மச்சக்கார தவளைக்கு இப்போது நேரம் சரியில்லை போலும். கால் டு ஹானர் எழுதியவருக்கு ஹானர் இருக்கிறதா என்பதை சோதிக்கும் காலம் இது.
புத்தகத்தில் சொல்லியதை இல்லை என்றும் மறுக்கவில்லை ஆனால் அதில் சொன்னது யாரைஎன்று சொல்லவும் தைரியமில்லை. இன்று இந்தியாடுடேஹெட்லைன்ஸ் டுடே இல் பிரபு சாவ்லாவுக்கு அளித்த பேட்டியில் இந்த தவளை தனக்குத்தானே குழிபறித்துக் கொண்டது.
நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சர் எனவே அமெரிக்காவுக்கு உளவு பார்த்தது யாரென்று இப்போது பிரதமராக இருப்பவருக்கு தெரியும் என்றது. 1995ல் நடத்தப் படுவதாக இருந்த அணுசக்தி சோதனை அதனால் தான் தள்ளிவைக்கப் பட்டது.
எனவே அமெரிக்கா உளவுகளை கண்டு கொண்டதும் சோதணை தள்ளிவைக்கப் பட்டது என்றும் அது கதை கட்டியது.
இது உண்மையாய் இருக்கும் வேளையில் அதை பூடாகமாகவும் மன்மோகன் சிங் கேட்பது போல ஒரு சாதாரண கேள்விக்கான பதிலை மறைத்தும் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
கேள்வி இதுதான் : அந்த உளவாளி யார் ?
தானிருக்கும் நம்பிக்கை எனும் தண்ணீர் வற்றிய குளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் தவளையின் மரண ஓலம் அது, அதனால் பதில் சொல்ல முடியாது என்பது தெரிகிறது.
ஆதார நீர் நிலைகளான பாஜக வும் ஆர் எஸ் எஸ் எனும் இந்து வெறிபிடித்த கிணறும் அடிப்படையிலேயே கொஞ்சம் கொஞ்சமாக விஷமாகிப் போனதால் அந்த குட்டைகளிலும் இனி இந்த தவளையால் காலம் தள்ள முடியுமா என்பது சந்தேகமே. இது போன்ற நாட்டு நலனில் அக்கரை கொண்ட தவளை இன்னும் தன் தேசப்பற்றை வெளிப்படுத்துகிறது இப்படி....
பிரபு சாவ்லா: இந்த பிரச்சனையை ஏற்படுத்தியது தாங்கள் யார் அந்த உளவாளி?
தவளை : அந்த பெயரை கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மேலும் இதுபோல நடக்காமல் இருக்க ஆயத்தம் ஆகவேண்டும். நான் எப்போதும் உளவாளி இருந்ததாக சொல்லவில்லை அமெரிக்கா வுக்கு அணுஆயுத ரகசியம் சொல்லப்பட்டது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதுமட்டும் உண்மை உளவாளியாரென்று அரசே கண்டுபிடிக்கட்டும். மன்மோகன் சிங்குக்கு அது யாரென்று தெரியும் நான் சுட்டிக்காட்ட மட்டும்தான் முடியும் .
இந்த தவளை மீது பாராளுமன்றத்தில் உரிமைமீறல் பிரச்சணை கொண்டுவர முடிவுசெய்யப் பட்டுள்ளது
தன் வாயால் கெடும் தவளைகள் வாழ்க
3 comments:
தவளை கத்தி பாம்பிடம் மாட்டிக் கொண்டது என்ன இருந்தாலும் பிஜேபி பீஜேபிதாம்பா
மகி! என்ன ஓலம் போட்டாலும் எதுவும் நடக்காது.ஏன்னா எல்லாம் ஒரே குட்டையில் ஊறின
தவளைகள் தான் !!!.
//ஏன்னா எல்லாம் ஒரே குட்டையில் ஊறின
தவளைகள் தான் //
இந்த தவளைகள் தண்ணீரை விட்டு வெளியேராமல் இருப்பதே நலம். சும்மா கத்தி கத்தி பாம்புக்கு இறயாவதே வேலையாச்சு
Post a Comment