Tuesday, August 22, 2006

எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?

இந்த பதிவை எழுத இந்த பின்னூட்டம் ஒரு தூண்டுதல். விடாது கருப்புவின் பதிவில் ஒரு அனானி அன்பர் இக் கருத்தை சொல்லியிருந்தார்

" மிழ்நாட்டு பெண்டிரெல்லாம் கற்புக்கரசிகளாக் இருந்தால், உலகளவிலேயே இங்கு ஏனய்யா எயிட்ஸ் அதிகமாக இருக்கிறது?"

உண்மையிலே பெண்களின் கற்போடு எயிட்ஸ் எனும் நோய் பரவுவது சம்மந்தப் பட்டிருக்கிரதா?. அதாவது பெண்களால் தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறதா? இல்லை ஆண்களாலா? அப்படி பெண்தான் காரணம் என்றால் அது எப்படி அவளுக்கு வந்தது? ஆண் ஒரு காரணியில்லையா? அடக்கமாக பெண் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கயமை எண்ணம் கொண்ட ஆண்களின் மூலமே எயிட்ஸ் மிக வேகமாக பரவுகிறது என்பது எனது எண்ணம். அதாவது இந்தியாவை பொருத்த வரை குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்களுக்கே இந் நோய் அதிகம் உள்ளது என்பது கண்கூடு. இது குடும்பத்துக்கு வர எது காரணம்.

கற்பில்லாத பெண்களா.

இல்லை கற்பில்லாத ஆண்களா?

83 comments:

கோவி.கண்ணன் [GK] said...

மகரந்த சேர்க்கை மலர்விட்டு மலர்தாவும் வாண்டுகளால் தான் ஏற்படுகிறது.

கோவி.கண்ணன் [GK] said...

மகி...!

இந்த பதிவு குஷ்பு மேட்டருக்கு கொண்டு போய் விடும் ! அதைத் தொடர்ந்து உங்கள் விருப்பப்படி பெரியார் போற்றப்படுவார் !
:))

இப்ப இந்த பின்னூட்டத்தை போடாதிங்க !

குஷ்பு மேட்டரைப் பற்றி யாராவது பின்னூட்டம் போட்டால் அதன்பிறகு போடுங்கள்.

Anonymous said...

இங்கு விளையாட அனுமதி உண்டா ?
நல்ல டாபிக் அதான். ஹி ஹி.

துளசி கோபால் said...

திரியிலே நெருப்பு வச்சாச்சு.

Unknown said...

//மகரந்த சேர்க்கை மலர்விட்டு மலர்தாவும் வாண்டுகளால் தான் ஏற்படுகிறது//

ஜிகே. தங்கள் கருத்துக்கும் உங்களின் தீர்க்கதரிசனத்துக்கும் நன்றி (:)) ?)
ஆண்களே எனும் கருத்து நம்பர் 1

Unknown said...

//இங்கு விளையாட அனுமதி உண்டா ?
நல்ல டாபிக் அதான். ஹி ஹி.//

அன்பு அனானி விளையாடுங்கள் பதிவுக்கு தொடர்பான கருத்துக் களத்தில் விளையாடுங்கள் நீங்கள் விளையாடத் தானே அனானி ஆப்ஷன் இருக்கிறது அய்யா

Unknown said...

//திரியிலே நெருப்பு வச்சாச்சு.//..

தீபாவளி நெருங்குதுல்ல அதனாலதான் ,,, நீங்க சொன்ன கருத்தை மொத்த பதிவுக்கும் எடுத்துக்குவேன் ஆனா நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலை அதுக்கு என் அன்பான கண்டனத்தையும் தெரிவிக்கிறேன் நன்றி துளசிம்மா..

பதிவுக்கு ஆதரவு 1 :)

Udhayakumar said...

கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா??? இதுக்கு என்ன விடையோ அதுதான் உங்க கேள்விக்கும் விடை...

கருப்பு said...

சூப்பர் தலைப்பை தொடங்கி இருக்கிறீர்கள். புகுந்து விளையாடுங்கள்.

Udhayakumar said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

//கோழியிலிருந்து முட்டையா? முட்டையிலிருந்து கோழியா??? இதுக்கு என்ன விடையோ அதுதான் உங்க கேள்விக்கும் விடை..//

இதெப்படி பதிலாகும் ? ஓகோ பதில் தெரியாது இல்லை சொல்ல முடியாதுன்னு ஒன்னு கருத்து கணிப்புகள்ள போடுவாங்களே அப்படி கணக்கு பன்னிக்காவா? ஆனா ஒன்னு எனக்கு அடுத்த பதிவுக்கு தலைப்பு கிடைச்சிடுச்சி :) பதில் சொல்லிட்டு போங்க உதயகுமார் அப்பதான் உங்களுக்கு நன்றி :))

Unknown said...

//சூப்பர் தலைப்பை தொடங்கி இருக்கிறீர்கள். புகுந்து விளையாடுங்கள். //

நன்றி கருப்பு அப்படியே உங்கள் கருத்து என்னவென்று சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்

பொன்ஸ்~~Poorna said...

தொடர்புடைய சுட்டி ஒன்று

மத்தபடி மகேந்திரன், "இந்த மாதிரி" கருத்தெல்லாம் சொல்ல அனானியாத் தானே வருவாங்க..

Anonymous said...

நாமக்கல்லில் இருந்து கிளம்பி சூரத், மும்பை, டெல்லி என்று போவேன்.

வழியில் ஆங்காங்கு சூட்டை தணிக்க ஆங்காங்கு நிறுத்தும் பழக்கம் உண்டு.

ஆனுறை அங்கெல்லாம் எங்கேயும் கிடைக்காது, ஸ்டாக் வெச்சுக்கிற பழக்கமும் கிடையாது.

ஒரு முறை வண்டி ஏறினா, இருபது இருபத்தைந்து நாள் தொடந்து ஓட்ட வேண்டி வரும்.

அங்கிருந்து இங்கே வந்து ஒரு பத்து பதினைந்து நாள் இருப்பேன், பிறகு வண்டி எடுப்பேன்.

என் பொண்டாட்டிக்கு எய்ட்ஸ் வந்ததுக்கு காரணம் நாந்தான்னு சொல்லுறாங்க.

உண்மையா ? எனக்கு எய்ட்ஸ் இருக்கு.

உங்கள் நண்பன்(சரா) said...

ஆவ்வ்வ்வ்வ்.........

மகி! காலை வணக்கம்!
எப்படியா உமக்கு மட்டும் இப்படி தேணுது! சின்ன வயசுல இருந்தே இப்படித் தானா இல்லை துபாய் போனதுமா?
இந்தப் பின்னூட்டம் மகிக்கு மட்டும், இந்தப் பதிவிற்க்கான பின்னூட்டம் பிறகு இடப்படும்!


அன்புடன்...
சரவணன்.

Udhayakumar said...

see the link below.

History

யாராலும் இது எப்படி ஆரம்பித்தது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது.

ஆனால் கட்டுரையில் முதல் நோயாளியாக காட்டியிருப்பது ஒரு ஆண் ஓரினச் சேர்க்கையாளரை :-)

Anonymous said...

மனிதனுக்கு மட்டும் அல்ல, கொத்தவரங்காய், பூசனிக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளுக்கும் இந்த வியாதி வருதுங்க.

விவசாயி யாரையாவது கேளுங்க.

மங்கை said...

மகேந்திரன்

உங்க பதிவ பார்த்த பின் தான் இப்பிடி ஒரு பினூட்டம் இருந்தத பார்தேன்..வருத்தமாக இருக்கிறது.. நல்லதொரு விவாதத்தை தொடங்கொ இருகிறீர்கள்.. மற்ற பதிவுகளில் நடந்த்தது போல் இதுவும் ஒரு கேலி கூத்தாகமல்,நல்ல கருத்டுக்கள் வந்தால் மகிழ்ச்சி. பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி இன்றுதான் ஒரு பதிவை வளியேற்றிருக்கிறேன்..

இந்த தலைப்பு கேலிக்காகவும், யாரும் விளையாடவும் ஏற்றதல்ல என்பது.

Unknown said...

// "இந்த மாதிரி" கருத்தெல்லாம் சொல்ல அனானியாத் தானே வருவாங்க//

தங்கள் சுட்டிக்கு நன்றி பொன்ஸ் , அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கும் பொறுப்பு என்கையில் தானே இருக்கிறது ? :0

Unknown said...

//ஆனால் கட்டுரையில் முதல் நோயாளியாக காட்டியிருப்பது ஒரு ஆண் ஓரினச் சேர்க்கையாளரை //

உதயகுமார் தங்கள் கருத்து ஆண்களே என சொல்வதால் ஆண்கள் எனும் பதி நம்பர் 2 :)
சுட்டியை படித்துவிட்டு சொல்கிறேன் நன்றி உதயகுமார் .

Udhayakumar said...

நன்றி எங்கெங்க???

Unknown said...

//எப்படியா உமக்கு மட்டும் இப்படி தேணுது! சின்ன வயசுல இருந்தே இப்படித் தானா இல்லை துபாய் போனதுமா?
இந்தப் பின்னூட்டம் மகிக்கு மட்டும், இந்தப் பதிவிற்க்கான பின்னூட்டம் பிறகு இடப்படும்!//

வாங்க சரா வணக்கம். அட நான் அப்பவே இப்படித்தாங்க, பள்ளிகூடத்தில வாத்தியாரு ஒருதடவை நம்ம குடல்ல இருக்க அமிலங்கள் பத்தி சொல்லும் போது ஆணியே அதுல கரையும்டான்னு சொன்னாரு நான் கேட்டேன் ஆணியே கரையும்போது அத கொடல் எப்படி சார் தாங்குதுன்னு :)
சசி சரி சீக்கிரமா இந்த விஷயத்தில உங்க கருத்து என்னா அதை சொல்லுங்க நன்றி

Unknown said...

//நாமக்கல்லில் இருந்து கிளம்பி சூரத், மும்பை, டெல்லி என்று போவேன்......................
என் பொண்டாட்டிக்கு எய்ட்ஸ் வந்ததுக்கு காரணம் நாந்தான்னு சொல்லுறாங்க.

உண்மையா ? எனக்கு எய்ட்ஸ் இருக்கு. //

லாரி டிரைவர் உங்க அனுபவம் நன்றாக பிரச்சினையை வெளிச்சமிட்டது. நன்றி .

ஆண்களே எனும் கருத்துக்கு ஆதரவு நம்பர் 3

Unknown said...

//மனிதனுக்கு மட்டும் அல்ல, கொத்தவரங்காய், பூசனிக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளுக்கும் இந்த வியாதி வருதுங்க.//

எயிட்ஸ் காய்கறிக்கும் உள்ளது என்பது நமது களத்தை வேறு பாதைக்கு மாற்றும் எனவே அன்பு காய்கறி வியாபாரி பதிவுக்கு தகுந்த கருத்தில்லாத வேளையில் வேறு தோட்டம் பார்க்கவும். மன்னிக்கவும் கருத்துடன் வந்தால் கத்தரிக்காய்க்கும் அனுமதி உண்டு இதை தயவுசெய்து காமெடிப் பதிவாக்கிவிடவேண்டாம் நன்றி

மங்கை said...

மகேந்திரன்

உங்க பதிவ பார்த்த பின் தான் இப்பிடி ஒரு பின்னூட்டம் இருந்தத பார்தேன்..வருத்தமாக இருக்கிறது.. நல்லதொரு விவாதத்தை தொடங்கி இருக்கிறீர்கள்.. மற்ற பதிவுகளில் நடந்தது போல் இதுவும் ஒரு கேலி கூத்தாகாமல்,நல்ல கருத்துக்கள் வந்தால் மகிழ்ச்சி. பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி இன்றுதான் ஒரு பதிவை வளையேற்றிருக்கிறேன்..

இந்த தலைப்பு, கேலிசெய்யவும், யாரும் விளையாடவும் ஏற்றதல்ல என்பது என் கருத்து.

மேலும் யார் காரணம் என்று ஆராயும் பொழுது இருவருமே என்றும் கூறலாம். பொறுப்பற்ற நடவடிக்கை இருபாலாரிடமும் இருந்து வருகிறது. ஆனால்..பாதிக்கபட்ட பெண்கள் பெரும்பாலோனோர் குடும்ப பெண்கள் என்று தெறியவரும் பொழுது ஆண்களின் பொறுப்பற்ற தண்மையே முக்கியமான காரணமாக தெரியவருகிறது. Commercial Sex Workers இடம் உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்கள் ஆணுறை உபயோகிக்க மறுப்பதால் பாதிக்கபடுவர் சில சமயம் அந்த விலைமாதராகவும் இருக்கலாம், உடலுறவு வைத்துக்லொள்ளும் ஆணும் பாதிக்கப்படலாம், முக்கியமாக மனைவி பாதிக்கப்ப்டுகிறாள். அதனால் பெண்களை விட பெரும்பாலும் ஆண்களே இதற்கு காரணம் என்பது என் கருத்து.

Unknown said...

//நன்றி எங்கெங்க??? /

நல்லா பாருங்க உதயகுமார்....

Unknown said...

//நல்லதொரு விவாதத்தை தொடங்கொ இருகிறீர்கள்.. மற்ற பதிவுகளில் நடந்த்தது போல் இதுவும் ஒரு கேலி கூத்தாகமல்,நல்ல கருத்டுக்கள் வந்தால் மகிழ்ச்சி. பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி இன்றுதான் ஒரு பதிவை வளியேற்றிருக்கிறேன்.. //


மங்கை தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி, கவலை வேண்டாம் எனது முந்தய பதிவுகள் செய்தி விமர்சனாக மட்டுமே இருந்ததால் கலாய்த்தல்கள் அனுமதிக்கப் பட்டன் இது நமது பதிவர்கள் இவ் விஷயத்தில் என்ன சொல்கிறார்க்ள் என அறியவேண்டும் என்பதால் அப்படி விளையாடமாட்டோம் தங்கள் சேவைக்கு எமது அன்பான ஆதரவும் வாழ்த்துக்களும். மேலும் இதுகுறித்த தகவல்களை வழங்கவும் நன்றி

Unknown said...

நல்ல விவசாயி இது போன்ற கருத்து சொல்ல நல்ல வயல்வெளிதேடவும் இங்கே உங்கள் அருவடைக்கு இடமில்லை. நான் கேட்டிருக்கும் போட்டிருக்கும் பதிவுக்கும் கேள்விக்கும் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிக்கப் படும் ஸோ நோ ஃபன் ஹியர் :)

Unknown said...

//அதனால் பெண்களை விட பெரும்பாலும் ஆண்களே இதற்கு காரணம் என்பது என் கருத்து.//


ஆண்களே நம்பர் 4
கருத்துக்கு நன்றி மங்கை

Anonymous said...

இப்போது எல்லாம் நல்ல அவேர்னஸ் வந்திடுச்சி மகி.

எல்லா விபச்சாரிகளும் காண்டம் உபயோகிக்கறாங்க.

Unknown said...

//இப்போது எல்லாம் நல்ல அவேர்னஸ் வந்திடுச்சி மகி. //
வாஸ்தவம் தான் ஆனா இன்னும் பலபேருக்கு அது புறியவில்லை என்பதும் உண்மை

Anonymous said...

டெல்லியில் பாகர்கஞ்ச் சென்றேன். அங்கே பெட்டி பெட்டியான அறைகளில் 100 ரூபாய்க்கு பெண்கள். ஆனால் அவர்கள் கூட தெளிவாக இருக்கிறார்கள். காண்டம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை என்று.

ஆனால் இந்த விழிப்புணர்வு, கிராமங்களை சென்றடைய வேண்டும். அதற்க்கு அரசும், அரசு சாராத தொண்டு நிறுவணங்களும் கடும் முயற்ச்சி செய்துகொண்டுதான் இருக்கின்றன.

புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்பது கூட இதில் ஒரு பகுதி தான்.

ஆனால் இந்த முயற்ச்சிகள் முழு அளவில் மக்களை சென்றடையாததற்க்கு காரணம், ஊழல் பெருச்சாளிகளும், அரசியல்வாதிகளும் தான் மகி.

Anonymous said...

கோழியில் இருந்துதான் முட்டை வரும்.முட்டையில் இருந்து கோழி வராது.கோழி குஞ்சு தான் வரும்.
:-))

Unknown said...

மக்களை சென்றடையாததற்க்கு காரணம், ஊழல் பெருச்சாளிகளும், அரசியல்வாதிகளும் தான் மகி. //

ஆம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவேண்டியதும் அரசின் கடமை. இடையில் சில புள்ளிராசாக்கள் விளையாட்டில் அரசின் திட்டங்கள் பாதாளத்தில்

Unknown said...

//முட்டையில் இருந்து கோழி வராது.கோழி குஞ்சு தான் வரும்.//


முட்டையில் இருந்து குஞ்சு வரும் இந்த நூற்றாண்டின் இனையற்ற கண்டுபிடிப்பு

கோவி.கண்ணன் [GK] said...

//முட்டையில் இருந்து குஞ்சு வரும் இந்த நூற்றாண்டின் இனையற்ற கண்டுபிடிப்பு //

சேவலும் கோழியும் இருந்தால் தான் முட்டையே வரும் !

:))

Muse (# 01429798200730556938) said...

மகேந்திரன்,

தங்களின் கட்டுரையின் நோக்கத்தின்படி என் பதில் பின்வருமாறு:

தற்போதைய இந்திய சமூக சூழ்நிலையில் பலருடன் உறவு கொள்ளும் வாய்ப்பு ஆண்களுக்கே அதிகம் இருப்பதால் இந்த வியாதி பரவ அதிக வாய்ப்பு தருபவர்கள் ஆண்களே.

இருப்பினும், என் சொந்த கருத்துப்படி இந்த வியாதி பரவ கீழ்க்கண்ட இருவர்தான் காரணம்:

கவனமின்மையும், எய்ட்ஸ் கிருமியும்.

Anonymous said...

ஸ்ஸ் அப்பா கண்ணக்கட்டுதே...
சாப்ட்டு வர்ரதுக்குள்ள...

//
மகரந்த சேர்க்கை மலர்விட்டு மலர்தாவும் வாண்டுகளால் தான் ஏற்படுகிறது.
//

என்ன இங்க நடக்குது. New படத்துக்கு விளம்பரமா ?

Unknown said...

//சேவலும் கோழியும் இருந்தால் தான் முட்டையே வரும் !//


ஜிகே உங்க வதம் சரியாத்தான் இருக்கு :) எழுத்துப் பிழை இல்லை :))

Unknown said...

//என் சொந்த கருத்துப்படி இந்த வியாதி பரவ கீழ்க்கண்ட இருவர்தான் காரணம்:
கவனமின்மையும், எய்ட்ஸ் கிருமியும்.//

ம்யூஸ் உங்கள் கருத்துக்கும் கண்டுபிடிப்புக்கும் மிக்க நன்றி,,, இன்னும் கொஞ்சம் யோசித்து நல்ல தகவல்களை தரவும் மிக்க நன்றி

இப்பவே கண்ண கட்டுதே என்னது பெரியாரு--- நீங்க பெரியாளா ஆகுறீங்க :)

Unknown said...

//என்ன இங்க நடக்குது. New படத்துக்கு விளம்பரமா ?//

அது சரி ... எஸ்ஜே சூரியாவத்தான் கூப்பிட்டு கேக்கனும் :)

இந்த கட்டுரைக்கு விவாதத்துக்கு கருத்துசொல்லுங்க அனானிமஸ் நன்றி

Anonymous said...

"எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?" //

மகரந்த சேர்க்கை மலர்விட்டு மலர்தாவும் வாண்டுகளால் தான் ஏற்படுகிறது.

சகோ. கோவி கண்ணன் சரியாக பிடித்துள்ளார்.

என் கருத்து சகோ. விடாது கருப்புவின் பதிவில் தற்போது இட்ட பின்னூட்டத்தில் உள்ளது. கவனித்து ஏதாவது செய்யுங்கள் சகோதரரே.

Muse (# 01429798200730556938) said...

மகேந்திரன்,

இன்னும் கொஞ்சம் யோசித்து நல்ல தகவல்களை தரவும் மிக்க நன்றி

நான் ஸீரியஸாகத்தான் கூறியிருந்தேன். ஏனெனில் கவனக்குறைவும், எய்ட்ஸ் கிருமியும்தான் இந்தப் ப்ரச்னைக்கு மூல காரணங்கள். இவற்றில் எய்ட்ஸ் கிருமியை இப்போது அழிக்க முடியாத நிலை நிலவுவதால், கவனக்குறைவை அழிப்பதே சரியான தீர்வு; உடனடி வழி.

மற்றபடி, ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அல்லது இருவருக்குமோ ஒழுக்கம் போதிப்பதெல்லாம் நீண்டகாலத் திட்டங்களாகத்தான் இருக்க முடியும். உடனடி நடவடிக்கை நான் குறிப்பிட்ட இரண்டு காரணங்களில்தான் சாத்தியம்.

ரவி said...

///மற்றபடி, ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அல்லது இருவருக்குமோ ஒழுக்கம் போதிப்பதெல்லாம் நீண்டகாலத் திட்டங்களாகத்தான் இருக்க முடியும். உடனடி நடவடிக்கை நான் குறிப்பிட்ட இரண்டு காரணங்களில்தான் சாத்தியம்./////

அது முடியாது...ஸரியானது இல்லை..

Unknown said...

//கவனக்குறைவை அழிப்பதே சரியான தீர்வு; உடனடி வழி.

மற்றபடி, ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அல்லது இருவருக்குமோ ஒழுக்கம் போதிப்பதெல்லாம் நீண்டகாலத் திட்டங்களாகத்தான் இருக்க முடியும்//

ம்யூஸ் அவர்களே...
இதில் நான் உங்களுடன் முரண்படுகிரேன் கவணக்குறைவை ஒழிக்க வேண்டும் எனக்கூறு நீங்கள் ஒழுக்கம் பற்றி போதிப்பது சரியாகாது என்கிறீர்கள்?. கவணக்குறைவு இல்லாத போது அது கவணமக இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. அப்படியென்றால் கவணமாக இருக்கச்சொல்லுகையில் ஒழுக்கமாக இருக்கவேண்டாம் என்பதா? ஒழுக்கமாக இருக்கும்போதுதான் கவனமாக இருக்கமுடியும்?

Unknown said...

//அது முடியாது...ஸரியானது இல்லை..//...

நல்லது ரவி ஆனல் ஏன் இது சரியாகாது என்று திருவாளர் ம்யூஸ் அவர்களுக்கு விளக்கினால் நானும் அவரும் தெரிந்துகொள்வோம் :) நன்றி

.

Unknown said...

இறை நேசன் உங்கள் லிங்க் எங்கும் செல்லவில்லை ? சரி நான் கருப்பு பதிவில் படிக்கிறேன்

Unknown said...

there are enough of awareness thats happening.....Its only the reading and watching awareness thats less now....the Reading habit has come down very much, but all these awareness are in the reading materials..... //

கடைசியில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எதைப்பற்றி படிக்க பார்க்கவேண்டும்? எய்ட்ஸ்பற்றி யா அல்லது செக்ஸ் கல்வியா எதைத்தான் சொல்கிறீர்கள் ....: மற்றபடி இருவரும் காரணம் என்பதை மறுக்கவில்லை ஆனால் இக் கட்டுரைக்கு காரணமான் அந்த பின்னூட்ட வரிகளை படித்து பின் சொல்லவும் . நன்றி

கதிர் said...

பலவீனமும் வாழ்க்கையை பற்றிய தெளிவின்மையும் இல்லாத யாரை வேணாலும் இதற்கு காரணமாக கூறலாம். மற்றபடி ஆண்தான் என்றும், பெண்தான் என்றும் திட்டமாக கூற முடியாது.

Anonymous said...

//இறை நேசன் உங்கள் லிங்க் எங்கும் செல்லவில்லை?//

பரவாயில்லை. இப்பொழுது விரிவாக இங்கு கிடைக்கும்.

Unknown said...

//பலவீனமும் வாழ்க்கையை பற்றிய தெளிவின்மையும் இல்லாத யாரை வேணாலும் இதற்கு காரணமாக கூறலாம். மற்றபடி ஆண்தான் என்றும், பெண்தான் என்றும் திட்டமாக கூற முடியாது.//

உங்கள் கருத்து ஏற்ப்புடையதே தம்பி ஆனால் அங்கே சொல்லப்பட்ட கருத்துதான் என்னை இக் கேள்விக்கு தூண்டியது எனவே இப் பதிவும் அவசியமானது. நன்றி

Unknown said...

சுட்டிக்கு நன்றி இறை நேசன் இப்பொழுது சரியாக இருக்கிறது

Muse (# 01429798200730556938) said...

இதில் நான் உங்களுடன் முரண்படுகிரேன் கவணக்குறைவை ஒழிக்க வேண்டும் எனக்கூறு நீங்கள் ஒழுக்கம் பற்றி போதிப்பது சரியாகாது என்கிறீர்கள்?. கவணக்குறைவு இல்லாத போது அது கவணமக இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. அப்படியென்றால் கவணமாக இருக்கச்சொல்லுகையில் ஒழுக்கமாக இருக்கவேண்டாம் என்பதா? ஒழுக்கமாக இருக்கும்போதுதான் கவனமாக இருக்கமுடியும்?

மகேந்திரன்,

உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய உண்மையான பெயர் விசுதானே?

ஒழுக்கம் பற்றி போதிப்பது சரியாகாது என்கிறீர்கள்?

இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. ஒழுக்கம் பற்றிய போதனை விளைவுகளைத்தர நெடுநாளாகும். அதுவரை?

அதுவரை நாம் பின்பற்றவேண்டியது மக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுவதுதான்.

இதில் ஒழுக்கம் என்பது பற்றிய தங்களின் வரையறை என்ன என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஒருவனுக்கு ஒருத்தி என்பதா? அதைத்தான் குறைந்தது ஒரு 10,000 வருடங்களாக சொல்லிக்கொண்டு வந்துள்ளோமே.

ஒழுக்கம் என்பது உங்களுக்கும், எனக்கும் ஒத்துவரும். எல்லாருக்கும் ஒத்து வருவதில்லை. எல்லாரும் ஒழுங்காக இருக்கிறார்களா என்றெல்லாம் பார்க்கவேண்டுமென்றால் தாலிபான்களின் ஒழுக்க கண்காணிப்புக் கமிட்டியிடமிருந்துதான் பயிற்சிபெறவேண்டும்.

கவனமாக இருக்கவேண்டும் என்பதில் நான் கூற விரும்புவது ஆணுறை மற்றும் பெண்ணுறை உபயோகிப்பது, ரத்தம் ஏற்றப்படும்போது அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்வது, ஸிரிஞ்சுகளை உபயோகப்படுத்தும்முன் சோதிப்பது போன்ற சமாச்சாரங்களை.

வேண்டுமானால் சின்ன வெங்காயம், முருங்கைக்காய் சாப்பிடாமல் இருப்பது, தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் பார்க்காமல் இருப்பது, விடாது வெறுப்பின் பதிவுகளை படிக்காமல் இருப்பது போன்றவற்றையும் பரிசோதனையாக ஒரு மண்டலம் செய்துபார்க்கலாம்.

Unknown said...

//உண்மையான பெயர் விசுதானே?//

ம்யூஸ் அவர்களே என்பெயர் மகேந்திரன் தான் விசு இல்லை :)

//அதுவரை நாம் பின்பற்றவேண்டியது மக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுவதுதான்.//

இங்கே தான் நான் முரண்படுகிறேன். மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனச்சொன்னால் ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படுவார்கள் எனும் போது ,(உங்கள் பார்வையின் படியே) ஏன் அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வைக்க முடியாது. ஒழுக்கம் என்பது பழக்கப் படுத்திக் கொண்டு வருவதில்லை. அது மனம் தொடர்பான விசயம். ஒருவனை/ஒருத்தியை ஒழுக்கமாக இரு என்பதற்கும், பாதுகாப்பாக இரு என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மேலும் பாதுகாப்பாக இரு எனச் சொல்லும் போதே அங்கே ஒழுக்கமின்மை எனும் ஒரு செயலுக்கு, நாம் நமது ஆதரவை தருகிறோம். என்னதான் பாதுகாப்பாக இருப்பினும் ஒழுக்கம் மட்டுமே இதுபோன்ற பாலியல் நோய்களில் இருந்து மனித குலம் கொஞ்சமாவது தள்ளியிருக்க முடியும். எனவே. ஒழுக்கம் தேவை, பாதுகாப்பும் தேவை.

//இதில் ஒழுக்கம் என்பது பற்றிய தங்களின் வரையறை என்ன என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்//

சரி ஒருவனுக்கு ஒருத்தியெல்லாம் இல்லை யென்றால் இதுபோன்ற விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும் எனும் ஒரு மோசமான கால கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் இனிவரும் காலங்களில் ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் வரையரை ஆளுக்கு ஆள் வேறுபடும். இது கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு அதை நாம் தான் கண்டறிந்துகொண்டு நடைபழக வேண்டும், அடிபட்டு முட்டியை பெயர்த்துக்கொள்ளாமல். நான் சொல்லும் ஒழுக்கம் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், நீங்கள் சொல்லும் அளவு எனக்கு ஒத்துவராததாக இருக்கலாம் எனும்போது ஒழுக்கத்துக்கு அடுத்தவர் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் தர இயலாது. ஆனால். இதுபோன்ற பாலியல் நோய்கள் வராமல் இருக்க என்ன வழிகளை (பாதுகாப்பு தவிற) வாழ்வில் ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டுமோ அதுவே ஒழுக்கம் என்பது எனது எண்ணம்.

மற்றபடி முருங்கைக்காய் சமாச்சாரம் அடியேனுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத காரணத்தால் அதுபற்றி கருத்து சொல்ல முடியவில்லை :))

Muse (# 01429798200730556938) said...

ஒழுக்கம் தேவை, பாதுகாப்பும் தேவை.

அதைத்தான் நானும் கூறுகிறேன் மகேந்திரன். நாம் வேறுபடுவதெல்லாம் ஒன்றில்தான். தாங்கள் இந்த விஷயத்தில் குறிக்கோளை அடைய பாதையும் உயர்ந்ததாக, தூய்மையானதாக இருக்கவேண்டும் என்கிறீர்கள். செயல்முறையில் இது சாத்தியமானால் எனக்கு உண்மையில் மிக மிக சந்தோஷம்.

நீங்கள் இந்த விஷயத்தில் மனிதர்கள்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மிக அபாரமானது. நான் கொஞ்சம் சந்தேகப்பேர்வழி.

வேறுவகையில் பார்த்தால் எயிட்ஸ்க்கு பயந்துகொண்டுதான் நிறைய பேர் ஒழுக்கமாக இருக்கிறார்கள். அந்த வகையில் அது ஒரு வரம்.

நல்லது நடந்தால் சரிதான்.

உங்கள் நண்பன்(சரா) said...

ஹாய் மகி!
விவாதம் சூடா போய்கிட்டு இருக்கு போல! நான் ஈவ்னிங்ல இருந்து "லேடிஸ் ஃபோஸ்கட் பால்" பார்க்கப் போய்ட்டு இப்போ தான் வந்தேன்!
என்னா ஆட்டம்.. என்னா ஆட்டம் அடடா! சரி அதை ஏன் உங்கிட்ட சொல்லி உன் வயித்தெரிச்சலை கிளப்புவானேன்!
ஆமா! உன் பதிவு தலைப்பு என்ன..?

ஹி...ஹி... ஹி...


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

சாதாரணமாக பெண்கள் அதற்காக அலைவது மிகவும் குறைவு - ஆண்களைக் கணக்கிட்டால். அசாதாரணங்களை விட்டு விடலாம். அவர்களும் கூட சமுதாயத்துக்குப் பயந்து இயன்றவரை முயற்சி செய்வதில்லை.
எனவே ஆண்கள் சுய கட்டுப்பாட்டுடன், தன் மனைவியிடம் மட்டும் உடலுறவு கொண்டு அவள் தேவையை நிறைவேற்றினால் 90 சதவிகிதம் எய்ட்ஸ் வருவதை தடுக்கலாம் என்பது என் கருத்து.

அடுத்து காண்டமில் உள்ள கண்ணுக்குத் தெரியாத துளைகளில் பாதியை விட சிறியது (மைக்ரான் அளவில்) எய்ட்ஸ் வைரஸின் அளவு. இடம் கிடைத்தால் கிருமிகள் புகுந்து விளையாடிவிடும். அதாவது புள்ளி ராஜாவுக்குக்கூட எய்ட்ஸ் வரலாம். அதனால் சுய கட்டுப்பாடே அவசியத்திலும் அவசியம்.

கதிர் said...

மகி,

தூங்க போயிட்டிங்களா?

இந்த தலைப்புக்கு போதிய வரவேற்பு இல்லையா என்ன!

Anonymous said...

100 ரூபாய்க்கு வேலை செய்யும் பெண்ணிற்கு இருக்கும் தன்னலம் காக்கும் எண்ணம் பத்தினிப் பெண்களுக்கு இல்லாமல் போவது வருத்ததிற்குரிய யதார்த்தம். "Female Condom" கிடைக்க ஆரம்பித்த பின்னால், பெண்களுக்கு வரும் AIDSக்கு பெண்களே காரணம் ஆவார்கள். இந்தியாவில் இது கிடைப்பது பற்றிய குறிப்புகளை இங்கே காணவும். http://www.sawf.org/newedit/edit03192001/health.asp
எல்லாவற்றிற்கும் ஆண்களைப் பழி போடுவது சரியில்லை. சுய மரியாதையும், தற்காப்பும் பெண்ணிற்கு தேவை.அதனால இன்னும் 10 வருஷம் கழிச்சு கேட்டிங்கன்ன, பெண்களுக்கு வரும் AIDSக்கு பெண்களே காரணம்ன்னு சொல்லுவேன். இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல.

Anonymous said...

மகி, மேலிருக்க தலைப்ப பாத்திட்டு கீழிருக்கிற கேள்விய ஒழுங்காப் படிக்காம விட்டுட்டனே கேள்விய!!! "கற்பில்லாத" அப்படின்னு கீதே! அந்த வம்புக்கே நான் வரலைப்பா - என்னையக் கொன்னு சிலை வச்சிரப் போறாங்க மெரினா பீச்சில ! :) ஞான் கமீநமீ!!! :)
இப்படிக்கு,
"பெண்ணா ஆணா" அப்படின்னு மட்டும் படிச்ச அவசரக் குடுக்கை.

Doctor Bruno said...

Many people are mislead when it is claimed that Tamil Nadu has the maximum number of AIDS patients in India. That is a false statement the correct statement is. TamilNadu has the maximum number of AIDS patients getting treatment in India.

At present for any disease we have the records based on the number of patients getting treatment.

That is if we say that 75 AIDS patients are in this town, that means that 75 patients are getting treatment.

But that does not mean that there are ONLY 75 cases in the town. If we want to find that, we need to test EVERYONE and then come to the data

IF you cannot understand, I can explain it a bit further

Unknown said...

மன்னிக்கவும் கொஞ்சம் அதிகவேலை / அதனால் ஓவொரு பின்னூட்டமும் நன்கு படித்து பதில் விரைவில்

Thekkikattan|தெகா said...

முனியே,

தாங்களின் கேள்வி "முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பதனை ஒத்து இருக்கிறது... ;-))

Thekkikattan|தெகா said...

முனி,

நான் இந்த பதிவை படிக்கிறதுக்கு முன்னாலேயே, என்னோட முதல் பின்னூட்டத்த தட்டி விட்டுருந்தேன்... எந்த கோணத்தில் என்றால், காடுகளிலிருந்து ஒரு வித குரங்களின் இனத்தில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாம் என்ற அடிப்படை கூற்றின் மூலம். நான் சொன்ன அந்த "முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா கருத்து.

இந்த பதிவு மேட்டர் கொஞ்சம் சீரியசான மேட்டர் போல நான் வல்லப்ப இந்த விளையாட்டுக்கு ;-)))

Unknown said...

லேடிஸ் ஃபோஸ்கட் பால்" பார்க்கப் போய்ட்டு இப்போ தான் வந்தேன்!
என்னா ஆட்டம்.. என்னா ஆட்டம் அடடா! //

சரா என்க்கு இப்பத்தான் தெரியுது ஏண்டா நாட்டுல மக்கள் தொகை வேகமா வளருதுன்னு, நடக்கட்டும் நடக்கட்டும் கொடுத்துவச்ச ஆள் நீங்க இங்க பைல பாத்து பாத்து பைல்ஸ் வராத குறை இந்த கீபோர்டுல ஸ்மைலி போட அந்த ப்ராகட் பட்டன் வேலை செய்யலை அதால "சிரிக்கிறேன்"

Unknown said...

சுல்தான் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி யாருப்பா அங்க கயமைன்னு கத்துரது ஓ மனசாட்சியா ..
இந்த கீபோர்டுல ஸ்மைலி போட அந்த ப்ராகட் பட்டன் வேலை செய்யலை அதால "சிரிக்கிறேன்

கப்பி | Kappi said...

மக்களிடையே விழிப்புணர்ச்சியும் பாதுகாப்பு உணர்வும் இன்னும் அதிகமாகனும்..

ஆனா இப்ப இருக்க நிலைமையில் ஆண்கள் மட்டும் காரணம்ன்னு பொதுப்படுத்த முடியாது மகி...

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

IF you cannot understand, I can explain it a bit further
//

டாக்டர் ப்ரூனோ உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஏன் இதுபற்றி ஒரு விளக்கமான பதிவு எழுதக்கூடாது நீங்கள்

Unknown said...

இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல//
கற்பில்லாத" அப்படின்னு கீதே! அந்த வம்புக்கே நான் வரலைப்பா - என்னையக் கொன்னு சிலை வச்சிரப் போறாங்க மெரினா பீச்சில ! :) ஞான் கமீநமீ!!! :)//

மதுரா உங்க ளிடம் இருந்து இந்த மழுப்பலான பதிலை எதிர்பார்க்கவில்லை.... எனக்குத் தெரிந்த வரை நீங்கள்தான் ஏதோ சொல்லவந்ததை துனிச்சலாக பதிவில் சொல்லும் பதிவர் எனும் எண்ணம் இருந்தது கடைசியில் ஆப்புக்கு பயந்து ஆஃப் ஆகிவிட்டீர்களே துணிச்சலா நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க... ஏன்னா கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் டைட்டிலுக்கு கீழ என்ன எழுதியிருக்குன்னு பாருங்க நீங்களே இந்த மாதிரி ஆப்பு சிலைன்ன்னு எழுதுனா என்ன அர்த்தம் / அப்ப உங்க பதிவுகள்ள மட்டும் உங்க துணிச்சல் காட்டுனா மத்தவங்க என்ன பத்தி ஏன்ன நினைப்பங்க நான் வேறையா உங்கள பத்தி ஆகா ஓகோன்னு புகழ்ந்துகிட்டு வரேன் நீங்க என்னான்னா கமீநமீன்னு சொல்றீங்க சீக்கிரமா உங்க வாதத்தை வைங்க ......... இந்த கீபோர்டுல ஸ்மைலி போட அந்த ப்ராகட் பட்டன் வேலை செய்யலை அதால "சிரிக்கிறேன்

Unknown said...

கப்பி கருத்துக்கு நன்றி/////இந்த பதிவு மேட்டர் கொஞ்சம் சீரியசான மேட்டர் போல நான் வல்லப்ப இந்த விளையாட்டுக்கு //

தெகா நீங்க இப்படி நழுவரது நல்லா இல்லே.... எய்ட்ஸ் ஒரு தொட்டால் வரும் வியாதி அல்ல என்பதால் இன்னும் தைரியமாக உங்கள் கருத்தை வைக்கவும்

Thekkikattan|தெகா said...

//எய்ட்ஸ் ஒரு தொட்டால் வரும் வியாதி அல்ல..///

அப்படியா, அதே நீங்கள் சொல்லித்தானே எனக்கே இப்பத் தெரியும் ;-))))) அப்புறம் எப்படி நான் இதனைப் பத்தி பேசுறது... நானே பயந்துகிட்டு இருக்கேன் :-)))))

Anonymous said...

மகி, இல்ல நிஜமாவே எனக்கு இந்த "கற்பு" அப்படின்ற வார்த்தைய இந்த AIDS பற்றிய வாதத்தில எப்படிப் பாக்குறதுன்னு தெரியல! மாதவிக்கிட்டு போயிட்டு வர்ற கோவலனுக்கு பணிவிடை செய்யும் கண்ணகிக்குத் தான "கற்பு" அப்படின்ற வார்த்தைக்கே தமிழ்ல அர்த்தமா இருக்கு! கற்பில்லாத மாதவி கவனமா இல்லைன்னா கற்புள்ள கண்ணகிக்குத் தான் ஆபத்து?! இது ரொம்ப குழப்பமான ஸிட்டுவேஷன்! கற்பில்லாத கோவலன் தான் காரணம் அப்படின்னு கணக்கு எழுதறதா, இல்ல அட அறிவுகெட்ட கண்ணகி அப்படின்னு சொல்றதா? தெரியாம இருந்தாலும் பரவாயில்லை. தெரிஞ்சே புதை குழியில விழுற கற்புள்ள கண்ணகிகள என்ன செய்றது? சாவவிட்டுட்டு சிலை வச்சிர வேண்டியதுதான - கற்பு கற்புதான்னு! வேற ஒரு நல்ல புருஷனை கட்டி குடுத்தா "கற்பு" பட்டத்தை பறக்க விடணுமே! :)
அதை விடுங்க, கல்யாணத்துக்கு முன்னாடி "டெஸ்ட்" பண்ணுங்க அப்படின்னு கேக்கிறவ கற்புள்ளவளா? இல்ல அங்கன போயிட்டு வந்தேன்னு உண்மைய சொல்ற புருஷன்ட, எனக்கு வேற நாதியில்லன்னு குடும்பம் நடத்திரவ "ஆணுறை" போடுங்கன்னு கேக்குறதுக்கு சிலை வைப்பாங்களா, அறை வைப்பாங்களா?!! :) ...
அதனாலத் தான் ஆணுறை வேண்டாம், பெண்ணுறையில பதில் தேடுறாங்க "அறிவியல்" வல்லுநர்கள். இது ரொம்ப யதார்த்தமா பேசுறது.
சும்மா அஸ்கு புஸ்க்கு அப்பாவி பொண்ணு, படுபாவி புருஷன் அப்படின்னு பேசுனா, ஒரு பாவி பொண்ணிருக்கே பின்னாடி அது அப்பாவியா, படுபாவியா?! எனக்குத் தெரியல.
ஆனா பாருங்க அறிவியல் என்ன சொல்லுதுன்னா ஒரு AIDS வியாதி ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு உடலுறவின் வழியா பரவுவதற்கு உள்ள வாய்ப்பின் விழுக்காடு 0.3% தான்! அப்ப எம்புட்டு கற்பு நாட்டுல நடமாடுதுன்னு பாத்துக்குங்க!!! கண்ணகி தெய்வத்திட்டத்தான் கணக்கு கேக்கணும்!

Anonymous said...

" தமிழ்நாட்டு பெண்டிரெல்லாம் கற்புக்கரசிகளாக் இருந்தால், உலகளவிலேயே இங்கு ஏனய்யா எயிட்ஸ் அதிகமாக இருக்கிறது?"

விடாது கருப்புவிடம் இந்த கேள்வியை கேட்டவன் என்ற முறையில் நான் இந்த பின்னூட்டமிடக் கடைமைப்பட்டிருக்கிறேன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், சும்மா கற்பு, கசாப்பு என்று கத்துவதால் மட்டும் இந்தக்கால இளைஞர்களும் இளைஞிகளும் திருமணமாகும் வரை 'அந்த' விஷயத்தை தள்ளிப்போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்தியா தற்போது இவ்வளவு வேகமாக வளர்ந்துவருவதாலும், சினிமா மற்றும் தொழில்நுட்ப தாக்கத்தாலும் கிராமங்களில் கூட இப்போது பாய் ப்ரண்ட், கேர்ள் ப்ரண்ட் கலாச்சாரம் வந்துவிட்டது. இவர்களை இனிமேல் கற்பு என்று மிரட்டி கற்காலத்துக்கு கொண்டுசெல்ல முடியுமா? இந்த உண்மையை முதலில் ஒப்புக்கொண்டு இந்நிலயில் எயிட்ஸ் என்னும் மிகக்கொடிய நோயை தடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டவேண்டும். குழ்பு சொன்னதன் சாரமும் இதுதான். அதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்கவேயில்லை, எங்கள் சாதி பெண்களெல்லாம் கற்புக்கரசிகள் என்று கத்துவதால் நடப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா? மதுவிலக்கு சட்டம் இருந்தாலும் கள்ளச்சாராயம் குடிப்பவன் குடிக்கத்தானே செய்கிறான்? அவனை காக்க யோசனை செய்வதை விட்டுவிட்டு, எங்கள் சாதி திராவிட சாதி, நாங்களெல்லாம் சாராமே குடிக்க மாட்டோமென்றால் யாருக்கு பயன்?

Coming to எயிட்ஸ் பரவ ஆணா பெண்ணா காரணம், I will say both. அதைவிட 'அந்த' விஷயமே அருவருக்கத்தக்கது என்ற தப்பான எண்ணமும் அதானால் வந்த அறியாமையுமே மிக மிக்கிய காரணம்.

வாழ்க பாரதம்! வாழ்க இந்தியர்கள்!

Unknown said...

//மாதவிக்கிட்டு போயிட்டு வர்ற கோவலனுக்கு பணிவிடை செய்யும் கண்ணகிக்குத் தான "கற்பு" அப்படின்ற வார்த்தைக்கே தமிழ்ல அர்த்தமா இருக்கு! கற்பில்லாத மாதவி கவனமா இல்லைன்னா கற்புள்ள கண்ணகிக்குத் தான் ஆபத்து?! இது ரொம்ப குழப்பமான ஸிட்டுவேஷன்! கற்பில்லாத கோவலன் தான் காரணம் அப்படின்னு கணக்கு எழுதறதா, இல்ல அட அறிவுகெட்ட கண்ணகி அப்படின்னு சொல்றதா?//


மதுரா நீங்க சொல்ரது 100 சதவிகிதம் உண்மை, நான் கூட ஒரு பதிவில எழுதியிருந்தேன், கண்ணகியும் தேங்காய் சிரட்டையும் தலைப்புல நம்மாளுங்க தனி மெயில் அனுப்பி உனக்கு கற்புன்னா என்னான்னு தெரியுமா படுபாவின்னு கேள்வி கேட்டாங்க அப்பதான் தெரிஞ்சது நம்ம மக்கள் கற்புக்கு என்ன மாதிரி டிஃபனிசன் வச்சிருக்காங்கன்னு, நீங்க சொன்னதை 100 சதம் ஏத்துகிட்டாலும் இந்த விஷயத்தில நீங்களும் என்னை மாதிரியே குழம்புவது தெரியுது"கற்புள்ள" இந்த வார்த்தைதான் பிரச்சினையே,,,,, அந்த அனானி இப்படி ஒரு பின்னூட்டத்தை போட்டு இங்க எனக்கு மண்டை குழம்புது... டிக்ஸ்னரில கூட கற்புக்கு தனியா நல்ல விளக்கம் இல்லை .... சரி இந்த விவாதம் எங்க போகுதுன்னு பாக்கலாம்

Unknown said...

//இந்த பதிவு குஷ்பு மேட்டருக்கு கொண்டு போய் விடும் //

ஜிகே நீங்க சொன்னது நடந்து போச்சி, யாருப்பா அங்கன ஜோசியம் பாக்க ஆளுகேட்டது இதோ இங்க ஒருத்தர் இருக்கார் வந்து இத்துகினு போங்கப்பா :))

Unknown said...

//விடாது கருப்புவிடம் இந்த கேள்வியை கேட்டவன் என்ற முறையில் நான் இந்த பின்னூட்டமிடக் கடைமைப்பட்டிருக்கிறேன்.//.

அனானி முதலில் உங்கள் பொறுப்புணர்வுக்கு ஒரு சல்யூட்,

நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சில விஷயங்களில் அதாவது கற்பு பற்றிய உங்கள் கூற்றில் கொஞ்சம் உடண்படுகிறேன் ஆனால் திரு ம்யூஸ் அவர்களுக்கு சொன்ன பதில் உங்கள் கேள்விக்கும் பொருந்தும். அதாவது அவர் மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி போதிக்கலாம் என்றார். பாதுகாப்பாக இருக்கச் சொன்னால் கேட்கும் மக்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்களா?
//எயிட்ஸ் பரவ ஆணா பெண்ணா காரணம், I will say both. அதைவிட 'அந்த' விஷயமே அருவருக்கத்தக்கது என்ற தப்பான எண்ணமும் அதானால் வந்த அறியாமையுமே மிக மிக்கிய காரணம்//.


இங்கே நீங்கள் கேட்ட அந்த கேள்வி இந்த பதிவு வரக் காரணமான் கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது ..... பதில் கிடைக்கும் என்று ஆவலுடன்

Anonymous said...

தல

புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா தல?..
கேட்டு சொல்லு தல...

இப்படிக்கு,
புள்ளிராஜா

உங்கள் நண்பன்(சரா) said...

யார் காரணம்னு கண்டுபுடிச்சிட்டியா?இல்லையா?

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

செல்வன் வர்களின் வலைப்பூவில் இந்த விஷயம் தொடர்கிறது...

இந்தியாவில் அதிகபட்ச எய்ட்ஸ் பேஷண்ட்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.உலகின் எய்ட்ஸ் நோயாளிகளில் 10% பேர் இந்தியர்கள்.

http://www.prb.org/pdf06/TamilNadu_Responds_HIVAIDS.pdf#search=%22aids%20in%20tamilnadu%22


//இது ஆண்களின் ஒழுக்கமற்ற செயலை மட்டும் காண்பிக்கவில்லை. இதற்கு பெண்ணும் உடந்தையே!!!//

பாலாஜி,
விபச்சார விடுதிகள் அமைவதற்கு முழுக்க,முழுக்க ஆண்கள் தான் காரணம்.எந்த பென்ணும் வலிய விபச்சாரத்தில் ஈடுபடுவதில்லை.கடத்தி வரப்பட்டு,காதலனால் ஏமாற்றப்பட்டு,குழந்தையாய் இருக்கும் போதே இத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களே அதிகம்.

முழுக்க,முழுக்க இதற்கு ஆண்கள் தான் காரணம்.பெண்கள் அல்ல.பெண்களை பண்டமாய் கருதும் ஆணின் மனோபாவமே இதற்கு காரணம்.

ராமன் போல் கணவன் இருந்தால் சீதை போல் மனைவி இருக்க முடியும்.ராவணன் போல் கணவன் இருந்தால் மண்டோதரி போல் மனைவி இருக்க வேண்டியதில்லை.

நம் சாத்திரங்களில் குந்தி,திரவுபதி,கங்கை என ஏராளமான உதாரணங்கள் உள்ளன பாலாஜி.திருமணத்துக்கு முன் உறவு,பெண்ணின் பலதாரமணம் என அனைத்தையும் ஏற்றுக்கொண்ட கலாச்சாரமே நமது.

சின்ன கருப்பனின் இந்த கட்டுரையை படியுங்கள்

அதை விட இன்னொன்று ஆட்சி பீடத்தில் உட்கார்ந்திருக்கிறது. அது யூத கிரிஸ்தவ நியமங்கள்.
பாலுறவு பாவம் என்பது இந்திய பாரம்பரியச் சிந்தனையில் கிடையாது. ஏவாள் என்ற பெண்ணால் ஆதாம் என்ற ஆண் கெட்டுப்போனதால் பெண்கள் பாவிகள் என்ற சிந்தனையும் நம்மில் கிடையாது, நம் ஊரில் மிகவும் அதிகமாகக் கும்பிடப்படும் தெய்வம் பெண் தெய்வங்கள்தாம். அந்தப் பெண் தெய்வங்களுக்கு ஆண் தெய்வங்களைப் பெற்றதால் தெய்வீகம் வரவில்லை. மாரியம்மனும் வெக்காளியம்மனும் காட்டேரியும் தெய்வங்கள். எந்த ஆண் தெய்வத்தையும் சார்ந்திருக்க வேண்டாத தெய்வங்கள்.

பாலுறவு பாவம் என்பதோ, நிர்வாணம் கெட்டது என்பதோ, மாரில் துணியில்லாமல் நடமாடுவது அசிங்கம் என்பதோ நம் ஊரில் இல்லாமல் இருந்தது. அது ஒரு காலம். ஏன் சொல்லப்போனால், ஜீன் தப்பிப்பிறந்த அரவாணிகள் கூட தங்கள் சமூகம் அறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் ஒரு திருவிழா, அவர்களுக்கும் கடவுள், அவர்களுக்கும் இடம் என்று இந்த சமூகம் கொடுத்திருந்தது. அந்த இடம் சற்று தாழ்ந்ததாக இருந்திருக்கலாம். ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்த நாட்டில் மற்ற நாடுகளில் இது போன்று பிறந்தவர்களுக்கு இருந்திருக்கும் மரியாதையைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது. நிலம் சார்ந்த அந்தக் காலகட்டத்தில் அவர்கள் வாழ இந்த சமூகம் கொடுத்திருந்த இடம் பெருமைப்படக்கூடியதுதான்.

கோவிலில் சிலைகள் இருந்தன. எந்தக் கோவில் சிலைகளிலும் மாரில் துணி போட்டுப் பார்க்கவில்லை நான். கஜ்உராஹோ தொடங்கி ஸ்ரீரங்கத்து தெற்குவாசல் சிலைகள் வரை இவை பாலுறவு பற்றிய அவமான உணர்வை, குற்ற உணர்வை உண்டாக்கவில்லை. அப்படி ஒருவேளை இருந்திருந்தால் அதனைப் போக்கக்கூட உதவியிருக்கின்றன.

தெய்வீகம் என்பது அழகு. செளந்தர்ய லஹரி (அழகு வெள்ளம்) எழுதிய சங்கரர் அழகாக பெண் உருவத்தை வர்ணிக்கிறார், முலை அல்குல் உட்பட. வெள்ளைக்காரன் தன்னுடைய மறுமலர்ச்சிக் காலத்துக்கு பின்னால் கிடைத்த சொற்ப சுதந்திரத்தை வைத்துக்கொண்டு வரைந்த பெண் ஓவியங்களை ஆஹா ஓஹோ என்று புகழும் தமிழக இந்திய அறிவுஜீவிகள், செளந்தர்யலஹரி, கம்பராமாயணத்தில் இருக்கும் பெண் வர்ணனைகளைப் படித்துவிட்டு, இதுவெல்லாம் இறைவனைப்பாடும் காவியமா, இதுவெல்லாம் கவிதையா என்று அசூசை அடைகிறார்கள்.

ஒரு சுமார் 1000 வருடங்களாக இந்தியாவின் பாரம்பரியக் கல்வி அழிக்கப்பட்டு, பாரம்பரியச் சிந்தனைக் கேவலப்படுத்தப்பட்டு அடிமைப்புத்தி தலைக்கேறியவுடன், வெள்ளைக்காரன் எது சொல்கிறானோ அதுவே சிறந்தது என்று சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டோம். அதோ பார் அமெரிக்கா, இதோ பார் பாரீஸ், அங்கெல்லாம் அறிவு முழக்கம் கேட்கிறது. தமிழ்நாட்டிலோ புராணங்களில் பாலுறவு பேசப்படுகிறது என்று புலம்பும் 'அறிவுஜீவிகளும் ' பகுத்தறிவு வாதிகளும் முற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள்.

எது ஒழுக்கம் எது யோக்கியம் என்ற நிலைப்பாடு எடுப்பது எளிதானதல்ல. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது என்பதைத்தவிர அதில் நிரந்தரமானது ஏதுமில்லை. ஒழுக்கம், யோக்கியம் எது என்பதை எது நாம் தொடர்ந்து இந்த உலகில் நீடித்திருக்க துணை புரிகிறதோ அது என்பது ஓரளவுக்கு சரி என்பதே என் கருத்து.
பாலுறவு என்பது குழந்தைகளுக்கு தெரியவரவேண்டிய காலத்தில் தெரியவேண்டும் என்று எண்ணுவது சரியானது. ஆனால், அது ஒரு திடார் விபத்து போலவோ, அது பலவந்தமாகவோ திணிக்கப்படும்போது மனநிலை பாதிக்கப்படுகிறது என்பதும், அது நீண்டகாலத்துக்கு குழந்தைகள் மனதில், அவர்கள் பெரியவர்களாக ஆனபின்னரும் இருந்து அவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி அவர்களை சரியான முறையில் சமூகத்தில் பங்கேற்பதை தடுக்கிறது என்பதும் அறிந்த ஒரு விஷயம்.


18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்பது இப்படி நம் சமூகம் நிர்ணயித்து சட்டமாக நாம் ஏற்றுக்கொண்டு நமது எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் ஒரு விஷயம்.
அதே சமயம், அந்த 18 வயதுப் பெண், பாலுறவு பற்றியும், உடல் பற்றியும், உள்ளுணர்வு தாண்டி பல விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நம் சமூகம் இருக்கிறது. விலங்குகளுக்கு உள்ளுணர்வு மட்டுமே போதுமானது. ஆனால், ஒழுக்க விலங்குகளான மனிதர்களுக்கு உள்ளுணர்வு தாண்டி பல விஷயங்களை சமூகம் அளித்துள்ள ஒழுக்கத்துக்கான வரையறைகள், அந்த சமூகம் அளித்துள்ள பாதுகாப்புகள் பற்றிய செய்திகள் தெரியவேண்டிய கட்டாயம் இருக்கிறது.


ஆகவே நம் கலைகள் மக்களுக்குக் கொடுக்கவேண்டிய அறிவை (எல்லாவிதமான அறிவையும்) அவர்களுக்குக் கொண்டு செல்லும் வாகனங்களாகவே இருந்திருக்கின்றன.
அவை ராமர் கதையிலிருந்து, பொன்னர் சங்கர் கதையிலிருந்து, கதா காலாட்சேபத்திலிருந்து, தெருக்கூத்திலிருந்து எல்லாமே இதை நோக்கியே இருந்துவந்திருக்கின்றன.
இந்தக் கதைகள் எல்லாம் பெரிசுகளுக்கு தெரிந்தவையே. ஒவ்வொரு வருடமும் பார்ப்பவையே. இருப்பினும், அலுப்புத் தட்டுவதில்லை. அடுத்து வரும் தலைமுறைகள் தொடர்ந்து இவைகள் மூலம் தங்கள் பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன.


ஆனால், வெள்ளையர் உபயமாக நமக்கு வந்திருக்கும் மடிசஞ்சிக் கலாச்சாரத்தில், பாலுறவு பற்றி பேசுவதோ, உடலின் சில பகுதிகளைக் காட்டுவதோ அவமானகரமாக ஆக்கப்பட்டுவிட்டது. 'இதெல்லாம் புராணமா ?இதெல்லாம் காவியமா ? இதெல்லாம் கவிதையா ? இதோ பார் முலை பேசப்படுகிறது, இதோ பார் அல்குல் பேசப்படுகிறது ' என்று பேசப்பட்டு, நம் காவியங்களைப் பற்றியும், நம் கவிதைகளைப் பற்றியும் நம் பாரம்பரியம் பற்றியும் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கப்பட்டு விட்டது.


உடல் எல்லாம் மூடப்பட்டு, முழங்கால் காட்டினாலே உணர்ச்சிவசப்படும் நிலையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதே காரணத்தாலேயே, சகிலா முழங்கால் காட்டி சென்னைத் தெருக்களெங்கும் உட்கார்ந்திருக்கிறார் போஸ்டர்களில். மறைக்கப்படுவதை விற்று காசு பண்ண என்ன பாரம்பரியம் வேண்டும் ?


பாய்ஸ் படத்தில் சங்கரும் சுஜாதாவும் சகிலாவின் முழங்கால் காட்டி பணம் பண்ணவில்லை. (அப்படி பண்ணியிருந்தாலும் தப்பு ஏதுமில்லை). ஆண்களின் பார்வையில், இன்றைய வளரும் பிராயம் எத்தனை அவமானங்களும் குற்ற உணர்வுகளும் நிறைந்ததாக இருக்கிறது என்பதையும் அதனைத் தாண்டியும் ஒருவன் வளரவேண்டியதாக இருக்கிறது, வளரவும் முடியும் என்றுமே அந்த படம் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்

http://holyox.blogspot.com/2006/09/145.html

Unknown said...

பெரிதாக இருந்தாலும் மிக நல்ல கருத்தை பகிர்ந்து கொண்ட அனானிக்கு நன்றிகள் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்

லொடுக்கு said...

//"எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?"//

என்னமோங்க... தனி மனித ஒழுக்கமின்மை தான் காரணம்னு தோனுது.

கதிர் said...

//"எய்ட்ஸ் பரவ ஆணா பெண்ணா யார் காரணம்?"//


ஆணுமில்லை....
பெண்ணுமில்லை...

காரணம்... கிருமிகள்!