Friday, May 26, 2006

மலைச்சாமி ஐ.ஏ.எஸ்


மலைச்சாமி ஐ.ஏ.எஸ் அவர்களே...
ஆனந்த விகடனில் முன்னாள் தேர்தல் அதிகாரியும் தற்போதைய அ.தி.மு.க வின் ராஜ்ய சபா உறுப்பினரும் கொரடாவுமான திரு.மலைச்சாமி. அளித்துள்ள பேட்டிக்கு எனது விளக்கம் கோரும் கடிதம்.
ஐய்யா வணக்கமுங்க. நான் துபாய்ல இருக்கனுங்க. நீங்க விகடனுக்கு தந்த பேட்டிய படிச்சனுங்க. ஒடனே எனக்கும் கொஞ்சம் சந்தேகம் வந்துதுங்க. இப்ப நீங்க அ.தி.மு.க வுல இருக்கீங்க ஆனா அதுக்கு முன்னாடி தேர்தல் ஆணையரா ஒரு நாலு வருசம் குப்ப கொட்டுனீங்க. அப்ப நீங்க அதிமுகவுக்கு வேலை செஞ்சீங்களா இல்லையா? இப்ப நீங்க தந்த பேட்டி எனக்கு அப்பிடி தாங்க நினைக்க தோனுது அதெல்லாம் எதுக்கு இப்போன்னு நீங்க நெனைக்கறது தெரிது. சரிங்க.
அடுத்தது எலக்சன் கமிஷன் வலையில திமுக திருவண்ணாமலையில ஜெயிச்சதா ஏழேமுக்காலுக்கு சேதி போட்டதா சொன்னீங்க நானும் பாத்தனுங்க ரிசல்டு தெரிஞ்சுக ஆவல்ல நா அன்னைக்கு வேலைக்கு போலீங்க வெப்பில தாங்க எல்லாம். ஆனா எட்டே மொக்காலுக்கு மேல தாங்க சேதியே வர ஆரம்பிச்சுது.
நீங்க செயா டீவி பாப்பிங்கன்னு நெனக்கிரன் அதுல கூட மத்தியானம் வரைக்கும் ஒங்க கூட்டனி செயிக்க போரதா காட்டுனாங்க அப்பரம் கடேசில ஒன்னுங் காட்டாத எல்லாம் தலகீழா போச்சுங்க. அப்ப அதும் தப்புங்களா?. இன்னுமுங்க.
இந்துக்களின் விரோதி கலைஞர் அதால தான் வெள்ளி செவ்வாய்க்கு முட்ட போடுரார்னு சொல்றீங்க. ஆமாங்க அவரு மேல்சாதி இந்துவான பாப்பானுக்கு எதிரி தாங்க. அவுரும் அருவது வருசமா சொல்றாரு உங்களுக்கு இப்பதான் கேட்டுருக்கு!.
அப்புறம் பெருவாரியான இந்துக்கள் மனச முட்ட போட்டு காயப்படுத்திட்டார்னு சொன்னீங்க.. அதென்னங்க பெருவாரி?. நான் இந்து தாங்க ஆனா ஆடு, மாடு, கோழி,காட கவுதாரி எல்லாந்திம்பனுங்க. நீங்க வடக்கவே வேல பாத்து இந்துன்னா கறி திங்க மாட்டான்னு தப்பா நினைச்சுகிட்டீங்க, இல்லீங்க.
வன்னியன்,தலித்து,முதலியார்,செட்டியார்,குரவன் எல்லாம் இந்துதாங்க என்னா நீங்க மாட்டு மூத்தரத்த தலைல பூசுவீங்க நாங்க அத அடிச்சு சாப்புடுவம். ஆனா மூத்தரமெல்லாஞ் சாப்பிட மாட்டோமுங்க.
அப்புரம் கல்கத்தா இந்து மீன் சாப்புடுவான் அப்பிடின்னு படிச்சனுங்க நெசமா? வாஜ்பாயி,அத்வானிக்கு சிக்கன்னா உசுராம் தெரியுமா அப்ப அவுங்க இந்து இல்லீங்கலா?
அதென்னங்க வெள்ளி செவ்வா? நம்ம சனத்துக்கு சாமி கும்புடறதுன்னாவே ஆடு கோழி வெட்டரது தாங்க. நீங்க முட்டைக்கே குதிக்கிரீங்க?.அப்பறம் கருணாநிதி மஞ்ச துண்டு போடுராரு அது ஸ்டண்டுனிங்க இதேமாரி செயாக்கா பச்ச கலரு போடுராங்களே அதுக்கும் சொல்லுவீங்களா?
கலர் தாங்க இப்ப எல்லாம் கருப்பு வெள்ள டீவி ப்ரீன்னு சொன்னா போடா டுபுக்கு நுட்டு போயிடுவான் அதால தான் தலைவர் கலர் டீ வினு சொன்னாரு. கலைஞர் நிர்வாக தெறம இல்லாதவர் அப்பிடீன்னு சொன்னீங்க சிரிப்பு தான் வருதுங்க.
நிவாரணம் கொடுக்க குள்ள தான் சுப்ரீம் கோர்ட் உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்தாங்களே பழிவாங்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப ஆபீசரு எல்லாரையும் டிரான்ஸ்பர் பன்றாருன்னு சொன்னீங்க அவுரு பழிவாங்க மாட்டோம்னுதான் சொன்னாரு இது தண்டனைங்க. தப்பு செஞ்சா எல்லாருக்கும் உண்டு.
நீங்க வேலைல இருக்கப்போ எத்தன பேர மாத்திரிப்பீங்க அப்ப அதுவும் பழிவாங்கறதுங்களா?
அப்பறம் டாடா விவகாரம் இத பத்தி டாடாவே இன்னும் ஒன்னுஞ் சொல்லலீங்க. ஸ்டாலினுக்கு இப்பவே பயிற்சி கொடுக்கார் அப்பறம் முதல்வராக்க முயற்சி பன்றார்னு சொன்னீங்க சரிதாங்க.
அதுக்கு எதுவும் காலேசு இல்லீங்க இப்பிடி எதாவது பிரைவேட்ல படிச்சாதான் உண்டு.
சன் டி வி பிரச்சாரத்தால தான் கலைஞர் செயிச்சாருனு சொல்றீங்க ஒங்க செயா டிவி என்னங்க ஆச்சி வித்துபுட்டீங்களா.
வைக்கோவ அடிச்சாங்க அப்பிடீன்னு சொன்னீங்க ஆமாங்க யாராவது கருணாநிதிய புடிக்காதவங்க செய்வாங்க. அப்பறம் சேதி தெரியுமா இன்னிக்கு சட்ட சபையில சண்டங்க. உங்க ஆளுங்கதான். பாவம் ஒங்க பேட்டிய படிக்கிலயாட்டுக்கு. நீங்க காட்டுமிராண்டின்னு சொன்னது அவுங்களன்னு நெனச்சு உங்கள பார்லிமெண்டுல வச்சி சாத்தபோறாங்க
அதென்னங்க எம்சியாரு காலம் அப்ப ஜெயாவ விட எம்ஜியார் காலம் பெஸ்ட்னு சொல்றீங்களா .பாத்து தூங்குங்க அம்மா நீங்க ஏற்கனவே போட்டு குடுத்த ராசினாமாவ சனாதிபதிக்கு அனுப்பிட போறாங்க.... நன்றிங்க
அப்புறம் நம்ம மொகமூடி ஒரு நாய்கவித போட்டுருக்காருங்க அது ஒங்களுக்கு பொருந்துதுங்க