Saturday, November 24, 2007

விசயகாந்துக்கு ஒரு வில்லங்க கடிதம் !

அய்யா வணக்கம்ங்க!
நான் குவாட்டர் கோவிந்தன், கொஞ்சநாளா காணாம போயிட்டு இப்போதான் திரும்ப வரேனுங்க. ரொம்ப நாளாவே உங்களுக்கு ஒரு கடுதாசி எழுதனும்னுதான் முயற்சி பன்றேன் ஆனா பாருங்க சேது சமுத்திரம், குஜராத் படுகொலை, தமிழ்ச்செல்வன் மரணம்னு ஒரே அல்லோலகல்லோலமா போச்சி அதனால இப்போதான் உங்களுக்கு எழுத முடியிது.
சரி நம்ம கதை எதுக்குங்க உங்களுக்கு சொல்லவேண்டியத நான் சொல்லிட்டு போறேனுங்க. வர வர கொஞ்சநாளா எனக்கு உங்க பேட்டிய படிச்சா உங்கமேல ஒரு மதிப்பு வரதுக்கு பதிலா காமெடி காலனி லூசுப்பையன் பேட்டி படிச்ச மாதிரி ஒரே சிரிப்பா வருதுங்க ஏன்னா உங்க பேச்சு அப்படித்தான் இருக்குங்க.
அரசாங்கம்ன்னா என்னமோ நீங்க அபூ ஹை ஆபூ ஹைன்னு சண்டை போடுறது போல அவ்ளோ ஈசி கிடையாதுங்க. அது உழைச்சாத்தான் கைக்கு கிடைக்கும். நாப்பத்தி ஒம்போதில கட்சி ஆரம்பிச்ச அண்ணா பதினெட்டு வருசம் கழிச்சித்தான் ஆட்சிய பிடிக்க முடிஞ்சது இதுக்கு அவங்க எல்லாரும் ஏற்கனவே ஏகப்பட்ட தியாகங்களை செய்திருந்தாங்க நீங்க உங்க மண்டபத்த தியாகம் பன்னினதா சொத்தை தியாகம் பன்னினதா சொல்லிச் சொல்லியே ஆட்சிய பிடிக்கலாம்னு யோசிக்கறீங்க.
இதெல்லாம் கிடக்கட்டும் விருத்தாசலத்தில் நீங்க கண்டிப்பா தோத்துத்தான் போவீங்கன்னு இருந்தப்போ ஜெயிச்சி வந்தீங்க அது உங்களுக்கு கிடைச்ச வெற்றிதான் இல்லேங்கலே ஆனா அதுக்கு பொறவு அந்த பக்கமே உங்களை பாக்க முடியலேன்னு சிலர் சொல்றாங்க ! கேட்டா ஷூட்டிங் போயிட்டதா சொல்றாங்களாம். விருத்தாசலம்தான் இனி என் ஊருன்னு சொன்னீங்க அட அங்கயே தங்கலைன்னாகூட ஒரு மாசத்துக்கு ஒரு தடவை போயிட்டு வரலாம்ல உங்களுக்கு எங்க நேரம் இருக்கு?. அரசாங்கம் படத்துக்கு டப்பிங் பேசனும் அடுத்த படத்துக்கு கதை புடிக்கனும்னு அலைஞ்சா ஒன்னுக்கும் நேரம் கிடைக்காதுங்க.
இதுபத்தி (குமுதம்) கேட்ட காலேஜ் பசங்ககிட்ட ஏன் கலைஞ்ர் கூட இன்னும் கதை எழுதறாரேன்னு கூலா சொல்றீங்க ஆமா அவரு எழுதுறாரு ஆனா தன்னோட அலுவல்களை ஒதிக்கிட்டு எழுதலீங்க இன்னிக்கும் அதிக நேரம் உழைக்கிற ஒரு அரசியல் தலைவர் இவர்தான். ஆனா நீங்க? மூனு மாசமா சூட்டிங், அரசியல் மாநாடு ஒரே டென்சன் ஓய்வே இல்லன்னு சொல்லி இராக்கு, துபாய்னு குடும்பத்தோட கெள்ம்பிடறீங்க. ஆனா கலைஞர் ஓய்வுக்காக இந்தியா தாண்டியதா நான் என்னோட வயசுக்கு கேள்விப்பட்டதில்ல.
இரண்டு கழகமும் தமிழ்நாட்ட கெடுத்துச்சின்னு சொல்லிட்டு நீங்களும் தே.மு.தி.கன்னு கட்சிப்பேர் வைக்கும்போதே தெரிஞ்சு போச்சிங்க உங்களுக்கு ஒன்னும் புதுசா அரசியல் பன்னத் தெரியாதுன்னு ஏன்னா திராவிடம்ங்கிர பேர வச்சு இங்கே அரசியல் பன்ன எந்த தகுதியும் உங்களுக்கு இல்ல.
நானும் திராவிடந்தான்னு நீங்க சொல்லிக்கலாம் ஆனா திராவிடன் அப்படீன்னா கருப்பா தென்னிந்தியாவுல பொறந்து திராவிட மொழிகளை பேசுனா மட்டும் திராவிடனாகிட முடியாதுங்க. அதுக்கு முதல்ல திராவிட கொள்கைகளை புரிஞ்சிக்கனும். உங்களுக்குன்னு ஒரு தனி கொள்கை வச்சுக்கனும் . ஒருவேளை எந்த கொள்கையும் வச்சுக்க கூடாதுங்கறதுதான் ஒங்க கொளுகையோ என்னமோ யாருக்கு தெரியும்.
சேது சமுத்திர விவகாரத்தை கலைஞர்தான் ஊதி பெருசாக்கிட்டதா சொல்றீங்க ஆனா நீங்க உங்களுக்குன்னு ஒரு கருத்து வச்சிருப்பீங்களே அத சொல்லுங்கய்யா. வேணுமா இல்லே வாணாமான்னு அத வுட்டு "வரும் ஆனா வராதுன்னு " காமெடி பன்றீங்க.
வாரிசு அரசியல் பத்தி வாய் கிழிய பேசுறீங்க ஆனா உங்க அரசியல் வண்டவாளம் எல்லாம் ராமுவசந்தன் பிரேமலதான்னு சுத்துதேன்னு கேட்டா வாயையும் இன்னொன்னையும் தொறக்காம "அவங்க என் உதவிக்கு இருக்காங்கன்னு சொல்றீங்க " மத்தவங்களும் அப்படித்தான்க. ஜெவுக்கு சசி கலைஞருக்கு ஸ்டாலின் :)
மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவா பேசுன நீங்க அரசாங்கம் மேலும் ஒரு ஆண்டு அதிக படிப்பை கட்டாயப் படுத்த கூடாதுன்னு சொல்றீங்க ஆனா ஒரு வருசமாவது கிராமங்களில் பணிபுரிய வேண்டும்னு சொல்றீங்க. அரசாங்கமும் (உங்க படமில்லைங்க) அதேதான் சொல்லுது. எனக்கு இப்போ ஒரு மண்ணும் வெளங்கல.
அதெல்லாம் கிடக்கட்டும் விருத்தாசலம் பீங்கான் டெக்னாலஜி மாணவர்கள் ஒரு பத்து பேர் பரிட்சை எழுத முடியாம இருந்தப்போ உங்களை பாக்க முயற்சி செஞ்சு முடியாம குமுதம் ரிப்போர்ட்டர் ஏற்பாட்டுல இப்போ படிக்கிறாங்க அதாவது தெரியுமா இல்லெயா?
அதே மாதிரி என்ன என்ன திட்டம் வச்சிருக்கீங்கன்னு கேட்டா அதெல்லாம் பொதுவில சொல்ல முடியாதுன்னு சொல்லுறீங்க. ஆயிரம் திட்டம் இலவசம்னு சொல்லியே கலைஞர் கூட்டணி ஆட்சி மாதிரிதான் ஜெயிக்க முடிஞ்சது உங்க நிலை பரிதாபமா ஆயிடும்.
புலிகள்னா உங்களுக்கு ரொம்ப புடிக்கும் ஈழத் தமிழர் நலன்ல உங்க ஈடுபாடெல்லாம் பாத்து நிறைய ஈழத் தமிழர்கள் உங்களை எல்லாம் நம்புறாங்களாம் பாவம் அவங்க அவங்களுக்கு ஆதரவா எதாவ்து செய்யலாம் பையனுக்கு பேர் மட்டும் பிரபாகரன்னு வச்சா போதாது. கன்னியா குமரிமுதல் காஷ்மீர் வரைக்கும் இருக்கும் தீவிர வாதிகள் பத்தின அப்டூ டேட் நியூஸ் எல்லாம் கைல வச்சிருக்கும் உங்களுக்கு பக்கத்தில இருக்க நாட்டுக்கு எதாச்சும் பன்னனும்னு தோனலியே?
நல்லவேளையா நீங்க கமல் ரேஞ்சுக்கு ஒன்னும் பெரிய நடிகர் இல்லை இல்லேன்னா ஒரு சாதாரண போலீஸ்காரன் எப்படி காஷ்மீர் தீவிரவாதிய புடிக்க முடியும் அதெல்லாம் மத்திய அரசு வேலையாச்சேன்னு அபி அப்பா உங்களுக்கு லெட்டர் போட்டிருப்பார் :)
இன்னும் ஒன்னே ஒன்னு. உங்க எல்லா படத்துலயும் எதாவது ஒரு காட்சியில முஸ்லிம்களுக்கு உதவுறதா ஒரு சீன் வைப்பீங்க ஆனா குஜராத் மோடி விவகாரத்துல ஏன்ய்யா ஒன்னுமே பேச மாட்டேன்றீங்க? இப்படி எல்லாத்திலயும் மவுனமா இருந்துட்டு அவங்க சரியில்ல இவங்க சரியில்ல 2011ல நாந்தான் முதல்வர்னு பினாத்திகிட்டு இருந்தா நெப்போலியன் சொன்ன மாதிரி எதாவது கல்லூரிக்கு முதல்வரா ஆனாத்தான் உண்டு. நீங்க உங்களுக்கு இருக்குறதா நம்பிட்டு இருக்குற மக்கள் செல்வாக்கு உங்க குடும்பத்தில இருந்துகூட கிடைக்காது .
இன்னும் கேள்விங்க அதிகமா இருக்கு இதப் படிக்கவே உங்களுக்கு நேரம் இருக்கான்னு தெரியல. எதாச்சும் சூட்டிங்ல பிஸியா இருப்பீங்க.
ஃபுல் மப்புடன் ...
குவாட்டர் கோவிந்தன்
நெப்போலியபுரம்.

3 comments:

TBCD said...

இந்த மாணவர்கள் போரட்டத்தைப் பத்தி,பேசும் போது...4.5 வருசப் படிப்பைன்னு சொல்லிட்டு, நாக்க கடிச்சிக்கிட்டு..5.5 வருசப் படிப்பைன்னு..சொன்னார்...

இப்படி ஏதாச்சும் பேசினா, உளரிக் கொட்டிருவோமோன்னு தான் அவர் நிறைய விசயம் பத்தி பேசுறதே இல்லை..

கர்நாடகத்திலே, கூத்து நடக்குது..மக்கள் எல்லாம்..களிப்புற்று இருக்காங்க..அது போல தமிழகத்துக்கு ஒரு கோமாளி பத்தாது..(சு.சாமி)...அதுனால, அவர் வரட்டும்..கிளிக் ஆனா, ஒரு அரசியல் தலைவர்..இல்லாடி..சு.சாமி வரிசையிலே இன்னோரு ஆள்...

Unknown said...

//கர்நாடகத்திலே, கூத்து நடக்குது..மக்கள் எல்லாம்..களிப்புற்று இருக்காங்க..அது போல தமிழகத்துக்கு ஒரு கோமாளி பத்தாது..(சு.சாமி)...அதுனால, அவர் வரட்டும்..கிளிக் ஆனா, ஒரு அரசியல் தலைவர்..இல்லாடி..சு.சாமி வரிசையிலே இன்னோரு ஆள்...//

என்ன கொடுமைய சொல்றது இந்த ஆளுக்கெல்லாம் கோவிந்தன் லெட்டர் போட வேண்டி இருக்கு

சுரேகா.. said...

கலக்கல்...

இதை அவரே படிச்சாலும்..அட..இவ்வளவு வெவரமான ஆளெல்லாம் நம்ம நாட்டுல இருக்கா..இத்தனை நாள் இது தெரியாம போச்சேப்பான்னு பாத்துட்டு

தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை
"ப்ளாக்" ன்னுட்டு போய்டுவாரு..