Sunday, May 28, 2006

இடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு

இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் வலுத்து வரும் வேளையில்
கான்பூர் ஐ.ஐ.டி யை சேர்ந்த ஆசிரியர்கள் கொண்ட குழு ஒன்று தற்போது குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது அதில் " இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வித்தரம் குறையும்" என்ற குற்றச்சாட்டை வலியுருத்தியுள்ளது அதில் மேலும் எங்களிடம் தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை எனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்வியின் தரம் தாழ்ந்து போகும் என்று அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இவர்களிடம் தற்போது ஆசிரியர்கள் இல்லை என்பதால் வேறு பணியிடங்களை தகுதியானவர்களை கொண்டு நிரப்ப முடியாதா அல்லது அப் பணிகளுக்காக காத்திருக்கும் எவரும் அந்த தகுதியை பெற்றிருக்க வில்லையா எனும் சந்தேகம் எழுவது தவிற்க வியலாத ஒன்று. மேலும் தற்போது இருக்கும் இடங்களில் ஒதுக்கீடு செய்யவியலாது புதிய இடங்கள் உருவாக்கவும் கூடாது என்கிறது அக்கடிதம். அதாவது" எங்களிடம் உணவு பற்றாக்குறை எனவே பட்டிணியோடு கிடப்பவன் அப்படியே சாகட்டும்" என்பதை சொல்லாமல் சொல்கிறது.
கல்வியின் தரம் என்பது சொல்லிக்கொடுப்பவர்கள் பொருத்தே அமையுமேயன்றி கற்றுக் கொள்பவனால் அமையாது என்பதே உண்மை. இப்படியிருக்க பிற்படுத்த பட்டவர்கள் இடம் பெருவது கல்வியின் தரத்தை குறைக்கும் என்பது வெற்று வாதம். ஏன் பிற்படுத்தபட்ட எந்த மாணவரும் நல்ல மதிப்பெண்களே பெருவதில்லையா என்ன? அதே குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நிகழும் இனக்கமான சூழலை கெடுக்கும் என்ற விஷத்தையும் கக்கியுள்ளது. அதாவது மேல்சாதியினர் பயிலும் இடத்தில் பிற்படுத்தபட்ட ஒரு மாணவனை சேர்ப்பது அவர்களிடையே சாதிமோதலை ஏற்படுத்தும் என்கிறது.
தீண்டாமை இல்லை என்று வாதிடும் அதே கல்லூரி இல்லை இல்லை அது மேல்சாதிக்கு மட்டுந்தான் என்று இப்போது கொடியுயர்த்துகிறது. இதன் மூலம் நாட்டில் இன்னும் தீண்டாமை இருக்கிறது என்றே அது தெரிவிக்கிறது. இது குறித்து முன்னர் நான் இட்டிருந்த ஒரு பதிவில் "இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை மாறாக பக்கத்தில் இடம்பிடிக்க நிணைக்கும் பிற்பட்ட சாதியை எதிர்க்கும் மனோபாவம் இது" என தெரிவித்திருந்தேன், அது உண்மை என்பதை யே "அவர்களும்" ஒத்துக்கொள்வதுபோலவே தெரிகிறது.
அரசு எந்திரம் என்பது மேல் சாதி மக்களுக்கு மட்டுமல்ல இடஒதுக்கீட்டு தேவையே இவர்களால் தான் உண்டானது என்ற ஞானி அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மேலும் ஞானி அவர்கள் சொன்னதுபோல "என்றைக்கு பிற்படுத்தப்பட்ட மாணவனும் பொதுஇடங்களில் இடம்(சீட்) கிடைக்கிறதோ அன்றுவரை இடஒதுக்கீடும் இருக்கும்"
எனக்கு இன்னும் ஒன்று புரிய வேண்டும். அதாவது "இவர்களுக்கு" உழ, அறுக்க,அடிக்க,சுமக்க,சமைக்க, சுத்தப்படுத்த,துவைக்க,அறிவிக்க தேவைப்படும் ஒரு இனம் கல்வி பயில்வதால் தங்கள் வயிரும் பட்டிணி கிடக்கும் நாடும் நாறிப்போகும் என்பதால்தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்களா?. உண்மையில் அவர்களுக்கு நாட்டின் சமூக வளர்ச்சியில் அக்கரை இருந்தால் இட ஒதுக்கீட்டை "எவனும்" மறுக்க மாட்டான். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க நீங்கள் வேண்டாம் உங்களுக்கு இத்தனை சதவிகிதம்தான் ஓட்டுரிமை என்று இதேபோல் அறிவிக்க இந்த "மேல்வகுப்"பினர் சொல்லி விடட்டும் அப்போதுதான் அது உண்மையில் இட ஒதுக்கீட்டுக்கான எதிர்பாக இருக்கும் அதுவரை இது வெறும் சாதிக்கு எதிரான போராட்டமாகவே இருக்கும்.
தங்கள் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மாணவன் படிப்பதால் சுமுக நிகழ்வுகள் கெட்டுப்போகும் என சொல்லும் கல்லூரி கல்லூரியாகவே இருக்க முடியாது அது வெறும் மதம் போதிக்கும் குருகுலமாகவே இருக்க முடியும்.அதில் படிப்பவர்களும் மாணவர்களாக இல்லாது "புதிய நூற்றாண்டு கேடிகளாகவே" இருக்க முடியும்.
இந்த விவகாரத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தகவல்களை திட்டம் போட்டு பரப்பும் என்.டி.டி.வி, தினமலர், தினதந்தி, தி ஹிந்து போன்ற ஊடகம் ,பத்திரிகைகள் அதற்கு ஆதரவு தரும் எந்த போராட்டத்தையும் பதிவுசெய்வதே இல்லை காரணம் அவர்களும் அதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
"தீண்டாமை ஒரு பாவச்செயல்"
"தீண்டாமை ஒரு பெருங்குற்றம்"
"தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் "
- மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி

4 comments:

Darren said...

ஒரு ஆசிரியரின் திறமை நன்றாக படிக்கும் மாணவனை மேலும் நன்றாக படிக்க வைப்பது அல்ல...சராசரி மாணவனை நன்றாக படிக்கவைப்பதுதான்..இவர்களின் வாதப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சராசரி மாணவர்கள் ..அப்துல்கலாம் கூட பிற்படுத்தப்பட்ட மாணவர்தான்..மொத்தத்தில் பூணூல் போடாதவன் எல்லோரும் சராசரி மாணவர்கள்தான் இவர்கள் பார்வையில்....

தமிழ்நாட்டு நுழைவுத்தேர்வுகளில் பொதுவாக cutoff FC க்கு 298 ம் BC க்கு 296ம் இருக்கும்..2 மார்க் வித்தியாசத்தில்தான் தரம் போய்விடும் இவர்களுக்கு...IIT and IIM ..etcகளில் கொடுக்கப்படும் பணத்தில் 58% பிற்படுத்தப்பட்டவனின் வரிப்பணம் இருக்கிறது என்பதை
மறுக்கமுடியுமா இவர்களால்..

இவர்கள் யார் அனுமதிக்க..VP singh காலத்தில் நடந்த மாதிரி நடத்தி முறியடித்து விடலாம் என கனவு காண்கிறார்கள்..

உங்கள் பிணங்களின் மீதுதான் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டுமானால்..இட ஒதுக்கிட்டிற்கு நடந்த பூமி பூஜையாக நினைத்து வாழ்க்கையை தொடங்குவோம்.....

இணைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் முடியாது என்றால் இறந்து போங்கள்..

Badri Seshadri said...

அப்துல் கலாம் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியிலும் சென்னையில் உள்ள MIT-யிலும் படித்தவர். அவர் ஐஐடியில் படிக்கவில்லை. (இதை, தகவல் பிழையைத் திருத்த எண்ணி மட்டுமே கொடுக்கிறேன். உங்களது விவாதத்தைத் திசை திருப்ப அல்ல.)

Unknown said...

/பத்ரி/ தவறுதான் நண்பரே திருத்தி விடுகிறேன்
/தரன்/ பூனூல் போட்டும் படிப்பு வராத எத்தனையோ பேரை நானும் அறிவேன் நீங்கள் கூறியது போல் //இவர்களின்....மீதுதான் என்றால்// அது கூட சமூக நலனுக்கே எனில் ( சமூகம் என்பது ஒன்றினைந்து வாழ்வது) செய்யலாம்

Badri Seshadri said...

அது 'புனித வளனார் கல்லூரி'. மன்னிக்கவும்!