Sunday, June 18, 2006

கிழுமத்தூரில் ஓலைச் சுவடிகள்

கிழுமத்தூரில் ஓலைச் சுவடிகள்
பிப்ரவரி எட்டாம் தேதி எங்கள் ஊரான கிழுமத்தூரில் கண்டுபிடிக்கப் பட்ட ஓலைச்சுவடிகளின் விபரம் தி ஹிந்துவில் வெளியாகியுள்ளது.( நான் தற்போதுதான் பார்த்தேன்) அவ்வோலைச்சுவடிகள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பது மிகச்சரியாக குறிப்பிடப் படவில்லை. மேலும் அதில் இருக்கும் செய்திகளும் விபரமாக இல்லை. அதுபற்றிய தகவல்களுக்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு விரிவான கடிதம் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன் மேலும் அதிக தகவல் தெரிந்தவுடன் பதிவில் எழுதுகிறேன்( என் அப்பாவின் தாத்தாவுடைய நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான ஜாதகம் ஓலைச்சுவடியில் இன்னும் இருக்கிறது அது பழங்கால ஓலைச்சுவடியில் சேருமா.....என்பதை அறியேன்)

1 comment:

ENNAR said...

இதை படித்துப்பாருங்கள் எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்த ஒரு பகுதி
இருட்டறையில் தமிழக வரலாறு!


காலத்தால் அழியாதவை என்று கர்வப்பட்டு சொல்லப்படும் கல்வெட்டுக்கள்... மொழி வெறி யுடன் திரியும் சில அதிகாரிகளால் அழிந்து கொண்டு இருப்பதாகக் குபீர் குற்றச்சாட்டுக்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. ÔÔகடந்த நூறாண்டுகளாகக் கண்டு பிடிக்கப்பட்டு வரும் கல்வெட்டுக்கள், படித்துப் பார்க்கப்பட்டு, அவற்றில் உள்ள விஷயங்கள் நூல் களாக வெளியிடப்படவில்லை. படி எடுக்கப்பட்ட காகிதங்களும் சரியான பராமரிப்பின்றி அழிந்து கொண்டிருக்கின்றனÕÕ என்று பொங்குகிறார்கள், இந்தத் துறையில் ஆர்வம் மிக்க வரலாற்றாய்வாளர்கள்.
‘செம்மொழி எம்மொழி’ என்று கர்வப்படும் தமிழர் களாகிய நாம்தான் இந்தப் புகார் குறித்து அதிக அக்கறை காட்டவேண்டும். ஏனென்றால், அந்தக் கல்வெட்டுகள் அத்தனையும் தமிழ் கல்வெட்டுகள்!
அக்கால அரசர்களும், அதிகாரிகளும் கல்வெட்டு களில்தான் நாட்டின் சரித்திரத்தை எழுதி வைத்தனர். இத்தகைய கல்வெட்டுகள்தான் ஒரு இனத்தின் வரலாறு, கலாசாரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள உதவும் காலக் கண்ணாடி. கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் செதுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் சார்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்’ முறை யில் காகிதத்தில் நகல்