Tuesday, May 23, 2006

நீ நான்


தொலைதூர
மலை நோக்கி
காலார நடந்து போகிறேன்:
வழியெங்கும் இரைந்து
கிடக்கும்வண்ணத்து பூச்சிகள்
மட்டுமேஉணரும் என் மனம்
இதே மங்கிய ஒரு
மாலைபொழுதில் தான்அந்த
மரத்தின் நிழலில்தான்
அது நிகழ்ந்தேறியது.
அன்று நான் இருந்த
நிலையில்ஒரு முறையாவது
நீ நான்
எதிர்பார்த்த பதிலைதருவாய்
என நினைத்தேன்.
எப்போதும் போல புன்னகைதான்கிட்டியது
உன் சிருங்கார கண்ணாமூச்சி
என் சுயத்தையும் சேர்த்தே களவு கொண்டது.
இரவானால் அது உடன்
இவளானால் என்
ஆசைகள்எல்லை யில்லா வானம் போல்
நீண்ண்ண்ண்டது....
காதலுக்கும் காமத்துக்கும்
மெல்லிய இடைவெளிதான் இரண்டுக்கும்
நடுவே இம்சையுடன்
நான்...
மீண்டும் அதே மலை..
அதே மரம் அதே நிழல்...
இப்போது நீயில்லை.
வேறொருத்தி!
வழியெங்கும் இறைந்து கிடக்கும்
வண்ணத்து பூச்சி மட்டுமே உணரும்
என் மனம்...

1 comment:

Unknown said...

இந்த பதிவானது அந்திமழையில் தேர்தலுக்கு முன்பு வெளியானது: சேகரிக்க மீண்டும் பதியப்பட்டது அந்திமழையில் காணவும்