Tuesday, August 01, 2006

ஜஸ்வந்த் சிங்கின் மச்சம்


"எ கால் டு ஹானர்"
முன்னாள் பி.ஜே.பி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரும் பி.ஜே.பி யின் வெறுந்தலைகளுள் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம்.

நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் அவரின் அலுவலகத்தில் ஒரு அமெரிக்க உளவாளி வேலை பார்த்து வந்ததாகவும் அவர் இந்திய அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு அனுப்பியதாகவும் அது தனக்கு தெரியும் என்றும் அது பற்றிய தகவல்களை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

இது குறித்த விவாதங்கள் பாராளுமன்றத்தில் எழுப்பப் பட்ட போது அது பற்றிய முழு தகவல்களையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டுமே தெரிவிக்க முடியும் என்று ஒரு பதிலைச் சொல்லி நழுவினார்.

பின்னர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிஅனுப்பினார் அதில் அந்த உளவாளி யார் என்பது நரசிம்ம ராவுக்கு தெரியும் என்றும் பெயரை தான் கடிதத்தில் தெரிவித்திருப்பதாகவும் பத்திரிகைகளில் தெரிவித்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் தங்களிடம் வழங்கப் பட்ட ஜஸ்வந்தின் கடிதத்தில் எந்த பெயரும் இல்லை என்றும் அதுவும் அவரின் கையெழுத்திடப் படாத கடிததின் நகல் மட்டுமே என்றும் சொன்னது.

இதே கடிதம் இந்தியா டுடே விலும் வெளியானது. அக்கடிதம் தங்களுக்கு அனுப்பிய கடித நகல் என்றும் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இந்தியா டுடேயில் வெளியான கடிதத்திலும் உளவாளி பற்றிய எந்த தகவலும் இல்லை.

அமெரிக்க உளவாளி பற்றி மட்டுமின்றி ஆப்கனுக்கு கடத்தப்பட்ட இந்திய விமான பயணிகளை மீட்பதற்க்காக பெரும் தொகை பேரம் பேசப்பட்டு அது வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் தனது புத்தகத்தில்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர் எஸ் எஸ் இன் பஞ்சசன்ய பத்திரிகை " பிரதமர் அலுவலகத்தில் இருந்த உளவாளி குறித்த தகவலை முன்னறே ஏன் தெரிவிக்க வில்லை என்றும் 10 ஆண்டுகள் கழிந்து தெரிவிப்பதை விட கடந்த பி.ஜே.பி அரசின் கவனத்தில் சொல்லியிருந்தால் கூட அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட்டிருக்கலாம். அதுவும் அவ் அரசில் பெரிய அமைச்சராக இருக்கும் வேளையில் தெரிவிக்காமல் இப்போது தெரிவிப்பது ஏன் என்றும் அது கேள்விகளை எழுப்பியுள்ளது மேலும் அது அதிகம் கவலைப் படுவது கந்தகார் விமான கடத்தல் பணபேரம் குறித்து ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதாக அவர் மேல் குற்றமும் சாட்டுகிறது "

மேலும் இன்று ஜஸ்வந்த் வெளியிட்ட அறிக்கையில் தான் உளவாளி பற்றிய தகவல் களை பாதுகாக்க வில்லை என்றும் கூறி புது சர்ச்சைக்கு வழிகோளுகிறார் பி.ஜே.பி இதில் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறது இதுவே ஒரு காங்கிரஸ் உறுப்பினர் செய்திறுப்பின் பாராளுமன்றம் பட்டிமன்றமாகி வேலைகளை முடக்குவார்கள்.

இப்போது எனக்கு தோன்றும் சில கேள்விகள்:

1. நரசிம்மராவ் காலத்தில் இதை தெரிவிக்காமல் இப்போது சொல்லவேண்டிய அவசியம் என்ன?

2.தேசிய பாதுகாப்பு என்பது இந்துக்கள் பாதுகாப்பு என்று மட்டுமே கருதுகிறதா பி.ஜே.பி?

3. இப்படி முன்னுக்கு பின் முரன்பட்ட தகவல்களை தரும் ஜஸ்வந்தின் ஆட்சி காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்கும்.?

4. இதுபோல் தவறான செய்திகளை சொன்னதற்க்காக ஜஸ்வந்த் மேல நடவடிக்கை எடுப்பார்களா?

5 . அப்போது பி.ஜே.பி. சும்மா இருக்குமா.?

6. அல்லது ஆர். எஸ்.எஸ் இப்போது சொன்னதை தொடர்ந்து காப்பாற்றுமா.

7. இதுபோல் நாட்டின் பாதுகாப்பில் அக்கரையோடு செயல்பட்ட ஒரு முன்னாள் அமைச்சர் இனியும் எம்பி பதவி வகிக்க தகுதி உடையவர் தானா?

8. தனக்கு தெரிந்த உளவாளி பற்றியும் தகவல் சொல்லாமல் இருந்தவர் உளவாளிக்கு உடந்தை இல்லையா?

9. பி.ஜே.பி செய்த எல்லா நன்மைகளுள் இதுவும் ஒன்றா?

10 . எ கால் டு ஹானர் புத்தக விற்பனையை கூட்ட எழுதப்பட்ட நேர்மையற்ற தகவல் மட்டுமா இது?

எப்படியோ ஒரு மச்சத்தை பற்றி எழுதி ஆட்சியாளர்களின் நேர்மையை உலகுக்கு சொல்லியிருக்கிரார் அதற்க்காகவாவது நன்றி

கடைசி செய்தி: புதிதாக எழுதியுள்ள கடிதத்தில் உளவாளியின் பெயர் தெரிவிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனஇது குறித்த

முழுமையான செய்தி அறிக்கைகளுக்கு:

10 comments:

கோவி.கண்ணன் said...

ஜஸ்வந்த் சிங்காவது வாயைத் திறந்திருக்கிறார். நரசிம்ம ராவ் போன்றவர்கள் சிரிப்பதற்க்குக் கூட வாய்திரக்காமல் எல்லா ரகசியங்களையும் தங்களுக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டனர். அந்த விதத்தில் ஜஸ்வந்த் சிங்கை பாராட்டலாம்

Unknown said...

வாங்க ஜி.கே

//ஜஸ்வந்த் சிங்காவது வாயைத் திறந்திருக்கிறார். நரசிம்ம ராவ் போன்றவர்கள் சிரிப்பதற்க்குக் கூட வாய்திரக்காமல் //

அவரு திறக்காதது சிக்கல் இப்ப இவரு திறந்தது சிக்கல் பார்க்கலாம்

இன்னும் எத்தனை புனித எருதுக்குட்டிகள் வெளியே வருகிறதென்று

(எருதுக்குட்டி - நன்றி : பியோதர் தஸ்தயோவ்ஸ்கி)

நன்றி ஜி.கே

கப்பி | Kappi said...

Mr. Singh "told the [BJP] meeting that he has no definite name of the spy, and all that he has said was based on a hunch," party sources said.

"He said it is up to the Government to use them as a lead to catch hold of that person," the sources said.

- தி ஹிந்து

இதுக்கு என்ன சொல்றது...

//எப்படியோ ஒரு மச்சத்தை பற்றி எழுதி ஆட்சியாளர்களின் நேர்மையை உலகுக்கு சொல்லியிருக்கிரார் அதற்க்காகவாவது நன்றி
//
இதுதான் இந்த மச்சத்தின் மூலம் கண்ட பலன்!!

Unknown said...

பழசு

The senior BJP leader said this on the sidelines of a function here at which his book 'A Call to Honour' was released.

"I had requested for personal time with the PM twice but there was no response both times. Therefore on Friday I have sent the entire text of the letter to him, with no names omitted, no details removed. The letter has been with him for the past 24 hours now. It is up to him to do whatever is right in the national interest," Singh said.


புதுசு

"He told the meeting that he has no definite name of the spy and all that he has said was based on a hunch," party sources said on what Jaswant Singh told the leaders.

சுடச்சுட

Under fire from rivals and colleagues alike for letting his mole needle move in all directions, leader of opposition in Rajya Sabha, BJP leader Jaswant Singh, has written a fresh letter to PM, this time naming the mole.

ஒரே தகவலை எத்தனை முறை மாற்றி மாற்றி
நன்றி கப்பி

துபாய் ராஜா said...

அன்பு மகேந்திரன்,அருமையானபதிவு. அரசியல்வாதிகள் ஆட்டங்களை அம்பலமாக்கும் இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

Unknown said...

இவர்களின் ஆட்டத்தை எத்தனை சொன்னாலும் அது செவிடன் காதில் சங்கு....
நன்றி துபாய் ராசா

பாவூரான் said...

தேசபக்தியை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நாம ஏத்துக்கணும், அது உண்மையா இருந்தாலும், பொய்யா இருந்தாலும், இல்லன்னா அவங்களோட hunch feeling காக இருந்தாலும். அவங்க கனவுல ஒரு mole வந்தாகூட அத நம்ம சீரியசா எடுத்துக்கணும்.

ஜஸ்வந்த் சிங் மாதிரி தகுதி, தெறமை உள்ளவங்களோட Hunch Feeling பத்தி கேள்வி, சந்தேகம் எழுப்பக்கூடாது, உங்க தேசபக்தியைப் பத்தி சந்தேகம் வந்துடப்போகுது மகேந்திரன்.

Unknown said...

கருத்துக்கு நன்றி பாவூரான் //தேசபக்தி தேசபக்தி என்று குதிக்கும் பிஜேபி ஊதுபத்தி அளவுக்கு கூட அதை கடைபடிக்கவில்லை என்பதன் ஒரு சிறு சாட்சியே இச் சம்பவம்

Unknown said...

பாவூரான் அவர்களே நீங்க போட்ட ஒரு அனானி பின்னூட்டம் தப்பா வேற எதோ கட்டுறையும் சேந்து வந்திருச்சி எதாவது ப்ளாகர் பிரச்சினையா? அதை வெளியிடவில்லை

Unknown said...

புதிய செய்தி +

ஜஸ்வந்த் சிங்கின் புத்தகம் பற்றி விவாதம் நடத்தப்படும் என்றால் மித்ரோகின் ஆவணங்கள் கூறும் காங்கிரஸ் கே.ஜி.பி தொடர்புகள் பற்றியும் ஆராய வேண்டும்- சுஸ்மா ஸ்வராஜ்.

பா ஜ க வின் தேசப்பற்று வாழ்க