Thursday, November 22, 2007

ஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்

ஒருவர் பதிவில் (அவருக்கு பாஜக பிடிக்கும் விபிசிங்கை பிடிக்காது காரணம் அவர்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய பிரதமர். அதனால்தான் பாஜக தூண்டுதலில் மண்டல்கமிஷனை எதிர்த்து ராஜிவ் கோஸ்வாமி என்ற பார்ப்பன மாணவன் தீக்குளித்து இறந்து போனான் ).
திருக்குவளை முத்துவேல் கருணாநிதி. சுருக்கமாக "கலைஞர்".
சந்தர்பவாதி என்று சொல்லப் பட்டிருந்தது. அதாவது சந்திரசேகரை விட ( ஆனா அவரோட தலைப்புலயே விஷமம் இருந்துச்சி. சந்திரசேகர் எப்போ சந்திரசேகரர் ஆனார்னு யாராவது சொன்னால் பரவாயில்லை :) ) கலைஞர் சந்தர்ப்பவாதியாம்.

ஜெயாவிவகாரத்துக்கு வருவோம் (கவணிக்க விவாகரத்து இல்லை) நடராஜன் திமுக ஆளாய் இருந்தபோது ஆர்.எம்.வீ அவரை அடிக்கடி பந்தாடுவாராம் ஆனால் அது ஜெயாவுக்கு பிடிக்கவில்லை. காரணம் தோழியும் கணவரும் தூர தூரமாய் கிடக்க வேண்டுமே அதனால் எம்ஜிஆரிடமே சண்டை போட்டு நடராஜனை சென்னைக்கு மாற்றச் சொன்னார் ஜெயா. ஆனால் எம்ஜிஆருக்கு செயாவுடன் சசி இருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. நடராஜனிடம் சொல்லி "உங்கள் மனைவியை ஜெயாவுடன் பேச வேண்டாம் எனச் சொல்லச் சொன்னார் நடராஜன் மறுத்துவிட்டார். சாதாரண விடியோகடை நடத்தி வந்த சசி இன்று கோடிகளுக்கு அதிபதி அதுமட்டும் அல்ல அதிமுக செயற்குழு உறுப்பினரும் கூட . எனக்குத் தெரிந்து விடியோ கடை வைத்திருந்த நண்பர் ஒரூவர் சொன்னார் "எங்கப்பாவிடியோ கேசட்டை வாடகைக்கு கொண்டு போனா ஒரு காப்பி அவங்க எடுத்துட்டு வாடகைக்கு விடுறானுங்க இந்த தொழிலையே விட்டுடப் போறேன்னு சொன்னார் ஒரு பத்து வருசத்துக்கு முன்னவே :)

எம்ஜிஆர் எப்போது சாவார் எப்போது கட்சியை தன்வசப் படுத்தலாம் என அல்லும் பகலும் அயராது "பாடுபட்ட" ஜெயா கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களை வளைத்துப் போட்டார். சந்தர்பம் பார்த்து. அதே சந்தர்பம் வந்தபோது தன்னை தலைவியாக முன்னிலைப் படுத்த தடையாக இருப்பார்களோ என திருநாவுக்கரசும் பிறரும் சவ ஊர்வலத்தில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாக சந்தர்பவசமாக விழுந்ததை ( அந்த விடியோ இப்போதும் காணக் கிடைக்கிறது. எம்ஜிஆரின் உடல் இருக்கும் வண்டியில் இருந்து திருநாவுக்கரசு இறக்கி விடும்போது ஜெயாவின் கால் தவறி தடுமாறி விடுகிறார் அபோதும் திருநாவுக்கரசே தாங்கிப் பிடிக்கிறார்) ஆனால் கட்சியில் ஆர்.எம்.வீ. நெடுஞ்செழியன்களுக்கு ஆதரவு அதிகரிக்காமலும் ஜானகியே கட்சித் தலைமைக்கு வந்துவிடக் கூடாது என்பதாலும் தன்னை தள்ளிவிட்டதாக நாடகமாடுகிறார்.

சட்டசபையில் கலைஞர் முதல்வர் நிதிநிலை அறிக்கையை எழுந்து நின்று வாசித்துக் கொண்டிருக்கிறார். அபோது மறுப்பு தெரிவித்த ஜெயாவுக்கு வந்ததே கோபம் நிதிநிலை அறிக்கை புத்தகத்தால் கலைஞரின் மண்டை குறிவைத்து அடித்தார் கண்ணாடி உடைந்ததோடு தப்பித்தார் கலைஞர்.
அப்போது நடந்த தள்ளு முள்ளில் தன்னை சட்ட சபையில் மானபங்கப் படுத்தியதாக "செல்வி.ஜெயா" அறிக்கை விட்டு அழுது புலம்பினார்.
மேலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதாக ராஜீவிடம் புலம்பி புலிகள் ஆயுதம் கடத்த தமிழக அரசே உடந்தையாக இருப்பதாகவும் கூறி ராஜீவின் வலியுருத்தலில் கலைஞரின் அரசை "உலகப் புகழ்பெற்ற "பிரதமர் சந்திரசேகரை கலைக்க வைத்தார். "ஈழத் தமிழர்களுக்கு உதவுவதை ஜெயா எதிர்ப்பது ராஜிவ் கொலைக்கு பின்னால் மட்டுமல்ல"

ஸ்ரீபெரும்புத்தூரில் ராஜிவ் காந்தி சிறப்புறையாற்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த போது "என்ன காரணத்தாலோ" தமிழக கூட்டணித் தலைவி ஜெயா செல்லாமல் ஒதுங்கிக் கொண்டார் தற்கொலை தாக்குதலில் ராஜீவ் கொல்லப் பட கருணாநிதியே உடந்தை என ஒரு பழியைச் சுமத்தினார்.

இன்னும் திருச்சி விமான நிலையத்தில் ப. சிதம்பரத்தை தாக்கிய பெரம்பலூர் இளவரசனை பால்வளத் துறை அமைச்சராக்கினார். தந்தைக்கு எதிராய் களமிறங்கி வெற்றி சூடிய தாமரைக்கணியின் அய்ந்தாவது வரை "படித்த" இன்பத்தமிழனை விளையாட்டுத் துறை அமைச்சராக்கி "அழகு பார்த்தார்"

தன் முதலாம் ஆட்சி காலத்தில் எம் எல் ஏ என்று எதிர்கட்சிகள் இல்லாத போது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த வழக்கில் சில ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து என்னுடையதே இல்லை என்றார். தனக்கு எதிராக வழக்கு தொடுக்க சுப்பிரமணியன் சாமிக்கு அனுமதி கொடுத்த அப்போதைய கவர்னர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச் சாட்டு.

தேர்தல் ஆணையம் சில கடுமையான கருத்துக்களுடன் அரசை சுட்டிக்காட்டிய போது அப்போதைய கமிஷணர் டி.என்.சேஷனுக்கு மகளிர் அணி சார்பில் "புகழ்பெற்ற வரவேற்பு என அம்மாவின் " அற்புதங்கள் ஏராளம் .

இதுநாள் வரை தன்னை "பாப்பாத்தி" ஆகவே வெளிப்படுத்தி வந்த "செல்வி". ஜெயா இப்போது தன்னை ஒரு தமிழச்சியாகவும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பாவம் தமிழச்சிகள் இனி பச்சைத் தமிழன் என்பது போல "பாப்பாத்தி தமிழச்சி " என்றும் சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட திமுக செயலார் பூண்டி கலைச்செல்வன் கொல்லப்பட்ட தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்லும் ஜெயா அந்த கொலைக்கு காரணமே அதிமுக நகர செயலாளர் என்பதை ஏனோ மறந்து போனார் இதைத்தான் தேங்காய் திருடுவது ஒருத்தன் தெண்டம் கொடுப்பது ஒருத்தன் என சொல்லுவாங்கபோல.

ஜெயலலிதா என்னவோ சட்டத்துக்கு உட்பட்டே தான் நடப்பது போலவும் அதனால் அடிக்கடி சட்ட உதவியுடன் கலைஞர் அரசை கலைத்துவிடலாம் என்றும் கனவு காண்கிறார். ஆனால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எந்த வழக்கிலும் இதுவரை ஆஜராகாமல் தனி நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியும் கூட வாய்தா வாங்குகிறார் செல்வி சட்டத்தை ம்மதிக்கும் பாங்கு இதுதான் "சசி ஜெமீதான வழக்கு விசாரணையுடன் சேர்த்தே ஹவாலா மோசடியும் விசாரிக்கப்படும் விவகாரத்தில் இரண்டையும் ஒன்றாக விசாரிக்க தடை கோரி ஜெயா தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.....

பாவம் அந்த நீதிபதி :)

4 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Jayalalithavaal thollaigal kodukkappatta seshanum,swamyyum bramanargaldhan.ungal sowgariyaththukkaga adhai marandhuvidakkoodaadhu

T.V.Radhakrishnan

வாக்காளன் said...

//அப்போதைய கமிஷணர் டி.என்.சேஷனுக்கு மகளிர் அணி சார்பில் "புகழ்பெற்ற வரவேற்பு என அம்மாவின் " அற்புதங்கள் ஏராளம் //

கிழமத்துராரே,

அந்த அற்புதத்தை காண கொடுத்து வைத்தது சேஷன் இல்லை.. திரு சுப்புரமனியசாமி.. :) மாத்தி எழுதிடீங்க..

சேஷனுக்கு கிடைத்தது வெறும் ஒதை தான்.. பாவம் அவரு..

அப்புறம் இந்த அம்மா தாழ்த்தபட்ட சாதினு அமைச்சர் அருனாசலத்தை விமானத்துல கேவலபடுத்திச்சே .. அதை விட்டுடீங்களே...

//Jayalalithavaal thollaigal kodukkappatta seshanum,swamyyum bramanargaldhan.ungal sowgariyaththukkaga adhai marandhuvidakkoodaadhu

T.V.Radhakrishnan//

மறக்கவில்லை என்று நினைக்கிறேன் ராதாகிருஷ்ணன்.. தெரிந்த விஷயம் தானே அது..
அம்மாவுக்கு அவாளுக்கு இயல்பான குனம் தானே.. தனக்கு ஒரு பிரிச்சனை என்றால் அது யாரா இருந்தாலும் கவுப்பது.. ஆதாயம் என்றால் யாரா இருந்தாலும் சேர்த்துக்கொள்வது... :)

Anonymous said...

/"ஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்"/

"ஜெயலலிதா விவாகரத்துக்கு கவர்னர் ஒப்புதல்"ன்னு மேலோட்டமாக வாசித்து, ஒரு தடவ ரொம்பவே அம்மனோ சாமியோன்னு ஆடியேபோய்டேன். ஏதடா வம்பா போச்சுன்னு. நொந்தநெஞ்சம் கொண்டவுங்க சாமி. அடுத்த தடவ பாத்து தலப்ப போடுங்கய்யா.

Unknown said...

//ஜெயாவிவகாரத்துக்கு வருவோம் (கவணிக்க விவாகரத்து இல்லை)//

அனானி தெய்வமே இத கவணிக்கலியா நீங்க :)