Monday, August 27, 2007

பார்பனர்கள் இட ஒதுக்கீடு பெற யோஜனை.

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்மார்க் 'அக்கரையில்' சொல்லப்பட்ட 'மனு'வின் விவரம்

இந்தியாவில் சாதிகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருப்பதனால், பலர் படிப்பதற்கு வழி இன்றி தவிர்கின்றனர்.

"ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது."

ச்சே......., படிப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது,

ஒரு குடுமி ஆசாமி ஸொல்றார்,

'உழைச்சு சாப்பிடுங்கடா என்றார்கள்' படித்துவிட்டு அரசாங்க 'உயர்' பதவிகளில் உட்கார்ந்தோம், மிலிட்டெரி, போலிஸ் என உடம்பு வளைந்து வேலை செய்யும் அளவுக்கு அசைவம் சாப்பிட்ட தேகம் இல்லை, எனவே அதிகாரிகளாகத்தான் 'உயர்ந்தோம்', இட ஒதுக்கீடு எல்லாத்துக்கும் வேட்டுவச்சிட்டு, எங்கவா எல்லோரும் நக்சலைட்டா மாறப்போறா, எல்லோரும் லைட்டா எடுத்துக்காதிங்க'

ஏன் ச்சாமி, நக்சலைட்டு, டியூப்லைட்டுன்னு மாறுவதற்கு பதில், இஸ்லாமிய மததிற்கோ , கிறித்துவ மதத்திற்கோ பூணூலை கழட்டிப் போட்டுண்டு மதம் மாறிடலாமே, ஏன் சாமி பாழாப் போன இந்துமதத்தை கட்டிண்டி அழரேள். அங்கே போனாலும் 'பிசி' ஆக மாறி அரசாங்க சலுகையை நன்னா அனுபவிக்கலாம். நக்சலைட்டா மாறிட்டேள்னா, எப்போதாவது கண்டுபிடிச்சுட்டாள்னா போலிஸ்காரன் பூணூலை கழுத்தில் போட்டு இறுக்குவானே, சாமி பேசாம மதம் மாறிடுங்கோ, இதான் நல்ல யோஜனையாப் படறது. உங்கவா அறிவுக்கும், திறமைக்கும் எடுக்கிற மார்க்குக்கு பிசி(BC)யில் இருந்தேள்னா எங்கேயோ போய்டலாம். செய்வேளா ?

5 comments:

மாசிலா said...

அவாளுங்க மததத்துக்கும் எங்க மதத்துக்கும் இருக்கிற ஒரே ஒத்தூம ஆணாதிக்க கடவுள்தான். அத விட்டா வேற இன்னா இருக்கு மேன்? ஒத்தூமை!

மட ஒத்தூமைக்கு பாடுபடும் அமைப்பு.

ஜமாலன் said...

நண்பருக்கு, தங்களது உணர்வுகள் நியாயமானவை. ஆணால் அது விமர்சனத்தக்குரியவை. இத்தகைய யோசனைகள் நமது பலவீனத்தையே காட்டுகிறது. மதம் அடிப்படையில் மக்களை கடவுள் பெயரால் காயடிக்கும் எந்திரம். அது இஸ்லாமானாலும் அல்லது அழிந்து கொண்டிருக்கும் சிறிய பெரிய மதங்களானாலும். தீர்வு மதம்மாற்றம் அல்ல. ஒருவன் நக்சல்பாரியாக மாறுவதற்கு இட ஒதுக்கீட்டை காரணமாக காட்டுவது... அரசாங்கம் மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம். இதைதான் பார்ப்ணக் கும்பல் அந்நியன் என்கிற படமாக எடுத்து வெளியிட்டது. சங்கர் உள்ளத்தால் பார்ப்பணர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பார்ப்பணார்களுக்கு விகிதாச்சாரபப்படி வேண்டுமானால் அரசு இட ஒதுக்கீடு தரட்டும். திறந்த போட்டியில் பார்ப்பணர்கள் அதாவத ஓஃபன் காம்பீட்டிசனில் பார்ப்ணர்கள் கலந்துகொள்ளாமல் அவர்களுக்கும் சதமான அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாம். 1-சதவீததததிற்கும் குறைவான பார்ப்பணர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 1 -இடம் கொடுத்திருந்தால் இன்றுவரை எத்தனை பார்ப்பணர்கள் மேலே வந்திருப்பார்கள். உயர்நீதி மன்றத்தில் 80 சதமானம் பார்ப்பணர்கள். பத்திரிக்கை துறையல் 80-சதமானம் பார்ப்பணர்கள் இப்படி.. அரசு அவர்களுக்கு பதவிகளை வாறி இறைத்தப் பின்னும்.. அவாளுக்க புடுங்குகிறது என்றால்... போகட்டும். ஆணால், இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதி மன்றம் போட்ட தடைகளுக்கு நாடே கொந்தளித்திருக்க வேண்டும். அது இல்லை. அதனால்தான் அவா நம்மைப்பார்த்துது நக்கல் அடிக்கறா? ஆணால் அரசு சட்டம் இயற்றியவுடன் மண்-எண்ணை கேனுடன் தீக்குளிக்க இறங்கியது பார்ப்பனக் கூட்டம்.. எல்லா பத்திரிக்கை வாணோலி தொலைக்காட்சி என அலறிக் கொண்டு வண்ண வண்ணமாக செய்திகளை வெளியட்டன. இதுதான் அவாளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். எப்படியோ உங்கள் உண்ர்விற்கு நன்றி...

மாசிலா said...

ஒருத்தவன் செத்த பொணத்த கட்டையில கட்டி வெச்சி கும்படறான். இன்னொருத்தவன் செவத்த பாத்து என்னத்தையோ ஓதறான். என்ன அங்க போய் என்ன மேன் ஸெய்ய சொல்றெள்?

மாசிலா said...

அவாள்கள் ஓசியில சோறு போடுவாளா?

PRINCENRSAMA said...

மாறுவாளா என்ன?
எட்ட நிக்க வைக்கிற மதத்தை விட்டுட்டு, கட்டிப் பிடிக்கிற மதத்துக்குப் போவாளா?

மதம் கூட மாற வேண்டாம்... அப்ப்டியே மாற்றி கலியாணம் கூட செய்து கொண்டால் போதுமே.. அடுத்த தலைமுறை பிழைக்குமே அதையாவது செய்யலாமே...