Thursday, August 31, 2006

அதிமுக DTS - கதை விவாதம்

படத்தின் அறிவிப்பு வந்தாலும் வந்தது , வினியோகஸ்தர்கள், ரசிகர்கள், நம்அன்பு அனானிகள் இட்மிருந்து ஒரே பின்னூட்ட ஆதரவு, ஆலோசனைன்னு என்னை படத்துக்கு கதை எழுதவே விடவில்லை....

சரி படத்துக்கு ஒன்லைன் தயாரித்துஅதை கதா நாயகிகளிடமும், கதா நாயகன் மற்றும் இயக்குனரிடம் காட்டி டிஸ்கஸன்செய்துவிட்டு வரலாம் என்று அவர்களின் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டபோதுஅங்கிருந்து நேராக சிறுதாவூர் பங்களாவுக்கு வரும்படி இளவரசியிடம் இருந்து போன் .

இனி சிறுதாவூரில் நடந்த கதை விவாதம்.

ஹீரோயின் ஜெயாவும் , சசிகலாவும் நமக்கு முன்பே அங்கே இருந்தனர், பாவம்நடராஜன் வழக்கம் போல் உள்ளே வர பயந்து பக்கத்து கெஸ்ட் ஹவுஸில் இருந்துவிடியோ கான்பரன்ஸில் பேச ஒத்துக் கொண்டார், சோ தனக்கு தனியாக மைக்கொடுத்தால் மட்டும் பேசுவேன் என்றார், கராத்தே கட்சி பேதம் இல்லாமல்கலந்து கொள்ள சம்மதித்தாலும் ஹீரோயின் அவர் வந்தால் குண்டர்களை வைத்துதாக்குவேன் என நேராகவே சொன்னதால் அவர் வழக்கம் போல செல்போனில்கலந்துகொள்ள வாக்களித்தார்.

முதலில் நமக்கு ஒரு தட்டு நிறைய திராட்சை வந்தது அதை கையில் எடுத்துக்கொண்டே,,,

"எங்க வாங்குனது என்றோம் "

இது சொந்த தோட்டத்தில் விளைந்தது"

என்ற ஜெயாவை பய பக்தியோடு பார்த்த சோ

"இன் 1976 நான் இவங்க கூட அந்த தோட்டத்துக்குபோனேன் அப்போ எனக்கு இவங்க அறிமுகம் அன்னிக்கு எனக்கு தெரியலை இவங்கமுதலமைச்சர் ஆவாங்கன்னு"

"ஆமாக்கா நான் கூட ஒங்களுக்கு விடியோ கேசட் வாடகைக்கு விடும்போதுநினைக்கலை"

என்ற சசியை முறைத்த ஜெயா

"சரி நாம கதைக்கு போகலாமா" என்றவாரே முன்னால் இருந்த கான்பரன்ஸ் ஸ்க்ரீனைதிறந்தார்.

நான் கதை சொல்ல ஆரம்பித்தேன் என் செல் போனை திறந்த வாரே.

நான்: " தமிழ் நாட்டில் ஒரு பெரிய நடிகர் சந்தர்ப வசமா அவர் அரசியலில்இறங்கி முதல்வர் ஆகிறார்.. அவர் கூட நீங்க கொஞ்ச படத்துல சோடியாநடிக்கறீங்க.....

சசி: யக்கோவ் இது என்னமோ தெரிஞ்ச கதை மாதிரி இருக்கே...

ஜெ: அதானே இது என்னமோ ஏற்கனவே கேட்ட கதிமாதிரி இருக்கே...

சோ: ஆக்சுவலி இன் இன்டியன் சினிமா பீல்ட் டூயிங் ரிப்பீட்டட் ஸ்டோரீஸ் பார் எ டெக்கெட் ...

நட: யோய் சோ நிருத்துய்யா எங்கப்போனாலும் ஒடனே இங்லீஸ் பாதி தமிழ்பாதின்னு மொட்டைத் தலைய தடவிக்கிட்டே பீனல் கோடு பேச் ஆரம்பிக்கிறே...

கராத்தே: செல் போனில்" எனக்கென்னா கேரக்டர்பா மேயர் கேரக்டரா?

நான்: கொஞ்சம் பொறுமை இன்னும் முடிக்கலை... அப்ப நீங்க அவர் கூட "நடிச்ச" பாசத்தில ஒங்களுக்கு கட்சியில முக்கிய பொறுப்பு குடுக்குறார்.கொஞ்ச நாளில் அவருக்கு ஒடம்புக்கு முடியாம போகுது...

ஜெ: யாருக்கு.... ?

நான்: உங்க கூட நடிச்சி உங்கள ஆளாக்குனவருக்கு.

ஜெ: ஓகோ...

சசி: எனக்கு என்னா வேசம்...

நான்: நீங்க டி.வி.டி. வாடகை கடை நடத்துர பொண்ணு. உங்க கிட்ட இவங்ககேசட் வாடகைக்கு வாங்க வராங்க..

நடரா: எனக்கு என்னாய்யா கேரக்டரு...

நான் : அதுதான் நீங்க இயக்குனர் இவங்க ரெண்டுபேரும் என்னா செய்யனும் என்ன செய்யக்கூடாதுன்னு சொல்ற வேலை. இவங்க கேக்குற எல்லாத்தையும் அரேஞ்பன்னுவீங்க ஆனா பேச மாட்டீங்க.. கிட்டத் தட்ட ஒரு மாமா மாதிரிஇவங்களுக்கு என்று சசியை நோக்கி கை காட்ட

நடரா: அப்படீன்னா சரி..

சோ: ஹீரோ நான் எனக்கு ஒன்னும் இல்லையா?

நான்: நீங்க ஹீரோயின் என்ன பன்னுனாலும் பின்னால நின்னு கோசம் போடுவீங்கஒங்கள இவங்க தன்னோட அரசியல் குருவா ஏத்துகிறாங்க... ஆனா நீங்க அப்ப அப்ப வேற பொண்னு கூட போர கேஸ் அதனால ஒங்கள கொஞ்சம் இவங்களுக்கு புடிக்காதுமேலும் நீங்க ஒருதடவை இவங்களுக்கு எதிரா வேற பொண்ணு கூட சுத்துனதை பாத்துகோபத்துல் இருக்காங்க...

கராத்தே: அப்ப நான்?

நான்: நீங்க வில்லன் .. முதல்ல இவங்க கூட இருந்து கொள்ளை அடிக்கறீங்கஅப்புறமா பங்கு பிரிக்கும் போது தகறாரு வந்து எதிர் கோஷ்டியில போய்சேந்து இவங்க பன்னுன அட்டூழியத்தை மேடை போட்டு சொல்றீங்க..

ஜெ: நாங்க கொள்ளை அடிக்கிறோமா? சசி என்ன சொல்றார் இவர்?

சசி: அதானே என்னாய்யா கதை சொல்றே?

நான்: அதாவது மக்கள் மனசை கொள்ளை அடிக்கறீங்க... உங்க "திறமைல" மயங்குற உங்க தலைவரோட அமைச்சர்கள் எல்லாறும் உங்களுக்கு ஆதரவு தராங்க.. அப்ப ஹீரோ உங்களுக்கு ஆதரவா இருக்காரு... திடீர்னு அந்த பேமஸ் நடிகர் செத்து போறார் நீங்க அவர்கூடவே செத்துப் போற மாதிரி ஒரு நாடகம் நடத்துறீங்க .... திரைல பாக்குற மக்கள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறும் படியான செண்டிமென்ட் சீன்அது...

நடரா: நான் என்னவா வரேன்?

நான்: நீங்க தான் மாமாவாச்சே கட்சிக்கு ஆள் புடிச்சி விடுவது உங்கவேலை... உங்க மனைவி சசி ஆனா நீங்க பேசிக்க மாட்டீங்க

சோ: டூயட் எதுவும் இல்லையா?

ஜெ: ஆமா டூயட் எதுவும் இல்லையா வேனும்னா மைசூர் பேலஸ்ல வச்சிக்கலாம்சொந்தக்காரங்கதான் அவங்க ...

நான்: டூயட் இல்லாமலா? உண்டு " பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான்" இது இந்த வருசத்து சூப்பர் ஹிட்டா ஆகும் ஹீரோ கையில ஒரு சாட்டையோட வந்து உங்கள புறட்டி எடுப்பாரு நீங்க ஒரு குத்தாட்டம் போட்டு ஒரு சவுண்ட் விடுவீங்க சனங்க அள்ளி தெளிப்பாங்க ஜில்லுன்னு ஜொள்ளு...

சசி : அக்கோவ் இந்தாளு ஒன்னோட சொந்த கதையை எடுத்து தன்னோட கதைன்னு பீலாவிட்டு ஒன்னையும் அதுல நடிக்க வச்சி காசு தேத்த பாக்குறான் ஆமா,,,

ஜெ: என்ன மிஸ்டர் அப்படியா?

நான்: அதெல்லாம் இல்லீங்க கிட்டத் தட்ட ஒங்க கதைமாதிரிதான் ஆனா க்ளைமாக்ஸ் வேற ..

ஜெ: என்னது?

நான்: க்ளை மாக்ஸில ஹீரோயின் திருந்தி நல்லவங்களா ஆயிட்றாங்க...

ஜெ: அப்ப சரி... சசி இது நம்ம கதை இல்லை நாம என்னைக்கு திருந்தப் போறோம்...

சோ: நான் வழக்கம் போல சும்மா தானா? அப்ப நான் பிஜேபி கூடவும் காங்கிரஸ்கூடவும் பேசி கலைஞர் வசனத்தில ஒரு படம் பன்னுறேன் என்னா?

கராத்தே: யோவ் நான் வில்லன் எனக்கு சீனே இல்லயா?

நான்: நீங்க செல்போன் மூலம் மட்டும்தான் வரீங்க ஜூவி, நக்கீரன் இப்படிபத்திரிகைல பேட்டி வரும்... நீங்க டப்பிங் மட்டும் பேசுனா போதும்....

கராத்தே: நான் நேர்ல வரண்டீ ஒன்னையும் ஹீரோயினையும் வந்து பேசிக்கறேன்.

நடரா: நான் என்னய்யா மாமா கேரக்டர்தானா... அப்ப சசி எனக்கு ஹீரோயினா?நான் கூட வரனா இல்லை பேக்ஸ், இமெயில் இப்படி ஹைடெக் காதலா?

நான்: கப்புன்னு பாயின்ட் புடிச்சீங்க இதான் வேனும்... நீங்க பத்துபதினைஞ்சி வருசமா சசிய பாக்காமலே காதலிச்சி பரிதாபமா கதையைமுடிச்சிக்கரீங்க...

சசி: நான் என்ன ஆகுறேன்?

ஜெ: நீதான் என் கூடவே இருக்கியே உனக்கும் எனக்கும் என்ன தொடர்புன்னு தெரியாம ஜனங்க மண்டைய ஒடச்சி பட்டி மன்றம் வைக்கனும் கதைக்கு இதானேசஸ்பென்ஸ்?

நான்: அதே தான் ,,,, இதுக்கு நடுவுல ஒரு 30 வயசு குழந்தைய தத்தெடுத்துஅதுக்கு கோடிக் கணக்குல கல்யாணம் பன்னி கின்னஸ்ல இடம் புடிக்கறீங்க...அந்த பையன் கோவிச்சிகிட்டு வீட்ட விட்டு ஓடிப் போறான் அப்ப அந்த பையன்கொண்டுபோன பொம்மைகள் எல்லாத்தையும் திருப்பி வாங்க நீங்க கஞ்சா கேஸ்போட்டு அவன உள்ள தள்ளி விசாரிக்கறீங்க

ஜெ: கதை நல்லா பெரிசா இருக்கும் போல தெரியுதே?

நான் : இன்னு விசயம் இருக்கு !

ஜெ: எங்கிட்ட தைரியமாக பேசுற ஒரே ஆளு நீதான், சொல்லு

நான் : நீங்க தடலாடியா உங்களை எதிர்த்துப் பேசின அந்த சூப்பர் நடிகர் வீட்டுக் கல்யாணத்தில கலந்துக்கிறிங்க

ஜெ: என்ன மேன் கொஞ்சம் கூட பயமில்லம உளறுரே !

நான் : உளறல மேடம். அந்த ஆளுக்கு ஏகப்பட்ட வெறியனுங்க சாரி ரசிகனுங்க இருக்காங்க. அந்த ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அப்பறம் அந்த ஆளும் உங்களை எதிர்த்து பேச மாட்டார்

ஜெ: சசி, இது நல்லா ஒர்கவுட் ஆகும் போல இருக்கே. சரி சீன் வச்சிடுங்க

நான் : அப்பறம் இன்னொரு சீனும் வைக்கனும்

ஜெ: பாத்து அப்பறம் எனக்கு சீனே இல்லாமல் போய்டப் போவுது

சசி : அக்கா கொஞ்சம் இருங்க, நல்ல ஐடியாவா கொடுக்கிறார். நமக்கு பணம் நூறு கோடி சாரி படம் நூறு நாள் ஓடனும் அதானே முக்கியம். நீங்க சொல்லுங்க

நான் : ஒரு ஆளு கருப்பு எம்ஜிஆருன்னு சொல்றார். நீங்க அவருக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிற மாதிரி சீன்

ஜெ: போறப் போக்கப் பார்த்தால் கதை கந்தல் ஆயிடும் போலருக்கே. மிஸ்டர் என்ன சொல்ல வர்ரிங்க?

நான் : மேடம் கோவப் படக்கூடாது. இதை நீங்க செய்றதால அவுரு உசிப்பேறி சம்பாறிச்ச காசெல்லாம் அண்ணாமலைப் படத்தில வர்ரமாதிரி அரசியலுக்கு செலவு பண்ணி காணமால் போய்டுவார். அப்பறம் சிவப்பு எம்ஜிஆருன்னு கூடஎவனும் அவதாரம் எடுத்து உங்களை சீண்ட பயப்படுவானுங்க.

நான் : மிஸ்டர் வெரிகுட். சோ சொல்றதை விட இது உருப்படியான ஐடியாவா இருக்கே !

சோ: சந்தடி சாக்கில என்ன முட்டாள்னு சொல்றிங்க. என்ன பண்ணறது சாதி பாசம் தான் என்னைக் கட்டிப்போட்டு வச்சிட்டு.

ஜெ: மிஸ்டர் சோ. உங்களுக்கு சேர வேண்டியது சரியா வந்து சேர்ந்திடும்

சோ: எனக்கு துக்ளக் விளம்பரம் பன்னிடுங்க தனியா சம்பளம் வேண்டாம்

கராத்தே: யோவ் என்க்கு என்னா சிம்கார்ட் விளம்பரமா?

சசி: நம்ம விடியோ கடைக்கு மட்டும் ஒரு சின்ன விளம்பரம் ..

நடரா: எனக்கு எதுவும் வேனாம்பா சசி கூட சேத்து வக்கிற மாதிரி ஒரு சீன் வை படத்தில அது போதும்.. கனவு சீனா இருந்தா கூட பரவாயில்லை

சசி: கதைக்கு முடிவு இல்லையா?


நான் : எப்படியும் சுமுகமாக முடிக்கனும். ஆனால் படம் பாக்குற ஜெனங்க கிட்டதான் உண்மையான முடிவு இருக்கு

ஜெ: அதல்லாம் சென்டிமென்ட் சீனு வச்சி கவுத்துடலாம். ஒரு உண்ணாவிரத சீன் வச்சிடுங்க !

நான் : மேடம், இது கதைகூட ஒட்டவே இல்லையே

ஜெ: மிஸ்டர் சூப்பரோட கதை எத்தினி பாத்திருக்க, எதாவது ஒட்டி இருக்கா சொல்றதெ கேளுமேன், இங்கே நான் தான் புரொடியூசர், சசிதான் பைனான்சியர். எதாவது சொதப்பினால் அப்பறம் ஆட்டோக்களும் ஆளுங்களும் இருக்கவே இருக்காங்க

நான் : மேடம் பயமுறுத்தாதிங்க. நீங்க சொல்லியும் கேட்கமல் இருக்க எனக்கு கெரகாமா என்ன ?

அவசரமாக,

நடரா : ஐயோ மோசம் போய்டோம்

ஜெ: சசி, மாமா கலவரமாகிறார் என்னான்னு கேளு, மதுரை 30 கோடி இடைச் சொருகுனது நாம தான்னு மேட்டர் சிக்கிடுச்சா

நடரா : சசி, அதெல்லாம் ஒன்னுமில்லை, நாம படம் எடுக்கிற மேட்டர் எப்படியோ அந்த கிழவனுக்கு தெரிஞ்சி போச்சாம், இப்பதான் மா.செ ஒருத்தன் போன் பண்ணி இதை சொன்னான்

ஜெ: சசி உம்புருசனுக்கு எதாவது கழண்டு போயிடிச்சா?

நடரா : அம்மா தமாசா சொல்றாங்க! சசி அதே கதையை அந்த கிழவன் எடுக்க சொல்லி வசனம் எழுதிக் கொடுக்கிறதா ராமநாராயணனிடம் சொல்லியிருக்கிறாராம்.

நான் : மேடம் ஆபத்து , நாம ஒடேனே படத்த எடுத்து முடிச்சிடனும் கெளம்புங்க, கதைக்கு முடிவெல்லாம் ஜெனங்களுக்கு பரிசு கொடுத்து கண்டுபிடிச்சக்க சொல்லலாம் அதுக்கு பணத்தை மட்டும் ஏற்பாடு பண்ணுங்க.

ஜெ : சசி பிரசாரம் போகனும் ... சாரி சூட்டிங்க் போவனும் ஒடனே கேரவன ஏற்பாடு பண்ண சொல்லு

சசி : அக்கா, அப்பறம் மேக்கப்

ஜெ : மேக்கப் எல்லாம் கேரவன் உள்ளேர்ந்து போட்டுக்கலாம். ம் பேக்கப்! பேக்கப் !

32 comments:

Anonymous said...

டாய், தி மு க குடும்பம் பத்தியும் எழுது......அது என்ன அம்மா கத மட்டும்?

கதிர் said...

மகி,

ரொம்ப பெருசா இருக்கு, அப்புறமா வரேன்.

Unknown said...

//டாய், தி மு க குடும்பம் பத்தியும் எழுது......அது என்ன அம்மா கத மட்டும்? //

யாருடா அவன் ஆரம்பமே அடங்காத பய திமுக பத்தி மாயவரம் தியேட்டர்ல படங்காட்டுவாங்க அங்கன போய் பாரு

Anonymous said...

ஒன்ன அடக்க வரும் அனானி கும்பல்.....

Anonymous said...

ரொம்ப படம் பொடாத....பொட்டிய துக்கிட்டு போவொம்.

கோவி.கண்ணன் [GK] said...

மகி,
கதை இருக்கு ஆனால் ஒரு ரீலு பொட்டி படம் கூட மேல காணுமே!
கதையே ரீலா ?
:))

Unknown said...

//ரொம்ப படம் பொடாத....பொட்டிய துக்கிட்டு போவொம். //

நீ சொல்லித்தான் அதை நான் தெரிஞ்சுக்கனுமா? ஏற்க்கனவே தெரிஞ்சது தானே ஆமா முன்னாடி எக்மோர் ஸ்டேசன்ல தூக்குனே இப்ப எங்க கோடம்பாக்க ஸ்டேசனா? பாத்து தூக்கு லல்லு பொட்டி தூக்குற பயலுவ எல்லாம் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு சொல்லிட போறார் என்னா?

Unknown said...

மகி,

ரொம்ப பெருசா இருக்கு, அப்புறமா வரேன்.

/////////////

அட வாங்கப்பா சீக்கிறமா இங்க ஒரு அனானி கதையப் படிக்காம காயிதத்தை கிழிக்குது

Unknown said...

ஒன்ன அடக்க வரும் அனானி கும்பல்/////////

அட நீங்க வந்தாத்தான் எனக்கு வேலையே :))

Unknown said...

//மகி,
கதை இருக்கு ஆனால் ஒரு ரீலு பொட்டி படம் கூட மேல காணுமே!
கதையே ரீலா ?//

இங்கன டிஸ்கசனேத்தான் டிக்கிய பேக்குதே படம் இன்னும் எடுத்து முடிக்கலைங்க ...இந்த அடங்காத ஆயிகள வச்சி எப்படித்தான் படங்காட்டுனாய்ங்களோ மகராசனுங்க :))

Anonymous said...

தல மியுஸிக் நம்ம தேவா போடு.
அவருதான் உங்களை போல மியுஸிக்ல கட் அன்டு பேஸ்ட் கிங்....

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ரசிகர் மன்றம்,
பதிவு எண்: 32145

Unknown said...

//தல மியுஸிக் நம்ம தேவா போடு.//

அதெல்லாம் நம்ம கோவிந்தனோட அத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொல்லிஅனுப்பிட்டாங்க தேவா பாட்டையெல்லாம் போட்டா படம் ஓடுமாங்க..?

//உங்களை போல மியுஸிக்ல கட் அன்டு பேஸ்ட் கிங்....//

அடப் பாவிகளா :)

//கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் ரசிகர் மன்றம், பதிவு எண்: 32145 //

என்னமோ நடத்துங்க நடத்துங்க நான் என்னத்தை சொல்ல

Anonymous said...

"மரம் வெட்டி மருத்துவர்" - அடுத்த பட ரிலிசி....விரைவில் எதிர் பாருங்க...

Muse (# 01429798200730556938) said...

வெறும் ஆபாசம்.

இதன் பகுதி 2 எப்போது வரும்?

Unknown said...

மரம் வெட்டி மருத்துவர்" - அடுத்த பட ரிலிசி....விரைவில் எதிர் பாருங்க...///////////

டிக்கட் அனுப்புனா வந்து நாங்களும் விமர்சணம்பன்னுவோமில்ல எந்த தியேட்டர்ல போடுவீங்கப்பா?

Unknown said...

//மந்திராலோசனை + விவாகரத்து நடிகைகள் டான்ஸ் + கூலிப்படை அடிதடி, கொலை + வாழை இலையை சுருட்டிக்கினு காராகிருக பிரவேசம்னு சூப்பரா போவுமே! ;-) //


நல்ல அய்டியா இதை காமெடி சீனாக உபயோகித்து ஆதிமுக கொள்கை பரப்பு செயலாளர் எங்கள் அண்ணன் செந்திலை நடிக்க வைக்கலாம் எஸ்விசேகருக்கு சுப்ரமணி வேடம்

Unknown said...

//வெறும் ஆபாசம். //

உண்மையச் சொல்லுங்க இது ஆபாஸமில்லையே?

//இதன் பகுதி 2 எப்போது வரும்? //

ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல?

Anonymous said...

//மரம் வெட்டி மருத்துவர்" - அடுத்த பட ரிலிசி....விரைவில் எதிர் பாருங்க...///////////

டிக்கட் அனுப்புனா வந்து நாங்களும் விமர்சணம்பன்னுவோமில்ல எந்த தியேட்டர்ல போடுவீங்கப்பா? //

இந்த தியேட்டர்ல தான்...

மகி தான் இயக்குநர், இந்த படம் முடிச்ச பின் அது அரம்பம்.

Unknown said...

//இந்த தியேட்டர்ல தான்...

மகி தான் இயக்குநர், இந்த படம் முடிச்ச பின் அது அரம்பம்.//

நல்லா பாருங்கப்பா வேற தியேட்டரா இருக்க்ப் போகுது

Anonymous said...

இன்பேக்ட் நான் இத துக்ளக்கில எழுதலாம்னு நினைச்சிருந்தேன் ஆனா பாருங்க இந்த அம்மா ஜெய்லலிதா என்கூட நீங்க தான் பன்னனும் ஹீரோவான்னு சொல்லி இந்த ப்ராஜக்ட்டுக்கு முற்றுப் புள்ளி வச்சுட்டாங்க

நாமக்கல் சிபி said...

//அண்ணாமலைப் படத்தில வர்ரமாதிரி அரசியலுக்கு செலவு பண்ணி காணமால் போய்டுவார்//

மகி,
அது அண்ணாமலை இல்ல அருணாச்சலம் :-)

கப்பி | Kappi said...

படத்துக்கு போட்டோ செஷன் வச்சு ஸ்டில்ஸ் ரிலீஸ் பண்ணலையா?? :))

Anonymous said...

//
இன்பேக்ட் நான் இத துக்ளக்கில எழுதலாம்னு நினைச்சிருந்தேன்
//

சொந்த செலவுல சூனியம் வைக்கபார்தீகளே

Unknown said...

அது அண்ணாமலை இல்ல அருணாச்சலம் //////////

ஆமால்ல மாத்திடுறேன் என்னா படத்துக்கு பேருதான வேற ?:))

Unknown said...

படத்துக்கு போட்டோ செஷன் வச்சு ஸ்டில்ஸ் ரிலீஸ் பண்ணலையா?? :)) /////////////

அம்மா இருக்குற அவசரத்துக்கு சூட்டிங்க் முடிஞ்ச வரைக்கும் படத்தை ரிலீஸ் பன்னிடுவாங்க போல இருக்கு ஸ்டில்லா அதெல்லாம் நூறாவது நாளுக்கு? பாத்துக்கலாம்பா.... ஆமா இத்தனை நாளா நீங்க எங்க போனீங்க இந்த பக்கமே கானொமே?

Unknown said...

//சொந்த செலவுல சூனியம் வைக்கபார்தீகளே //

அட சோ ஆசப்பட்ட எல்லாமா நடக்குது விடுங்க :)))

கதிர் said...

மகி,

ஷெரிஜாவ எங்க காணும்?, நடராசன் கேரக்டருக்கு அர்த்தமே இல்லாம போற மாதிரி இல்ல இருக்கு!!

கப்பி | Kappi said...

//அது அண்ணாமலை இல்ல அருணாச்சலம் //////////

ஆமால்ல மாத்திடுறேன் என்னா படத்துக்கு பேருதான வேற ?:))

///

இந்த பதில் தான் வரும்னு தெரிஞ்சு தான்யா நான் அதை சொல்லாம விட்டேன் :))

கப்பி | Kappi said...

//ஆமா இத்தனை நாளா நீங்க எங்க போனீங்க இந்த பக்கமே கானொமே?
//

அப்படியாஆஆஆஆஆஆ
கொஞ்சம் சேலை..ச்சே வேலை பாக்க சொல்லிட்டாங்க ;)

உங்கள் நண்பன்(சரா) said...

மகி! வழக்கம் போல் ஆரம்பிச்சுட்டப் போல உன் "வேலையை"! வழக்கம் போல் ஜமாய்!:))

இன்று ஊருக்கு போகின்றேன்! மீண்டும் (4 நாட்கள் இல்லையெனில் 1 வாரம்)விரைவில் சந்திப்போம், இப்போ தான் சங்கத்தில் விடுப்பு கடுதாசி கொடுத்திட்டு அப்படியே கோவியாரிடமும் சொல்லிட்டு உங்கிட்டயும் அனுமதி வாங்கிட்டு கொளம்புறேன்!நம்ம நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிடு, கப்பிப் பயல ஆளைக் காணோம் அவன்கிட்டயும் சொல்லிடு! நெக்ஸ்ட் மீட் பண்ணலாம், வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

அப்படியாஆஆஆஆஆஆ
கொஞ்சம் சேலை..ச்சே வேலை பாக்க சொல்லிட்டாங்க ////////

கப்பி நீ உருகுவேல இருந்து பத்திரமா வந்துடுவீல்ல? இல்ல எதுனாவது இங்க இருந்து அமைதிப்படைக்கு ஏற்பாடு பன்னனுமா? :))

Unknown said...

வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா!//////

பாத்து பத்திரமா போய்ட்டு வா கண்ணு..... நான் ரொம்ப நாள் வெயிட் பன்ன முடியாது என்னா துணையில்லாம பயமா இருக்கும்லா? ச்சீக்கிரமா வர்ணும் எதும் சேலைய ....ச்சே வேலையப் பாத்துகினி லேட்டா வந்த்தா அவ்ளோதான் ஆமா