ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெறுவதாக இருக்கும் ஆர்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கலந்து கொள்ளாது என்று அக்கட்சி நிலைப்பாடு எடுத்துள்ளது. அதே நேரம் இலங்கையில் அமைதி ஏற்படுவதற்க்கான முயற்சிகளை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுருத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. பா.ம.க. இப்போது இருக்கும் நிலையில் அது எடுத்த முடிவு சரி என்றே கருதலாம் .
மத்திய அரசில் பங்குகொண்டிருக்கும் எந்த ஒரு கட்சியின் வெளிநாட்டு அரசியல் கொள்கைகள் பற்றிய முடிவும் அது அரசின் கொள்கைகளை பின்பற்றுவதே வாடிக்கை. அதனால் தான் தி.மு.க கூட இந்தியாவின் நிலைப்பாடே எங்களின் நிலைப்பாடும் என்று கூறுகிறது. அதுகூட கைகழுவும் நிலைதான். எனக்கெதுவும் தெரியாது மத்திய அரசிடம் கேள் என்பதன் மறுஒலிபரப்பு.
பா.ம.க. வோ வலியுருத்துவோம் என்கிறது அதன் முடிவை தெளிவாகவே சொல்கிறது. அடிப்படையிலேயே புலிகள் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவரான வைகோ இப்போது எதுவுமே பேசவில்லை. தயாநிதி மாறனை கொல்ல முயல்வதாக திமுக உறுப்பினர்கள் பிரதமரிடம் தந்த மனு ஒருவேளை அவரின் வாயை அடைத்திருக்கலாம். அல்லது சமீபகால தங்கையான செல்வி. ஜெயலலிதா வாய்ப்பூட்டு போட்டிருக்கலாம். அதிமுக எதுவும் கருத்து சொல்லாததில் வியப்பில்லை.
ஆனால் இது ஏதோ தமிழர்கள் பிரச்சணை என்பதால் மத்திய அரசு வாய்திறக்க மறுக்கிறது. தமிழக அரசு தனது நாற்காலியை காப்பாற்ற மவுனம் சாதிக்கிறது.ஆனால் அங்கிருந்து வரும் தமிழர்களின் வருகைக்கு வேண்டிய உதவிகளை செய்துதருமாறு கூறியிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இந்நிலையில் பா.ம.க செய்வதற்கு ஏதுமில்லை. அதனாலேயே அது நடைபெறவேண்டியது இப்போது அங்கே அமைதியை நிலைநிருத்த அரசை நிர்பந்திப்பது மட்டுமே தேவையானது. இலங்கை அரசு இந்தியாவின் தலையீட்டை விரும்புமா என்பதும் கேள்விக்குறி. அது நார்வேயின் சமாதானத்தையே சரியான முறையில் பின்பற்ற மறுக்கிறது. அமெரிக்கா இலங்கை சமாதானத்தில் ஆர்வம் காட்டப்போவதில்லை காரணம் அங்கே எண்ணெய் கிடைக்காது. ஏலக்காய் வேண்டுமானால் கிடைக்கும்.
இப்படி உலகநாடுகள் சமாதானத்திற்கான முயற்சிகள் எடுப்பதில்லை அல்லது அப்படி எடுக்கப்படும் முயற்சிகளை இலங்கை அரசு புறந்தள்ளி பூட்டு போடுகிறது. இழக்க ஏதுமில்லை எனும் நிலைக்கு தமிழர்களை தள்ளுவது ஒன்றே அதன் தலையாய குறிக்கோள். இலங்கையும் புலிகள் அமைப்பும் தங்களுக்குள் பேசித்தீர்த்துக்கொண்டால் ஒழிய இது எரியும் விஷயமாகவே தொடரும்.
அப்படி நடக்கும் வேளையில் இந்தியா வழக்கம் போல் மவுனமாக இருப்பது சரியான முடிவு அல்ல. நேபாளத்தில் நடந்த கலவரத்திற்கு உடனடியாக தீர்வுகாணும்படி தலையிட்டு நிர்பந்திக்கும் இந்தியா இலங்கை பற்றி பேசுவதில்லை. ஒருவேளை தனித்தமிழ்நாடு கோரிக்கை மீண்டும் எழும் என்று கவலைப் படுகிறதோ என்னவோ?
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படும் வரையில் இந்தியப் பெருங்கடலின் படகுகளின் நடமாட்டம் குறையப்போவதில்லை
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படும் வரையில் இந்தியப் பெருங்கடலின் படகுகளின் நடமாட்டம் குறையப்போவதில்லை
No comments:
Post a Comment