Tuesday, July 24, 2007

மைடியர் பாடி காட்டாத முனீஸ்வரனே

இந்த முறை பாடி காட்டாத முனீஸ்வரன் மயிலிலும் இல்லாமல் மெயிலிலும் இல்லாமல் நேராகவே வந்தார் அவரோடு நடந்த கொலைவெறி சந்திப்பின் தொகுப்பு!

எக்ஸ்பிரஸ் :வணக்கம் பாடி காட்டாத முனீஸ்வரனே எப்படி இருக்கீங்க?

பாடிகாட்டா: வணக்கம் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே?

எக்ஸ்பிரஸ்: நானும் சர்ச்சையுமாய் போளியும் போண்டாவும் போல் இருக்கேன். ஒரே பின்னூட்ட அடி யாரோ பாலாவாம் வந்து காமெடி பன்னியே கொல பன்றான். எனக்கு சில சந்தேகம் இருக்கு உன்கிட்ட பதில் இருக்கா?

பாடிகாட்டா: எத்தனை எத்தனையா வேணுமானாலும் கேளு

எக்ஸ்பிரஸ்: பார்ர்பனீயம் என்றால் என்ன?

பாடிகாட்டா: அது ஒன்னும் நீ நினைக்கிறமாதிரி அலுமினியமோ இல்ல பித்தளையோ இல்ல அது ஒரு மாதிரியான சயனைட். தன்னை சுத்தி இருக்கவன் தன்னை மட்டுமே கவணிச்சுக்கனும் அதாவது தன்னைத்தவிற வேற யாருக்கும் சுயநலம் இருக்கக் கூடாதுன்ற எண்ணம்.

எக்ஸ்பிரஸ்: உதாரணம் சொல்லு புரியலை.

பாடிகாட்டா : இதை நான் தான் செய்தேன், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார்கள். தன் உடன்பிறவா சொந்தங்கள் உயர்ந்தது, அவர்களுக்குத் தான் பதவி; மற்றவர்கள் தாழ்ந்தவர்கள். எஸ்டேட் வாங்கி போடவும் ஜக்கூஸி வைத்து பங்களா
கட்டிக்கொள்ளவும் தங்களுக்கு தான் லாயக்கு என்ற நினைப்பு. தான் உயர்ந்த ஜாதியாய் இருந்தாலும் ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவி/தலைவன் என சுயவிளம்பரம் தேடிக்கொண்டே தேசியவாத முகமூடிகளுக்கு எல்லா சந்தர்பத்திலும் ஜல்லி அடிப்பார்கள். பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோயிலை கட்டினால் நாடு 2012 இல் வல்லரசாய் மாறிவிடும் என திடமாய் நம்பும் ஜோக்கர் அணிக்கு சொந்தக் காரர்கள்.

எக்ஸ்பிரஸ்: இன்னும் தெளிவாக சொல்லமுடியுமா ?

பாடிகாட்டா: இந்த இரண்டு அறிக்கைகளையும் படிக்கவும்.
"கோட நாடு எஸ்டேட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை , நான்போய் தங்கியதாலேயே அந்த எஸ்டேட் ஓனருக்கு இந்த கருணாநிதியின் புறா ரிட்டி அரசு ஏகப்பட்ட தொல்லைகள் தருகிறது நான் வாடகைக்குத்தான் தங்கினேன். (கொடநாடு எஸ்டேட்டில் இருந்து வந்த உடன் விட்ட குட்டி அறிக்கை.)

கொடநாடு எஸ்டேட் நஷ்டத்தில் இயங்கியதால் அதை மேலும் வளமாக்கவும் அங்கே இருக்கும் தொழிலாளர்கள் தங்கி ஓய்யெடுக்கவும் அந்த பிரம்மாண்ட பங்களா கட்டப்பட்டது (கருணாநிதியின் புறா ரிட்டி அரசு கொஞ்சமாய் ஆதாரத்தை காட்டியவுடன் பல்டியடித்த குட்டி அறிக்கை)

இப்போ புரியுதா?

எக்ஸ்பிரஸ்: புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு சரி எதையும் தீர்மானம் செய்யும் அறிவு இவர்களுக்கு இருப்பதாக நம்புகிறவர்களா?

பாடிகாட்டா: ஆமாம். தான் என்ன முடிவெடுத்தாலும் , தன்னை சுற்றி யிருப்பவர்கள் அந்தமுடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என எண்ணுபவர்கள், அது மூன்றாம் அணி அமைத்து கலாமை ஜனாதிபதி ஆக்குவதாய் இருந்தாலும் சரி இல்லை தீவிர புலி ஆதரவு வைகோவை தன் கூட்டணியில் சேர்த்து அவர் பல்லை பிடுங்குவதாய் இருந்தாலும் சரி. அவங்க நினைப்பதுதான் சரி அதுதான் முடிவுன்னு "திரவமா நம்புவாங்க"

எக்ஸ்பிரஸ்: இதுக்கு ஏதாவது உதாரணம் இருக்கா ?

பாடிகாட்ட்டா: ம் நிறைய இருக்கு. சேது சமுத்திர திட்டம் , தன்னோட ஆட்சியில வந்தா அது தமிழகத்துக்கு கிடைத்த தன்னால் கொண்டு வரப்பட்ட கொறப் பிரசாதம் என்பது அதுவே அடுத்து வரும் அரசால் நிறைவேற்றப் படுமானால் அங்கே ராமர் குரங்குகளோடு சேர்ந்து பேன் பார்த்தார் என பாஜக அடிக்கும் விஷ விளம்பரங்களுக்கு தீவனம் ஒரு அட்சய பாத்திரமாக எப்போதும் இருப்பது.

எக்ஸ்பிரஸ்: இதைவிட வேறு குணங்கள்

பாடிகாட்டா: முயலுக்கு மூணே கால் நினைப்பு இவர்களிடம் இருக்கும்

எக்ஸ்பிரஸ்: புரியலையே

பாடிகாட்டா: தன்னையும் சசியையும் விட்டால் தமிழ்நாட்டை தலைமை தாங்க வேறு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம். மற்றவர்கள் அரசியலில் நுழைந்தாலும் அவர்களை குடிகாரர்களாக நினைப்பது.

எக்ஸ்பிரஸ்: இவர்கள் கல்வி கேள்வி, வாழ்க்கை முறை பற்றி...?

பாடிகாட்டா: அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள் மூப்பனார் போன்ற பெரும் செல்வந்தர்களின் குடும்பநிகழ்வுகளில் நடனம் ஆடுவார்கள். சிலர், எம்ஜியாரின் "பள்ளியறையில் படித்தபின், துகிலுறிந்துவிட்டார்கள் அய்யகோ என்ற வேடம் போட ஏதுவாக கருணாநிதியின் முகத்தில் நிதிநிலை அறிக்கையால் அடிப்பார்கள் உடன்பிறவா சகோதரியோடு மட்டும் டன் கணக்கில் ஆபரணங்கள் அணிவார்கள்.

எக்ஸ்பிரஸ்: இவர்கள் பேச்சு எப்படி இருக்கும்?

பாடிகாட்டா: நான் எனது எல்லாம் எனக்குத் தெரியும் என்று அடிக்கடி பேசுவார்கள், அரசாங்கமே அவர்கள் அப்பன் வீட்டு சொத்து என்பது போல் எனது அரசாங்கம் எனது கழகம் என வார்த்தைக்கு வார்த்தை பீத்திக் கொள்வார்கள். அது மதியூக மந்திரியோ இல்லை மன்னார்குடி முந்திரியோ தன்னை கண்டால் இடுப்பில் துண்டு கட்டி காலில் விழ வேண்டும் என எண்ணுவார்கள் இல்லாவிட்டால் கட்டம் கட்ட எண்ணுவார்கள்.

எக்ஸ்பிரஸ்:சரி கடைசியாக திராவிட திம்மி களின் சூழ்ச்சி என்றால் என்ன?

பாடிகாட்டா: பார்ப்பனத் தனம் பேசும் சில அரசியல் வாதிகளின் முகமூடிகளையும் இந்த நாட்டில் பார்ர்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட சூத்திரன் அடிமை எனும் மனோபாவத்தில் ஆசிட்டை அள்ளி ஊற்றியாவது சூத்திரன் விழித்துக்கொள்ள உதவிட வேண்டும் என எண்ணும் நயவஞ்சகர்கள் திட்டம்

எக்ஸ்பிரஸ்: பார்ப்பனீய வேதத்தில் மூலக் கருத்து?

பாடிகாட்டா: வேற என்ன அதேதான். நாகரீகத்தில் நாங்க ஒசந்தவங்கன்னு இந்த இண்டர்நெட் யுகத்திலயும் சொல்லிகிட்டே அடிப்படை வசதிக்காக போராட்டம் பன்றவன் எல்லாறையும் கிண்டல் அடிப்பது. அந்த மனோபாவத்தை விட்டு ஆயிரம் செருப்படிகளை பட்டாலும் பூனூலில் தொங்குகிறது பாரதம் என்ற மொக்கை மனோபாவத்தோடு இருப்பது.

எக்ஸ்பிரஸ் : ஒன்னும் புரியலை

பாடிகாட்டா: பதவி என்பது சொத்து சேர்க்க , கொள்கை என்பது இந்துத்துவ வியாதிகளோடு கூட்டணி வைப்பது , அரசியலுக்கு வருவது கல்யாண மண்டபத்தை காப்பாத்த. பதவி அழிந்தாலும், கொளுகை அழியாது. வேறு பதவியில் புகுந்துகொள்ளும். பிரியுதா ?

எக்ஸ்பிரஸ் : எனக்கு அவசரமா பதிவு போடனும். பை.

பாடிகாட்டா : பை பை

18 comments:

Anonymous said...

விட்ட குட்டி அறிக்கையா இல்ல குட்டி விட்ட அறிக்கையா?

Anonymous said...

மைனா ரிட்டி அரசு
புறா ரிட்டி அரசு
காக்கா ரிட்டி அரசு

ரொம்ப நல்கல் மகி!

லக்கிலுக் said...

ஒரிஜினலை விட இது சூப்பரா இருக்கே?

Anonymous said...

அய் அக்கா! இங்க பாறேன் இநத மகிய நம்ம பிரிச்சு அலசி தொவச்சி என்னன்னவோ....

Anonymous said...

//அரசியலுக்கு வருவது கல்யாண மண்டபத்தை காப்பாத்த//

என்னய வச்சி காமடி கீமடி பண்னலையே!

Anonymous said...

//பாடிகாட்டா: அது ஒரு மாதிரியான சயனைட். தன்னை சுத்தி இருக்கவன் தன்னை மட்டுமே கவணிச்சுக்கனும் அதாவது தன்னைத்தவிற வேற யாருக்கும் சுயநலம் இருக்கக் கூடாதுன்ற எண்ணம்.

எக்ஸ்பிரஸ்: உதாரணம் சொல்லு புரியலை//

அட, நம்ம பாடி காட்டாத முனி, மஞ்ச துண்டையும்,மரம் வெட்டியையும் உதாரணமா சொல்லுதே.எல்லாம் தெரிஞ்ச முனி தான்.

Anonymous said...

வேனாம், அழுதுருவேன்.

Unknown said...

//அட, நம்ம பாடி காட்டாத முனி, மஞ்ச துண்டையும்,மரம் வெட்டியையும் உதாரணமா சொல்லுதே.எல்லாம் தெரிஞ்ச முனி தான். //

ஆமா அனானி இப்போ நீ யாருன்னு கூட தெரிஞ்சு போச்சி

Anonymous said...

//ஆமா அனானி இப்போ நீ யாருன்னு கூட தெரிஞ்சு போச்சி //

தெரிஞ்சா துவைச்சி காயப்போடவேண்டியது தானே?

ILA (a) இளா said...

அப்புறம் ஏன் அ.திராவிட.மு.க? எனி நியூமராலஜி பிராப்ளம்? பேர மாத்த சொல்லுங்கப்பா..

Anonymous said...

பார்ப்பனீயம் என்பது பிச்சை எடுத்து உண்பது.

Anonymous said...

பார்ப்பனீயம் என்பது ஊரை அடித்து உலையில் போடுவது.

ALIF AHAMED said...

போய் பொழப்ப பாருங்கப்பூ.. :)

TBCD said...

/*சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவார்கள் மூப்பனார் போன்ற பெரும் செல்வந்தர்களின் குடும்பநிகழ்வுகளில் நடனம் ஆடுவார்கள்*/

கவர்ச்சி நடனம் ஆடுறவங்க வந்து குத்து குத்துணு குத்தப்போராங்க..
மோஹன் தாஸ்..கவனிக்கவும்... அருமையான சான்சு, பதிவு போட..தலைப்பு , நான் தான் வைப்பேன்.."கவர்ச்சி நடனம் ஆடும் பெண்களின் பெண்ணியம்"

Anonymous said...

//போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

வெ. ஜெயகணபதி said...

நக்கல், நையான்டி, நல்ல செருப்படி...

பார்க்க வெள்ளைத்தோல் பசுவாக இருந்தாலும் அது எருமைத்தோல் சாமி.. என்னத்ததான் அடி அடின்னு அடிச்சாலும் உறைக்காது... வெட்க்கம் கெட்ட ஜென்மம்...

Unknown said...

அப்பூ, பாத்து... எவனாவது, "தங்கத் தலைவியை பங்கப்படுத்தியதற்காக" டின் கட்டிடப் போறான்.

Anonymous said...

எனக்கென்னவோ இது ஓங்களோட சொந்த எழுத்து மாதிரி தெரியல்லியே...

சொல்லுங்க எங்க சுட்டீங்க ?