Sunday, August 05, 2007

கிழிந்துபோன காவிக் கோமணம் !

கிழிந்துபோன காவி கோமணம் !

உலகிலேயே அலங்கார வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஒரு கொள்கை உடையவர் எவரென்றால் அது "பாரத" "தேச"த்தில் இயங்கிவரும் சங்கர் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்களே. தேசிய ஒருமைப்பாட்டையும், உலகம் தழுவிய கொள்கைகளையெல்லாம் பார்கும் போது மொட்டை தலையில் உள்ள ஒற்றை முடி கூட சிலருக்கு சிலிர்கிறது.

தே'சீ'யம் என்ற வார்த்தைகளில் இவர்கள் அமைக்கும் கொள்கைகளையும் கட்சி பெயர்களைப் பார்க்கும் போது பாரத தேசத்தில் பிறந்த பசுமாடுகள் கூட படி பாலை எக்ஸ்டாராவாக கறக்கின்றனர். இந்த வேத விற்பனையாளர்களின் கட்சி பெயர்களைப் பார்த்தால் தேசியம் பொங்கி பெருக்கெடுத்து, உடைப்பெடுத்து இந்து மக்கள் ச"மூ"த்திரத்திரத்தால் இந்திய பெருக்கடலையே மூழ்கடித்துவிடும் போல் தெரிகிறது.

ஆகா ! இந்துக்களை ஒருங்கினைத்து, இந்து அரசியல் நடத்தவும் வருணம் செழித்து விளைச்சலை பெருக்க இவர்களுக்கு தேவைப்படும் பெயர் தேசம் தழுவிய ஒரு கவர்ச்சி பெயர். ஆம் 'பாரதம்' என்ற சொல்லை வைத்துவிட்டால் அகில இந்திய இந்துக்களின் மதிப்பைப் பெற்று சாதி வேறுபாடு என்ற அம்மணத்தை காவிக் கோமணத்தால் தற்காலிமாக மறைத்துவிடலாம் என்று கணக்கு போட்டு பார'தீய' ஜனதா (மக்கள்) பார்டி - என்ற பெயரில் கவர்ச்சி பெயர் சூட்டினர். அதன் பொருள் பாரதிய மக்கள் கட்சி என்பதாகும். இங்கே 'பாரதிய' என்று புகுத்தியிருக்கும் சொல்லாடலைப் பார்த்து இந்து அபிமானிகள் (மதி ?) மயங்கி ஒன்றிணைந்தார்கள் என்பதைக் காட்டுவதே வாஜ்பேயின் முந்தைய வெற்றிகள். பார'தீ'ய திட்டம் வெற்றிகரமாகவே கவர்ச்சி பெயரால் தேச ஒற்றுமை என்ற உணர்வின் பெயரால் மயக்க மருந்த்தாக கொடுக்கப்பட்டது தெரியவருகிறது.

அடுத்து கோவண ஆண்டிகளின் உலக பார்வை என்னவென்று பார்ப்போம். இவர்களின் நோக்கு ஈரேழு பதினான்கு உலகமும் சுபிக்சமாக இருக்கவேண்டும் என்று சாதாகாலமும் அசுத்தமோக (அசுவமேத ?) யாகம் வளர்த்து லோக ஷேமத்திற்காக சிறப்பு பூஜைகள் செய்துவருகின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பிய மதம் என்றும், கிறித்துவ மெசினரிகள் இந்தியவை கெடுத்துவிட்டார்கள். மெக்கலே (வெள்ளைக்காரன்) ஆட்சியால் இந்திய ஏழை நாடக மாறியது என்று இவர்கள் அடிக்கடி குற்றம் சுமத்துவதை மறந்துவிடுங்கள். ஏனென்றால் உலக மததுக்கெல்லாம் தாய் மதமான இந்துமதத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை கண்டிப்பது என்பது ஒரு தாய் மகனை கண்டிபதற்கு என்ற "உயர்ந்த" நோக்கில் பார்க்க பழகிக் கொள்ளுங்கள். இந்துத்துவ வாதிகளின் உலக பார்வை என்பது பூமியை மற்றும் சார்நத்து இல்லை, சந்திரமண்டலத்தையும், கடந்து புளூட்டோவையுகடந்து காஸ்மிக் கதிர்களை ஊடுருவி தடைகளை கடந்து செல்பவை. இருந்தாலும் உலக மக்கள் புரிந்து கொள்ளவேண்டிய உலக நன்மையை முன்னிறுத்தி எளிய முறையில் வைக்கப்பட்ட பெயர் ஒன்று இருக்கிறது. அது உலகத்தை பிரகலாதன் சிவலிங்கத்தை தழுவியது போல் ஒருங்கிணைக்கும் ஒரு பெயர், அதுதான் "விஷ்வ" ஹிந்து பரிசத். அதாவது உலக ஹிந்துக்களின் அமைப்பு. பெயரில் உள்ள கவர்சியை பாருங்கள். யார் சொன்னது இந்துத்துவ என்பது ஒரு "குறுகிய" நோக்கம் கொண்ட அமைப்பு என்று ? உலகம் என்ற ஒருங்கினைப்பினால் இந்துவத்தைப் புரிந்து கொண்டு வெளிநாட்டினர் வெள்ளை ஆடைகளை கிழித்து எறிந்துவிட்டு காவி கோமணத்துக்கு மாற தயாராகவே இருக்கிறார்கள் என்று பழைய பேப்பர் "கட்டிங்" ஆதாரத்தில் அண்ணன் நந்த லீலா நரித்தனத்தால் எழுதும் பொது நமக்கு எங்கெல்லாமோ அரிக்கிறது.

ஆக இன்னும் ஒரு பெயர் சொல்ல மறந்துவிட்டேன். மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. மாணவ பருவத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சமஸ்கிரதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் குருகுல பாடம் போல் நடத்தி மாணவர்களுக்கு மத(வெறி) ப்பால் ஊட்டிவரும் ஒரு அமைப்பு. "அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்" மாணவர்களே மாநிலங்களை மறந்துவிடுங்கள், தாய்மொழியை மறந்துவிடுங்கள்
நீங்கள் ஒன்றிணைந்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி மான் ஆகுங்கள். நீங்கள் அகில பாரதிய வித்யார்த்திகள் (மாணவர்கள்).

இந்துத்துவ வாதிகள் என்னதான் கோவணத்தை இறுக்கிக் கட்டினாலும் அதன் கோரமுகத்தினால் வருணபேத கிழிசல்கள் ஏற்பட்டு சாதிய அம்மணம் தெரியவே செய்கிறது.

15 comments:

bala said...

//அண்ணன் நந்த லீலா நரித்தனத்தால் எழுதும் பொது நமக்கு எங்கெல்லாமோ அரிக்கிறது. //

அட என்னங்க இது பெரிய விஷயம்;அரிச்சுதுனா சொறிஞ்சிக்கோங்கங்க.ரொம்ப அரிச்சுதுனாக்க சூரியன் தி பாஸ்,வரவனையான் அய்யாகிட்ட சொல்லுங்க.அவர் கிட்ட இல்லாத அடியாட்களா?அவங்க வந்து சொறிஞ்சிட்டு போறாங்க.முடிஞ்சா அவரே கூட வந்து சொறிவார்.கோமணம் கிழிஞ்சி போச்சூன்னாக்க, நம்ம தியாகு அய்யா கிட்ட சொன்னாக்க அவர் ஃபாக்டரிலேந்து ஒரு ஜட்டி கொடுத்துட்டு போறாரு.கவலைப் படாதீங்க.

பாலா

Senthil Alagu Perumal said...

// பிரகலாதன் சிவலிங்கத்தை தழுவியது //

பிரகலாதன் எப்ப பாஸ் சிவலிங்கத்தைத் தழுவினான். அவன் ஒரு விஷ்ணு பக்தன். சிவலிங்கத்தை தழுவியது "மார்க்கண்டேயர்".

ஏன் இந்து அமைப்புகளைப் பலிக்கிறீர். பல கிறிஸ்தவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் உள்ளன. ஏன் அவற்றையும் சேந்த்துக் கொள்ள வேண்டியது தானே. அவர்களைப் பலித்தால் அறுத்துவிடுவார்கள் என்ற பயமா? நீங்கள் இருப்பதும் இஸ்லாமிய நாடு. பயம் இருக்கத்தான் செய்யும். இந்துக்கள் தானே இலிச்ச வாயன்கள். பார்ப்பனர் மீது கோபம் இருந்தால் அவர்களைத் திட்டும், கடுமையாக பேசும், நானும் சேர்ந்துக் கொள்கிறேன். ஏன் அதற்காக இந்து அமைப்புகளை கண்டிக்கிறீர்?

பெ. செந்தில் அழகு.

Anonymous said...

அண்ணே செந்தில்,
இந்து என்றால் யார்? பாப்பானும் இந்து - நானும் இந்து - நீங்களும் இந்து. அப்ப நாம் எல்லாரும் ஒன்றா? ஒரு வேளை - நமக்குள் ஒற்றுமையை பேணவேண்டும் என்று நீங்கள் ஆம் என்று சொல்லாம். ஆனால், அவர்கள் ஒத்துக்கொண்டு 'பூ நூல்' போட்டு விடுவார்களா? நீங்கள் தாங்கிப்பிடிக்கும் இந்து அமைப்புகள் 'வக்காலத்து' வாங்குமா?

koothanalluran said...

இதை ஒரு பதிவாகவே போடலாம். இப்போதுதான் பதிவர் பட்டறை முடித்து வருகிறேன். அலுப்பு. சரி விஷயத்திற்கு வருவோம்.

யார் சொன்னது அமீரகம் இஸ்லாமிய நாடு என, அறியாமையா அல்லது தெரியாமையா புரியவில்லை. எத்தருணத்திலும் அமீரக்ம் தன்னை இஸ்லாமிய நாடு என அறிவித்துக் கொண்டதில்லை.கடவுச்சீட்டு,currency,நாட்டுக்கொடி,அரசியல் சாஸ்னம் இதில் எதிலும் தன்னை Islamic Republic of United Arab Emirates என சொல்லிக்கொண்டதில்லை. Islamic rule கிடையாது Sharia Law மட்டுமே அதுவும் சில தண்டனைகளுக்கு மட்டும். வளைகுடா நாடுகள் எதுவுமே இஸ்லாமிய நாடுகள் கிடையாது. இதை திட்டமிட்டே அனைத்து வளைகுடா நாடுகளும் செய்துள்ளது. இசுலாமிய நாடு என்றால் காப்பீடு,வங்கி வட்டி,மது,night club இவைகளை தடை செய்ய முடியாது. இதனாலேயே வளைகுடா நாடுகள் இஸ்லாமியப் போர்வையில் வரவிரும்பவில்லை. சவூதி அரேபியா உள்பட. எனது சிறிய அறிவுக்கு தெரிந்தவரை Islamic Republic என பகிரங்கமாக அறிவித்துக் கொண்டது, மலேசியா.பாகிஸ்தான்,ஈரான்,லிப்யா (வேறு ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள்) மட்டுமே !

Unknown said...

அனானி அண்ணே, உங்களுக்கு வேணும்னா பூணூல் போட வேண்டியது தானே!! யாரு வேணாம்னா?? கழுத்துல கொட்டையும் கட்டிக்கங்க!! ஒரு ஊரில் ஒரு சில மக்கள் கெட்டவர் என்பதற்காக அந்த ஊரையே கொளுத்துவது எந்த வகையில் நியாயம்? இந்து மதத்தில் பார்ப்பனர் கெட்டவர் என்பதால் இந்துவையே அழிப்பது எந்த வகையில் நியாயம்?? சொல்லுங்கள்?? அவர்களிடம் ஒற்றுமை உள்ளது, சேர்ந்து அமைப்புகள் உருவாக்குகிறார்கள். நீங்களும் சேர்ந்து ஏதாவது அமைப்பு உண்டாக்குங்களே.. உங்களிடம் ஒற்றுமையில்லை.. கோவில் சென்றால் உடனே சட்டையைக் கலட்டு என்கிறான். அப்போது தானே நான் பூணூல் உள்ளவனானு பார்க்க முடியும். நாமெல்லாம் ஒன்று சேர்ந்து "டேய் நாயே சட்டையை கலட்டமாட்டேன்டானு சொல்ல வேண்டியது தானே. அதற்காக கோவிலையே இடிக்க வேண்டும், கொளுத்தவேண்டும் என்பது முறைதானா??

கூத்த நல்லூர் ஐயா, ஷரியா பாலிசி இந்துவின் பாலிசியா?? ஷரியாவை பின்பற்றுபவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் அல்லாது வேறு யார்?? சௌதி அரேபியா அளவுக்கு மோசம் கிடையாது. அதே சமயம் மதச்சார்பற்ற நாடும் கிடையாது. தங்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது என்று தெரியவில்லை?? சௌதி அரேபியா பற்றி சௌதியில் இருப்பவனுக்கு சொல்லாதீர்!! நீங்கள் துபாய் சேனல் பார்த்தது கூட கிடையாதா?? சல்லா (தொழுகை) நேரத்தின் போது அஸான் செய்வாந்தானே!! ஈத் தினங்களில் தானே விடுமுறை விடுவார்கள் கிறிஸ்துமஸ் அல்லது தீபாவளிக்கு விடுமுறை விடுவார்களா?? பின்பு எப்படி அது (வளைக்குடா நாடுகளும் சேர்த்து) இஸ்லாமிய நாடாகாது. பாவம் நீங்கள் கிணற்று தவளை போன்று இருக்கிறீர்கள். Strict டா follow பண்ணாமல் இருந்தால் உடனே அவர்கள் இசுலாமிய நாடுகிடையாது என்று சொல்லி கேட்பவர்கள் காதில் பூ சுத்தக் கூடாது!!

Anonymous said...

mahendran's komanam kizhinju thonguthu...

Anonymous said...

பகுத்தறிவை உண்மையிலேயே உபயோகப்படுத்தி யோசித்தால், எல்லா மதங்களும் தற்போது outdate ஆகிவிட்டன.ஆனால், செந்தில் அழகு சொல்கிறபடி, உம்மைப்போன்ற ஆட்களுக்கு இந்து எனில் இளிச்சவாயன். மகேந்திரண்ணே உமக்கு கொஞ்சமாவது மனசாட்சியும் 'தில்லும்' இருக்குமானால் "கிழிந்து போன பச்சை லுங்கி" எனப் பதிவு போடும்.

Thamizhan said...

இந்து இந்து என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பன்ரல்லாதார் எதில் பெருமை அடைகிறார்கள் என்பது புரிய வில்லை.
எவ்வளவுதான் கோவில்கள் கட்டினாலும் அங்கே மந்திரமும் மந்திரம் சொல்பவனுந்தானே ராஜா?பெரிய கோவிலைக் கட்டிய ராஜ்ராஜ சோழனே ஆவுடையப்பனை வெளியே நின்றுதானே வணங்க வேண்டும்.
காவிகளின் உச்சிக் குடுமி,ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கையில் தானே?பார்ப்பன்ரல்லாதார் கூலி வேலைக்கும்,அடியாள் வேலைக்குந்தானே?
உலகெங்கும் பணம்,வேலை செய்ய அனைவ்ரும் இந்துக்கள் என்ற பாட்டுப் பாட வேண்டியது.ஆனால் அதிகாரமெல்லாம் சரியானப் பார்ப்பனர்களிடந்தானே?
எல்லா இந்துக்களும் சரி சமம்,சாதி இல்லை என்று சொல்ல வையுங்களேன்,அனைத்து மொழிகளும் சாமிகளுக்குப் புரியும்,கோவில்களில் அனைத்து இந்துக்களும் சமம் என்று அர்ச்சகர்களை நியமிக்கச் சொல்லுங்களேன்.

Anonymous said...

//இந்து இந்து என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பன்ரல்லாதார் எதில் பெருமை அடைகிறார்கள் என்பது புரிய வில்லை//

விவேகானந்தர் புத்தகங்களை படியுங்கள், தமிழன்,பின் புரிந்துகொள்வீர்கள்.உன்னத இந்து தத்துவங்களை பார்ப்பனர்கள் சுட்டு நம்மை ஏறி மிதித்தால் பார்ப்பனர்களை கும்ம வேண்டுமே ஓழியே தத்துவங்களையே வெறுப்பது தவறு.

ஏதே சிலர் அறிவியலை சிலர் தவறாகப் பயன்படுத்துவதால் அறிவியலை வெறுத்து காட்டுக்கு ஓடவா முடியும்.

//காவிகளின் உச்சிக் குடுமி,ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கையில் தானே?//

RSSயை வெறுப்பவனும் இந்துவாக இருக்க முடியும். இந்துக்களின் ஜவாப்தாரி RSS அல்ல.

//எல்லா இந்துக்களும் சரி சமம்,சாதி இல்லை என்று சொல்ல வையுங்களேன்//

இந்துவாய் இருப்போர் முட்டாள்தானமாய் நடந்தால் இந்து மதத்தை ஏன் வெறுக்கனும். பின்லாடன் இஸ்லாத்தின் பெயரில் குண்டு வைத்து பலரைக் கொல்வதற்கு இஸ்லாத்தை குறை சொன்னால் ஒப்புக்கொள்வீரோ? பதிலுக்கு தவறிப்போரை மிதிப்போரை மிதிப்பதன்றோ சரியான வழி.


//அனைத்து இந்துக்களும் சமம் என்று அர்ச்சகர்களை நியமிக்கச் சொல்லுங்களேன். //

அதான் கலைஞர் சொல்லிட்டாரோ, பத்தா?

koothanalluran said...

செந்தில் அய்யா..
என் பின்னூட்டத்தை ஒருமுறைக்கு இருமுறை படித்து பாருங்கள். ஷரியா சட்டம் இருக்கிறது ஆனால் இஸ்லாமிய rule கிடையாதென எழுதியிருந்தேன். ஷரிய்யா சட்டத்தை முழுமையாக அமல் செய்தால்தான் அது இஸ்லாமிய ஆட்சி, இல்ல்லையெனில் அது இஸ்லாமிய ஆட்சி கிடையாது இதைத்தான் வளைகுடா நாடுகள் செய்து வருகிறது.

கிறிஸ்துமஸ் அன்று Sheikh Zayed road வெறிச்சோடி கிடக்கும். அங்கே இருப்பது பன்ணாட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை இது அரசிற்கும் தெரியும். தீபாவளி அன்று மீனாபஜார் சுத்தமாக அடைபட்டிருக்கும். சிந்தி குஜராத்தி தீபாவளி கொண்டாட போய்விடுவான். நவராத்திரி 9 நாளும் அவீர் (Al Ahmadia ground) என்ற இடத்தில் நவராத்திரி கொண்டாட்டம் நடக்கும் இரவு 2 மணி வரை இதற்கு அரசு அனுமதி உண்டு பாவம் போக்குவரத்து காவலர்கள் கண்விழித்து போக்குவரத்தை சரி செய்து தருவார்கள். விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்யப்பட்ட (விசர்ஜன்') விநாயகரின் சிலை Jumeira பீச்சில் கரைக்கப்படும்.

தொழுகை நேரத்தில் தொழுகை செய்தால் அது இஸ்லாமிய நாடாகிவிடுமா. மண்ணடி,இராயபேட்டை,திருவல்லிக்கேணி.தி.நகர்(நன்றி தருமி அய்யா) ச்சூடிபஜார்(ஹைதராபாத்) பிந்திபஜார்(மும்பை) இந்த இடங்களிலும் வீதியை அடைத்து தொழுகை நடக்கிறது.

நம்நாட்டில் இஸ்லாமியர்களீன் சனத்தொகை 19.6 விழுக்காடு.ஆனால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை இருக்கும் அனைத்து ஊர்களிலும் எப்படியாவது 10 இருந்து 30 முஸ்லிம் குடும்பங்கள் இருக்கும் அவர்களுக்கென்ன்று தனி Jamaat இறப்பு,பிறப்பு,திருமணம்,விவாகரத்து அனைத்தும் ஷரியா சட்டப்படியே. இந்தியாவை இஸ்லாமிய நாடென சொல்லப்போகுமோ ?

Anonymous said...

மகேன்ந்திரன் என்ன ஆளுய்யா நீ..உன்னோட அண்ணன்காரன் சரி இல்லைங்றதுக்காக உன்னொட ஆத்தாலயே விக்கிறியே...

Senthil Alagu Perumal said...

கூத்த நல்லூர் ஐயா, இவை அனைத்தும் ஐக்கிய அரபு அரசு நமக்கு (expatriates) கொடுக்கும் சலுகைகள். அந்த அரசு சவூதி அரேபியா மாதிரி கிடையாது. ரெம்ப மூளைகார அரசு. இப்படியெல்லாம் செய்தால் தான் மக்கள் அங்கு வந்து அந்த நாட்டிற்காக உழைப்பார்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் சவூதி அரேபியாவைவிட பெட்ரோல் குறைவாக இருந்தாலும் அங்கு இத்தனை வளர்ச்சி உள்ளது. எப்போது சவூதியில் பெட்ரோல் குறைகிறதோ அப்போது இந்த அரசும் இத்தனை சலுகைகளைக் கொடுக்க ஆரம்பித்துவிடும். இதை எல்லாம் கண்டுவிட்டு ஐக்கிய அரபு இஸ்லாம் நாடு கிடையாது என்றீர்களேயானால் உங்களைவிட ஒரு முட்டாள் இந்த உலகில் கிடையாது....

செந்தில் அழகு.

Anonymous said...

கூத்த நல்லூர் ஐயா,

செந்தில் அழகுவிடம் விவாதம் செய்வதைவிடுத்து கொஞ்சம் கண்களைத் திறந்து பாருமைய்யா.விக்கிபீடியாவின் மதச்சார்பற்ற நாடுகள் லிஸ்டில் அமீரகம் இல்லை (http://en.wikipedia.org/wiki/Secular_state).ஆனால் மதச்சார்புள்ள நாடுகள் லிஸ்டில்
அமீரகம் இடம் பெற்றுள்ளது. அமீரகம் ஒரு federation of seven absolute monarchies.அது எப்படி ஐயா தன்னை Islamic Republic என
அறிவிக்கும்? அமீரகத்தின் அரச மதம் இஸ்லாம் எனச் சொல்லும் http://en.wikipedia.org/wiki/State_religion யை பாரீர் பாரீர். தன்னை மதச்சார்பற்ற நாடு என அறிவித்த ஒரே முஸ்லிம் நாடு துருக்கி மட்டும் தான் (USSR லிருந்து பிரிந்து போன சில முஸ்லிம் நாடுகள் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.)இதுகூட ஐரோப்பிய நாடுகளை குஷிபடுத்தான்.

Senthil Alagu Perumal said...

Well said Anonymous 2 !! Well said !! Thank you for your support. I would appreciate you. Thank you once again.

Senthil Alagu .P.

bala said...

கிழமத்தூர் மகேந்திரன் அய்யா,

வேற கோமணம் கிடைத்ததா?இல்லை ஜட்டிக்கு தாவிட்டீங்களா?

பாலா