Tuesday, May 23, 2006

கிழுமத்தூர்அறிமுகம்:

மாநிலம் : தமிழ் நாடு
மாவட்டம் : பெரம்பலூர்
வட்டம் : குன்னம்
ஒன்றியம் : வேப்பூர்
அஞ்சல் :
கிழுமத்தூர்
கல்வி :
பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி
மக்கள் தொகை: 2500(2001)
முக்கிய தொழில் : விவசாயம்
குடிநீர் வசதி : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
சாலை வசதி : கிழுமத்தூர்-வேப்பூர்-அரியலூர், கிழுமத்தூர்-லப்பைக்குடிக்காடு-தொழுதூர்-பெரம்பலூர், கிழுமத்தூர்-வயலூர்-அகரம் சீகூர்-திட்டக்குடி, கிழுமத்தூர்- கோவிந்தராஜ பட்டினம்-அரியலூர்.
நீர் ஆதார நிலைகள்: சின்னாறு, கிழுமத்தூர் ஏரி. மற்றும் ஆழ்குழாய் கிணறுகள்


போக்குவரத்து வசதிகள்: 1. திருச்சி-பெரம்பலூர்-லப்பைகுடிக்காடு-கிழுமத்தூர் (அரசு பேருந்து)2. பெரம்பலூர்- தொழுதூர்-பெண்ணக்கோனம்-வடக்கலூர்-கிழுமத்தூர்(அரசு பேருந்து)3. அரியலூர்-கிழுமத்தூர்(அரசு பேருந்து)4. கிழுமத்தூர்-திட்டக்குடி(அரசு மற்றும் தனியார்(சிறு பேருந்து))

இனி இந்த வலை மற்றும் என்னைப்
பற்றி.
பெயர்:
மகேந்திரன்.பெ
வயது: 28
கல்வி: பள்ளி இறுதி, டிப்ளமோ (கணினி)
தற்போது வசிப்பது:
ஐக்கிய அரபு அமீரகம். துபை.

பிடித்தவை:
எழுத்தாளர்கள் : சுஜாதா, பாலகுமாரன், சேகுவேரா, எஸ்.ராமகிருஷ்ணன், மதன், ஓஷோ.

சினிமா : குருதிப்புனல், கன்னத்தில் முத்தமிட்டால்,விருமாண்டி, அன்பே சிவம், அலை பாயுதே, நாயகன்,
மாயாவி(ஆம்)!?. நந்தா. இந்தியன். ஹே ராம். Face Off, Lord Of War, Wind Talkers, Saving Private Ryan, Titanic, Gigli , The perfect Murder, The Rules of Engagement, A Civil Action, Buruse Almighty, The Motor Cycle Diary, Hannibal, Silence Of Lambs, Red Dragon.

இசை: இளைய ராஜா. ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ். ஆன்ட்ரூ லாயிட் வெப்பர்,

பிடித்த அரசியல் தலைவர்கள்: ராமதாஸ், கலைஞர், ப.சிதம்பரம், லல்லு பிரசாத், தயாநிதி மாறன், ஜெயபால் ரெட்டி, சோனியா, சுஷ்மா ஸ்வராஜ், பிரமோத் மகாஜன்( அஞ்சலி செலுத்துவோம்). மன்மோகன் சிங் அண்டு ஒன் அண்டு ஒன்லி வி. பி. சிங்.

இதழ்கள் : விகடன். இந்தியா டுடே,

இணையத்தில் இனியவை: IMDB, BBC Tamil, Dinakaran, Kumudam, Vikatan, Nakkheeeran, Tamilsongs, Wallpapers, Gulf News, Games , Chat, யுனித் தமிழ், அந்தி மழை, ஆராம் தினை, தமிழோவியம், நிலாச்சாரல்

முதல் பதிவு:
சரி இத்துடன் எனது சுய புராணத்தை மூட்டை கட்டிவிட்டு இனி வலையில் உருப்படியாக எதுவும் பதிவதை பற்றி யோசிக்கிறேன் தயவு செய்து எனது பதிவுகளுக்கு மறுமொழியிடும் பொழுது விவாதங்கள் சண்டைகள் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே எனது முதல் பதிவாக இருப்பதால் நான் பிறந்த மண்னைப்பற்றி யும் என்னை பற்றியும் எழுதியுள்ளேன். இனி தினம் தினம் வலையின் வாயிலாக சந்திக்கும் வரை வணக்கம் கூறி

உங்களின் மறுமொழிக்கு காத்திருக்கும்.
மகேந்திரன்.பெ


4 comments:

- யெஸ்.பாலபாரதி said...

வாங்க.. வாங்க...
வால்டேர்(சரியா?)-ன் மேற்கோளோடு வந்து இருக்கீங்க.. கலக்குங்க...

முத்துகுமரன் said...

அன்பான வரவேற்புகள் நண்பரே.

உங்களின் வேர்களோடு அறிமுகப்படுத்தி இருக்கும் உங்கள் பாங்கு மிகவும் பிடித்திருக்கிறது. மென்மேலும் பல தரமான பதிவுகள் தரருவீர்கள் என்று நம்புகிறேன்

- யெஸ்.பாலபாரதி said...

பின்னூட்டம் அம்பேல்...?

Unknown said...

எனை வரவேற்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி