Sunday, August 27, 2006

வே.ஆனைமுத்து நூல் நிதி

வே.ஆனைமுத்து ஜூன் 21இல் 81-அய்த் தாண்டுகிறார். 60 ஆண்டுகள் - தமிழ் - தமிழன் - தமிழ்நாடு சிக்கல்களுக்கு தீர்வு காண உழைத்திருக்கிறார். களப்பணி - பிரச்சாரம் - எழுதிக் குவித்தது - எல்லாம் காற்றில் கலந்த பேரோசையாக! இவர் எழுத்தில் நூலானது - 1980இல் - ஒரு சிறு பகுதி மட்டுமே!

பெரியாருக்கும் ஆலோசகர்: பலருக்குத் தெரியாது - தோழர் ஆனைமுத்து பெரியாருக்கும் ஆலோசகர் என்பது. இலக்கிய - சட்ட - வரலாற்றுச் செய்திகளில் நாள் தேதி இடம் - உட்பட நினைவில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் இவர். புத்தமதத்துக்குப் போனாலும் - நாத்திகன் ஆனாலும் - இந்து இல்லை என்று எழுதிக் கொடுத்தாலும் நீங்கள் இந்துதான் - என்ற செய்தியை ஆதாரங்களுடன் - நீதிமன்ற தீர்ப்பு சான்றுகளுடன் பெரியார் முன் வைத்தார் ஆனைமுத்து. "தப்பு பண்ணிட்டேன்” என்று பெரியார் தலையில் அடித்துக் கொண்டார். அதுமுதல் ஆனைமுத்தை முதன்மை பிரச்சாரகர் ஆக்கினார், பெரியார்.

இலக்கியச் சுரங்கம்: தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் - ஆனைமுத்து. எந்த இலக்கியத்தில் - எந்தச்சொல் - எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தவர். திருக்குறளில் பெரிய ஆராய்ச்சியே செய்து - அது ஒரு நீதி நூல் மட்டுமே - மனுநீதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கும் ஈவிரக்கமற்ற அரசக் கொடுங்கோன்மைக் கருத்துக்கள் - திருக்குறளில் இல்லை என்றவர் ஆனைமுத்து. மனு - கவுடில்யர்படி ஆண்டவர் வென்றார்கள். திருக்குறள்படி வாழ்ந்தவர்கள் - வீழ்ந்தார்கள். ஆட்சிக்கு வன்முறை அவசியம். இராணுவம் அவசியம். புத்தமத வீழ்ச்சிக்கு முதல் காரணம் - அசோகன் ராணுவத்தைக் கலைத்ததுதான் - என்பன போன்ற ஆனைமுத்து கருத்துகள் "அட்சரம் லட்சம்” பெறும்!

குடும்ப நிலைமை / பொருளியல்: மக்களுக்காகப் பாடுபடும் - தோழர் ஆனைமுத்துவின் பொருளியல் நிலை என்ன? குடும்ப நிலை என்ன? எங்கேயும் யாரிடமும் இவர் பேசாத செய்திகள் இவை. இருந்த 8 ஏக்கர் நிலத்தை - வந்த அந்நாள் (1950) ரூ.8000-10,000 பணத்தை - இயக்கம் வளர்த்ததிலும் பத்திரிகை நடத்தியதிலும் "பாழ் பண்ணியவர்” ஆனைமுத்து. ஒருபிடி நிலக்கடலையும் - இரண்டு பேரீச்சம்பழமும் இரவு உணவாகச் சாப்பிட்டு புத்தகம் - கட்சி அறிக்கை கட்டுகள் - இந்தக் கையில் 20 கிலோ - அந்தக் கையில் 20 கிலோவுடன் டெல்லி - மும்பை ரயில் மேம்பாலங்களில் இவர் ஏறும் காட்சி - துயரத்திலும் துயரம். அது அல்ல நம் கவலை! ஆனைமுத்துவின் சிந்தனை - எழுத்து - தன் வரலாறு - நூலாகாதது! பல ஆண்டுகளாக இவர் எழுதும் சிந்தனையாளன் Periyar Era - தலையங்கம் அனைத்தும் நூலாகத் தகுந்த - தமிழ்மக்கள் மேம்பாட்டு மாமருந்து. நூலாகவில்லை. அது நமக்கு இழப்பில்லையா? அதுவே நம் கவலை!

பெரியார் தமிழ்ப் பேரவை: எத்தனையோ பேரறிஞர்களின் சிந்தனைகள் - எழுத்துக்கள் - காற்றில் கலந்து மண்ணோடு மண்ணாகின - தமிழனின் பொறுப்பற்ற புறக்கணிப்பால்! ஆக்ஸ்போர்ட் படிப்பாளி - கம்யூனிசத் தந்தை - KTK தங்கமணியின் சிந்தனைகள் - தன் வரலாறு நூலானதா? தமிழை - புது பீடத்தில் ஏற்றிய பாவாணருக்குத் தன்வரலாறு இருக்கிறதா? சுர்ஜித் - நல்லகண்ணு - வரதராசன் என்று கம்யூனிசக் கனவில் தம் வாழ்வை அழித்த பேரறிஞர் - யாருக்கும் அவர் தம் சிந்தனைகள் நூலாக நாம் வழி செய்யவில்லையே! அதனால் பெரியார் தமிழ்ப் பேரவை களமிறங்கியிருக்கிறது - மக்களிடம் பணம் திரட்டி அறிஞர்களின் சிந்தனைகளை நூலாக்க! இதில் முதல் முயற்சி - உடன் இருப்பு - அருகாமை கருதி தோழர் ஆனைமுத்துவுக்கு. இந்த எம்பணி - எம் தொடர் திட்டத்தில் முதல்படி தான்!

கொடுங்கள் - அனைத்து நன்கொடைக்கும் முறையான ரசீது உண்டு. ஒரு பேரறிஞனை - அவர் வாழும் காலத்தில் பாராட்ட பணம் தாருங்கள்!

நன்கொடையை வே. ஆனைமுத்து, பா. இராமமூர்த்தி என்னும் இணை பெயரில் காசோலை வரைவோலைகளாக

அனுப்ப வேண்டிய முகவரி:

சங்கமித்ரா,
பெரியார் தமிழ்ப்பேரவை,
ப.எண்.1/429, தென்பெரும் நெடுஞ்சாலை,
வண்டலூர் வாயில்,
சென்னை - 600 048.
பேசி : 9841359717

25 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//..புத்தமத வீழ்ச்சிக்கு முதல் காரணம் - அசோகன் ராணுவத்தைக் கலைத்ததுதான்..//

மகி,
நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள். வே.ஆனைமுத்து பற்றி இன்று தான் தெரிந்து கொள்கிறேன்.!

மேலே சொன்ன கருத்து முற்றிலும் உண்மை. புத்த மதம் அழிந்ததற்கு அதுவும் ஒரு காராணம்.

nayanan said...

மகேந்திரன்,
தோழர் ஆனைமுத்து பற்றிய சேதிகளை
இங்கெடுத்தெழுதியமைக்கு நன்றியும்,
பாராட்டுக்களும்.

Unknown said...

/மகி,
நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள். வே.ஆனைமுத்து பற்றி இன்று தான் தெரிந்து கொள்கிறேன்.!//


ஜிகே நன்றி... வே ஆனைமுத்து அவர்கள் என் உறவினர் என்பது அறிவீர்கள் தானே?

//சேதிகளை
இங்கெடுத்தெழுதியமைக்கு நன்றியும்,
பாராட்டுக்களும். //

நன்றி நயனன் அவர்களே ! இதை கவிதாச்சரணில் சங்கமித்திரா அவர்கள் எழுதியிருந்தார்

Sivabalan said...

மகி,

அவர்கள் பற்றி நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி.

Sivabalan said...

மகி,

அவர்கள் பற்றி நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி.

Sivabalan said...

மகி,

அவர்கள் பற்றி நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி.

Sivabalan said...

மகி

இது நல்ல விசயத்திற்காக.---1

Sivabalan said...

மகி

இது நல்ல விசயத்திற்காக.----2

Sivabalan said...

தோழர் ஆனைமுத்து அவர்கள் பற்றி நல்ல தகவல்களை தந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி.

Unknown said...

சிபா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sivabalan said...

எனது Email முகவரி Profileல் உள்ளது..

நேரம் கிடைக்கும் போது தொடர்பு கொள்ளவும்..

Sivabalan said...

மகி,

நன்றிக்கு நன்றி.

Sivabalan said...

மகி,

நன்றியை தனித்தனியாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

கதிர் said...

உனது வீடு எது?

வீடென்று எதனை சொல்வீர்.

உனது நாடு எது?

மக்கள் சீனம்.

கம்யூனிசம் என்பது இயக்கம் அல்ல அது ஒரு உணர்வு.

இவையெல்லாம் கம்யூனிசம் குறித்த புத்தகங்களில் நான் ரசித்த வரிகள்.இந்த கட்டுரையை படித்தவுடன் மீண்டும் ஞாபகம் வந்தது.

அன்புடன்
தம்பி

கதிர் said...

உனது வீடு எது?

வீடென்று எதனை சொல்வீர்.

உனது நாடு எது?

மக்கள் சீனம்.

கம்யூனிசம் என்பது இயக்கம் அல்ல அது ஒரு உணர்வு.

இவையெல்லாம் கம்யூனிசம் குறித்த புத்தகங்களில் நான் ரசித்த வரிகள்.இந்த கட்டுரையை படித்தவுடன் மீண்டும் ஞாபகம் வந்தது.

அன்புடன்
தம்பி

கதிர் said...

உனது வீடு எது?

வீடென்று எதனை சொல்வீர்.

உனது நாடு எது?

மக்கள் சீனம்.

கம்யூனிசம் என்பது இயக்கம் அல்ல அது ஒரு உணர்வு.

இவையெல்லாம் கம்யூனிசம் குறித்த புத்தகங்களில் நான் ரசித்த வரிகள்.இந்த கட்டுரையை படித்தவுடன் மீண்டும் ஞாபகம் வந்தது.

அன்புடன்
தம்பி

கதிர் said...

உனது வீடு எது?

வீடென்று எதனை சொல்வீர்.

உனது நாடு எது?

மக்கள் சீனம்.

கம்யூனிசம் என்பது இயக்கம் அல்ல அது ஒரு உணர்வு.

இவையெல்லாம் கம்யூனிசம் குறித்த புத்தகங்களில் நான் ரசித்த வரிகள்.இந்த கட்டுரையை படித்தவுடன் மீண்டும் ஞாபகம் வந்தது.

அன்புடன்
தம்பி

Unknown said...

சிபா , தம்பி இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஆமா ஒரே கருத்தை இப்படி அஞ்சாரு தடவை சொன்னா நான் செவிடுன்னு மக்கள் நினைக்க மாட்டாங்க ஆனாலும் பரவால்ல நன்றி நன்றி நன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றினன்றி நன்றி

பாருங்க மக்களே இப்படி பின்னூட்ட கயமை செய்ய தூண்டுவது இவங்க ரெண்டு பேரும்தான் சரியா/என்னை எதும் தப்பா சொல்லாதீங்க

Unknown said...

ஆனைமுத்து அவர்கள் பற்றி சில வார்த்தைகள் சிவபாலன் அவர்களின் நூல் நிலையம் பதிவுக்கு பின்னூட்டமாக இட்டதில் இருந்து..

திரு.வே.ஆனைமுத்து அவர்கள் எனது உறவினர். நான் பிறந்தது கிழுமத்தூரில் அவர் பிறந்த ஊர் கிழுமத்தூர் மற்றும் எறையூர் சர்க்கரை ஆலை இடையே இருக்கும் முருக்கன்குடி எனும் சிறு கிராமம். அவரின் சிறுவயதில் எனது தாத்தாவே படிப்பதற்க்கான பொருளுதவிகள் செய்ததாக சொல்வார். அவரோடு எனது குடும்பத்துக்கான நட்பு மிக நீண்டது. அவர் முதலில் திருச்சியில் இருக்கும் போது அவர் தலைமையில் எனது தந்தையின் திருமணம் நடந்தது. எனது தாத்தா இறந்து போனபோது அவர் (வே.ஆனைமுத்து) பட்ட வேதை சொல்லவியலாது. அவரின் ஒரு தம்பியும் இன்று முருக்கன்குடியில் இருக்கிறார். அவரை முதன் முதலில் விபரம் தெரிந்த பிறகு 1995 ம் ஆண்டு சென்னை தாம்பரத்தில் சக்தி திருமண மண்டம் அருகில் அவரின் இல்லத்தில் சந்தித்தேன். எனது இரண்டாவது சகோதரியின் திருமண அழைப்பு கொடுக்க அதன் பின் எனது திருமணமும் அவர் தலைமையில் நடைபெற்றது. சிந்தனையாளன் எனும் மாத இதழும் பெரியார் எரா எனும் ஆங்கில மாத இதழும் அவரின் திருவல்லிக்கேணி முருகப்பா தெருவில் இருக்கும் சிந்தனையாளன் பதிப்பகத்தில் இருந்து வருகின்றன. இன்றுவறை தனது பயனச் செலவுகளுக்காக அழைப்பாளர்களிடம் இருந்து எதுவும் பெறுவதில்லை அப்படி யாரும் வற்புறுத்தினால் சிந்தனையாளன் இதழுக்கு சந்தாவாக செலுத்த சொல்லுவார்.
முன்னாள் பிரதமர் திரு வி.பி.சிங்குடன் அவர் நல்ல நெருக்கம் கொண்டவர். பெரியாரின் கடைசிக் காலங்களில் அவருடனே இருக்கும் சந்தர்பம் பெற்றவர்களுள் இவரும் ஒருவர். மண்டல் அமுல்படுத்தப்பட்ட போது டெல்லியில் மிக நீண்ட காலம் தங்க வேண்டி வந்ததில் தனது சில பூர்வீக சொத்துக்களை இழந்தவர். உண்மையில் சொல்லவேண்டுமானால் பிரபலமாகாத பெரியாரின் வாரிசு. இவர் பற்றிய தனிப் பதிவு விரைவில் வரும் சில கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை எனது குடும்பம் மறுப்பதற்கு இவரும் ஒரு காரணம் அனது உறவினர் இவர் என்பதில் எனக்கு பெருமைதான். எங்கள் வீட்டின் எல்லா விழாக்களுக்கும் இவர் நிரந்தரத் தலைமை உண்டு

கதிர் said...

//தம்பி இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஆமா ஒரே கருத்தை இப்படி அஞ்சாரு தடவை சொன்னா//

நான் என்னங்க பண்றது, உங்க வலைபூவில பிரச்சினை இருக்கு போல. ஒரு முறை க்ளிக் பண்ணா போகவே மாட்டேங்குது, போக லேட் ஆகுதேன்னு நாலு முறை அழுத்தினா அது நாலு முறை உங்களுக்கு வருது. மத்தபடி வேணுமின்னே யாராவது இதை செய்வாங்களா?

கதிர் said...

இப்போ ஒரே அழுத்துல போயிடுச்சி, ஆனா முன்னாடி அப்படி இல்ல.

Unknown said...

//இப்போ ஒரே அழுத்துல போயிடுச்சி, ஆனா முன்னாடி அப்படி இல்ல.//

சரி சரி நடத்துங்க நன்றி

Anonymous said...

sangamithra is the pen name of ramamoorthy, who is a brahmin
by birth.He worked with State Bank
of India and retired as Chief Manager.Earlier he used to write
in Viduthalai, Unmai etc.The irony is this initiative is headed by a
brahmin.You hate brahmins but you still need them for such matters.

Unknown said...

//sangamithra is the pen name of ramamoorthy, who is a brahmin
by birth.He worked with State Bank
of India and retired as Chief Manager.Earlier he used to write
in Viduthalai, Unmai etc.The irony is this initiative is headed by a
brahmin.You hate brahmins but you still need them for such matters. //

.
அய்யா அனானி நீங்கள் சொல்வது போல் நான் அறிந்திருக்க வில்லை சரி அப்படியே ஆனாலும் பிறப்பால் பிராமனர் ஆனதற்க்காகவா பிராமனர்களை எதிர்க்கிறோம்( நீங்க சொல்றமாதிரி வெறுக்கிறோம்) இல்லை பிராமனத் தனத்தின் கொள்கைகளை வெறுக்கிறோம் அவ்வளவே பார்க்க இங்கே
http://paarima.blogspot.com/2006/08/blog-post_27.html

கோவி.கண்ணன் [GK] said...

மகி,

வே.ஆனைமுத்து அவர்கள் பற்றி மேலும் பல தகவல்களை பின்னூட்டத்தில் படித்து தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

பகுத்தறிவு பகலவனை சுற்றிய பல கோள்களில் ஒரு கோளாக இருந்திருக்கிறார் என்ற செய்தியின் சாரம் குறிப்பிடுகிறது.