Saturday, August 25, 2007

விஞ்ஞானி துரைமுருகன் தனது காமெடிடைமை சட்டசபையோடு நிறுத்திக்கொள்ளட்டும்

ஜூனியர் விகடனில் மணல்கொள்ளை குறித்து ராமதாஸுக்கு பதில் தரும் விதமாக ஒரு புதிய விஞ்ஞான உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் துரைமுருகன். அதாவது

"மணல் அள்ளுவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறியிருக் கிறார் ராமதாஸ். அவருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்... ஆற்றில் மணல் அள்ளாவிட்டால்தான், மணல் குவிந்து மேடாகிவிடும். பிறகு தண்ணீர் வரும்போது ஓட்டம் தடைப்பட்டு, ஊருக்குள்ளும் விவசாய நிலங்களிலும் புகுந்து மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். இதைத் தவிர்க்கத்தான் காலம்காலமாக ஆற்றில் மணல் அள்ளி வருகிறோம். "

அடக் கொடுமையே ராமதாஸ் சொல்றதுக்கு எதிர்ப்பை சொல்ல வேற ஒன்னுமேவா கிடைக்கல என்னோட அனுபவத்த சொல்றேன் கேளுங்க

அப்போ எனக்கு 10 வயசு இருக்கும் சரியான கோடை வெயில் எங்க ஊர் ஆறு தினம் மழைபேஞ்சா ஒரு நாலு நாளைக்கு வெள்ளம் போகும் அதும் கூட எங்க ஊரத் தாண்டி ஓடனும்னா ஒரு வாரம் பேயனும் ஆனா அந்த குட்டியூண்டு வெள்ளத்தை வச்சே எங்க ஆத்து மோட்டாரு ஒரு வருசம் முழுக்க தண்ணி இறைக்கும் இத வச்சித்தான் எங்க வயல் நெல்லாகவும் கரும்பாவும் தெண்ணையாவும் காச அள்ளித் தந்தது. அப்போ எங்க ஊரு முழுக்க கூறை வீடுங்கதான் அதிகம் மெத்தை வீடுங்க இல்லை. எங்க மோட்டார் தண்ணி இறைக்க போட்ட போரின் ஆழம் வெறும் 17 அடி எந்த நாளும் வற்றாது எங்ககிட்ட ஒரு கிணறு இருக்கு அது 20 அடி ஆழம்தான் இன்னிக்கு வரைக்கும் வத்தினதில்ல. அது ஆத்தை விட்டு கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கு வயலுக்குள்ள அது இந்த 65 வருசத்தில் வத்தினதே இல்லைன்னு எங்க அப்பா சொல்றாரு. சரி விஷயத்துக்கு வருவோம்.
அப்போ அப்ப்டியெல்லாம் இருந்த எங்க ஆத்து நீர்நிலை இப்போ எப்படி இருக்கு? போன வருசம் தமிழகம் எங்கும் பேஞ்ச கணத்த பேய் மழைல எங்க ஊருக்குள்ள எல்லாம் வெள்ளமாம் எங்க ஊர் பசங்க சொன்னாங்க ஆனா என்ன கொடுமை அந்த வெள்ளமும் 10 நாளில் வடிஞ்சி போச்சி... தண்ணியிறைக்கிற மோட்டார் பம்புசெட்டெல்லாம் தண்ணி புகுந்து ரிப்பேர் ஆச்சு அத சரி செஞ்சி வைக்கறதுக்கு முன்ன ஆத்துல ஓடுன வெள்ளம் வடிஞ்சி போச்சி. அப்போ 17 அடியில இருந்து தண்ணிய அள்ளி கொட்டுன மோடார் இன்னிக்கும் கொட்டுதுதான் ஆனா 17 அடியில இருந்து இல்ல 42 அடியில இருந்து. அட எங்களை மாதிரி கொஞ்சம் கையில காசு வைச்சி விவசாயம் (கடன் வாங்கியாவது) பாக்குறவன் எதாவது ஒரு வகையில இன்னும் ஆழமா போர் போட்டு தண்ணியிறைக்கலாம் ஆனா அடுத்தவங்க தயவில மோட்டார் தண்ணி பாசனம் பன்றவங்க என்ன பன்ன? இந்த கஷ்ட காலத்துக்கெல்லாம் யார் காரணம் என்ன காரணம்? எல்லாம் இந்த ஆத்துல அடிக்கிற மணல் லோடு லோடா போய் மாடி வீடாவும் காண்கிரீட் காடாகவும் மாறிக் கிடக்கே அதனாலதான். அதனாலதான் எங்க ஏரியா முழுக்க தண்ணீர் பஞ்சம். இது தலைவிரிச்சி ஆட ஆரம்பிக்கும் முன்ன எதாவது செய்யனும்னு பாக்குறோம் எவன் கேக்குறான்? எல்லாம் அரசியல் எங்க போய் முறையிட்டாலும் இந்த அரசியல் அங்கயும் வந்துடுது. அதனாலதான் மணல் கொஞ்சமா தேவைப்படும் ஹாலோப்ளாக் முறை தயாரிப்பு கற்களைபயன்படுத்த சொல்லி பலரை கொஞ்சமா மணல் பயன்பாட்டுக்கு மாத்திப்பாக்குறோம், இப்படி விவசாயிகளோட வாழ்வாதாரமா இருக்கும் தண்ணீர் ஆத்து மணலை ஆதாரமா கொண்டு இருக்கு. 3ம் வகுப்பு பாடத்திலயே மணல்தான் அதிக நீரை தேக்கிவைக்கும் படிச்சதோட இல்லாம இந்த மகேந்திரனுக்கு 5 வருசம் தீவிர விவசாயம் வேற பாத்தோம்கிற விவசாயிக்கே உரித்தான திமிர் இருக்குங்க, அதனால துறைமுருகன் அய்யா உங்க விஞ்ஞான காமெடிகளை சட்டசபைக்கு உள்ள மட்டும் வச்சுக்கோங்க இந்த மாதிரி ஆத்திரமூட்டும் பதில் எல்லாம் சொல்லி மனுசன கடுப்பக் கெளப்பாதீங்க.. ஒரு பாட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கா கருத்தம்மா படத்தில

"ஆறு என்ன ஆறு அட போடா வெக்கக்கேடு
மழ வந்தா தண்ணி ஓடும் மறு நாளே வண்டி ஓடும்"

இது எல்லா ஆத்துக்கும் வந்து விவசாயம் மஞ்சத்துண்டு போட்டுக்கறதுக்கு முன்ன கொஞ்சமாவது இந்த மணல் கொள்ளைய தடுங்கய்யா மவராசனுவளா....

24 comments:

லக்கிலுக் said...

சரி மணல் எடுக்காமல் வீடு கட்ட விஞ்ஞான முறை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் :-)

Unknown said...

//அதனாலதான் மணல் கொஞ்சமா தேவைப்படும் ஹாலோப்ளாக் முறை தயாரிப்பு கற்களைபயன்படுத்த சொல்லி பலரை கொஞ்சமா மணல் பயன்பாட்டுக்கு மாத்திப்பாக்குறோம்//

லக்கி அதான் இங்கன சொல்லியிருக்கோமேய்யா அளவுக்கு அதிகமா பயன்படுத்துவதை தடுக்கலாமே? நீங்க சென்னைல இருக்கீங்களா? இதும் கேக்கலாமின்னும் கேக்கலாம்

தொண்டன் said...

//மணல் அள்ளுவதால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறியிருக் கிறார் ராமதாஸ்.//

மரம் வெட்டுவதால் விவசாயிகளுக்கு நன்மை என்று அய்யா சொல்லாமல் விட்டாரே. அதுவரைக்கும் மகிழ்ச்சி!

Unknown said...

//மரம் வெட்டுவதால் விவசாயிகளுக்கு நன்மை என்று அய்யா சொல்லாமல் விட்டாரே. அதுவரைக்கும் மகிழ்ச்சி!//

காமெடி செய்வதாய் எதையாவது உளரிவாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் தொண்டரே

Ayyanar Viswanath said...

மகி
இந்த மணல் கொள்ளையை நடத்துவதே பெரிய கைகள் தான் ஒரு நேர்மையான வி.ஏ.ஓ(பதவி சரியாய் நினைவிலில்லை) மணல் திருட்டை தடுக்கசென்றபோது அவரை கொன்றது நினைவிருக்கிறதா??

அடிப்படை அறிவு கூட இல்லாத தலை களின் வழி காட்டுதலில்தான் போய்க்கொண்டிருக்கிறோம்

Unknown said...

மிக்க சரி அய்யனார் நான் இந்த விசஹயத்தைஇ வெறும் அரசியல் கண்ணோடு பார்க்கவில்லை அதுராமதாசோ இல்லை துரைமுருகனோ யார்செய்தால் என்ன மணல் கொள்ளை விவசாயத்தை பாதிக்க வில்லை என்ற மடத் தனமான பேச்சை ஒரு விவசாயியாக என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை

Anonymous said...

////காமெடி செய்வதாய் எதையாவது உளரிவாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் தொண்டரே //

சரி சீரியஸாவே சொல்றேன். மரம் வெட்டுவது விவசாயிகளுக்கு நன்மை தரும்.

Unknown said...

//சரி சீரியஸாவே சொல்றேன். மரம் வெட்டுவது விவசாயிகளுக்கு நன்மை தரும். //

என்னைக்காவது நிலத்தில இறங்கி கால்ல சேறு பட விவசாயம்ம்பாத்ததுண்டா அனானி? மணல் அள்ளுவதையும் மரம் வெட்டுவதையும் ஒன்னா பேசாதே...இன்னிக்கு லட்சக் கணக்கா மரம் வச்சிருக்கு அந்த கட்சி மணல எந்த கொம்பனால திருப்பித் தர முடியும்?

Pot"tea" kadai said...

//இன்னிக்கு லட்சக் கணக்கா மரம் வச்சிருக்கு அந்த கட்சி மணல எந்த கொம்பனால திருப்பித் தர முடியும்?//

இதென்ன கலாட்டா?

அதான் தூத்துக்குடியை பாலைவனமாக்கப் போறோம்ல அந்த மணலை ஆத்துல கொட்டிருவோம்.

:)))))

உண்மைத்தமிழன் said...

மகி.. ஒரு பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இது மாதிரி ஆத்தோரமா மணல் அள்ளுறதை பார்த்திருக்கீங்களா? இல்லாட்டி கேட்டிருக்கீங்களா?

இப்பத்தான் பத்து வருஷத்துக்குள்ள புதுசா அரசுக்கு வருவாய் கிடைக்க என்ன வழின்னு தேடினவங்க கண்ணுல சிக்கினதுதான் இந்த ஆத்து மணல் கொள்ளை..

கட்சிக்காரங்களுக்கும் பணம் கொடுத்த மாதிரியிருக்கும்.. அரசுக்கும் கொஞ்சம் பணம் வந்த மாதிரியிருக்கும்னு நினைச்சு இறக்கிவிட்டுட்டாங்க. பணச் சுகம் இன்றைக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்த முடியாத அளவுக்குப் போய்விட்டது.

ஆற்றோரம் மணலை அள்ளி அள்ளி கரைகளைக்கூட இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இனி ஒரு வெள்ளம் வந்தால்போதும்.. அந்த கரை உடைப்பின் அருகில் எத்தனை கிராமங்கள் இருக்கின்றனவோ அவைகளெல்லாம் வெள்ளத்தில்தான் மிதக்கும்.

பாதிக்கப்படப் போவது என்னவோ கிராமத்து மக்கள்தானே.. நகரத்து மக்கள் இல்லையே.. நகரத்து மக்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்ட மணல் கிடைத்தால் போதும். அது எங்கிருந்து வந்தால் என்ன என்ற நிலை.. நீங்கள் அடிப்படையில் விவசாயி.. அதனால் புரிகிறது.. கோபப்படுகிறீர்கள்.

ஆனால் மக்களையே இரண்டு பிரிவாகப் பிரித்து ஒருவரின் துக்கம், மற்றொருவருக்கு சுகம் என்னும் சமூக நோக்கில் போய்க் கொண்டிருக்கிறது அரசின் சில கொள்கை முடிவுகள்.

Unknown said...

//அதான் தூத்துக்குடியை பாலைவனமாக்கப் போறோம்ல அந்த மணலை ஆத்துல கொட்டிருவோம்.//

அவுஸ்திரேலிய அடலேரே உம் திறமை யைக் கண்டு மெச்சினோம் இந்த வாரத்துக்கான சிந்தனையாளர் சிறப்பு விருந்து? உமக்கே
அவ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

//என்னைக்காவது நிலத்தில இறங்கி கால்ல சேறு பட விவசாயம்ம்பாத்ததுண்டா அனானி? //

ஓ! கழனி ஓரமா தான் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு வலைபதிகிறீர்களா? :-)

Unknown said...

//கழனி ஓரமா தான் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு வலைபதிகிறீர்களா? :-) //

இன்னிக்கும் ஊருக்குப் போனா அதைத்தான் செய்வேன் அதில எந்த மாற்றமும் இல்லை.. எல்லா விவசாயமும் பாத்துட்டுத்தான் நான் வ்லைப் பதியிறேன்

Hariharan # 03985177737685368452 said...

பெரிய அளவில் மணல் மீட்புக்குக் கைவசம் பெரிய திட்டம் கைவசம் இருக்கு.

சேது சமுத்திர திட்டத்தில்
ராமேஸ்வரம் கடலில் இருக்கும் ராமர் பாலமே மண்ணு மேடுன்னு சொல்லி இடிக்க ஒரு பெரிய்ய்ய்ய அமௌண்டுக்கு காண்டிராக்டு ஓடிட்டு இருக்கு...

கடலுக்குள் இடிச்ச ராமர் பாலத்து மண்ணைத் திரும்ப ஊருக்குள் எடுத்துவந்து ஆற்றில் கொட்டிட்டா மணல் மீட்பு!

இன்னொரு பெரிய்ய்ய அமௌண்டுக்கு கழ(ல)கத்துக்கு காண்டிராக்டு ரெடி!

Unknown said...

//பெரிய அளவில் மணல் மீட்புக்குக் கைவசம் பெரிய திட்டம் கைவசம் இருக்கு.

சேது சமுத்திர திட்டத்தில்
ராமேஸ்வரம் கடலில் இருக்கும் ராமர் பாலமே மண்ணு மேடுன்னு சொல்லி இடிக்க ஒரு பெரிய்ய்ய்ய அமௌண்டுக்கு காண்டிராக்டு ஓடிட்டு இருக்கு...

கடலுக்குள் இடிச்ச ராமர் பாலத்து மண்ணைத் திரும்ப ஊருக்குள் எடுத்துவந்து ஆற்றில் கொட்டிட்டா மணல் மீட்பு!

இன்னொரு பெரிய்ய்ய அமௌண்டுக்கு கழ(ல)கத்துக்கு காண்டிராக்டு ரெடி!//

வாய்யா அரிகரா வணக்கம். ராமர் பாலம் பூ*நூலு மணல் மேடு இந்த நாத்தம் புடிச்ச பார்ப்பன எழுத்து இத இன்னும் விடலியா நீயி? இன்னொரு தபா இந்த பக்கம் வராதே எங்க விவசாயம் பத்தி முடிவெடுக்க வேண்டியது நாங்க உன் உண்டக்கட்டி வேலைய பாத்துகிட்டு ஓடியேப் போயிடு... அது மணல் மேடு இல்லைன்னா பின்ன என்ன? ராமபகவான் பள்ளியறை கொண்ட இடமா?

Anonymous said...

மணல் நீரைத் தேக்கிவைக்கும்?

இது தவறாகத்தெரிகிறது.

மணலை பரிசோதனைக் கூடத்தில் அளைந்த திமிரில் சொல்கிறேன் :)

Anonymous said...

ராமர் நடந்து போன பாலத்தை இடிக்கும் திம்மியின் முயற்சி வெற்றி பெறாது. நாகேஸ்வரம் கோயில் கோபுரம் மீது இடிவிழுந்தது. கபாலிஸ்வரர் கோயில் கோபுரம் மீது இடி விழுந்தது. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

மஞ்சள் துண்டு நாளை எண்ண வேண்டிய வேளை வந்தாச்சி.

Anonymous said...

Mr.Duraimurgan is left Or right hand of M.Karunanidhi for Long time. M.Karunanidhi believed and trained for looooong time under his Wing. So Mahendran found that
Mr.Duraimurgan is Joker and only making jokes in Assembly.

What a pity ...... we have these kind of CM and his ministers

Imsai arasan 24 pulikesi....sorry

Anandha Loganathan said...

துரைமுருகன் வாதம் எற்ககூடியதாக இல்லை. அதுவும் ஒரு பொதுபணிதுறை அமைச்சரின் கருத்து என்ற முறையில் மிகவும் வருந்ததக்கதாக உள்ளது.

அதற்கு மாற்று முறை
1) நீங்கள் கூறியது போல், ஹாலொ ப்ளாக் முறை.
2) பம்பாய் , பூனே போன்ற பெரிய நகரங்களில், அவர்கள் ஆற்று ம்ணலை ஊபயோகப்பதில்லை. அவர்கள் ஒரு கருப்பு வடிவிலான ஒரு மணலை உபயோகிக்கிறார்கள். அந்த கருப்பு மணல் என்ன என்று விசாரித்தால், நமது ஊரில் ஜல்லி கற்கள் என்று கூறுவார்களே அதிலிருந்து நன்றாக க்ரஷ்ர் மூலம் மணலைஎடுக்கிறார்கள். அந்த கருப்பு மண் நமது ஆத்து மணலை போல் நைஸாக இருக்காது.

இந்த மணல், கட்டிடத்தின் உறுதிக்கு என்ன உத்திரவாதம் எண்று கேட்கிறார்கள?. இந்த நகரங்களில் 20,30 அடுக்கு மாடி கட்டிடஙகள் இந்த முறையை கொண்டுதான் கட்டுகிறார்கள். மேலும் அவர்கள் RCC தவிர மற்ற உபயோகத்துக்கு செங்கலை தான் உபயோகபடுத்துகிறார்கள். அந்த நேரத்தில் கலவைக்கு அந்த கருப்பு மணலை தான் உபயோகபடுத்துகிறார்கள்.

இந்த மாதிரி building construction முறைக்கு சற்று செலவு அதிகமாகும். ஆனால் இயற்கை வளங்களை காப்பற்ற நாம் மாற்று முறையை உபயோகபடுத்தவேண்டும்.

Anonymous said...

duraimuruganai paarkkumpodhellam enakku vikadanil moneypurse vaayan endru padithathu ninaivil vandathu.

Hariharan # 03985177737685368452 said...

//வாய்யா அரிகரா வணக்கம். இன்னொரு தபா இந்த பக்கம் வராதே//

மகேந்திரன்,

தங்கள் வலை வீட்டில் வழங்கிய சிறப்பான விருந்தோம்பலுக்கு நன்றி!

Anonymous said...

//வாய்யா அரிகரா வணக்கம். இன்னொரு தபா இந்த பக்கம் வராதே//

மகேந்திரன்,

தங்கள் வலை வீட்டில் வழங்கிய சிறப்பான விருந்தோம்பலுக்கு நன்றி!

mahi enna ithu ? matru karuthu irukkavangala Jathi Solli Thittum alavukku Neenga Porumai Izanthutteengalaa ?

please dont do that again and neenga unga thavarukku mannippu keelunga please.

becos i am reading your blog not becos of jathi and not becos of matham and not becos of your views.

for your good writing skill i am reading your blog for a long time.

but you should not hit one person just becos he is coming from some caste and he have different views then you.

i am sorry to say that, being a "Nadunilai" person , i am saying that what you did is wrong.

Unknown said...

//mahi enna ithu ? matru karuthu irukkavangala Jathi Solli Thittum alavukku Neenga Porumai Izanthutteengalaa ?//

அன்புள்ள அனானி நான் எவரையும் அவர் சார்ந்திருக்கும் சாதி என்பதால் மட்டும் திட்டவில்லை ஆனால் என் கருத்துக்கு மாற்றுக்கருத்தோ இல்லை எதிரான கருத்தோ சொல்லட்டும் வேண்டாம் எனச்சொல்லவில்லை ஆனால் அது அடுத்தவர் மனவேதனையும் கொஞ்சம் விளங்கியதாய் இருக்கட்டும் எந்த அரசியலும் இல்லாமல் மட்டுமே எழுதப்பட்ட பதிவுதான் இந்த மணல் கொள்ளை. அப்படி அரசியல் சார்பாய் நான் எழுதியிருக்கவேண்டுமானால் துரைமுருகனுக்கல்லவா ஆதரவாய் எழுதியிருக்க வேண்டும்? ஒரு அடிமட்ட விவசாயியாய் மட்டும் கொண்ட கோப வெளிப்பாடே இப் பதிவு. இங்கேவந்து ராமர் பாலம் மணல் மேடு என்பது என்ன மாதிரியான கருத்து எனத் தெரியவில்லை. இன்னும் இந்த ஹரிஹரன் போன்ற நபர்கள் மட்டும் ஏன் பார்ப்பன எனும் பூனூலை தொங்க வேண்டும்?. என் பதிவுக்கு வரவேண்டாம் எனச் சொல்ல எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு மரம் வெட்டியவர்களையும் பங்களா கட்ட மரம் வெட்டியவர்களையும் ஒன்றாய் கருதும் ஹரிகரன் போன்ற மனிதர்களையெல்லாம் மதித்து எதுவும் புனிதம் கெட்டுவிடாமல் எழுதும் அளவுக்கு என் மனசு ஒன்னும் அவ்வளவு நடுநிலை இல்லை நடுநிலையை நான் நம்புபவனும் இல்லை. நடுநிலையாய் இருப்பதே ஒரு போலிபிம்பம். நான் நம்புவதை சரி எனக் கொண்டாலே எதுவும் சொல்ல முடியும் நடுநிலை எனக் கொண்டால் அங்கே வேடிக்கை மட்டும்தான். மற்றபடி அவர் எனக்கெதிரான கருத்துக்களை கொண்டிருப்பதால் மட்டும் திட்டவில்லை ஒரு ஜீவாதாரப் பிரச்சினை புரியாமல் அரசியல் பேசியதாலேயே. என்னையும் என் குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்த பின்னூட்டங்களையும் வெளியிட்டு கருத்துரிமை காத்தவன் தான் நான் அப்படியிருக்க அவர் குறிப்பிட்ட சாதிக்காரர் என்பது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒரு விவசாயியாக நீங்களும் இருப்பின் அந்த வலி தெரியும் மற்றபடி உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்

Anonymous said...

/* இந்த மரபணுவியல் ஆராச்சிகளின் படி இந்திய உபகண்டத்தின் ஆதிக் குடிகள் திராவிடர்கள் என்றும் திராவிடரின் வருகை ஆபிரிக்காவில் நவீன மனிதன் உருவாகிய சில ஆண்டுகளின் பின்னரே நிகழ்ந்துள்ளது என்பதுவும் தெளிவாகிறது.அதன் பின் ஏறக்குறைய நாற்பதாயிரம் வருடங்களின் பின்னாலையே மத்திய ஆசியாவில் இருந்து கைபர் கணவாயூடாக வடக்கில் இருந்து ஆரியர் வந்தார்கள் என்பதுவும் நிரூபணம் ஆகிறது.

நவீன மரபணுவியல் ஆய்வுகள் இந்தியாவிற்க்கு வெளியால் இருந்தே ஆரியர் வந்தனர் என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது. */

Mahi ....

Do u write anything with understanding others feeling and also not hurting anyone....

If you are then expect same...But donot advise for others if you cannot follw the same....

Heeeeeeeeeeee Heeeeee