இன்று மாலை செய்தியில் நடிகர் விஜய் மீது பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம் சிவகாசி படம் தொடர்பாக. அதாவது வக்கீல்கள் பற்றிய தவறான வசனம் இருந்ததாக கூறி. தமிழ்சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் பொதுமக்களிடத்தில் மாறி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. ஒரு படத்தின் கதை மற்றும் கருத்துக்காக வழக்குகள் போடப்பட்டுவந்த நிலை மாறி அப் படத்தின் வசனங்களுக்காகவும் அதில் வரும் கதாபாத்திரங்களுக்காகவும் ஆட்சேபனை தெரிவிக்கும் நிலை ஓங்கி வருகிறது
அதாவது இந்தியர்கள் பொழுதுபோக்கு சினிமாவின் கதையில் அதன் காட்சிகளில் தனது பிம்பத்தை தேடும் மிகக் கீழான ஒரு நிலைக்கு போய்க்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. அதனால் தான் அதில் வரும் விமர்சனங்களை ஏற்க்கமுடியாமல் போகிறது. சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் ஆசிரியர்கள் பற்றி வந்த வசனம் ஒரு வழக்கை உண்டாக்கியது. அதுபோலவே சினிமாபடத்தின் தலைப்புகளை வைத்து. பாடல் வசனம் காட்சியமைப்பு என எல்லாவற்றிலும் நம்மவர்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது சினிமா எனும் ஊடகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது மாறாக கண்ணுக்கு தெரியாத ஒரு சினிமா எமர்ஜென்சி செயலில் இருப்பது போலவே தோற்றமளிக்க தொடங்கிவிடும்.
ஆசிரியர்கள் பற்றியும் அரசு அலுவலர்கள் பற்றியும் வழக்கறிஞர்கள் பற்றியும் மருத்துவர்கள் பற்றியும் காவலர்கள் பற்றியும் எவரும் அவர் அவர்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறுவது தவறென்று கூறும் இவர்கள் அந்த ஒவ்வாதகருத்துக்களை கூறும்படியான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்று நிரூபிக்க முடியுமா? ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை- நிஜம்தானே? வக்கீல்கள் வழக்குகளை பணத்துக்காக இழுத்தடிக்கிறார்கள் இல்லையென்று அவர்களால் வாதிட முடியுமா? டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பது பணத்துக்காக தேவையற்ற செலவீனங்களை அவர்களால் தவிற்க்க முடியாதா? அவர்கள் படிப்பதே அதற்குத்தானே?போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குவதாக காட்டுகிறார்கள். -கையூட்டு பெறாத காவலன் கடமைதவறிய கயவன் என்பது தானே இப்போதைய மாமூல் நிலை இது இப்படி இருக்க அந்த உண்மைகளை சினிமாவில் காட்டுவது இவர்களுக்கு வலிக்கிறது.
பாய்ஸ் படம் வந்தபோதும் இதே நிலை எத்தனை போராட்டம்?.குஷ்பு தங்கர்பச்சான் விருமாண்டி என எல்லாவற்றிலும் இதே நிலை நிஜம் எப்போதும் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கசப்பாய்த்தான் இருக்கும்.ஆனால் உண்மைஇல்லை என்று மறுக்க எவராலும் முடியாது
இன்று விஜய் சிவகாசியில் தவறான வசனம் பேசியதாக கொதிக்கும் வக்கீல்கள் ஒரு நல்ல வக்கீல் எப்படி இருப்பான் என்று நடித்த தமிழன் படம் வந்தபோது ஆகா எங்களுக்கு பெருமைதேடித்தந்தீர் வாழ்க என வாழ்த்து தெரிவித்தார்களா? இல்லையே ?. இலக்கணம் படத்துக்கு விருதுகொடுத்து பேசிய ராமதாஸின் கருத்து கூட இப்போது மாறிவிட்டது. நல்ல படம் எடுங்கள் விருது தருகிறோம் என்கிறார். ஆனால் சனநாயக தூண்களின் காவலர்கள் திருந்தியபாடில்லை உயிர்காக்கும் மருத்துவர்களின் ஓலம் குறையவில்லை. ஆசிரியர்களின் அலரல் மாறவில்லை. காவலர்களின் கையூட்டு அகலவில்லை இப்படி எத்தனையோ இல்லைகள். சினிமா ஒன்றும் மிக யோக்கியமானதல்ல அவர்களின் கருத்தில் உலகம் தலைகீழாய் திரும்பிப்போகும் என்பதற்கு. அவர்களின் முதுகின் அழுக்கை சுரண்டிப்பார்ததால் அது கூவத்தை விட மோசமாய் இருக்கும்.
அதில் தமிழன் தன் முகத்தை பார்க்க நிணைப்பது கேவலம். அது ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் வரும் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள் தேவையில்லாதது தானே மறையும். இதுபோன்ற செயல்கள் ஒரு சில சினிமாவின் நல்ல ஆத்மாக்களை ஊக்குவிப்பதற்குபதிலாக அவர்கள் இன்னும் கூட்டுக்குள் முடங்கி பிற்போக்கு சமுதாய கருத்துக்களை சொல்ல தொடங்கினால் அதன் விளைவு இன்னும் படுமோசமாய் இருக்கும்.
இதெல்லாம் போகட்டும் ஏதாவது மிருகத்தை வைத்து படமெடுக்கலாமென்றால் அதுவும் முடியாது. ப்ளூகிராஸ் உங்களை பயமுறுத்த காத்திருகிறது.
3 comments:
நியாயமான ஆதங்கம்.
நம் சமுதாயம் வளராமல் தேய்கிறது என்பதைத்தான் இந்த தொட்டாஞ்சிணுங்கி மனப்பான்மை காட்டுகிறது. படித்தவர்களே இப்படி இருந்தால் பாமரர்களைப் பற்ரி என்ன சொல்ல!
என் இந்த ஆதங்கத்திற்கு காரணம் தமிழ்முரசில் தலைப்புச் செய்தியாக அது வந்ததுதான். இவர்களுக்கு நாட்டின் எத்தனையோ செய்திகள் இருக்க விஜய் பிடிவாரண்ட் தலைப்பில் போடவே விருப்பம் கலைஞர் பெற்றுவந்த திட்ட ஒதுக்கீட்டு தொகைகூட இரண்டில் மூன்றில் இதற்கு முதலிடமா?
TEST COMMENT
Post a Comment