Saturday, June 10, 2006

நல்ல பேரு ஒன்னு வைங்க

தமிழ்மணம் திரட்டீல புதுசா ஒரு பக்கம் சேக்கப்போறேன் அதால அதுக்கு நீங்க யாராவது ஒரு நாலுபேரு நல்ல தமிழ்பேரா வச்சாக்க நல்லாருக்கும் (எல்லாம் நம்ம அண்ணன் எஸ்.ஜே.சூர்யா வோட ஐடியாதான். ) அந்த பக்கத்தில நம்ம தொல்லகாட்சி இல்லாத கொரய தீர்க்குறமாறி ஒளியும் ஒலியும் மட்டும்தான் சினிமா, செய்திகள் , பாடல்கள்,விளம்பரம்.காமெடி.நேயர் நேரம் வாசகர் கடிதம் ஆலிவுட்,பாலிவுட்டு எல்லா சேதியும் வரும்ங்க. நீங்க சொல்ற நல்ல பேரு ஏதாவது தொலக்காட்சி பேரா தமிழ்பேரா இருக்குனும்ங்க (பின்ன சன்டிவின்னு வச்சா நல்லாவா இருக்கும்?) இது எந்த வகேலியும் ஒரு தமிழ்மசாலா டீவீக்கு குறஞ்சதா இருக்காதுங்க . அதே மாறி எனக்கு இப்ப தற்ற இதே ஆதரவ (என்னத்த ஒருநாளைக்கு என்னையும் சேத்து 150 பேர் தான் படிக்கிறாங்க?) அந்த வரப்போற புது வலைக்கு தந்து என்ன பின்விக்குமாறு(ஊக்குதான்) வாக்காள பெருமக்களாகிய உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்குறன் (அட நாமளும் வார உள்ளாட்சி எலக்ஸன்ல துபாய் சார்பில நிக்கலாம்போல) ஒங்க பேர கேக்க ஆவலுடன் காத்துருக்கும் பேர்சொல்லும் பிள்ளை இப்போதைக்கு பேரில்லா பிள்ளை. பின்னூட்டத்தில நல்ல பேர சொன்னா ஆயிரம் தடவ வாழ்க சொல்லுவேன் உங்களுக்கு ஒரு நாள் சிறப்பு அனுமதி என்னோட வலைல உங்க விருப்பமான படங்களோட லிங்க அனுப்புனா அத போடுவனுங்க.(நேயர் நாள் சிறப்பு ஒளிபரப்புதான்)
பேரச் சொல்ல மறந்துபோவாதீங்க.

1 comment:

Unknown said...

இதோட முந்தின பதிவுல நீங்க பாத்த வீடியோ முன்னோட்டமுங்க ஆனா அதுக்கு ஒருத்தரும் பின்னூட்டம் போடாததால (தமிழ் வலப்பூ அன்பர்கள் வாழ்க) நானே போட்டு சோதிக்கிறனுங்க.