Monday, November 19, 2007

மனுசன கடிச்சி இப்போ ஆட்டையும் கடிக்கும் காஞ்சி காமகேடி

கும்பகோணத்தில் "சோம வாஜபேயி யாகம்" என்ற யாகத்தில் சில ஆடுகளும் குதிரைகளும் உயிர்பலி கொடுக்கப் பட்டதாகவும் அவை உயிரோடு நெருப்பில் இட்டு கொலைசெய்யப் பட்டதாகவும் செய்திகள் சலங்கை கட்டி வந்தவண்ணம் உள்ளன. காஞ்சி சங்கர ராமன் கொலைவழக்கின் சூத்திரதாரி காம கேடி அந்த வழக்கில் இருந்து வெளிவரவேண்டும் என வேண்டியே கும்பகோணத்தில் இந்த கோர யாகம் நடத்தப்பட்டதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

ஆட்டைக் கடிச்சி மாட்டை கடிச்சி மனுசனை கடிக்கும் பழமொழியை தலைகீழாக்கி முதல்ல மனுசனை கடிச்சுட்டு இப்போ மாட்டையும் ஆட்டையும் குதிரையையும் கடிக்கிறார் காமகேடி சுப்புணி மாமா! சங்கர ராமன் கொலைவழக்கில் இருந்து தப்பிக்க மறுபடியும் கொலைத் தாண்டவம்.

இந்துக்கள் ஆட்டை மாட்டை உண்ணக் கூடாது என்பதும் காமகேடி சொல்வதே ஆனால் உயிர்ப்பலியாக கொடுக்கலாம் போல் தெரிகிறது யாராவது "சமீபத்தில்" இப்படி ஒரு யாகம் நடந்ததா என தெரியப்படுத்தினால் நலம்.

ஒரு பார்ப்பானைக் கொன்றாலே கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்து ஆளாகவேண்டிவரும் என மனு தர்மம் சொல்வதாக கல்வெட்டுக்கள் சொல்கின்றன :)
ஒரு பார்ப்பானையும் கொன்று அவ் வழக்கில் இருந்து வெளிவர பசுவையும் கொல்லும் சுப்புணிக்கு பாவமூட்டைகள் இன்னும் அதிகம்தானே ஆகும்?

இது கூடத் தெரியாமல் ஏன் இந்த யாகம் என்று யாராவது சொல்லலாம். உலக அமைதிக்காக வேண்டி இந்த யாகம் நடத்தப் பட்டதாக சுப்புணி அண்டு கோ தெருவாய் மலர்ந்துள்ளது ஆனால் உலகம் அமைதியாக எல்லா பார்ப்பனர்களும் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு வாயையும் இன்னொன்றையும் பொத்திக்கொண்டிருந்தாலே போதும் என்று நம் குவாட்டர் கோவிந்தன் சொல்கிறார்.

குஜராத்தில் மோடி இங்கே ஒரு கேடி என எங்கே பார்த்தாலும் ராமநாராயணன் படத்தில் வருவது போல ஒரே அதிசய மாந்திரீகவாதிகளாய் மாறிப்போகிறது இந்தியா இந்த கொடுமை போதாதென்று இன்னொரு கடைசி செய்தி,

மதுரையருகே திருநிறைச்செல்வன். செல்வராஜ், செல்வி.செல்வியை தாலிகட்டி மனையாளாக்கிக் கொண்டார் காரணம் மணப்பெண்ணின் உறவினர்கள் இருவரை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராஜ் கொன்று விட்டாறாம் அதனால் நல்ல செயல்தானே இது என்பவர்கள் அவசரப் படாமல் கீழே படிக்கவும் அந்த செல்வி 10 வயதான ஒரு பெண் நாய். இது போலவே காமகேடியும் பசுவுக்கோ அல்லது ஆட்டுக்கோ இல்லல குதிரைக்கோ தாலிகட்டி மனைவியாக்கி அந்த யாகத் தீயில் எரிந்துபோண விலங்குகளை சந்தோசப் படுத்துவாராக !!

No comments: