Saturday, June 17, 2006

அன்னியலோகமும் அடையாளச் சோதனையும்

எனது வலைப்பூக்களில் நான் ஒரு குத்து அறிவிப்போ மட்டுறுத்தல் நண்பனோ பயன்படுத்த வில்லை வெறும் பின்னூட்ட மட்டுறுத்தல் மட்டுமே (ப்ளாகரின் சேவையில் உள்ளது) எதோச்சையாக இப்போது நான் எனது பெயரை அன்னியலோகத்தின் அடையாளச் சோதனைக்கு உட்படுத்திய பொழுது எனது பெயர் பொய் என்று வந்தது. அதாவது அடையாள எண்ணும் என் பெயரும் வேறு வேறு. ஒரே ப்ளாகர் கணக்கின் மூலம் வெவ்வேறு தலைப்புகளில் எழுதும் என்போன்ற
(எனது வலைப் பக்கங்கள்
இவை மூன்றும் ஒரு கணக்கின் கீழ் வரும் வெவ்வேறுபக்கங்கள். மேலும் ஒன்று
இது வேறு ஒரு கணக்கில் இருந்து செயல் படுவது.)
ஆனால் எல்லா பக்கங்களிலும் எனது புகைப்படம் மற்றும் அடையாளம் அறிவிப்புகள் ஒன்றே)
என்போன்றவரின் கதி என்ன என்று புறியவில்லை இப்படி யிருக்க வெரும் பெயரை மட்டுமோ அல்லது உறுப்பினர் ப்ளாகர் எண்ணை வைத்தோ சோதிக்கும் போதும் இதே தவறுதான் எனது வலைப்பூவின் எண்களும் ப்ளாகரின் கணக்கு என்களும் பின்வருபவை
1.Profile No: 10398736
kilumathur 28593647
kadambam 28616241
kavithai 14129586
2.Profile No: 10398732
Tamilmanathil 28710247
இதை வைத்து யாராவது சோதித்து எனது தற்போதைய நிலை என்ன என்று சொல்லுங்கள் எனக்கு விளங்கவில்லை யாருக்கும் தெரிந்தால் விளக்கிவிட்டு போகவும்.( ஏனென்றால் நான் போலியா நிஜமான்னு எனக்கே இப்ப கொழப்புது )ஆ.....................................................:((

7 comments:

Unknown said...

மகேந்திரன்,

நீங்கள் என்னுடைய Comment Identity Checkerஐயா பயன்படுத்தினீர்கள்? உங்களுக்கு இதுவரை தெரியாதென்றால் என் மென்பொருளுக்குதான் தமிழ்மணத்தில் சுட்டி கொடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதில் Please choose Commenter's name என்பதற்கு எதிராக காட்டப்படும் பட்டியலில் உங்கள் பெயரான 'மகேந்திரன்.பெ' என்பது இல்லையே? அதாவது உங்கள் பெயர் இன்னும் வெண்பட்டியலில் இல்லை. அப்புறம் எப்படி சோதனை செய்தீர்கள்? உங்கள் பெயரை தேர்வு செய்யாமல் சோதனை செய்திருந்தால் அது செல்லாது (முதல் பெயரான இயற்கை நேசி என்பவருடன் உங்கள் ப்ரொபைல் எண்ணை சோதனை செய்தால் போலி என்றுதான் காட்டும் இல்லையா?)

உங்கள் பெயர் இல்லாததால் மற்றவர்கள் உங்கள் பின்னூட்டங்களை இதன்மூலம் சோதனை செய்யமுடியாது (போலி என்றும் கருதமுடியாது). உங்கள் பெயர் பட்டியலில் இருக்கவேண்டும் என்று விரும்புனால் என்னை rarunach@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். நன்றி.

அன்புடன்
- வெங்கட்ரமணி (எ) அன்னியன்.

Unknown said...

மகேந்திரன்,

உங்கள் பதிவில் டுபாக்கூர் என்பவர் இட்டுள்ள பின்னூட்டத்தில் 'மட்டுறுத்தல் நண்பன்' செயலியைப்பற்றி சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருப்பதால் இந்த மடல்.

என்மேல் நம்பிக்கை இல்லாவிட்டால், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டு திரட்டிகளிலும் எனது மென்பொருளுக்கு சுட்டி கொடுத்திருப்பார்களா என்று யோசித்துப்பாருங்கள். நான் 'மட்டுறுத்தல் நண்பனை' விளக்கிய இந்த பதிவில் சிகப்பு கலரில் நன்றாக தெரியும்படி என்ன சொல்லியிருக்கிறேன் என்று பாருங்கள்.

"ஒரு புது ஜிமெயில் கணக்கை உருவாக்கி அதை பின்னூட்டங்களுக்காக மட்டும் என்று ஒதுக்கிவிடுங்கள்...ஏற்கனவே மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கை இந்த செயலியுடன் பயன்படுத்தவேண்டாம்."

அதாவது நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் ஜிமெயில் முகவரியில் பின்னூட்டங்களைத்தவிர வேறெதுவும் இருக்காது. அதை வைத்துக்கொண்டு என்னால் யாரையும் எதுவும் செய்யமுடியாது. அதிலும் அவர் சொல்லும்படி உங்கள் ப்ளாக்கர் கணக்கை எல்லாம் தொடக்கூடிய முடியாது என்பது சின்னக்குழந்தைக்கு கூட புரியும்.

கூகிளில் "Ramani Arunachalam AID" என்று தேடிப்பாருங்கள். முதலில் தோன்றும் இந்த இரண்டு சுட்டிகளுக்கு சென்று பார்த்தால் 'Association for India's Development (AID)' என்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடும் அமைப்பில் நான் செகரடரியாகவும் பிரசிடென்டாகவும் பணியாற்றியது உங்களுக்கு தெரியவரும்.
http://www.aidsfbay.org/newsletters/oct_dec02.txt
http://www.aidsfbay.org/newsletters/jan_mar04.pdf
இவற்றைப் பார்த்தபின் நான் எத்தகையவன் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம். பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் எல்லாம் பிராமணர் அல்லாதவர்களை கவிழ்க்கப் பார்ப்பார்கள் என்று நினைப்பது ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்க எந்த அளவிலும் உதவாது.

அடுத்தது, டுபாக்கூர் (என்ன நம்பத்தகுந்த பேரய்யா!!) அவர்களின் ப்ரொபைலுக்கு சென்று பார்த்தால் அவர் டுபுக்கு என்ற வலைப்பதிவரின் பெயரில் வைத்துள்ள http://dubakkur.blogspot.com என்ற போலி பதிவுக்கான சுட்டி கிடைக்கும். அங்கு சென்றால் அவரது பெயராக போலியன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வதையும் பார்க்கலாம்.

அன்புடன்
வெங்கட்ரமணி

Unknown said...

நண்பர் ரமணிக்கு நானும் திரு டுபாக்கூர் போலவே சிந்தித்ததன் காரணமாகவே அவரின் பின்னூட்டம் வெளியிடப்பட்டது, மேலும் முன்பொருமுறை நான் அந்த மட்டுருத்தல் நண்பனை தொடர்புகொண்ட போது என்னிடம் ஜி மெயில் முகவரியும் கடவுச்சொல்லும் கேட்டது அதனால் நான் வந்தவழியே திரும்பிவிட்டேன். வெள்ளை பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி. (இன்னும் திரு டுபாக்கூர் அவர்கள் எழுத ஆரம்பிக்கவில்லை தற்போதுதான் மைக்கை டெஸ்ட் செய்கிறார். :))

வவ்வால் said...

மகேந்திரன் நீங்கள் ஒரு நல்ல குறைப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.ஆனால் அந்த குறைப்பாட்டின் முழு வீச்சும் தெரியாமலே இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

போலியா என்பது அறிய வெங்கட்ரமணியின் வெண்பட்டியலில் இருக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு விதிக்கும் ஒரு செயல்பாடு எப்படி அனைவருக்கும் பொதுவான ஒன்றாக பொருந்தும். கமென்ட் மாடரேஷன் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு வெங்கட்ரமணியின் செயலி தேவையே இல்லை ,அப்படி எனில் அவர்கள் எல்லாம் இவரின் வெண்பட்டியலில் இருக்க மாட்டார்கள் எனவே அவர்கள் எல்லாம் போலி என ஆகிவிமே,இப்படி பட்ட குறைப்பாடன ஒரு செயல்பாட்டிற்கு தமிழ்மணம் ,தேன்கூடு போன்ற திறட்டிகள் ஆதரவு அளிக்கின்றன.இங்கே என்ன நடக்கிறது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் கதையா போய்கிட்டே இருக்கு. இதனை தமிழ்மணம் எப்படி பொதுவான ஒரு தீர்வாக அனைவருக்கும் பரிந்துரைக்கிறது என்றே தெரியவில்லை

பொன்ஸ்~~Poorna said...

இந்தப் பதிவோடு தொடர்புடைய பதிவு
http://poonspakkangkal.blogspot.com/2006/06/1.html

Unknown said...

திரு வவ்வால் அவர்களின் பின்னூட்டத்தில் எனக்கும் சம்மதமே. ஆனால் மட்டுருத்தல் நண்பன் பயன்படுத்துபவர்கள் மட்டுமே வெண்பட்டியலில் இருப்பார்கள் என்றால் அது சரியல்ல. ஆனால் அப்படி யில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று( நான் பயன்படுத்தவில்லை)எம் பெயர் வெண்பட்டியலில் உண்டு. இதுகூட மட்டுறுத்தல் நண்பனை பயன்படுத்துவோர் வசதிக்காக இணைத்ததே.

திரு பொன்ஸ் படிக்க வருகிறேன்

Anonymous said...

மகேந்திரன் ரொம்ப நல்லவரு, வல்லவரு என்று கேள்விப்பட்டு குக்கிராமத்தில் எதேச்சையா வலைப்பதிவு வரும் ஒருவர் பின்னூட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆக இந்த வெங்கட்ரமணியின் செயலியால் அவர் கரும்பட்டியலில் வருகிறார். அதாவது அந்த நண்பர் தீண்டத் தகாதவர் அல்லது கருத்து எழுத தகுதி இல்லாதவர் ஆகிறார்!

எனாங்கய்யா நாயம் இது? இது ஒரு செயலி, இதுக்கு தொடுப்பு எல்லாம் கொடுக்கும் தேன்கூடு, தமிழ்மணம் போன்ற தளங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

எல்லாம் பாப்பார வலை உலகமா போய்டுச்சுங்க.

கமெண்ட் மாடரேசன் போதும். இப்படி மென்பொருள், செயலி என பாவித்து கருத்து சுதந்திரத்தை எதிர்க்க வேண்டாம்.

நட்புடன்,
சுந்தரபாண்டி.