Saturday, August 26, 2006

எது தனிமனித தாக்குதல்

வலைப் பதிவுகளில் தனிமனித தாக்குதலுக்கு வரையரை. வலைப்பதிவுகளில் தனிமனித தாக்குதல் கூடாதென்று நான் வலைப்பூ ஆரம்பித்த நாள்முதலே சொல்லிவருகிறேன்.

எனது கருத்துக்களை கிழித்து கூறுபோடுங்கள் முடிந்த வரை என்னால் பதில் சொல்லமுடியும் . எனது கருத்துக்களை மறுத்தும்., எதிர்த்தும் வாதிடுங்கள் பின்னூட்டப் பெட்டி அதற்குத்தான் இருக்கிறது.

மிகப்பெரிய பின்னூட்டமாய் இருப்பின் அல்லது எனது கருத்தில் இருந்து விவாதத்துக்குரிய இன்னொரு பொருள் கிடைப்பின் அதை உங்கள் பதிவிலேயே என்னைச் சுட்டி ஒரு கருத்துக் களத்தை உருவாக்குங்கள் யாரும் ஒன்றும் செய்துவிடப்போவதில்லை.

தனிமனித தாக்குதலுக்கு வரையரை என்று எதைச் சொல்ல முடியும். என்னைப் பொறுத்த வரை. உங்கள் கருத்தின் மூலம் என் மனசு சோர்வடந்தாலே நான் தனிமனித தாக்குதலுக்கு உள்ளானதாக எடுத்துக் கொள்வேன்.

அப்படியிருக்க நான் எழுதும் பதிவுகள் வெளிப்படையான எந்த பதிவரையும் தாக்காத போதும் அதைப் படிக்கும் ஒருவரின் மனதில் வருத்தம் கொடுக்கும். அப்படியென்றால் நான் செய்தது. தனிமனித தாக்குதல் ஆகுமா?.

உடல் மனம் இரண்டையும் தனிப்பட்ட முறையில் தாக்கி காயப்படுத்தும் எல்லா விஷயங்களும் தனிமனித தாக்குதலே அப்படியென்றால் இவைகளும் தனிமனித தாக்குதல்களா?

1. கருணாநிதியை நயவஞ்சகர், மோசக்காரர் என்பது?

2.ஜெயலலிதாவை அல்லிராணி, சண்டியர்களின் தலைவி என்பது ?

3.வைகோவை பொய்கோ என்பதும், அவரின் தன்மானம் பற்றிய கிண்டல்

4.ரஜினி ரசிகர்களை பற்றி கேள்வி எழுப்புவது?

5.பெரியாரை ராமசாமி நாயக்கர் எனும்போது ராஜாஜியை பார்பனர் என்பது?

6.ராமதாஸை மரம் வெட்டி குண்டர்களின் தலைவர் என்பது?

7.சரத் குமாரை சரக்கு குமார் என்பது?

8.இழிபிறப்பு என்பதும், பூனூல் திமிரு என்பதும்?

9.சிம்புவின் ஆண்குறியை அறுப்பதும், திராவிட பெத்தடின் என்பதும்?

10.எந்த ஒரு பார்பன விடயம் அல்லது திராவிட விடயத்தையும் ஆரம்பித்தால் அதை இடஒதுக்கிடு வரை இழுத்து வந்து அன்புமணிக்கு மரம்வெட்டி பட்டம் தருவது?

11.திமுகவை ஆதரித்தால் அல்லக்கை என்பதும் , அ.திமுகவை ஆதரிப்பவர்களை அடிவருடி என்பதும்?

12. ஒரு மாற்றுக் கருத்துசொன்ன நபரை அவரின் பெயர்சொல்லி இப்படி செய்தது சரியா எனக்கேட்பது?

13.உள்குத்தாக வைக்கப்படும் வெளியில் தெரியும் குத்துக்கள் பதிவரை காயப்படுத்தும் வகையில் இருப்பது?

14.களத்தில் தொடர்புபட்ட நபரைத் தாக்கி எழுதுவது தனிமனித தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளப் படாதபோது அதை எழுதிய நபரைத் தாக்கி எழுதுவது தனிமனித தாக்குதல்..அவர் குடும்பத்தை அதாவது அப் பதிவுக்கு தொடர்பற்றவரை தாக்கி எழுதுவது ?

இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எந்த ஒரு கருத்துக் களத்திலும் நான் சொல்லுவதை மறுத்துப் பேச யாருக்கும் உரிமை உண்டு தனிமனித தாக்குதல் என்பது அந்த கருத்து சொன்ன பதிவரை தாக்குவதாக மட்டுமே எடுத்துக்கொண்டால், மற்ற ..

கருத்தில் விவாதிக்கப்படும் நபர் மீதான தனிமனித தாக்குதல் பற்றி என்ன சொல்வது அதை நாம் வரவேற்கிறோமா?

அப்படி கருத்துக் களத்தில் ஒரு நபரின் தனிமனித தாக்குதல் அனுமதிக்கப்படும் போது அக் கருத்தை சொன்ன பதிவர் மீதான தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எலோரின் விருப்பமும்.

இப்படி மிகச் சிக்கலாக இருக்கும் தனிமனித தாக்குதலுக்கான வரையரையை யாரும் அறுதியிட்டு இதுதான் தனிமனித தாக்குதலின் எல்லை எனச் சொல்ல முடியாது.

அப்படி சொல்லுவோம் என்றால். நமது கருத்துக்களை இங்கே வாதமாக வைக்க நமக்கு தகுதியிருக்காது.

உங்களுக்கு தெரிந்து தனிமனித தாக்குதலுக்கு வரையரை என்று எதைச் சொல்லுவீர்கள்?.

31 comments:

Sivabalan said...

மகேந்திரன்,

அந்த அந்த விசயத்தையும் ஆட்களையும் பொருத்துத்தான் எல்லாமே.. இதை வரையறுக்க முடியாது..

Unknown said...

//அந்த அந்த விசயத்தையும் ஆட்களையும் பொருத்துத்தான் எல்லாமே.. இதை வரையறுக்க முடியாது..
//

நன்றி சிபா நானும் அதையே சொல்வேன் அப்படியிருக்க தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுத முடியுமா?

Udhayakumar said...

இல்லை சிவா, மகி... பதிவை தாண்டி நான் பின்னூட்டத்தையும் இதில் சேர்த்துக் கொள்கிறேன்.

பின்னூட்டங்களில் தெளிவாகவே தெரியும், அப்படி இருந்தும் பின்னூட்ட கணக்குக்காக பதிவாளர்கள் வெளியிடுகிறார்கள். எல்லை ஆளாளுக்கு வேறுபடும் என்பதை ஏற்றுக் கொண்டாலும் இந்த சில்லி மேட்டரில் எனக்கு பல பேரின் மேல் வருத்தமே (மகி, உங்களையும் சேர்த்துத்தான்).

Unknown said...

//எனக்கு பல பேரின் மேல் வருத்தமே (மகி, உங்களையும் சேர்த்துத்தான்). //.

நன்றி உதயகுமார்... அந்த என்னையும் சேர்த்துதான் எனும் சந்தேகம் எனக்கே வந்ததால் தான் இப்பதிவே அவசியமாகிறது இப்படி ஆளுக்கு ஆள் வேறுபடும் ஒரு விசயத்தில் எப்படி தாக்குதல் இல்லாமல் எழுதுவது?

உங்கள் நண்பன்(சரா) said...

மகி!
திரு.சிவபாலன் சொன்னது போல் எடுத்துக் கொண்ட விசயத்தையும், பங்குபெறும் ஆட்களையும் பொருத்துதான் அனைத்தும்,

ஒரு வேளை பதிவு தனிமனிதத் தாக்குதல் இல்லை என்றாலும் அதற்க்கு வரும் பின்னூட்டங்களில் தனிமனிதத் தாக்குதல் இருக்குமாயின் அது பதிவையே சாரும் ஏனெனில் பதிவர் தான் மட்டுருத்தல் செய்பவர்.


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

//ஒரு வேளை பதிவு தனிமனிதத் தாக்குதல் இல்லை என்றாலும் அதற்க்கு வரும் பின்னூட்டங்களில் தனிமனிதத் தாக்குதல் இருக்குமாயின் அது பதிவையே சாரும் ஏனெனில் பதிவர் தான் மட்டுருத்தல் செய்பவர்.
/

நன்றி சரா சிவபாலன் சொன்னதோடு நானும் ஒத்துப் போகிறேன் ஆனால் இங்கே விஷயம் பின்னூட்டமா அல்லது பதிவிலா என்பதில்லை. தனிமனித தாக்குதல் என்று எதை வரையறையாகக் கொள்வது?என்பதுதான் .

Unknown said...

தனிமனித தாக்குதல் தவறில்லை.ஆபாச வசைகள் எவை,எவை என அனைவருக்கும் தெரியும்.அவற்றை பயன்படுத்தாத வரை தனிமனித தாக்குதல் தவறில்லை.

தனிமனித தாக்குதல் கூடாது என்போருக்கு நான் என் பதிவில் பயன்படுத்தும் நெறிமுறைகள் பயன்படலாம்.இவை என் நெறிமுறையே அன்றி வேறல்ல.

1.எந்த கருத்தையும்/தலைவரையும்/கோட்பாட்டையும் எவ்வளவு வன்மையாகவும் எதிர்க்கலாம்.(ஆபாச வசைகள் அன்றி)

2.இன்னொரு பதிவரை பற்றி எழுதும்போது
உள்நோக்கம் கற்பித்து எழுதுதல் (அவர் இப்படி சொல்ல காரணம் அவர் ஜப்பானில் இருப்பது..)
அவர் குணாதிசியத்தை,உருவ அமைப்பை எழுதுதல்(அவர் முட்டாள்,..)

3.பின்னூட்டங்களில் இன்னொரு பதிவரை இன்னொரு பதிவர்(ஆபாச வசை அன்றி) தாக்கினால் அனுமதிப்பேன்.அது என் கருத்து இல்லை.அவர் கருத்து என்பதால்.அவரை கேள்வி கேட்போர் அவரது வலைதளத்துக்கு நென்று கேள்வி கேட்டுக்கொள்ளலாம்

4.அனானிகள் இன்னொரு பதிவரை மோசமாக தாக்கி எழுதினால் வெளியிடமாட்டேன்.அனானி எழுதினால் யாரை போய் கேள்வி கேட்பது?

Unknown said...

//தனிமனித தாக்குதல் கூடாது என்போருக்கு நான் என் பதிவில் பயன்படுத்தும் நெறிமுறைகள் பயன்படலாம்.இவை என் நெறிமுறையே அன்றி வேறல்ல.
//

நன்றி செல்வன் மிக நல்ல விளக்கம், கிட்டத்தட்ட நாம் இருவரும் ஒரே கொள்கையை கடைப்பிடிக்கிறோம் :) ஆனால் ஆபாசமாக தாக்குவது மட்டும் தான் தனிமனித தாக்குதல் என்பதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் :

லக்கிலுக் said...

லிவிங் ஸ்மைல் வித்யா என்னை அரைவேக்காடு, விளம்பர வெறியன் என்று சொன்னால் அது தனிமனித தாக்குதல் அல்ல....

அதற்கு திருப்பி நான் பதில் அளித்தால் அது தனிமனித தாக்குதலாக கருதப்பட்டு குறி அறுப்பது வரை சென்று விடும்.....

Unknown said...
This comment has been removed by a blog administrator.
ரவி said...

இந்த மாதிரி சீரியஸ் பதிவெல்லாம் போட ஆரம்பிச்சீங்கன்னா பி.பி செக் செய்ய வேண்டி வரும், பரவாயில்லையா ?

நீங்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்..

எழுத்தால் காயப்படுவது மனம் மட்டுமே...

ராஜாஜியையோ பெரியாரையோ தாக்கி எழுதினால் எப்படி தனிமனித தாக்குதலாகும் ? அதை கேட்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு..

நீங்களோ நானோ போய் கேட்க முடியுமா ? அப்படி கேட்டால் - ஆயிரத்தெட்டு ஆன்லைன் லிங்க் தருவார்கள்..

பார் - ராஜாஜி அவர் வீட்டு சமையல் காரருக்கு சம்பள பாக்கி வைச்சிட்டு போய் சேந்துட்டார்..அவர் ரொம்ப கெட்டவர்...சரத்குமார் - சாயாவை விவாகரத்து செய்திட்டார், அவர் மோசமானவர்..

அந்த மாதிரி ஏதாவது...

மேலும் தனிப்பட்ட பதிவர்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கறை இல்லாமல் எழுதினால் - அதை தட்டிக்கேட்பது தனிமனித தாக்குதல் வகையில் சேர்ந்துவிடும்..

நான் என்ன வேனா எழுதுவேன், யாரும் கேட்கக்கூடாது - இது என்ன நிலை ?

நான் ஏற்க்கனவே ஒரு பதிவில் சொன்னமாதிரி - நீ எதுவேனா எழுதுறதுன்னா, அதை உன் வீட்டு டாய்லெட் சுவரிலோ, அல்லது டைரியிலோ எழுதிக்கோ..ஏன் பதிவில் எழுதி - தமிழ்மணத்தில் சேர்க்கிறாய் ?

அப்படி பொறுப்புணர்வு இல்லாமல் எழுதினால் - சாட்டையடியாக பின்னூட்டம் கொடுப்போம், வெளிட்டால் சரி..இல்லை என்றால் - தனிப்பதிவு போட்டு - தமிழ்மணத்தில் வெளியிட்டு - மற்ற பதிவர்களுக்கு தெரிவிப்போம்...

சமுதாய அக்கறை - பண்பாடு இல்லாத பதிவர்கள் கொஞ்சம் பேராவது இருக்காங்கள் இல்லையா ?

எடுத்துக்காட்டு சொல்லப்போனால்

- டெலிமார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரிகள் என்பது..

- பாதுகாப்பாக பெண்கள் உடலுறவு கொள்ளுங்கள் என்பது

நாளைய சமூகத்துக்கு கருத்துக்களை விட்டு செல்கிறோம் என்று அறியாமல் - வாந்தி செய்துவிட்டு போனால் என்ன செய்வது ? அந்த வாந்தியை எப்படி கழுவுவது ?

ஆசிட் ஊற்றித்தான் கழுவ வேண்டும்..

அது போன்ற நபர்களுக்கு கொடுக்கப்படும் சாட்டையடி - தனிமனித தாக்குதல் என்றால் - செய்யலாமே...தமிழ்மண நிர்வாகிகள் இந்த விஷயத்தில் மாற்று கருத்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

தமிழ்மணம் சொல்வது போல் :

///அண்மையில் இரு பதிவர்களின் சில பதிவுகள் சக பதிவர்களைக் கண்ணியக்குறைவாகத் தாக்கியிருப்பதால் அவற்றினை நீக்கும்படி பதிவர்கள் இருவர் தமிழ்மணத்தின் முறையீட்டு வசதியைப் பயன்படுத்திக் கேட்டிருந்தனர். மேலே சுட்டியிருப்பதுபோல, தமிழ்மணத்திற்கு இப்பதிவுகள் பொருத்தமற்றவை என்று தோன்றினால் நீக்கும் உரிமை முற்றாக இருப்பினுங்கூட, முடிவெடுப்பதிலே தன் அங்கமான பதிவர்களின் கருத்துகளையும் உள் வாங்க தமிழ்மணம் விரும்புகிறது.///

கண்ணியக்குறைவாக திட்டாமல் - ( ஓ..என்று ஆரம்பித்து ) சிரித்துக்கொண்டே - ஆப்பை உள்ளே இறக்குவதில்

எந்த தவறும் இல்லை....

அன்புடன்,
செந்தழல் ரவி

ரவி said...

////லிவிங் ஸ்மைல் வித்யா என்னை அரைவேக்காடு, விளம்பர வெறியன் என்று சொன்னால் அது தனிமனித தாக்குதல் அல்ல....////

லக்கி - அந்த குறிபிட்ட பதிவை எடுத்து - குடும்ப கட்டுப்பாடு சிம்பலை தட்டுங்க..

தமிழ்மணத்தில் இருந்து - இமெயில் செல்லும், நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்..

Unknown said...

யோசிக்க வேண்டியிருக்கிரது லக்கி :(
//லிவிங் ஸ்மைல் வித்யா என்னை அரைவேக்காடு, விளம்பர வெறியன் என்று சொன்னால் அது தனிமனித தாக்குதல் அல்ல....

அதற்கு திருப்பி நான் பதில் அளித்தால் அது தனிமனித தாக்குதலாக கருதப்பட்டு குறி அறுப்பது வரை சென்று விடும்//


பதிவு தொடர்பாக பதிவரைக்கூட தாக்கலாம் என்பவர்கள் தனிப்பட்ட தாக்குதல் என்பதற்கு எதுவும் வரையரை இருப்பதாக சொல்ல முடியவில்லை தனிமனித தாக்குதலுக்கு வரையரை இல்லாத போது எதை அளவுகோளாக கொண்டு தாக்குதலை காண்பது அல்லது புகார் செய்வது , கோபப் படுவது ?

Unknown said...

ரவி இங்கே நீங்கள் சொல்வது போல் செய்வதெல்லாம் தனிமனித தாக்குதல் இல்லை :)))
நாம கரடியா கத்துனாலும் இதை படிக்கக் கூட விரும்பாதவங்க தான் இருக்காங்க போல :(

Anonymous said...

பதிவுக்கு நன்றி சகோதரர் மகேந்திரன் அவர்களே.

//- டெலிமார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரிகள் என்பது..

- பாதுகாப்பாக பெண்கள் உடலுறவு கொள்ளுங்கள் என்பது


இப்பதிவும் இதனை சார்ந்து எழும்பும் கேள்விகளும் ஆரோக்கியமான ஓர் தீர்வை தருமானால் மகிழ்வேன்.

சகோதரர் விடாது கருப்புவின் "பார்ப்பனர் எங்கிருந்து பிறந்தார்கள்" பதிவை நீக்கக் கோரிய தமிழ்மணம் நிர்வாகியிடம் இது தொடர்பாக பின்னூட்டம் இட்டுள்ளேன்.

நான் அங்கு கேட்ட கேள்வியையும் தனிமனித தாக்குதல், ஆபாச எழுத்து தொடர்பாக நான் கோரிய விளக்கம் போன்றவற்றை தாங்கி அப்படியே ஒரு பதிவாக பதிந்துள்ளீர்கள். நன்றி.

//நாளைய சமூகத்துக்கு கருத்துக்களை விட்டு செல்கிறோம் என்று அறியாமல் - வாந்தி செய்துவிட்டு போனால் என்ன செய்வது ? அந்த வாந்தியை எப்படி கழுவுவது ?

ஆசிட் ஊற்றித்தான் கழுவ வேண்டும்..//


அப்படியே ஒத்துப்போகிறேன்.

சகோதரர் செந்தழல் ரவி அவர்களே, இந்த எதிர்கால சமுதாயத்தின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு எதிராக ஆபாசமாக எழுதும் ஆபாச எழுத்தாளர்களின் கருத்துக்கு எதிராக சாட்டையை எடுப்பது தனிமனித தாக்குதல் எனில் அப்படியே இருக்கட்டும்.

அந்த தனி மனித தாக்குதலை விடாது செய்வதில் எப்பொழுதும் பின்வாங்குவதாக உத்தேசமில்லை.

அல்லது இந்த ஆபாச சிந்தனை கொண்ட நவீன "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகளின்" எழுத்துக்களை "ஆபாச பதிவுகளாக" அறிவித்து அதனையும் நீக்க தமிழ்மணம் கோரவேண்டும்.

இறை நேசன்

Unknown said...

//இந்த மாதிரி சீரியஸ் பதிவெல்லாம் போட ஆரம்பிச்சீங்கன்னா பி.பி செக் செய்ய வேண்டி வரும், பரவாயில்லையா ?
//

ரவி என்னை நேரில் பார்த்தால் உங்களுக்கு இந்த சந்தேகமே வராது.... :)))))))))

Unknown said...

இறைநேசன் அவர்களே உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி, மேலும் .இது மிகவும் சிக்கலான் விஷயம் தனிமனித தாக்குதலுக்கு வரையரை என்ற ஒன்று எவராலும் சொல்ல முடியவில்லை எனும் போது எதை அளவுகோளாக கொண்டு நம் பதிவுகளை எழுதுவது என்பதே எனது கேள்வியும் சந்தேகமும் ..

Anonymous said...

நல்ல தலைப்பு மகி. எனக்கும் இந்த பிரச்சனை நிறைய உள்ளது. யார்மேலோ எந்த காரணத்திற்காகவோ கோபம் கொண்டவர்கள், என் பதிவில் வந்து சம்பந்தம் இல்லாமல் அவர்களைத் தாக்குவது என்னை சங்கோஜம் ஆக்கிவிடுகிறது. நான் அவற்றை மட்டுறுத்தி விடுகிறேன். என் கருத்தை, என்னை தாக்குபவர்களுக்கு இடம் உண்டு. மற்றவர்களைத் தாக்கும் போது நான் என்ன பதில் சொல்வது என்று குழம்பி வருத்தப்பட்டு, மட்டுறுத்தி விடுகிறேன்.

Unknown said...

//யார்மேலோ எந்த காரணத்திற்காகவோ கோபம் கொண்டவர்கள், என் பதிவில் வந்து சம்பந்தம் இல்லாமல் அவர்களைத் தாக்குவது //

ஆம் அது கூட ஒருவகை தனிமனித தாக்குதலே... இங்கே அவர்களின் பதிவில் சென்று தாக்க துனிச்சலில்லா பதிவர்கள் சிலர் நம்மிடம் வந்து முறையிடும் பானியில் பக்கத்து இலைக்கு பாயாசம் கதையாக போட்டுத் தாக்குவதும் நடக்கும்... அதை ஏன் அங்கே சொல்லக் கூடாது என்றுகேட்டால் அவர்கள் அதை வெளியிட மாட்டார்கள் எனும் சப்பைக்கட்டு, அவர்களுக்குத்தானே எழுதினீர்கள் அவ்ர்கள் அதி வெளியிடாவிட்டாலும் படிப்பார்களே எனக்கேட்டால் பதிலில்லை.... ஆனால் நான் எனது பதிவில் பதிவுக்கு தொடர்பற்ற தனிமனித தாக்குதல் பின்னூட்டம் வெளியிடுவதில்லை.


//நல்ல தலைப்பு மகி//
தலைப்பு மட்டும்தானா? :)
நன்றி மதுரா....

enRenRum-anbudan.BALA said...

மகி,
பொதுவாகத் தான் கூற இயலும். சக வலைப்பதிவரை காயப்படுத்தாத வகையில் கருத்துக்களை முன் வைக்க வேண்டும். நீங்கள் கூறியபடி, கருத்துக்களை ஆரோக்கியமாக எதிர் கொள்ளல் தான் முறை ( கூறிய நபரை ஆதியோடு அந்தமாக ஆராயத் தலைப்படாமல்!!!). எப்பிரச்சினையிலும் விவாதம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நன்றி.
எ.அ.பாலா

Unknown said...

எ.எ.அ.பாலா மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு... கருத்தையும் அதை சொன்னவரையும் ஒன்றாக பார்க்கும் நபர்கள் இருக்கும் வரை இத் தொல்லைகள் இருக்கவே செய்யும் :(

வஜ்ரா said...

சார்,

அதர் ஆப்ஷன் பயன் படுத்தி யாரைவேண்டுமானாலும் என்ன பெயர் போட்டும், எப்படி வேண்டுமானாலுல் திட்டலாம்...

அதை தமிழ்மணம் கண்டுகொள்ளாது..!

இந்த அதர் ஆப்ஷன் ப்ளாக்கர் பயன் படுத்துபவர் தவிர மற்ற வலைப்பூ பயன் படுத்துவோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டது...

இந்த ஆப்ஷனில் வலைப்பூ வைத்திருப்பவரோ கூட என்ன வேண்டுமென்றாலும் சொல்லி எழுதலாம்...அத்தகய வலைப்பதிவாளர்களை என்ன செய்யமுடியும்?

..
நாளைய சமூகத்துக்கு கருத்துக்களை விட்டு செல்கிறோம் என்று அறியாமல் - வாந்தி செய்துவிட்டு போனால் என்ன செய்வது ? அந்த வாந்தியை எப்படி கழுவுவது ?

ஆசிட் ஊற்றித்தான் கழுவ வேண்டும்..

அது போன்ற நபர்களுக்கு கொடுக்கப்படும் சாட்டையடி - தனிமனித தாக்குதல் என்றால் - செய்யலாமே...தமிழ்மண நிர்வாகிகள் இந்த விஷயத்தில் மாற்று கருத்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

..

இங்கே செந்தழல் ரவி யின் வரிகள்...


தனி நபர் தாக்குதல் செய்வோம்...அதை யாராலும் தடுக்க முடியாது என்ற தைரியத்தில் பேசுகிறார்...அதையே இறைனேசன் ஆமோதிக்கிறார்...

los angeles times ல் வந்த செய்தியைப் பார்க்க

மற்றொரு செய்தி
..
All publishers (including blog publishers) are legally responsible for what they publish and allowing anonymous publications in a blog requires the same responsibilities as print publications. They struggle with anonymous people who use their forum as a vehicle to publish foul, inappropriate, and sometimes illegal content.
..

வேறு வழியில்லை, தமிழ்மண நிர்வாகம் blogger மட்டுமே பின்னூட்டமிடும் வகையில் உள்ள வலைப்பதிவுகளை மட்டுமே அனுமதிக்கவேண்டும்...செய்வார்களா?

லிவிங் ஸ்மைல் said...

தனி மனித தாக்குதலை நான் இவ்வாறு கூறு முயல்கிறேன்...

சொல்லப்படும் கருத்தில் மட்டும் ஒருவருக்கொருவர் வேறுபடுவதை கருத்து வேறுபாடென்கிறோம்.. ஆக, கருத்தை முன்னிறுத்தி தாக்குதல் என்பதாக இல்லாமல் மாறாக, தனி மனிதன் மீதான காழ்ப்புணர்வு காரணமாக அந்த நபரின் கருத்தின் மீதும் புரிதல் இல்லாமல் வேறுபட்டு, கருத்தை சாடுவதாக கூறிக் கொண்டு ஆனால் திட்டமிட்டு தனி நபரை சாடுவது தனி நபர் தாக்குதலாகிறது..

உ.ம்.,

// 1. கருணாநிதியை நயவஞ்சகர், மோசக்காரர் என்பது?

2.ஜெயலலிதாவை அல்லிராணி, சண்டியர்களின் தலைவி என்பது ?

3.வைகோவை பொய்கோ என்பதும், //

இங்கே கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ ஆகியோர் அவரவர் கட்சி, கோள்கை(?!)க்கு நேர்மையாக இல்லாமல் போலியாக இருப்பதை உணர்ந்து, அந்த கோவத்தில் ஒருவர் அவர்களையும், அவர்களது கட்சிக் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்குவதை கருத்து முரண்பாடாக அறிகிறோம்.

ஆனால், தனிப்பட்ட முறையில் இவர் அவருக்கு இதைச் செய்வதாக சொல்லி, இவர் அவருக்கு கல்தா கொடுத்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்... இப்பொழுது, ஏற்கேனவே அவர் தனது கொள்கைகளுக்கு நேர்மையற்றவர் என்று தெரிந்த போதும் தனக்கு கல்தா கொடுத்து விட்டார் என்ற ஒரு காரணத்திற்காக, புதிதாக (போலியாக) அவர் கொள்கையின் மீதும் விமர்சனம் வைப்பதாக பாவலா செய்வதே தனி மனித தாக்குதலாக கருதுகிறோம். அவர்களால் தான், நயவஞ்சகன், அல்லிராணி என்று பொரும முடியும்... கருத்தின் மீதான தாக்குதலுக்கு இத்தகைய சொற்களை பிரயோகப் படுத்த வேண்டிய அவசியமிராது...

ஏதோ என் அறிவுக்கு எட்டியது...

Baby Pavan said...

Friends,

Every individual or a leader has their own strengths and weakness. No one in this world is 100% perfect.

Each one of us does have a lot of +ve and some -ve qualities, we should only try to look at good things about an individual or a leader or a community and follow that.

It is not making any sense to attack an individual or a community or a leader just because we don't like them or we belong to different community or we follow a different leader.

This is just my view, If I am wrong kingly forgive me.

Unknown said...

//வேறு வழியில்லை, தமிழ்மண நிர்வாகம் blogger மட்டுமே பின்னூட்டமிடும் வகையில் உள்ள வலைப்பதிவுகளை மட்டுமே அனுமதிக்கவேண்டும்...செய்வார்களா?
//

வஜ்ரா அப்படியே பேங்க் அக்கவுண்ட் கிரடிட் கார்டு நம்பர் சொல்றவங்க மட்டும்தான் பின்னூட்டம் போடலான்னு சேத்துக்கலாம்

Unknown said...

லிவிங் ஸ்மைல் வித்யா, மற்றும் பவன்ஸ் பிச்சர்ஸ் விரைவில் உங்க கருத்தை நல்லா பாத்துட்டு பின்னூட்டம் போடுவேன் இப்போதைக்கு நன்றி

Anonymous said...

மகேந்திர ஜாலம்
கிழுமத்தூர் ஜாலம்,
அதுக்கு 100 அனானி பஜன்....

Anonymous said...

லிவிங் ஸ்மைல் -aliva innum?....

Dear Ananys, come fast.....senthazalravi please help ananys with your great ideas....

லிவிங் ஸ்மைல் said...

Anonymous said...
//லிவிங் ஸ்மைல் -aliva innum?....//

ஹி ஹி...

Anonymous said...

//சொல்லப்படும் கருத்தில் மட்டும் ஒருவருக்கொருவர் வேறுபடுவதை கருத்து வேறுபாடென்கிறோம்.. //

ஒருத்தனை பாத்து அரைவேக்காடுன்னு சொல்லுறது தனிமனித தாக்குதல் இல்லையா?

இதெல்லாம் உபதேசம் பண்ண வந்துடுச்சி. எல்லா நேரம்யா.

Unknown said...

//உபதேசம் கேட்காதவன் //

எந்த எந்த மாதிரியெல்லாம் ஒக்காந்து சிந்திக்கிறீங்கப்பா :))))