Thursday, May 10, 2007

தாக்குதல் நடத்தியவர்கள் மேல் நடவடிக்கை - முதல்வர்

தினகரன் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கலைஞரின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்ற கேள்விக்குத் தரப்பட்ட பதில்களின் விளைவாக இன்றைய தினம் விலைமதிக்க முடியாத 3 வாலிபர்களின் உயிர்கள் நம்மை விட்டும் பிரிந்து சென்று விட்டன. நாம் என்னதான் பேசினாலும், எழுதினாலும் போய் விட்ட அந்த உயிர்களை மீட்டுக் கொண்டு வர முடியாது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலை எவ்வளவுதான் தெரிவித்தாலும், சமாதானம் செய்ய முடியாது. பணிக்குச் சென்று மாலையில் பத்திரமாகத் திரும்புவார்கள் என்ற எண்ணத்தோடு சென்ற செல்வங்கள் மறைந்து விட்டச் செய்தியினை யாரால்தான் தாங்கிக் கொள்ள முடியும். எனவே, நடைபெற்ற அந்த வன்முறைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இவற்றுக்குக் காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக அந்தத் துறையைச் சார்ந்த நண்பர்கள் எல்லாம் அதனைக் கண்டித்து அறிக்கை கொடுத்துள்ளார்கள். அவர்களின் உணர்வோடு நானும் ஒன்றுபடுகிறேன். எந¢தப் பத்திரிகையாக இருந்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவதை ஜனநாயகத்தின் மீதும், பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள நான் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொண்டவன் இல்லை. எனவே, நடைபெற்ற செயலுக்காக எனது வருத்தத்தைக் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் சம்பவத்திலே உயிர் இழந்த மூவரின் குடும்பங்களுக்கும் ரூ.2 லட்சம் நிதி அளிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களின் சார்பில் தெரிவித்துள்ள கோரிக்கையினை ஏற்று, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து, 3 குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் அளிக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்

19 comments:

கோவி.கண்ணன் said...

என்ன கூத்து ?

பையன் போட்டு தள்ளுவானாம்... அப்பங்காரன் அரசாங்கப் பணத்தைக் கொடுப்பானாம்.

:(

Unknown said...

என்ன் ஜிகே நீங்களுமா? அவர் அழகிரியோட அப்பா மட்டுமில்லை, முதல்வர், அவரது வேலையை செய்கிறார். அதற்க்காக ரவுடிகளுக்கு ஆதரவு தெரிவித்தால்தான் தவறு

கோவி.கண்ணன் said...

நீங்களும் என்ன ? நீங்களும் நேர்மையாகத் தான் சிந்திக்கனும்...
செத்தவங்களுக்கு கட்சி நிதியில் இருந்து பணத்தைக் கொடுக்க வேண்டியதுதானே ?

Bharath said...

Then first let him prove he is the CM by arresting his son "Anjanenjan" and the other stalwarts who organized this protest..

மருதநாயகம் said...

GK! சன் டி.வி மேல் உங்களுக்கு ஏன் இந்த காண்டு. தினகரன் அன்புமணி இராமதாசுக்கு 2% ஆதரவு தான் உள்ளது என்றும் கூட சர்வே வெளியிட்டது. அதை பா.ம.க கையாண்ட விதம் மெச்சத்தக்கது. இங்கே ஒரு சர்வேயை கூட சரியான முறையில் அனுக தெரியாத அழகிரி மீது தானே தவறு அதற்கு சன் எப்படி பொறுப்பாகும். அழகிரி தான் தினகரனை படிப்பதே இல்லை என்று சொல்லிவிட்டு இன்று செய்திகள் முழுவது தினகரன் இடம் பெறச் செய்துவிட்டார். எப்படி இருந்தாலும் உயிரிழப்புகள் மிகவும் வேதனை தான் தருகிறது

Unknown said...

//செத்தவங்களுக்கு கட்சி நிதியில் இருந்து பணத்தைக் கொடுக்க வேண்டியதுதானே ?
//
அப்படி கொடுத்தா அது கொலைசெஞ்சுட்டு காசுகொடுத்தா சரியாபோகுமான்னு கேப்போம் அதே அரசாங்கம் கொடுக்கலாம் தப்பில்லே

Anonymous said...

anne eppo enka thalaivar kalaingar action eduppar??
keettu sollunga??

vuuooiiii vuoiiiiiiiiiii

ellam thalavidi

கோவி.கண்ணன் said...

திமுக ஆட்சியில் ரவுடிகளின் மீதான என்கவுண்டர் தொடருமா ?

Unknown said...

ஜிகே ஏன் இந்த கொலை வெறி? :)

G.Ragavan said...

கோவியின் ஆத்திரத்தில் நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். நடப்பது ஒரு குடும்பத் தகராறு. அதிலும் ஒரு மேயரே முன்னின்று தகராறு செய்வதாகக் கூறப்படுகிறது. போனவர்களுக்கு அரசாங்கப்பணத்தை வாய்க்கரிசி போட்டு விடலாம். வாரிசுகளைக் கூட்டி வைத்து பஞ்சாயத்து செய்து விடலாம். அப்படியே கொலையை யார் செய்தார்கள் என்று மூடியும் மறைத்து விடலாம்.

// மகேந்திரன்.பெ zei...
என்ன் ஜிகே நீங்களுமா? அவர் அழகிரியோட அப்பா மட்டுமில்லை, முதல்வர், அவரது வேலையை செய்கிறார். அதற்க்காக ரவுடிகளுக்கு ஆதரவு தெரிவித்தால்தான் தவறு //

மகேந்திரன், அப்படி வாய் திறந்து ஆதரவு சொல்ல கருணாநிதி முட்டாள் அல்ல. இனிமேல் எல்லாவற்றையும் பூசி மெழுகும் வேலைதான் அவருக்கு. நன்றாகவே செய்வார். நாமும் வாழ்க போட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுக இன்னொரு அதிமுகவாகி விட்டது என்பதே என் கருத்து.

Anonymous said...

பத்திரிகைச் சுதந்திரம் என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் இருட்டடிப்பு, பொய், மிகைப்படுத்தல், அவமானப்படுத்துதல் போன்ற மிகவும் கேவலமான செயல்களைச் செய்து வருகின்றார்கள். அவர்கள் பேனாவை ஆயுதமாக எடுத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கிடைக்கின்ற ஆயுதங்களை எடுக்கின்றார்கள்.
1.கருத்துக் கணிப்புக்கு என்ன அவசியம்?
2.மு.க அரசியல் வாரிசு என்றால் குடும்ப அங்கத்தவரைத் தவிர தி.மு.க‌
கட்சி அங்கத்தவர் யாரையும் ஏன் சேர்க்கவில்லை?
3. அரசியல் போட்டியில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் ஒரு மனிதனை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்.

பத்திரிகைக்காறர்கள் தங்கள் பலத்தால் மற்றவர்களை காயப்படுத்தினால், பத்திரிகைக்காறர்களைக் காயப்படுதுவதும் நியாயமானதே!
பத்திரிகைக்காறர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு?

Unknown said...

இதுதான் காலம் காலமாக கலைஞருக்கு கிடைக்கும் பரிசு ஆயிரம் நன்மைகள் செய்தும் இதுபோன்ற சில புல்லுறுவிகளின் செயலால் மொத்த தி,மு.க வுக்கும் அவப் பெயர், இனி இந்த வழக்கு எந்த திசையில் சென்றாலும் அது கலைஞருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும், உண்மை என்றும் வெல்லும், அது வெளியாகும் வரை மாறன்களும் விடப்போவதில்லை திமுகவும் விடப்போவதில்லை,

கலைஞருக்கு ஒரே ஆலோசனைதான் சொல்ல முடியும் இனியும் தாமதிக்காது அழகிரி போன்றவர்களியும் அதற்கு உடந்தையானவர்களையும் கட்சியில் இருந்து உண்மை என்ன வென்று தெரியும் வரை விலக்குதல் தேவைப்பட்டால் நிரந்தரமாக புற்று நோய் கொண்ட மார்பை வைத்துக்கொண்டு உயிரை விடுவதை விட அதை அறுத்து எறிந்துவிடலாம்

Unknown said...

//பத்திரிகைக்காறர்கள் தங்கள் பலத்தால் மற்றவர்களை காயப்படுத்தினால், பத்திரிகைக்காறர்களைக் காயப்படுதுவதும் நியாயமானதே!
பத்திரிகைக்காறர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கு//

வினோதமாக இருக்கிறது உங்கள் பின்னூட்டம் நல்லது நாடு உறுப்பட்டு விடும், பத்திரிகை சுத்ந்திரம் பத்திரிகை சுதந்திரம் எனக்கூவும் திமுகவினர் இச் செயலை செய்தது சரி என்று சொல்ல வருகிறீர்களா?

Anonymous said...

அன்றைக்கு கருணாநிதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் கேட்டுப் பெற்ற டாக்டர் பட்டத்தை ஒரு மாணவனின் பிணத்தின் மீது நின்று வாங்கினார். அன்று தகுதியில்லாத ஒரு கபோதிக்கு டாக்டர் பட்டமா என்று எதிர்த்த மாணவர்கள் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாயினர். அதில் ஒருவன் கொல்லப் பட்டான், அந்த உதயகுமாரனின் பெற்றோர்களிடம் அது தன் மகனே இல்லையென்று எழுதி வாங்கினர் ஈவு இரக்கமில்லாத மிருகங்கள். கொஞ்சம் கூட வெட்கம் மானம் இன்றி பிணத்தின் மீது அன்று பட்டம் வாங்கிய கருணாநிதி, இன்று மீண்டும் வரலாற்றை அரங்கேற்றுகிறார்.

ஆம் இன்றும் இவருக்கு 50 ஆண்டு கொண்டாட்டங்கள் பிணத்தின் மீது நடக்கின்றன, ஒன்றல்ல இரண்டல்ல 4 பிணங்கள், பிணங்கள் ஏற்பாடு இவரது உத்தம புத்திரன். இந்த அயோக்கியர்கள் கோர வெறியாட்டம் என்று அடங்கும், இனியும் எத்தனை பிணங்கள் பலி கேட்க்கப் போகிறது இந்த அரக்கர் கூட்டம்?

தி மு க அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்

ரவுடிக் கும்பலுக்கும் கூட்டமாக மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்

Unknown said...

//தி மு க அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்
//

யப்பா அனானி யாருபா நீயி எங்கப் போனாலும் இதே புலம்பல், இப்ப திமுக பதவி வெலகுனா சட்டம் ஒழுங்காயிடுமா? இப்படி கண்டதுக்கும் கேக்கிறதாலதான் கலைஞர் அப்படி என்ன வீட்டுக்கு அனுப்ப நீங்க ஆசைப்பட்டா நான் சந்தோசமா போறேன்னு சொல்லியிருக்காரே? சில சென்மங்கள் மாதிரி அரசை காப்பாத்திக்க போராட மாட்டாரு

Anonymous said...

//இப்படி கண்டதுக்கும் கேக்கிறதாலதான் கலைஞர் அப்படி என்ன வீட்டுக்கு அனுப்ப நீங்க ஆசைப்பட்டா நான் சந்தோசமா போறேன்னு சொல்லியிருக்காரே?//

அதுதான் 3 பேர காட்டுக்கு அனுப்பிடிங்களே!!!!!

இந்த குடும்பசண்டையில் இங்க 3 பேர்ரு நாளை கருமாதி....
அங்க உங்க நாளை 50 ஆண்டு கொண்டாட்டங்கள் !!

யார் செத்தால் என்ன??.. நாற்காலி முக்கியம்...வாழ்க தமிழகம்!

முற்பகல் செயின் பிற்பகல் விளையும்!!

நெஞ்சை தொட்டு சொல்லுஞ்க சார்...இவங்க யருக்காவது நல்ல சாவு வருமா?????

(பஸ் எரிப்புக்கும் இதற்கும் என்ன பெரிய வேறுபாடு...அதே மூர்க்கத்தனம் இல்லையா?...)


வருத்ததுடன்,பாலா

Anonymous said...

//கலைஞர் அப்படி என்ன வீட்டுக்கு அனுப்ப நீங்க ஆசைப்பட்டா நான் சந்தோசமா போறேன்னு சொல்லியிருக்காரே? சில சென்மங்கள் மாதிரி அரசை காப்பாத்திக்க போராட மாட்டாரு//

யாரு சொல்லனுமாம்.. அப்படியே சொல்லிட்டாலும், ராஜினாமா பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பார்..

2 நாள் ஆகுது.. ஏன் இன்னும் அழகிரியை கைது செய்யவில்லை.. மதுரைமேயர் ஆர்ப்பாட்டம் செய்தது சந்தேகத்துகிடமின்றி புகைப்படத்துல தெரியுது ஏன் கைது பண்ணல.. போலிஸ் நின்னுட்ட வேடிக்கை பார்த்தது. ஏன் நடவடிக்கை எடுக்கல...

இதுக்கெல்லாம் சிபிஐ வேணுமா?.. மத்தியிலும் இவங்க ஆட்சி தானே.. இங்க நியாயம் கிடைக்காதுன்னா அங்கே மட்டும் எப்படி கிடைக்கும்...

இதுல இவரு பொன்விழா வேண்டாம்னு சொல்வாராம் மத்தவங்க கெஞ்சுவாங்களான்.. இவரு மனசு மாறி ஒத்துக்குவாங்களாம்.. இன்னும் எத்தன நாளைக்கு இந்த டிராமா...நடத்துங்க...

Thamizhan said...

பல தலைவர்களும் கண்டிக்க வேண்டியதைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கின்றனர்.
தொண்டர்களுக்கு வெறி பிடித்துவிட்டால் என்ன செய்வார்கள் என்பதைத் தமிழகம் பல நேரங்களிலே கண்டு வெந்து வெம்பியிருக்கிறது.இறப்பது எப்போதும் ஒன்றும் செய்யாத பொதுமக்கள்தான்.
காவல்துறை தன் கடமையைச் செய்யவில்லை என்பதுதான் ஆரம்பத்தில் நினைக்க வேண்டியுள்ளது.
இதில் அரசு செய்ய வேண்டிய விசாரனையை சி.பி.ஐ மூலம் செய்வதுதான் சரியென சரியாக முடிவெடுத்துள்ளது வரவேற்கப்பட்டுள்ளது.
இதைத் திராவிட நாகரீகம் என்று குளிர் காய்பவர்கட்குக் காஞ்சி கோயில் பட்டப் பகலில் கோவிலுனுள்ளேயே கொலை எந்த நாகரீகமென்று கேட்கவேண்டியுள்ளது.
கல்லூரி மாணவிகள் கெஞ்சிய போதும் விடாமல் உயிருடன் எரித்தது தலைவி தவறை நீதி மன்றம் தண்டித்ததால் என்பதையும் நினைவூட்ட வேண்டும்.
எத்தனை பேருக்கு எல்லாக் குழந்தைகளுமே நல்லவர்களாக இருக்கிறார்கள்?
பத்திரிக்கையின் பணம் செய்ய எதுவேண்டுமானாலும் எழுதலாம் என்பதும் ஒரு காரணமே.
தொண்டர்களை வெறியர்களாக்குவதே பத்திரிக்கைகள் தான்.

Anonymous said...

சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றி அபார சாதனை புரிந்த கலைஞருக்கு பாராட்டு விழா

Good to hear....Glad to appriciate

But 3 lives taken for their family issue.

In this regard, if you compare with Jayalaitha...both are same....

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் supposed to cancel at any cost. I did not see human feelings from him. This is one of the big black mark.

Hope this what happend when he got Dr from annamalai university....

DO not ask for everything what Jaya did. If that question then கலைஞர் = Jayalalitha