Thursday, July 05, 2007

நடிப்புக் கடவுளால் நாசமாகும் தமிழ்சினிமா -அவதாரம் எடுக்கிறார் நாசர்


தமிழ் திரையுலகில் நடிகராக மிகவும் சிரமப்பட்டு நல்ல நிலைக்கு உயர்ந்தவர்களில் தமிழுக்காக எதாவது செய்யவேண்டும், நல்ல படங்களை தரவேண்டும் என்று முனைப்புடன் இருப்பவர்களில் கமல், பிரகாஷ் ராஜ் மற்றும் மூக்கழகர் நாசர் மூவர் பாராட்டத்தக்கவர்கள். மற்றவர்கள் வியர்வைக்கு தங்ககாசை வாங்கி அதை பெங்களூர் நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டு சென்னை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க கோகோ கோல ஏஜென்சி எடுத்து நடத்துபவர்கள். நாடகக் கலைகள் அழிந்துவருவதை அவதாரம் என்ற படத்தின் மூலம் எல்லோரின் கவனத்துக்கும் கொண்டுவந்தார். மசாலா கதைகளையும், குத்து பாட்டுகளையும் தான் பெரிய நடிகர்களே நம்பி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் தான் எடுத்த அவதாராம், தேவதை மற்றும் பாப்கார்ன் படங்களில் அது போன்று காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ள விரும்பியதே இல்லை. ஒரு நடிகனாக 25 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருப்பவருக்கு சினிமா பார்முலா

தெரியாமல் இருக்குமா ? இவர் அதையெல்லாம் உணராதவர் அல்ல. கலைகள் கொலை செய்யப்படுவதற்கு அல்ல என்று உணர்ந்தே அதுபோன்ற கேடுகெட்ட செயல்களில் இறங்கவில்லை. வில்லனாக நடித்தாலும் சரி, குணச்சித்தர வேடம் போட்டாலும் சரி,

நகைச்சுவை

வேடமேற்றாலும் சரி தன்னுடைய வேலையை கன கச்சிதமாக முடித்து இருக்கிறார். அதனால் தான் மணிரத்னம், கமல் போன்றவர்கள் தொடர்ந்து நாசர் நடிப்புக்கு

தீனீ போட்டு வருகின்றனர் பம்பாய் படத்தில் திருநெல்வேலி பிள்ளையாக சிறப்பாக நடித்திருப்பார்,

தேவர்மகனில் ஒரிஜினல் தேவர்களுக்கு ஒரு இம்மியும் குறையாமல் அந்த படத்தில் கமலையே நடப்பில் டாமினேட் செய்தார். அவ்வை சண்முகியில் அவர் ஊமைவேசத்தில் சன்முகி மாமியுடன் அடிக்கும் கூத்து எப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும். குருதிப் புனல் படத்தில் அவர் நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. மேலும் சில

ஆங்கிலப் படங்கள், நிறய டாக்குமெண்ட்ரிகள், கிரிஸ்டியன் காலேஜில் நடிப்புக்

கலை ஆசிரியர், நாடக் பட்டரைகள் நடத்தி இன்னும் பல நல்ல கலைஞர்களை

உறுவாக்கும் சிற்பிஎன இருப்பவருக்கு பாக்ஸ் ஆபீஸை பணத்தால்

நிரப்ப வேண்டும் என்ற கேனத்தனமான ஆவல் இல்லாத காரணத்தினால் நாசர் போன்றவர்களின் நல்ல படைப்புக்கள்

அவதாரங்கள் ஆகாமல் போகின்றன. இதுபோன்ற கலைஞர்கள் வாய்திறந்து

எது

வும் பேசிவிட முடியாது என்பதாக இந்த தமிழ் சினிமாவை வைத்திருப்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் கடவுள்களின்

வேலை கலைகள் பொதுமக்களுக்குத்தான் ஆனால் கலைஞனுக்கு கலை என்பது சோறு போடுவது.


எனவே அந்த கலையை எவன் போற்றி வளர்கிறானோ அவனே உண்மையான கலைஞன். சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டு இளைஞர்களை திசைத்திருப்பியதற்கு சினிமாவை பயன்படுத்திக் கொண்டு குதிரை வியாபாரம் செய்யும் நடிகர்களினால் சினிமா உலகம் அழிவை நோக்கிப் போய்கொண்டிருப்பதை நாம் பார்த்து விமர்சனம் செய்வதை

விட நாசர் போன்றவர்கள் அது குறித்து சொன்னால் அது 100 விழுக்காடு உண்மையாகத்தான் இருக்கும். தங்கர்பச்சானின் பள்ளிக்கூடமும் சிவாஜி ஓவர் பில்டப்பால் ஜூலை ஆகியும் இன்னும் மணி அடித்து திறக்கப்படாமல் இருக்கிறது என்பதையும் நினைத்துப் பார்க்கையில் நாசர் சொல்வது ஏற்றுக்கொள்ளும் வகையில்

தான் உள்ளது . இதை ஏன் நாசர் இங்கே சொல்லாமல் அமெரிக்கா போய் சொல்ல வேண்டும் என்பவர்களுக்கு :


ஏன் பிரபலங்கள் ஒரே மேடையில் கருத்துப் ப்ரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை?
அங்கும் இங்குமாக தன்னுடைய மன ஆதங்கங்களை சிறிது சிறிதாக வெளிப்படுத்துவதின் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள்? ஆளை விடுப்பா உன் வெளிச்சத் திரையில இருந்துன்னுதானே பொருள்...
பெரிய சிங்கங்களாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கிடையில் இது போன்று ஒரு ஒரத்தில் நின்று மாஸ் சந்தைக்கு ஒவ்வாத விசயத்தை சொல்லி, ஒரு கழகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அது போன்ற சினிமா சிங்கங்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டால் தனக்கு பூவாவிற்கே லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்படாலாமில்லையா?
அதனால் தானோ, சபையறிந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தக் கூடிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.
மேலும்...

20 comments:

சிவபாலன் said...

// ஒரு நடிகனாக 25 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் இருப்பவருக்கு சினிமா பார்முலா

தெரியாமல் இருக்குமா ? //


True. சிந்திக்க வேண்டிய கேள்வி?

மாயன் said...

மகி,

சாருலதாவின் திட்டிய அதே வேகத்தில் நாசரை ஆதரிக்க கிளம்பி விட்டீர்களே?.. நவீன இலக்கியம், உலகத்தர இலக்கியம் என்று எப்படி புரியாத மொழியில் நடையில் எழுத ஒரு கூட்டம் இருக்கிறதோ.. அதே போல புரியாத மாதிரி படம் எடுப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது.. அவர்கள் கூறும் நல்ல சினிமா எப்படி இருக்கும் தெரியுமா? முகம் என்று ஒரு படத்தில் நாசர் நடித்திருக்கிறார் பாருங்கள் தெரியும்... இந்த படங்கள் மக்கள் பார்த்து என்ன பண்ண போகிறார்கள்?.. நாங்கள் புத்திசாலிகள் நீங்கள் அறிவிலிகள் என்று பறைசாற்றும் விதமாக இவர்கள் செயல்படுகிறார்கள்.. உதவாத மசாலா படங்களை பார்த்து மக்களாவது ஒரு 2 மணி நேரம் சந்தோஷமாக இருக்கட்டும் விடுங்க...

ஜனரஞ்சகமாகவும் நல்ல கருத்துக்களை கூற முடியும்... அதை முயற்சி செய்ய சொல்லுங்கள்.. இவர்கள் உலக சினிமா வரலாற்றில் இடம் பிடிக்க எடுக்கும் கண்ட கருமங்களை நாம பார்க்கணும்னு நமக்கென்ன தலையெழுத்தா?

Thekkikattan|தெகா said...

நல்ல பதிவு! கேட்க வேண்டிய நேரத்தில் கேட்டு வைத்திருக்கிறீர்கள். பார்ப்போம் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.

அய்யா, கொஞ்சம் ஃபாண்ட் அ மாத்துங்கப்பா. பிறகு, உடைஞ்சு உடைஞ்சுக் கெடக்கு பாராவெல்லாம்...

Anonymous said...

appo naser'ku inime "poovakku" chingu..chak'aaa?
manorama'ku nadanthathu theriyum ille...
manorama'ke ippdinna..nasar ellam oru ma__r...

Thekkikattan|தெகா said...

முகம் என்று ஒரு படத்தில் நாசர் நடித்திருக்கிறார் பாருங்கள் தெரியும்... இந்த படங்கள் மக்கள் பார்த்து என்ன பண்ண போகிறார்கள்?..//

மாயா, இந்தப் படத்தின் மூலமாக சொல்ல வந்த விசயத்தை மறந்து விட்டீர்களே.

எப்படி உங்களால் இப்படி பொருப்பற்ற முறையில் மனிதர்களின் கடின உழைப்பை தூக்கியெறிந்து பேச முடிகிறது. அது முதிர்ச்சியின் அளவு கோலை அல்லவா சுட்டிக் காண்பிப்பதாக எனக்குப் படுகிறது.

உங்களின் பின்னூக்கியையும் அதன்பால் சொல்லப் பட்டிருக்கின்ற கருத்தையும் படித்து பல படிகள் உங்களின் மீதும், உங்களின் வலைப் பக்கங்களின் மீது வைத்திருந்த எண்ணம் குறைந்து போனது.

குட்டிபிசாசு said...

மகி அண்ணே,

உங்க லிஸ்ட்ல அன்பேசிவம் விட்டிங்க.

இங்க பொழுதுபோக்கத்தான் படம் என்பார்கள் சிலர் வந்து கரிச்சி கொட்டுவாங்க. கலைக்கான சேவைனு நினைக்கிரவங்க உண்மைனு சொல்லிட்டு போவாங்க. ஆனால் இந்த ரெண்டு கும்பலுக்கும் ஆஸ்காருக்கு ஏன் தமிழ் சினிமா போகலனு ஆதங்கம் உண்டு. IMDB rating-ல டாப்ல இருக்கிற பல படங்கள் மசாலா படங்கள் தான். லாபம், ஜனரஞ்சகம் என எல்லாத்தையும் கருத்தில் கொண்டு மசாலா படம் எடுத்தாலும் லாஜிக்கோட ் தரமான படங்கள் வந்தால் தமிழுக்கு நல்லது. தரம் என்றால் என்னனு யாராவது கேள்வி கேட்பாங்க! அதை புரிய மற்ற மொழியில் வெளியாகும்படங்களை்படங்களை நாம கொஞ்சமாவது பார்க்கனும், காப்பியடிக்க இல்லை. இதுக்கு மேல நான் எதாவது சொன்னால் என்னோட நண்பர்கள் ரவுண்டு கட்டி அடிப்பார்கள்.

ILA (a) இளா said...

//கொஞ்சம் ஃபாண்ட் அ மாத்துங்கப்பா. பிறகு, உடைஞ்சு உடைஞ்சுக் கெடக்கு பாராவெல்லாம்...//
சொன்னா யாரு கேக்குறாங்க? தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு பேசிக்குவாங்க

Unknown said...

யப்பா டெம்ப் "லேட்ட" லேட்டா மாத்திட்டேன் போதுமா?

Anonymous said...

i do accept ,but though baba was a flop the collection of baba was more than gilli(which was super hit of that year)if you dont belive this go and check with any box office collection report of that year....even a flop flim is ready to get more collection than a hit film..dont forget baba ran only for 50 days that itself maximum wereas gilli ran for 200 days...considering these things certainly every kamal fan would be disappointed....that's why again i am saying we rajini fans will accept nadipil ulaga nayagan kamal mattume ! anal vasulilum,makalin idayathilum rajini matume super star avar nadithal illa chumma nadanthle padagal vasulai alli kuvikkum....kanna ethanai adugal cinimavil irunthai enpathu mukkiyamalla nasar ethai perai vala vaythai enbathe unnai uyartha edathukku kondu sellum...kamalay vida periya nadigana nee? perusa nadichuten nadichuten kudikiraye? tiramayana nadigan kamale rajini piraguthan

rajini veriyan

Unknown said...

//rajini veriyan //

இதுவே போதும் உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் ஏத்துக்க மாட்டீங்கன்னு தெரியுது இனிமே பேசி என்ன பலன். போய்யா

மாயன் said...

மகி,

Said.. மட்டும் தாங்க தெரியுது... யாரு எனக்கு எதிர்ப்பாட்டு பாடினதுன்னு தெரியலை..

யாரயிருந்தாலும்.. என் பதிவுகள் மேல மதிப்பு வெச்சுருக்கேன்னு சொன்னதுக்கு நன்றி.. கருத்துக்கள் மோதலால் மதிப்பு குறைஞ்சுடாதுங்கிற நம்பிக்கையோட என் கருத்தை சொல்றேங்க...

உலக சினிமா, உலக இலக்கியம், கடின உழைப்பு எதுவா வேணா இருக்கட்டுங்க...

நான் அதை குறை சொல்லலை.. மக்களை சேராத சென்றடைய முடியாத எந்த ஊடகமும் விஷயமும் வெற்றி பெற முடியாதுங்க.. ஏன் எவ்வளவோ நல்ல படங்கள் வெற்றி அடைஞ்சுட்டு தாங்க இருக்கு.. மக்களுக்கு புரியாத மாதிரி படம் எடுத்துட்டு நான் பெரிய கலைஞன்னு காலரை தூக்கி விட்டுக்கறதால யாருக்கு என்ன பிரயோசனம்?

முகம் படம் நாசர் இயக்கின படம் இல்லைங்க..

நாசர் எடுத்த அவதாரம், தேவதை, பாப்கார்ன் இந்த மாதிரி படங்களை வெச்சு நாசரை சப்போர்ட் பண்ணாதீங்க..

அவதாரம் கலை படம் இல்லை.. கமர்ஷியல் படம் தான்னு படம் வெளிவரதுக்கு முன்னாடி அவரே பல முறை பேட்டி கொடுத்துள்ளார்..

தேவதை.. "Divine Lovers"-னு வேற சில மேட்டர்களுக்காக ஃபேமஸான ஒரு படத்தோட மட்டமான உந்துதல்..

பாப்கார்ன்.. நான் எதுவும் சொல்லலைங்க..

நாசர் நல்ல திறமையான நடிகர்.. உலக சினிமாக்கள் ரேஞ்சுக்கு தமிழ் சினிமாவை எடுத்துட்டு போறதுக்கு முயற்சி பண்றாரா இல்லையாங்கிறது தான் கேள்வி...//எப்படி உங்களால் இப்படி பொருப்பற்ற முறையில் மனிதர்களின் கடின உழைப்பை தூக்கியெறிந்து பேச முடிகிறது.//

ரஜினி என்ற மனிதரும், ஷங்கர் என்ற மனிதரும் அதே கடின உழைப்பை தான் செய்தார்கள்.. விழலுக்கு இறைத்த நீர் என்று பதிவுலகமே அலற வில்லையா? நாசர் மட்டும் நல்ல சினிமா எடுத்து பொது சேவையா செய்ய போகிறார்.. என்னோட கருத்தை நல்லா பாருங்க.. நல்ல விஷயங்களை மக்களுக்கு புரியற மாதிரி எடுத்துட்டு போய் சேருங்க.. அவ்வளவு தான்.. கலைஞரும், எம்.ஜி.ஆரும் தங்கள் கொள்கை பிரச்சாரங்களை சினிமா என்னும் ஊடகம் வழியாக எப்படி நிலைநிறுத்தினார்கள்? மக்களுக்கு புரியனும் அவ்வளவு தான்..

என் கிராமத்து சுப்பனுக்கும் குப்பனுக்கும் புரியாத உலக சினிமாவை எடுத்துட்டு அதை அவன் ஏன்யா பார்கணும்னு நினைக்கறீங்க..

என்னோட கருத்து மக்களை சென்றடையாத நல்ல படங்களா? எடுக்காதீங்க... மீறி சினிமா மேல உள்ள பற்றால எடுக்கறீங்களா கூட்டம் வரலைன்னு மக்களையும் பிற கலைஞர்களையும் குறை சொல்லாதீங்க..

அம்புட்டு தாங்க..

Thekkikattan|தெகா said...

என் கிராமத்து சுப்பனுக்கும் குப்பனுக்கும் புரியாத உலக சினிமாவை எடுத்துட்டு அதை அவன் ஏன்யா பார்கணும்னு நினைக்கறீங்க...//

அவன ஏண்டா அந்த அளவிற்கு கொண்டு வாறீங்கன்னு கேக்குறீங்க, அதானே. ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். என்ன ஒரு பொறுப்பான சமூக கடமை.

என்னோட கருத்து மக்களை சென்றடையாத நல்ல படங்களா? எடுக்காதீங்க... மீறி சினிமா மேல உள்ள பற்றால எடுக்கறீங்களா கூட்டம் வரலைன்னு மக்களையும் பிற கலைஞர்களையும் குறை சொல்லாதீங்க..

அம்புட்டு தாங்க.. //

கொஞ்சம் கஷ்டமான வேலைதான் உங்களையெல்லாம் கரையேற்றுவது என்பது. போக வேண்டிய தொலைவு வெகுதூராமென்பது மட்டும் புரிகிறது.

Anonymous said...

Yes. He is right. He knows things really well and whatever comes out of his mouth is right. thup.....

மாயன் said...

மக்களை சினிமாவால் கரையேற்ற முடியும் என்று நம்பும் அப்பாவியாய் இருக்கிறீர்களே.. தெகா..

விவாதம் இரசிப்பு தன்மையைப் பற்றி.. வெளிநாட்டு ஆட்கள் இங்கே வந்து நமது கிராமத்து கலைகளையும், இந்திய தேசத்தில் விரவிக்கிடக்கும் கலைகளையும் கவர் பண்ணிட்டு இருக்கான்.. நாம மேற்கத்திய சினிமாவையும், இலக்கியத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம்...
//ச்சும்மா விசிலடிச்சான் குஞ்சுகளாகவே தேக்கமுற வைச்சிருப்போம், சரிதானே, மாயன். .\//
விசிலடிச்சான் குஞ்சாய் இல்லாமல் அமைதியாய் நாசரின் உலக படங்களை பார்க்கும் படி செய்து விட்டால் சினிமா சமூகத்தை காப்பாற்றுமா..? இன்னைக்கு ரஜினியும், விஜய்யும் கொண்டு போறதை நாளைக்கு நாசர் கொண்டு போவார்... அவ்வளவு தான்..

உலக சினிமாவின் ரசிப்பு தன்மை நம்மாட்களிடம் இருக்கா இல்லையானு விவாதம் வரும் போது அதை பத்தி மட்டும் தானே பேசனும்.. ஏன் தெகா சம்மந்தம் இல்லாம சமூக முன்னேற்றத்தையும் பத்தியும், கரையேத்தறதையும் பத்தி பேசறீங்க..

மங்கை said...

ஆஹா..மஹேந்திரன்..
முதல்ல இத்தன நாள் இந்த பதிவ பார்க்காம இருந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்...

நான் நாசரின் தீஈஈஈஈவிற ரசிகை...
கூத்துப் பட்டறை ஆள் வேற.. அதுனால அதிக ஈர்ப்பு...

நாசர்..அவர் ஏற்கும் கதாபாத்திரங்கள்ல எந்த compromise ம் செய்யாதவர்...நூறு சதவீதம் தன் உழைப்பை கொடுப்பவர்...

//பாக்ஸ் ஆபீஸை பணத்தால்
நிரப்ப வேண்டும் என்ற கேனத்தனமான ஆவல் இல்லாத காரணத்தினால் நாசர் போன்றவர்களின் நல்ல படைப்புக்கள்
அவதாரங்கள் ஆகாமல் போகின்றன///

சரியா சொன்னீங்க...
பிறரின் துன்பங்களையும், உணர்வுகளையும், வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை எழுப்பி விடும் சிந்தனயை தூண்டும் ஊடகமாக இருந்ததது நாடகமும் சினிமாவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..இதௌ ஆணித்தரமாக நம்புவர் நாசர்..அது மட்டும் அல்லாமல் இந்த ஊடகங்கள் மூலம் முடிந்தவரை நல்ல சிந்தனைகளை ஆரோக்கியமாக சொல்வபர்..

Anonymous said...

sir,
check my list of tamilradios online

Anonymous said...

let me say u one thing...as you told there r 3 good actors in tamil industry(kamal,prakash raj,naseer!!)kamal is known as good actor in world level,prakashraj is know troughout south india as best support actor were as stomach burning naseer could not get anything,best actor kamal is friend of rajini and he praises him he never complained as he knows if good flims is coming it will reach people on which date it is released ,it may run against rajini movie also it will suceed like chennai28,molihi was a super dooper hit ...first let naseer idiot learn to satisfy audience who love good movies like kadal,veyil,molihi ..then he can say his movies are are not running.more over dont compare thangar and naseer ,thangar movies are also good onces accepted by people,do u feel devathai is good movie?!!what a taste u have!!naseer have not given a good movie there ..i accept avatharam is one damn good movie ,mugam is worst movie ...naseer is good actor but not a great director to be compared with thangar or shankar...he is neither great actor who can compared with kamal and prakashraj...last but not least "silvandunga kuda vilayadu naseer ! siruthaykuda(super star) vilayada ninaychukuda pakkatha " ...ayyo pavam ithu iyalamayin vatherichal pulambal,ithai nengal adaraipathu acariyame!!rajini valga...
rajini veriyan

Anonymous said...

தமிழின் ஒரு முக்கிய கலைஞனான நாஸரை இடியட் என்று திட்டும் உஙகளுக்கு ரஜினி வெறியன் என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

தமிழின் ஒரு முக்கிய கலைஞனான நாஸரை இடியட் என்று திட்டும் உஙகளுக்கு ரஜினி வெறியன் என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

first let naseer idiot learn to satisfy audience who love good movies like kadal,veyil,molihi

நாஸர் அன்று துவக்கியவைகள்தான் இன்று இப்படி மலர்ந்திருக்கிறது...