Saturday, April 28, 2007

அமீரகத்தில் அதிரடிச் சந்திப்பு


வலையுலக தாதா அழைக்கிறார், சின்னவா பெரியவா அழைக்கிறார் என்ற தளபதிகளின் ஆர்ப்பாட்டங்களும் இந்த தேதியில் சந்திப்பு வந்து விடுங்கள் என கொடி பிடித்த கார்டூன் பெரிய மனிதர்களும் ஓசை செல்லா செவ்வாய் கிரக வலைப்பதிவு சந்திப்பு பற்றி தம்பட்டம் அடிப்பார் என்ற ஏற்பாடுகளும், மக்கள் தொலைக்காட்சியில் உங்கள் பேட்டி வெளியாகும் என்ற கவுதமின் அதிரடி அறிவிப்பும் இன்றி நேற்று துபையில் ஒரு சரித்திர முக்கியத்துவமான சந்திப்பு நடந்தது.காலை ஒன்பது மணிக்கு தொலை பேசி அழைப்பு என்ன மகேந்திரன் வருகிறீர்களா என்று " கிளம்பிக்கொண்டிருக்கிறேன் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கிருப்பேன் எனச் சொல்லிவிட்டு கிளம்பி நடந்தே செல்வது என முடிவெடுத்தாயிற்று சரியாக இருபது நிமிட நடைக்குப் பின் அவர் காத்திருக்கச் சொன்ன மசூதியின் அருகில் இருந்து தொலைபேசிவிட்டு அருகில் இருக்கும் வேப்ப மரத்து நிழலில் பல்லியாய் ஒண்டி இருந்தேன். ஒரு பத்து நிமிட காத்திருப்பில் அவர் வந்தார் .இருவரும் கடந்த ஒரு ஆண்டு ஒரு ஆண்டு காலமாய் தொலைபேசிக்கொண்டாலும் சந்திப்பு நிகழவில்லை என்னை கண்டதும் அடையாளம் கண்டுகொண்டார், நானும் கண்டுகொண்டேன். அறைக்கு பேசிக்கொண்டே நடந்து சென்றோம். இரண்டாவது மாடியில் இருக்கும் அவரது அறையில் இன்னொரு நண்பரும் இருந்தார். தமிழ் மணத்தில் இடுகைகளை படித்துக் கொண்டிருந்தார் பார்த்ததுமே தெரிந்து போனது நண்பர் யாரென்று. தொலைக்காட்சியில் கார்த்தியும் சரவணனும் கஞ்சா கருப்புவை தேனீர் விடுதியில் இருந்து வேலையை பிடுங்கி துரத்துவதில் ஆர்வமாய் இருந்தார்கள் , தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருந்ததில் எதுவும் அதிகம் பேசவில்லை. பருத்திவீரன் எங்களின் பாதி நேரத்தினை நெய்திருந்தான், பிறகு வழக்கமான விசாரிப்புகளுக்கு பின்னர் வேலைபற்றி யும் தங்கியிருக்கும் இடம் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டனர். இருவருக்கும் சில தொழில் நுட்பங்களை விளக்கிக் கொண்டே நானும் கொஞ்சம் தமிழ்மணத்தை நுகர்ந்தேன்.மதிய சாப்பாட்டு வேளை , திருச்சூர் யானை ஒன்று கும்பலை விரட்ட கும்பல் யானையை விரட்டவென்று ஏதோ ஒரு மலையாள அலைவரிசை நேரடியான பரபரப்பை செய்துகொண்டிருந்தது. நண்பர் ஊருக்கு கிளம்பும் உத்தேசம் இருப்பதால் கொஞ்சம் பரபரப்பாக காணப்பட்டார், பதிவுகள் பற்றி மூவரும் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளாதது நல்ல சூழலை தந்தது, அது வலைஞர்களின் சந்திப்பாக இல்லாமல் நல்ல நண்பர்களின் சந்திப்பாக இருந்தது, கொஞ்சம் பொருள் வாங்க பர் துபை வரை செல்ல முடிவு செய்து வாடகைக்கு காரெடுத்து இது எங்கள் காரென்று எதுவும் பொய்சொல்லும் உத்தேசம் இல்லாததால் நண்பரின் காரிலேயே சென்றோம்.கதவோரம் கொஞ்சம் நசுங்கியிருந்த அந்த நிசானை அடுத்த தெருவில் இருக்கும் முனிசிபாலிடி பார்கிங்கில் கண்டு பிடித்து பர்துபை போன போது மணி ஆறு முப்பது இருக்கும் துபை கேரிபோரில் நண்பரின் அண்ண(னாக இருக்கும் நான் கேட்கவே இல்லை)ணை இறக்கி விட்டு நாங்கள் போக வேண்டிய ஜியார்டானோ துணிக்கடைக்கு சென்றோம் அப்போது தான் கொஞ்சமாய் வலையுலக அரசியல் அவரின் நிலைப்பாடு, நண்பர் ஊருக்கு சென்றால் கிளப்பவிருக்கும் புயல் எல்லாம் கொஞ்சம் பேசினோம்.துணிக்கடையில் இருந்து இன்னும் புதிதாய் சேர்ந்த அவரின் நண்பர்களுடன் மீண்டும் காரில் கராமா , தான் எழுத திட்டமிட்டுள்ள ஒரு நாவல் பற்றியும் எடுக்க ஆசைப்படும் ஒரு குறும்படம் பற்றியும் ஆர்வமாய் சொல்லிக்கொண்டு வந்தார், ஒரு ஆண்டுக்கு முன்னர் ஆர்வமாய் ஆரம்பித்து ஆறு அத்தியாயங்களையும் நூறு பக்கங்களையும் கொண்ட என் அரைகுறை நாவல் பற்றியும் சொல்லி என் மனதை தேற்றிக் கொண்டேன். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் என்னை இறக்கிவிட்டு மின்னலென மறைந்தது அவரின் கார்.


இது என்னவோ கதையாய் இருக்கும் என இன்னொரு மொக்கை பதிவா என பின்னூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு செய்தி. நேற்று முத்துக்குமரனையும் நண்பன் ஷாஜகான் அவர்களையும் அவர்களது அரையில் சந்தித்தேன்


முத்துக்குமரன், அதிகம் படித்திருக்கிறார், சினிமாவை ஆர்வமாய் நேசிக்கிறார், திராவிடர்கள் மேல் நல்ல பற்றுகொண்டவராய் இருக்கிறார், தமிழ் மணத்தின் போலிச் சண்டைகள் பற்றி தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளார், மொத்தத்தில் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்.எங்களுக்குள் கிட்டத்தட்ட ஒத்த கருத்துக்கள் இருப்பது பற்றி நான் வியந்து கொண்டிருக்கும் போதே அவர் தந்தையின் குணங்கள் சொல்லி என் தந்தையும் அதே கருத்து கொண்டவர்தானே என மேலும் சிந்திக்க வைக்கிறார்.


நண்பன் ஷாஜகான் அவர்கள் அதிகம் படிக்கிறார், ஆர்வமாய் எழுதுகிறார், என்னைப் போலவே (!) உலக சினிமாக்கள் பார்க்கிறார், அன்போடு பழகுகிறார், எளிமையாய் இருக்கிறார், புகைப்படத்தில் இருப்பதை விட கொஞ்சம் வயதானவர்போல் தோன்றுகிறார். இருவரும் முடிந்த வரை தூய தமிழில் பேசுகிறார்கள் தயங்காமல் பேசுவதற்க்கான சூழலை வைத்திருக்கிறார்கள்


எந்த சண்டை சச்சரவும் இன்றி, மிக நல்ல நண்பர்கள் பழகியது போல் இருந்தது அந்த பதினோரு மணி நேர சந்திப்பு.சந்தித்த இடங்களின் குத்துமதிப்பான கூகிள் எர்த் புகைப்படங்கள்மேலிருந்து கீழாக


1. நான் பல்லியாய் ஒட்டியிருந்த அந்த மசூதி


2.முத்துக் குமரன் அறை இருக்கும் இடம்


3. பர்துபை கேரிபோர்


4. எனது அறை

6 comments:

கோவி.கண்ணன் said...

//இரண்டாவது மாடியில் இருக்கும் அவரது அறையில் இன்னொரு நண்பரும் இருந்தார்//

மகி,

ஆப்பக்கடை மேல் மாடின்னு சொல்லுவாங்களே !

அதா ?
:))

முத்துகுமரன் said...

மகி தூங்கிட்டேன் :-)

படம் அனுப்பியாச்சு

Unknown said...

ஜி கே உங்களுக்கு இப்போதைக்கு நான் ஒன்னும் சொல்றதா இல்லை :))

Unknown said...

முத்துக்குமரன் படம் போட்டாச்சு

╬அதி. அழகு╬ said...

-::எச்சரிக்கை::-

1. இது பிரசுரிப்பதற்கான பின்னூட்டமன்று

2. மகேந்திரனுடைய இன்னொரு மொக்கை அல்லது மொக்கையின் சுருக்கம்

-:தலைப்பு:-
1. மகேந்திரனின் மதம் என்ன?
2.பக்தர்களைத் துன்புறுத்தலாமா?
3. மகேந்திரனின் திடீர் ஞானோதயம்
4. மகேந்திரனின் வேஷம்
5. நம்பிக்கை மோசம்
___________________________________________

மகேந்திரன் வெகுகாலம் ஜைன மதத்தில் இருந்தான். சிவனடியார்களை எவ்வளவோ துன்பங்களுக்கு உள்ளாக்கினான். பிறகு அவனுக்குத் திடீரென்று ஞானோதயம் உண்டாயிற்று. சிவபக்தன் என்று வேஷம் போட்டு நடித்தான். மகேந்திரனும் சரி, அவன் மகனும் சரி நடிப்புக் கலையில் தேர்ந்தவர்கள்; விதவிதமான வேஷங்கள் போட்டுக் கொள்வார்கள். நம்பியவர்களை ஏமாற்றுவார்கள்.

(பார்த்திபன் கனவு - முதல் பாகம், ஒன்பதாம் அத்தியாயம் - கல்கி)

╬அதி. அழகு╬ said...

எச்சரிக்கையைப் படிக்கவில்லையா? அல்லது பின்னூட்டங்களையே படிப்பதில்லையா?