Saturday, May 12, 2007

திருக்குவளை மு.கருணாநிதி

தி.மு.க. என்கிற கட்சியின் பெயரையே தனக்குள் அடக்கிக் கொண்டவர். கரகரப்பான இவரது குரல், கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் கம்பீரமாக முழங்கி வருகிறது. அரசியல் ,சினிமா , இலக்கியம் என்கிற மூன்று வெவ்வேறு துறைகளில் இவரைப்போல முத்திரை பதித்த தலைவர் வேறு யாரும் இல்லை.இந்த மூன்று துறைகளில் இவரது வருகை புயலைப்போன்று அமைந்தது.
இன்று தமிழக முதலமைச்சராக உள்ள கருணாநிதி , தேர்தல் களம் இறங்கிய 1957 -ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐம்பதுஆண்டுகளாக வெற்றி ப்பெற்று , சட்டமன்ற வரலாற்றிலும் சாதனைப் படைத்திருக்கிறார். அதற்காக 'பொன்விழா' எடுக்கிறது தமிழக சட்டமன்றம்.
சற்றுப்பின்னோக்கிப்பார்த்தால் , தி.மு.கழகம் ஆரம்பித்தபோது , அதன் ஐம்பெரும் தலைவர்களில் கலைஞர் கருணாநிதி ஒருவர் அல்ல என்பார்கள்.இருக்கலாம் . நாவலர் நெடுஞ்செழியன் , அன்பழகன் போன்ற கட்சித்தலைவர்களை தன் ஊருக்குப் பேச அழைக்க இவர் நடையாக அலைந்தார். இருக்கலாம்.ஆனால் , அறிஞர் அண்ணாவிற்குப் பின் , தமிழக முதலமைச்சராக இவர்தான் பதவியேற்றார். ஐம்பெரும் தலைவர் பட்டியலிலிருந்தவர்கள்...அன்பழகனும் , மதியழகனும் , நாவலரும் இவருடைய தலைமையின் கீழ் பணிபுரிய நேர்ந்தது!
வேகம் , வெற்றி மீது குறி ... இதுதான் கருணாநிதி.
தனது திராவிட நாடு இதழுக்கு ,'இளமைப்பலி' என்கிற கட்டுரையை எழுதி அனுப்பியவரை , திருவாரூருக்கு வந்தபோது , அறிஞர் அண்ணா சந்திக்க விரும்பினார். கருணாநிதியை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தினார்கள். கருணாநிதிக்கு அப்போது வயது 15. திகைத்தார் அண்ணா. 'படிப்பில் கவனம் செலுத்து 'என்றார் அண்ணா.
ஆனால் கருணாநிதி பள்ளி , கல்லூரி படிக்கட்டுகளில் அதிகம் ஏறவில்லை.எதிலும் அவர் காட்டிய வேகத்துக்கு , அன்றைய கல்வி அமைப்பு ஈடுகொடுக்காது 'ஆமைத்தன' மெத்தனம் காட்டியது காரணமாக இருக்கலாம் .உண்மையில் எது படித்தாலும் அவருக்கு மனப்பாடம் ஆகியது. தமிழில் அவருக்குள்ள ஆற்றலைக் கண்டு வியக்காதவர் யார்? உலக இலக்கியங்களை எல்லாம் இளமையில் தேடித்தேடி படித்தவர் இவர்.
இவரது சிந்தனையில் கூர்மைக்கும் தெளிவுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது 'பராசக்தி' 'மனோகரா' ஆகிய திரைப்படங்களுக்கு இவர் எழுதிய வசனம். தமிழ்த் திரையுலகுக்கே புதுப்பாடலை வகுத்துக் கொடுத்தது இவரது பேனா. இப்படங்களின் வசனங்கள் இன்னமும் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே மட்டுமல்ல இலக்கிய ரசிகர்களிடையேயும் கோலோச்சி வருகிறது.
தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக இவர் நுழைந்தபோது பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி எதிரே!கருணாநிதி சட்டமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு , 'மின்சார ஓட்டம்போல' விறுவிறுப்பாக சூடாகப் பேசுவார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எரிச்சலடைவார்கள். ஓர் எதிர்கட்சித்தலைவர் சட்டமன்றத்தில் எப்படிப் பணிபுரியவேண்டும் என்பதற்கு உதாரணகர்த்தா அவர்!
போலீஸ்மானியத்தின் போது , ஒரு முறை தடை செய்யப்பட்ட இவரது நாடகத்தில் இருந்து ஒரு தாலாட்டுப்பாடலை சட்டமன்றத்தில் தைரியமாகக் கூறினார். ஒரு போலீஸ்காரரின் மனைவி, தன் குழந்தையை 'இங்கே வந்து ஏன் பிறந்தாய் ' என்று தன் வறுமையை நொந்து பாடும் பாடல் அது. போலீஸ் இவருக்கு எதிர்ப்புகளைக் கிளப்பியது. சொல்லப்போனால் அறிஞர் அண்ணாவைத்தவிர , எல்லா முன்னணித் தலைவர்களும், இவரது தீவிரம் கண்டு பயந்தனர். ஈ.வெ.கி .சம்பத், அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஈ.வெ.கி.சம்பத் வெளியேறியபோது , கட்சி என்ன ஆகுமோ என்று அண்ணாவே சற்று பயந்தார். 'சொல்லின் செல்வர்' என்று பாராட்டப்பட்ட நல்ல பேச்சாளர் சம்பத் . இவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டனர்.
ஆனால் கருணாநிதி, இவர் மீது கடும் அம்புகள் தொடுத்தார். 'குட்டி காங்கிரஸ் 'என்று சம்பத் கட்சியை 'முரசொலி'யில் கேலி செய்தார். கருணாநிதியின் பிரச்சாரத்தின் முன்பு சம்பத் செல்வாக்கு சரிந்தது.
தி.மு.கழகம் சென்னை ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்பதற்கு முன்பு,சென்னை மாநகராட்சியைத்தான் முதலில் கைப்பற்றியது. அதற்கு முக்கியக் காரணம் கருணாநிதியின் பிரசாரம். வெற்றி விழாவில் , கருணாநிதிக்கு 'தங்க மோதிரம்' அணிவித்தார் அண்ணா!
1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி , அரிசிப் பஞ்சம் ஆகியவை காங்கிரஸ் தோல்விக்கு வழிவகுத்தன. என்றாலும் தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டவர் கருணாநிதி . காங்கிரஸ் ஆட்சியை கேலி செய்யும் இவரது 'காகிதப் பூ' என்கிற நாடகம் பற்றி அப்போது 'டைம்' பத்திரிக்கையே குறிப்பிட்டது.
இந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் கை குவித்தவாறு , தி.மு.கவுக்கு ஓட்டு கேட்கும் போஸ்டர் ஏழை மக்களை ஈர்த்தது. இப்படி ஒரு போஸ்டர் , தயார் செய்யும் 'ஐடியா' கொடுத்தவர் கருணாநிதி. அண்ணா மிகவும் தயங்கியதாகக் கூறுவார்கள்.
அண்ணா மறைவுக்குப்பிறகு , கருணாநிதி முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே மாவட்டச்செயலாளர்கள் தொண்டர்களின் ஏகோபித்த கருத்து . அந்த அளவுக்கு அவர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் அவர். நாவலர் நெடுஞ்செழியன் சில மாதங்கள் அரசியல் துறவறம் பூண்டார். பிறகு இவரின் கீழ் அமைச்சரானார்.
முதலமைச்சராக கருணாநிதியின் அரசியல் சாமர்த்தியங்களை எழுத தனி பக்கங்கள் வேண்டும். அவை துப்பறியும் நாவலைவிட சுவாரசியமானவை! காங்கிரஸை தமிழகத்தில் செல்வாக்கு இழக்கச் செய்தார். 1971 -ல் இந்திரா காந்தியுடன் இவர் தேர்தல் கூட்டணி கண்ட போது , சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட காங்கிரஸ¥க்கு ஒரு 'சீட் ' கூட கிடையாது! அது முதல் தமிழகத்தில் காங்கிரஸ் பலம் இழந்தது. டெல்லி காங்கிரஸ் மேலிடம் , தமிழக காங்கிரஸ் தலைவர்களை மதிக்காத நிலை அன்று முதல் ஆரம்பித்தது.
கருணாநிதி இரு பெரும் எதிர்ப்பு அலைகளைச் சந்திக்க நேர்ந்தது . கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் .,அண்ணா தி.மு.க. என்கிற புதுக்கட்சி தொடங்கினார். கருணாநிதியின் அரசியல் கணக்குகள் இவர் விஷயத்தில் தவறாகியது. எம்.ஜி.ஆர். , மக்கள் ஆதரவை பெருமளவில் பெற்றார். அடுத்து அவரை பல வகைகளில் தொல்லைக்கு உட்படுத்தியது எமர்ஜென்சி!
மாநிலங்களில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கக்கூடாது என்பது இந்திராவின் கருத்து. காமராஜரை ஒதுக்கிய இந்திரா காந்தி , கலைஞரையும் வீழ்த்த முயன்றார்.
கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் , முரசொலிமாறன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் சிறையில்!
சென்னை சிறையில் தி.மு.க. தொண்டர்கள் ஒரு காரணமுமின்றி அடித்து நொறுக்கப்பட்டனர். ஸ்டாலின் , மாறன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் மேயர் சிட்டிபாபு இந்தத் தாக்குதலில் இறந்தார்.
கருணாநிதிக்கு மத்திய அரசு பல கெடுபிடிகளை விதித்தது. அவர் மேடை ஏறமுடியாத நிலை . ஏன்? கட்சியை கலைக்குமாறு வற்புறுத்தப்பட்டார். சிலர் தி.மு.க.என்கிற கட்சிப்பெயரை மாற்றுமாறு அவருக்கு ஆலோசனை கூறினர்.
ஆனால் கருணாநிதி பாறைபோல உறுதியாக இருந்தார். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எமர்ஜென்சி ஒழிந்தது. எமர்ஜென்சியின்போது , அவரை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிப்போன கட்சியின் மூத்த தலைவர்கள் , இன்று காணாமல் போய்விட்டார்கள்.
முன்பு கருணாநிதியை எதிரியாக நினைத்த இந்திராகாந்தி , 1980 -ல் மீண்டும் அவருடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டார்."கருணாநிதி நம்பிக்கைக்கு உரியவர்" என்று மனம் திறந்து பாராட்டினார். "நேருவின் மகளே வருக ! நிலையான ஆட்சி தருக!" என்கிற கருணாநிதியின் முழக்கம் , தமிழகத்தில் அன்று ஒலித்தது.
கருணாநிதியின் அரசியல் சாதுர்யத்திற்கு இந்த உறவு ஓர் எடுத்துக்காட்டு . எமர்ஜென்சியின் கொடுமைகளில் இருந்தும் , ராஜீவ்காந்தி கொலைப்பழி சுமத்தப்பட்டபோதும் கட்சியை மீட்டு மக்களிடையே மீண்டும் செல்வாக்கை நிலை நாட்டியது இவரது அரசியல் சாதுர்ய வெற்றி.
இன்று சோனியா காந்தியுடன் அவரது கட்சி வைத்திருக்கும் நட்பு , 'காகிதச் சங்கிலி'யால் பிணைக்கப்படவில்லை. பலமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறது. சோனியா இவர் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறார். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் , இவர்கள் இருவருக்கும் இடையே தூதுவராக இருப்பதும் உறவு உறுதியாக இருப்பதற்குக் காரணம். இந்த நட்பு , கருணாநிதியின் சாணக்கியத்துக்கு ஒரு பெரும் சாட்சி.
கருணாநிதியின் அரசியலில் ஓர் அரிய விஷயம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் எல்லாத்தலைவர்களும் அவரை ஆதரித்திருக்கிறார்கள் என்பதுதான். பெரியார் ஈ.வே.ரா, அவரை ஆதரித்ததில் ஒன்றும் அதிசயமில்லை. பெரியாரிடம் தான் தன் அரசியல் வாழ்வை அவர் தொடங்கினார். மதுவிலக்கை அவை கைவிடும்வரையில் ராஜாஜியின் ஆதரவு அவருக்கு இருந்தது. கலைஞர் ஒருமுறை உடல் நலம் குன்றியபோது , ராஜாஜி அவருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு சீக்கியமதப்படி கையில் அணியும் ஓர் அணிகலனை அனுப்பிவைத்தார். எமர்ஜென்சியை எதிர்த்த சமயம் காமராஜரின் முழு ஆதரவு இவருக்குக் கிடைத்தது. பெரியார், ராஜாஜி , காமராஜர் போன்ற தலைவர்கள் இயற்கை எய்தியபோது, முதலமைச்சர் என்கிற முறையில் முழு அரசு மரியாதை கிடைக்கச் செய்தவர் இவர்.
கருணாநிதிக்கு என்று சில தனிக்குணங்கள் உண்டு . காமராஜருக்குப்பிறகு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த ஒரே தலைவர் இவர்தான். எந்த ஊருக்குச் சென்றாலும் கட்சித்தொண்டர்களின் பெயர் சொல்லி நலம் விசாரிப்பார். அதுமட்டுமல்ல , மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களையும் அறிந்து வைத்திருந்து நலம் விசாரிப்பார். இலக்கியவாதிகள் எந்தக்கட்சியினராக இருந்தாலும் , அவர்கள் எழுத்துக்களை ரசிப்பவர்.அத்துடன் நேரில் அவர்களைப் பாராட்டவும் செய்கிறார்.
80 வயதைக் கடந்தாலும் கருணாநிதி , சுறு சுறுப்பாகப் பணிபுரிகிறார். அவரது ராஜதந்திரங்கள் எதிர்கட்சியினரை ஏமாறவைக்கின்றன.
இத்தனை விசேஷகுணங்கள்தான் தமிழக எல்லையைத் தாண்டி அவரை டெல்லி அரசியலிலும் கோலோச்சச் செய்கிறது. இதைச் சொல்லும்போதுதான் , இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உ.பி.யில் பிறந்திருந்தால் கருணாநிதி இந்நேரம் பிரதமராகி இருப்பார் என்பதே அது!

- பத்திரிகையாளர் ராவ் , நாற்பது ஆண்டுகால தமிழ்ப் பத்திரிக்கையுலக அனுபவம் பெற்றவர்.

நன்றி : த சன்டே இந்தியன்

13 comments:

அருண்மொழி said...

இது நோக்கு நாயமா கீதா?

ஏற்கனவே கருணாநிதி பொன்விழா என்று அவார்களுக்கு செம கடுப்பு. இதில் நீர் பிரதமர்... என்று கோடு போடுகின்றீர். ரெடியா இருங்கோ. வந்து வயித்தெரிச்சல கொட்ட போறா.

வால்டர் said...

தலைவர் கலைஞர் வாழ்க!

வால்டர் said...

அடுத்த பிரதமர் கலைஞர் மு.கருணாநிதி வாழ்க.

வால்டர் said...

பெரியாரின் உண்மையான சீடன் எங்கள் கலைஞர் வாழ்க!

Unknown said...

//இது நோக்கு நாயமா கீதா?

ஏற்கனவே கருணாநிதி பொன்விழா என்று அவார்களுக்கு செம கடுப்பு. இதில் நீர் பிரதமர்... என்று கோடு போடுகின்றீர். ரெடியா இருங்கோ. வந்து வயித்தெரிச்சல கொட்ட போறா. //

அட அவாளுக்கு என்னவோய் ஒரு சூத்திரன் பிரதமரா வந்தா பூனூல் போடப்படாதுன்னு சட்டம் போட்டாலும் போடுவா அப்றம் நம்மவா சாதிய கேட்காமலே எப்பிடி வெளிய தெரியவைக்கிறதுன்ற பயம்தான் வோய் வயத்தெரிச்சலா வருது

Anonymous said...

வால்டர் வெற்றிவேல் வாழ்க :))

உடன்பிறப்பு said...

//உ.பி.யில் பிறந்திருந்தால் கருணாநிதி இந்நேரம் பிரதமராகி இருப்பார் என்பதே அது!//

என்றுமே கலைஞர் தான் கிங் மேக்கர்

Anonymous said...

டாக்டர் கலைஞர் வாழ்க

நியோ / neo said...

மகேந்திரன்!

கலைஞர் பற்றிய சிறப்பான செய்திகள் தொகுத்த்மைக்கு நன்றி!

வாழ்க கலைஞர்! :)

Anonymous said...

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி கலைஞர் மு.கருணாநிதி வாழ்க.

விஜயபாபு பூபதி said...

அருமையான பதிவு. கடந்த 50 ஆண்டுகளில், கலைஞர் அவர்களை சுற்றி தான் தமிழக அரசியல். "இந்த குளத்தில் கல் எறிந்தவர்களில்", வைரமுத்து அவர்கள் கூறியது . "திருக்குவளையில் இருந்து புறப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை, பேச்சாகவோ, எழுத்தாகவோ,ஒவ்வொரு நாளும்,கலைஞர் என்ன செய்தார் என்பது பதிவாயிருக்கிறது. இது வேறு எந்த தலைவருக்கும், இவ்வுலகில் சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது."

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தி.மு.கழகம் சென்னை ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்பதற்கு முன்பு,சென்னை மாநகராட்சியைத்தான் முதலில் கைப்பற்றியது. அதற்கு முக்கியக் காரணம் கருணாநிதியின் பிரசாரம். வெற்றி விழாவில் , கருணாநிதிக்கு 'தங்க மோதிரம்' அணிவித்தார் அண்ணா!//

"இந்தத் தங்க மோதிரம் கலைஞர் ;தன் செலவில் வாங்கி அண்ணா கையால் மேடையில் போட வைத்தது." எனப் படித்துள்ளேன். அச்செய்தி வந்த போது; சகலதுக்கும் தன்னிலை விளக்கம் கொடுக்கும் கலைஞரோ; அவர் அன்பர்களோ எதுவுமே மறுப்புக் கூறவில்லை.என்பதும் கவனிக்கத் தக்கது. எனினும்
கலைஞர் தன் பதவியைத் தங்கவைத்துக் கொள்ளும் வித்தை மிகக் கற்றவர். மறுப்புக் கிடமில்லை.

Anonymous said...

இன்னைக்கு அவருக்கு பிறந்தநாள் எதுவும் இல்லையே?.....பொன்விழா எல்லாந்தான் நடந்து முடிந்ததே?...எதற்கு இந்த திடீர் பதிவு....பெரிசு நல்லாத்தானே இருக்க்காரு?