தமிழ் தேசிய இயக்கங்களின் குரு
புலவர் கலியபெருமாள் மரணம் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி
திட்டக்குடி, மே 17-
கரும்பு விவசாயிகளுக்காக போராடியவரும் தமிழ் தேசிய அமைப்புகளின் குருவாக கருதப்படுபவருமான புலவர் கலியபெருமாள் பெண்ணாடத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
தீவிர கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான புலவர் கலியபெருமாள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதயம் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பெண்ணாடத்தில் உள்ள மூத்த மகள் தமிழரசி வீட்டில் தங்கியிருந்த அவர், நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான சவுந்திரசோழபுரத்தில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
கலியபெருமாளுக்கு திருவள்ளுவன், சோழன் நம்பியார் என்ற இரு மகன்கள் உள்ளனர். சோழன் நம்பியார் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது விடுதலைச் சிறுத்தை சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டார். தீவிர கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கலியபெருமாளுக்கு வெடிகுண்டு வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து முறையிட்ட மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது. பின்னர், அரசின் முயற்சியால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தமிழர் விடுதலைப்படைக்கு குருவாக கருதப்படும் இவர், நீண்ட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். தமிழ்நாடு விவசாயிகள் - வேளாண்மை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு சங்கத்தை துவக்கி நடத்திய கலியபெருமாள், சமீபத்தில் Ôமக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்Õ என்ற சுயசரிதை நூலை வெளியிட்டார்.
கலியபெருமாளின் இறுதிச் சடங்குகளில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச்சிறுத்தை பொதுச்செயலாளர் திருமாவளவன், எம்.எல்.ஏக்கள் ரவிக்குமார், செல்வம் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
7 comments:
மிகுந்த வருத்தமளிக்கும் செய்தி மகேந்திரன். கடந்தமுறை தாயகம் சென்றிருந்த போது புலவர்.கலியபெருமாளின் மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களை, மற்ற தோழமை இயக்கங்களின் சிந்தனையாளர்களை ஒருங்கே காணும் வாய்ப்பும் உரையாடும் சந்தர்ப்பமும் அமைந்திருந்தன. தமிழ் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான போராளி. நிகழ்ச்சியின் இறுதியில் கணீரென்றூம் சிந்தனைத் தெளிவோடும் அவர் அற்றிய உரை மனத்திரையில் வந்து போகிறது. போராட்டங்களுக்கு முடிவில்லை என்று உரத்துக்கூறிய மனிதனின் பயணத்திற்கு மரணம் முற்றூப்புள்ளியை வைத்திருக்கிறது. போராட்டங்களுக்கான நியாயங்கள் மட்டும் மரணிக்காமலே இருக்கிறது.
அன்னாரின் மரணத்திற்கு என் கண்ணீர் அஞ்சலிகள். அந்த மாவீரருக்கு என் வீரவணக்கங்கள்.
போராளி, புரட்சியாளர் புலவர் கலியபெருமாள் அவர்களின் மரணச்செய்தி நிலைகுலைய வைக்கின்றது...
கண்ணீருடன்
குழலி
தினகரன் திருச்சி பதிப்பில்(தமிழ் முரசு) வந்திருக்கிறது குழலி நான் அவரை பென்னாடம் பேருந்து நிலையத்தில் சந்தித்ததுண்டு யாரென்றே தெரியாத போது அதன் பின் என் தந்தை சொல்லி அறிந்தேன்
முத்துக்குமரன் உங்களுக்கு நினைவிருக்கிறதா நானும் நீங்களும் கடந்தமுறை சந்தித்து கொண்ட போது இவர் பற்றி பேசினோமே?
புருசோத்தமன் குழலியும் பெ.மகேந்திரனும் மாறிமாறி புகழ்வதைப் பார்த்தால் கலியபெருமாள் வன்னியனா இருப்பானோ?
//கோபால கிருஷ்ணுடு ...//
இந்த பின்னூட்டம் போட்டவரின் ஐபி எண்தான் அடுத்த பதிவே
Post a Comment