகாந்துகூட நின்னா ஒரு ஒன்றிய கவுன்சிலராவது கெடைக்காதான்னு அங்க போய்ட்டாரு. நீங்க தனியா இருந்தா எல்.ஜி. மாதிரி ஆளுங்க கிட்ட பேசிப்பேசி மற கழண்டு போகும். இல்லண்ணா ஏதாவது புத்தகம் போட்டு விக்க வேண்டீதுதான்.
அதும் நீங்க எழுதுன புத்தகம்லாம் வாங்க ஆளில்லாத தாயகத்துல கெடக்கறதா கேள்வி அப்ப அதும் சரிவராது. நீங்க பாட்டுக்கு சிறை அனுபவம் எழுதிட்டு அவங்க கூடவே சேந்தா எப்டி சேலாவும்? ஏதோ உங்க மகன் சிகரட்டு ஏசண்டாமே அவருகிட்ட சொல்லி நல்ல வேல கிடைக்குமான்னு பாருங்க இல்லாட்டா வேர எதாவது பண்னுங்க இப்டியே அதிமுக திமுகன்னு மாறிமாறி கொடிபுடிச்சா ஒங்க கொடி மறந்துபோறதா ஆளுங்க ஒரே பொலம்பல்.
சும்மா இருக்காம இனிமேலாவது ஏதாவது உருப்படியா கட்சி நடத்த பாருங்க . இல்லன்னா நீங்க நடக்க பாருங்க. ஒரு சேனலும் ஆரம்பிச்சா உங்க நடபயணத்த போட்டு போட்டு பாக்கலாம். நல்ல மெகாசீரியல் போட்டு நாலு காசுபாக்கலாம். நீங்கதான் நல்லா அழுவீங்களே ஏதாவது ஏழ அப்பா வேஷங்கட்டி அழுதுக்க வேண்டீதுதான். காசுக்கு காசுமாச்சு பப்ளிசிட்டிக்கு பப்ளிசிட்டியுமாச்சு.
நான் சொல்ற யோசனைய கொஞ்சம் கேட்டா உங்க எதிர்காலத்துக்கு நல்லது. இல்லன்னா உங்க எதிரிங்களுக்கு நல்லது. இல்லன்னா உங்க கூட ஆரம்பிச்ச பா.ம.க இருவது சீட்டு செயிக்குது நீங்க இப்பதான் சட்டசபக்கே ஆளனுப்புறீங்க. அதுலயும் அம்மாவுக்கு ஆதரவா எல்லாரும் வெளிநடப்புவேர. இதைவிட அத செயிக்காமலே போயிருக்கலாம். அடுத்து எந்த எடத்துல இருந்தாலும் நான் மறக்காம இருப்பன்.
பாருங்க உங்கள பத்தி கட்டுர எழுத ஆரம்பிச்சா கடேசீல அது உங்களுக்கு எழுதுற லட்டரா போச்சி. எழுதுற எனக்கே இப்டீன்னா கூட இருக்கவங்க போறது தப்பே இல்ல. நா வரனுங்க.
2 comments:
பார்ப்பதற்கு வைகோ கிண்டல் அடிக்க பட்டுள்ளார் என்று தோன்றினாலும் வைகோவின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. அது எப்போதுமே அப்படி இருந்ததில்லை. மதிமுக என்பது திமுக வில் இருந்து பிரிந்து வந்த ஒரு க்ரூப் மட்டுமே. பொதுவான வாக்காளர்களை அது எப்போதும் ஈர்க்கவில்லை. கலைஞருக்கு அப்புறம் வேண்டுமானால் கூட வைகோ திமுக தொண்டர்களின் ஆதரவை பெற வாய்ப்பு இருந்தது. இறுதி கட்டத்தில் தவ்வி அதையும் கெடுத்து விட்டார். வைகோ வால் மக்களின் பலத்த ஆதரவையும் பெற முடியவில்லை. சரியான முடிவுகளையும் எடுக்க முடியவில்லை.
//பொதுவான வாக்காளர்களை// அது சரியே அதனாலேயே தனித்து நிற்க்கமுடியாமல் போகிறது மேலும் அவர் கடைசியில் தாவுவது ஏதோ கொஞ்ச பேருக்கு நெருடலையும் தரும் அந்த கொஞ்சபேரும் நடுநிலைவாதிகள்:)) எனப்படும் என்போன்ற வர்களின் வாக்குகளே அவரின் தோல்விக்கும் காரணம்.
Post a Comment