
இன்று இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது ஏதோ அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் சலுகை போலவேஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. அது ஒரு உரிமை என்பது மறக்கப்பட்டே மறைக்கப்பட்டே பிரச்சாரம் செய்யப் படுகிறது. மேலும் 27 சதவீத ஒதுக்கீட்டில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என விஷயம் அதன் நிலையில் இருந்து மாற்றப் பட்டே வருகிறது. தாழ்த்தப் பட்ட மற்றும் பின் தங்கிய இடஒதுக்கீட்டு விஷயத்தில் அனைவருக்கும் ஒன்று தெரிந்தே இருக்கிறது" இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைவரும் இடஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பதோடல்லாமல் அந்த இட ஒதுக்கீட்டினால் பயனடையப்போகும் ச்மூகத்தையே எதிர்கிறார்கள்." இட ஒதுக்கீட்டு கொள்கைகள் மூலம் ஒரு தலை முறை மக்கள் மட்டுமன்றி அதன் பின் வரும் அனைவரும் பயனடயலாம். மேலும் தகுதியற்ற யாரும் இடஒதுக்கீட்டில் இடம் பெறுவதில்லையே. இதுவே என் கிராமத்தில் இருக்கும் எத்தனை யோ பேர்கள் இடஒதுக்கீடு இருந்தும் உயர் கல்விக்கு போக முடியவில்லை அதே நேரம் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றவர்களில் நானும் ஒருவன். "இடஒதுக்கீட்டின் மூலம் தகுதியற்றவர்கள் சீட் பெற்று விடுவர் என்று நினைப்பதெல்லாம் " எதிர்ப்பாளர்களின் ஏமாற்றும் வேலை. மேலும் எத்தனை உயர் சாதியினர் இடஒதுக்கீடு இல்லாதபோதிலும் நல்ல படிப்புகளில் இருந்து இன்று வேலையும் பெற்றுள்ளனர் என்று என்னால் பட்டியலிட முடியும். மேலும் இது ஏதோ இன்றுவரை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டே வருகிறது.
இவ் விஷயத்தில் அரசியல் வாதிகளை விட அதை எதிர்க்கும் சிலரின் கண்ணேட்டம் கேலிக்குரியது.பொதுவாக மாணவர்களை எடுத்துக்கொண்டால் அதில் எதிர்பில் போராட்டத்தில் ஈடுபடும் எவரும் இடஒதுக்கீட்டை விட இட ஒதுக்கீட்டின் மூலம் அருகிலேயே இடம் பிடிக்க நினைக்கும் தாழ்த்தப்பட்டவர் கள் மீதான வெறுப்பே மேலோங்கியுள்ளது. இது மீண்டும் ஒரு தீண்டத்தகாதோர் பட்டியலை உருவாக்குவதில் முனைப்புடன் அவர்கள் செயல்படுவதை காட்டுகிறது.
"தீண்டாமை ஒரு பாவச்செயல்"
"தீண்டாமை ஒரு பெருங்குற்றம்"
"தீண்டாமை மனித தன்மையற்ற செயல்"
என்று நமது அரசு பாட நூல்களின் முதல் பக்கத்தில் இடம் ஒதுக்கிய நாம்தான் அவர்களுக்கு சமூகத்தில் இடம் ஒதுக்குவதில் எதிர்க்கிறோம்.
எப்போதும் போல் மவுனம் காக்கிறார்" பாப்பாத்தி" (இது அவரே சட்டசபையில் சொன்னது): ஜெயலலிதா, குஜராத்தில் நரேந்திர மோடிக்கு ஆதரவு தரும் அவர் இதில் வாய்திறக்கவில்லை வழக்கம்போல் கடிதம் எழுதியுள்ளார் கலைஞர். ராமதாஸ் ஒருநாள் ஆதரவு உண்ணாவிரதம் இருந்தார், வைகோ மேடையில் முழங்குவதோடு சரி, திருமா ஆதரித்திருக்கிறார். வலையில் ஆதரவு எதிர்ப்புஎன்று பதிந்து தள்ளுகின்றனர். அரசு இந்த விவகாரத்தில் என்ன சொல்ல போகிறது?
4 comments:
நன்றி மகேந்திரன், முதல்முறையாக உங்கள் வலைப்பதிவை பார்க்கிறேன், அருமையாக எழுதியுள்ளீர்கள்.... இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் கருத்து தளத்தில் விவாதிக்க எதிர்ப்பாளர்கள் இன்னமும் தகுதி என்ற ஒற்றையில் தொங்குவது வேதனையாக உள்ளது.
நன்றி
நல்ல பதிவு....
தொடர்ந்து எழுதவும்
வாழ்த்துகள்..........
>> எப்போதும் போல் மவுனம் காக்கிறார்" பாப்பாத்தி" (இது அவரே சட்டசபையில் சொன்னது): ஜெயலலிதா, குஜராத்தில் நரேந்திர மோடிக்கு ஆதரவு தரும் அவர் இதில் வாய்திறக்கவில்லை >>
அதுதானே விஷயம்!
அவாள்களுக்கு ஆதரவான பார்ப்பனீய அரசியல் நடத்துகிர பினாமிக் கட்சிதானே அதிமுக. அந்த இந்துத்துவ முகமூடிக் கட்சிக்கு பிற்படுத்தப்பட்டொர் நலத்தில் அக்கறை ஏன் வரப்போகிறது!
பதிவுக்கு நன்றி மகேந்திரன். தொடர்ந்து பதியுங்கள்! :)
Comment Moderation செய்தீர்களென்றால் தமிழ்மணத்தில் "மறுமொழியிடப்பட்ட இடுகைகளில்" உங்கள் பதிவும் சேரும்.
Post a Comment