Monday, November 26, 2007

காணாமல் போனவர்கள் -புதிர் பரிசுப் போட்டி

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு.

குறிப்பு 1 : நீண்ட நாட்களாக அசராமல் அடித்து ஆடிக் கொண்டிருந்தார். தன் மேல் சாதி முத்திரையையும் குத்திக் கொண்டார். இவர் நகைச்சுவை மன்னன் தண்ணி காட்டுவதில் அண்ணன். திடீரென்று பரபரப்பை ஏற்படுத்துவார். கூட்டம் சேர்ந்து குமுறுவார்கள் என்று நினைத்தால் பதுங்கிவிடுவார். இன்னும் ஸ்டேட்டஸ் லைவாகத்தான் இருக்கிறது. இவர் காட்டானா ? நாட்டாமையா ? நல்லவரா ? அவர் யார் ?

குறிப்பு 2 : கோழிபிடிப்பது, தேங்காய் பொறுக்குவது செய்தாலும் இவரும் ஒரு கதாநாயகன் தான். இவரோட மொக்கையே வெள்ளிவிழா கொண்டாடும் அளவுக்கு ரசிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஒரு மாதிரியானவரா ? இவர் டவுசரை பலரும் கழட்டிவிட்டார்கள். இப்போது எங்கே செட்டில் ஆனார் என்று தெரியவில்லை. ஆயாவைத்தான் இவருக்கு மிகவும் பிடிக்கும் ஐ மீன் அம்மா.

கண்டுபிடிப்பவர்களுக்கு இலவசமாக 'நச்சுன்னு' 2 அழகிய தமிழ் மகன் பட நுழைவு சீட்டு கொடுக்கப்படும்.

27 comments:

ஜெகதீசன் said...

//
கண்டுபிடிப்பவர்களுக்கு இலவசமாக 'நச்சுன்னு' 2 அழகிய தமிழ் மகன் பட நுழைவு சீட்டு கொடுக்கப்படும்.
//

இந்த தண்டனை எனக்கு வேண்டாம்ப்பா சாமி.....

Unknown said...

பரிசு வேண்டாம்னா பரவால்ல பதில சொல்லிட்டு போங்க ஜெகதீசன்

லக்கிலுக் said...

:-)))))))))

SP.VR. SUBBIAH said...

இரண்டாவது அன்பர் கொரியாவில் கோழி ப்டித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் நாடு திரும்புவார். மீண்டும் மொக்கைப் பதிவுகளுடன் அனுபவப் பதிவுகளையும் எதிர்பார்க்கலாம்

ஜெகதீசன் said...

பொன்னியின் செல்வன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் கடைசி மூன்று எழுத்துக்களைப் புனைப் பெயராகக் கொண்ட பதிவரும், சமீபத்தில் மனம் முடித்த "எரியும்" பதிவரும் இல்லை என நினைக்கிறேன்...
:)))))

Unknown said...

//:-)))))))))

//

லக்கி ஏன் இந்த கொடூர சிரிப்பு? பதில சொல்லுங்க அல்லக்கை தலைவா

:))))))))))

Anonymous said...

முதல் நபர் தவறான கதை வசனத்தால் எழுதிய பரபரப்பு விளம்பரம் செய்து நடித்த படங்கள் பெருசாக பேசப்பட்டாலும், ஊத்திக் கொண்டதாமே ?

Unknown said...

//இரண்டாவது அன்பர் கொரியாவில் கோழி ப்டித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் நாடு திரும்புவார். மீண்டும் மொக்கைப் பதிவுகளுடன் அனுபவப் பதிவுகளையும் எதிர்பார்க்கலாம்//

வாங்க அய்யா வாத்தியார் அய்யா :)
ஆனா உங்க பதில் தப்புங்க! இன்னும் நல்லா மூளைய குடைஞ்சு பாருங்க

Anonymous said...

டவுசர் பாண்டி புது ஜோடியுடன் செட்டில் ஆகிவிட்டாராமே ?

Unknown said...

//பொன்னியின் செல்வன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் கடைசி மூன்று எழுத்துக்களைப் புனைப் பெயராகக் கொண்ட பதிவரும், சமீபத்தில் மனம் முடித்த "எரியும்" பதிவரும் இல்லை என நினைக்கிறேன்...//

கண்டிப்பாக இல்லை ஜெகதீசன்
ஆனா உங்க பதில் சரி ஆனா சரி இல்ல அதாவது நீங்க சொல்லியிருப்பது சரி ஆனா சரியான பதில சொல்லலியே

Unknown said...

//முதல் நபர் தவறான கதை வசனத்தால் எழுதிய பரபரப்பு விளம்பரம் செய்து நடித்த படங்கள் பெருசாக பேசப்பட்டாலும், ஊத்திக் கொண்டதாமே ?//

பசி சத்யா "சிவாஜிய சொல்றீங்களோ? :)

அப்படீன்னா அது தப்புங்க :(

Anonymous said...

நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பாக்கலியோ?

Unknown said...

//டவுசர் பாண்டி புது ஜோடியுடன் செட்டில் ஆகிவிட்டாராமே //

அப்படியா பாவம் தசரதன் மருமகள்

Unknown said...

//நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பாக்கலியோ//

அய்யா அனானி ஏன் இந்த கொலவெறி பாவம் விட்டுறுங்கோ

Unknown said...

யாருக்குமே பதில கண்டு புடிக்க முடியலையா? இல்லை அழகிய தமிழ்மகன் டிக்கட் வாங்குறத விட தற்கொலை பன்னிக்கலாம்னு தோனுதா?

அரவிந்தன் said...

இரண்டாவது அன்பர் இல்லற வாழ்வில் இனிதே இரண்டற கலந்துவிட்டார்.

வாழ்த்துவோம் வாருங்கள்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Unknown said...

//இரண்டாவது அன்பர் இல்லற வாழ்வில் இனிதே இரண்டற கலந்துவிட்டார்.
//

உங்க பதில் தவறு அரவிந்தன் :(

பதிவுலகம் பத்தினது இல்லை

லக்கிலுக் said...

1) கார்த்திக்

2) ராமராஜன்

ஓகேவா? :-)

அரவிந்தன் said...

இரண்டாவது அன்பர் "நடிகர் சத்தியராஜ்-
சரியா.?

அரவிந்தன்

அரவிந்தன் said...

இரண்டாவது அன்பர் "நடிகர் சத்தியராஜ்-
சரியா.?

அரவிந்தன்

முத்துகுமரன் said...

1. சரத்குமார்
2. சத்யராஜ்

குசும்பன் said...

முதல் கிசு கிசுக்கு நடிகர் கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்(????)

இரண்டாவது நடிகர் ராமராஜன்
சரியா!!

அடுத்த முறை கொஞ்சம் கஷ்டமாக கேள்வி கேளுங்க இது எல்லாம் நமக்கு ஜூஜுப்பி...:))))

Unknown said...

முத்துக்குமரன், அரவிந்தன் ரெண்டுபேரும் கிட்ட வந்துட்டீங்க ஆனா சரியான விடை இது இல்ல
:(

Unknown said...

சரியான விடையை அனுப்பிய குசும்பன் மற்றும் லக்கி லுக் இருவருக்கும் வாழ்த்துக்கள்

உங்கள் பரிசு அழகிய தமிழ் மகன் படத்துக்கான டிக்கட் தலா 2 உடன் அனுப்பி வைக்கப் படும் ஒன்று உங்களுக்கு ஒன்னொன்று உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு
:P

Anonymous said...

1. சரத்குமார்
2. ராமராஜன்

குசும்பன் said...

உங்கள் பரிசு அழகிய தமிழ் மகன் படத்துக்கான டிக்கட் தலா 2 உடன் அனுப்பி வைக்கப் படும் ஒன்று உங்களுக்கு ஒன்னொன்று உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு ///

என் இரண்டு டிக்கெட்டையும் தோழர் சிபிக்கு கொடுக்கிறேன் அதை அவர் 7மணி ஷோ ஒரு முறையும் அடுத்த 10 மணி ஷோ ஒரு முறையும் தலா இரண்டு முறை ஏக தினத்தில் அதை பார்கும் படி கேட்டு"கொல்"கிறேன்.

Unknown said...

ஷார்ஜா பிரியன் உங்களின் இரண்டாம் கேள்விக்கான விடை சரியானது இன்னொன்றையும் முயற்சிக்கவும்

:)

குசும்பன் எதா இருந்தாலும் அடுத்தவங்களுக்கு குடுக்குற உங்க தாராள மனச நெனச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்