Saturday, May 05, 2007

சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்


சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்
பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், புதுக்கவிதை, புண்ணாக்கு, புல், பூண்டு,மலை,மழை,இலை,தழை,காடு,கருப்பு,காதல்,கன்றாவி.கஞ்சன் கருமி,கவிதை.புறநானூறு,புத்தம்புதுசு..........

என்ன ஒன்னும் புரியலையா? இப்படித்தான் இருந்தது அவரின் ஜீரோ டிகிரி....ஒரு வேற்றுகிரகவாசி நாவல்?!..
முதலில் ஏதோ எழுத்துப் பிழை அல்லது பக்கம் தவறு என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது நாவல் அப்படித்தான் இருக்குமாம். அதுகூட என்னமோ நான் லினியரோ நீலினியரோ போட்டிருந்தாங்க இப்டி எழுதறது இப்ப ஸ்டைலாம். அப்பறம் அடுத்த பக்கம் பொறட்டுனா.... அங்கதான் வச்சிருந்தார் குண்டு..

நிசமாச் சொல்லுரன் நானும் சின்ன வயசில (ஒரு பதினஞ்சு வயசு?) ஊட்டுக்கு தெரியாத மைசூர் பதிப்பகத்தோட சரோசாதேவி கதையெல்லாம் படிச்சிருக்க்னுங்க.. அதுல கூட இம்மா விசயம் மில்லிங்க. தலிவரு சும்மா பச்ச மஞ்ச செவப்பு நீலம்னு உட்டு பேனாவுல இன்க்குக்கு பதிலா வேற எதையோ ஊத்தி எழுதிருந்தாருங்க..
அப்பத்தான் வந்துது கோவம் அவருமேல யில்லிங்க அந்த புக்க வாங்க சொல்லி தினந்தினம் அரிச்ச எம்பிரண்டு விசயன் மேல நேரா வூட்டுக்கு போயி கேட்டங்க ஒரு கேள்வி ....." நூறு ரூவா போட்டு இத வாங்குனத ஒரு பொட்டிக்கடையில பத்துருவாய்க்கி வாங்கிற்கிலாமேன்னு" அதுக்கு அவன் "போடா டுபுக்கு நீஏண்டா இங்கிலீஸ் படத்த பாத்தவனாட்டம் டைட்டில்ல இருந்து பாத்த ஒரு பத்து பக்கம் கழிச்சு பாருடான்னான்" நானும் பாத்தங்க ஆங் இப்பகொஞ்சம் பரவால்ல ஏதோ ஒன்னு ரண்டு பத்தி புரிஞ்சதுங்க ஆனா மொத்தமா யோசிச்சா ஒரு எழவும் புரியிலங்க. என்னடா இது " அந்தோன் சேகவ், லேவ் தல்ஸ்தோய். அலக்ஸாந்தர் குப்ரின், அலக்ஸேய் தல்ஸ்த்தோய் வல்லி கண்ணன், சுசாதா.....பாலகொமாரு எல்லாரும் புரிஞ்சாங்க இவரு மட்டும் புரியிலயான்னு எனக்கு ஒரே கொழப்பமுங்க சரி நம்புளுக்குத்தான் புரிலன்னு எங்க மாமா ஒருத்தரு இஞ்ஜினீரு அவரு இந்த இலக்கியம்லாம் படிப்பாரு அவருகிட்ட தந்தனுங்க. அவரும் சரி படிக்கிரேன்னு வாங்குனாருங்க மறுநா பாத்து கேட்டதுக்கு சொன்னாரு" ஒங்க அக்காகாரி அந்த புத்தகத்த பாத்துட்டு இந்த வயசில இந்தமாரி புத்தகம் படிக்கிரியான்னு சொல்லி வாங்கி கிழிச்சு போட்டுட்டா மாப்ள நீ வேற வாங்கிக்கோன்னாறு. ஆஹா இவரு முதலுக்கே வேட்டு வக்கிறாறேன்னு போயி விசயங் கிட்ட சொன்னன்னுங்க அதுக்கு அவன் மலிவு வெலையில அதே புக்க ஜீ.ஏ. (அதாங்க க்ரைம் நாவல் அசோகன்) போடுராரு அத வாங்குவோம்னான். சரின்னு அப்ப எங்க ஊருக்கு பக்கத்தில பெரம்பலூர்ல புத்தக கண்காட்சி போட்டுருந்துது அங்க போயி தேடிப்புடிச்சி சீரோ டிகிரியும் அப்பறம் கோனல் பக்கமும் வாங்கியாந்தமுங்க சரி மின்னயே சீரோ டிகிரி புரில இப்ப கோனல் பக்கத்த படிப்பமுன்னு எடுத்தா பூராம் அவுரோட காதல் வெளையாட்டு அனுபவங்க. என்னடா இதுன்னு அப்ப அப்ப கொஞ்சம் நல்ல கட்டுரையும் எழுதிர்ந்தாரு ஆனா எனக்கு ஒன்னும் புரிலிங்க.அதுல தான் இந்த கும்போனத்துல புள்ளைங்க நெருப்புல செத்து போச்சே அதபத்தி எழுதிர்ந்தாருங்க அதுல ஒருஎடத்தில ஒரு சினிமா ஹன்னிபால் பத்தி எழுதிருந்தாருங்க ஆனா நடிச்சவ்ரு பேர தப்பா போட்டுட்டாரு. அவ்ரு பேரு அந்தோனி ஹாப்கின்ஸுங்க இவருதான் மாத்தி போட்டாரு. அத ஏம்பிரண்டுகிட்ட காட்டுனதுக்கு அட போடா ஏதோ ஒரு தப்பு நடந்துபோச்சி அத சொல்ல வந்துட்ட மத்தது நல்லாருக்கான்னான் நாஞ்சொன்னன் "அடே கோவத்த கிண்டாதடா எனக்கு அவுரு எழுதுனதுல இதான்டா புரிஞ்சுதுன்னு" சொன்னனுங்க.. அவன் ஒரு வார்த்த பேசலியே..இப்பயும் என்னமோ சாருஆன்லைனுன்னு ஒன்னுல எழுதுராரு இப்பவும் அதே ரஸ லீலா பாகம் இருவதுன்னு தொடர்ச்சியா அதே சொந்தக்கதைங்க ...இப்பலாம் அந்த வலைக்கே போரதில்லீங்க எதுக்கு வம்பு நம்பளே துபாய்ல இருக்கம் எதாவது ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிடிச்சின்னா என்ன பன்றது

அப்பறம் எம் பிரண்டு இப்பவும் அவர படிக்கிரானுங்க.....
அவரு நம்ப கமலகாசன பத்திஎழுதிருக்காரு பார்ரான்னு சொன்னான் எனக்கு கமல்னா புடிக்குமுங்க நம்ப ரசினி ராம்கிக்கு ரசினி மாறி எனக்கு கமலுங்க

சரின்னு பாத்தா விருமாண்டியை முன்வைத்துன்னு ஒரு கட்டுரங்க அதுல நெரயா லத்தீனு, பெரான்ஸு, ஈரானு இப்படி பலநாட்டு படத்தியும் போட்டு விமர்சனமுங்க. என்ன பன்றது அவரு நிலம அப்பிடி எனக்கு எப்பிடி சாருவ புரிலியோ அதே மாறி சாருவுக்கு கமல் படம் புரிலங்க,
சரி கொரியாகாரன் எதோ தப்பான படத்துக்கு விருது கொடுத்துட்டான்னு விட்டுட்டனுங்க
இப்பிடிதாங்க அவுருக்கும் நமக்கும் ஒத்தே வர்ல. இதுல இவரு இந்தியவுல இருக்க எல்லா எழுத்தாளர். நடிகர்,கவிஞர்.பத்தியும் விமர்சணம் பன்னி எழுதுவாருங்க ஆனா அவரப்பத்தி எழுத ஆருமில்லீங்க. நானே எனக்கு அவரு எழுதறது புரிலன்னுதாங்க எழுதுரன் அவர ஒன்னும் சொல்லலீங்க.
இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என்னாபன்றது.சரி இம்பூட்டு நாளா சும்மா இருந்துட்டு இப்ப ஏன்டா எழுதுரண்னு கேக்கரீங்களா.... நான் இப்பதாங்க சும்மா இருக்கன் படிச்சுட்டு எழுதுங்க......


11 comments:

ரவி said...

ஒரு ரெண்டு பக்கத்த கிழிச்சி ஸ்கேன் செஞ்சு பதிவாக்குங்க...

நாங்களும் கொஞ்சம் அனுபவிக்கரோம்...

:) நல்லா காமடியா எழுதறீங்க..

Anonymous said...

அந்துமணியை எதில் வேண்டுமானலும் அடிக்கலாம்.தப்பில்லை.
Click this link and see,

http://www.netdisaster.com/go.php?mode=tomato&url=http://www.dinamalar.com/2006may21varamalar/pakapa.asp

oosi said...

நல்ல பதிவு ... வாய் விட்டு சிரித்தேன் ....

லக்கிலுக் said...

சாரு நிவேதிதாவுக்கு மனநிலையில் ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன்.... அவருடைய Personal Life ரொம்ப மோசமாக இருக்கிறது போல....

Unknown said...

/செந்தழல்/ ரவி புத்தகம் இங்கே(துபாயில் இல்லை) மன்னிக்கவும்
நன்றி /ஊசி/
இல்லை லக்கிலுக் அவரின்// சொந்த வாழ்க்கை பற்றியது// அல்ல இந்த பதிவு அவரின் எழுத்து பற்றியதே

மஞ்சூர் ராசா said...

மகேன், நானும் சாருவெ படிச்சிருக்கேன். மத்தவங்களெ கொறெ சொல்றதுலெ இவரு நம்பர் 1.

விளம்பர பிரியன்.

உதாரணத்துக்கு சுந்தரராமசாமி இரங்கல் கட்டுரை அவருடைய பதிவில் பாருங்கள். அதில் எல்லாம் இவர்தான் பல போஸ்களில், எங்கேயும் சுந்தரராமசாமியின் படத்தை (அட நம்ம செந்தழல் ரவி போட்டிருக்கற சைஸ்க்கு) கூட காணலெ.

இதெபத்தி எல்லாம் எழுதி நேரத்தெ வீணக்காதே அப்பு.

dondu(#11168674346665545885) said...

"இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என்னாபன்றது."

அப்படிப் பாத்து பயப்பட்டீங்க. ஆனா இப்போ எல்லாதுக்கும் எத்தனா போலி டோண்டு ம்யூஸ் பேர்ல வந்துட்டானே, என்ன பண்ண போறீங்க?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//மியூஸ்// ஆம் ஐயா எனக்கு காலைல ஒரு அஞ்சாரு வந்துது எல்லாத்தயும் தூக்கி குப்பதொட்டில போட்டன். போலிகள ஆதரிக்கிற(?) எனக்கே குண்டுபோட்டா? நான் என்ன பன்ன வேலில போற ஓனான் கததான்:))

Muthu said...

மகி,

இந்த நாவலை பற்றிய என் பதிவு இங்கே..

http://muthuvintamil.blogspot.com/2006/03/blog-post.html

Unknown said...

அவரது எழுத்துக்கள் வசீகரமானவை மட்டுமல்ல வடிவழகும் கொண்டவை என்பதில் மாற்றமில்லை ஆனால் ஒரு சக தமிழ் எழுத்தாளனை எ.கா: சு.ரா. புரிந்துகொள்ள மறுக்கும் அதே நேரம் தனது எழுத்துக்களுக்கான விமர்சணங்களை மறுக்கும் ஒரு எழுத்தாளன் எத்தனை நன்றாக எழுதினாலும் அது தலைக்கனம் மற்றும் கலகவாதி என்பதன் வெளிப்பாடாகவே அமையும். அதற்கு சாருவும் விலக்கல்ல. அவரது எழுத்துக்கள் எந்த உள்நோக்கமுமின்றி வெறும் கலகத்தை தூண்டும் கருவிகளாகவே வளர்ச்சி பெற்று வருவது பின் நவீனம் என்பதன் ஆரோக்கியம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலாததன் விளைவே இப் பதிவு

லிவிங் ஸ்மைல் said...

சாரு-வை நானும் தொடர்ந்து படித்தே வருகிறேன்.. ஒரு கட்டுரை உருப்படியாக இருந்தால் 9 கட்டுரை உளரலாக இருக்கும், தற்புகழ்ச்சிக்கும், பிறரை குறை சொல்வதற்கும் குறைவில்லாத மனிதர்..

உங்களைப் போலவே நானும் ஒருமுறை ஆப் லைன் மெசேஜ் தந்திருந்தேன். சில நாட்களில் ஹாய் சொல்லி வந்தார்.. பதில் ஹாய் தந்தேன். என்னை யாரென்று தெரிந்துதான் வந்ததாக நினைத்தேன்.. ஆனால், தொடர் சாட்டில் அவருக்கு என்னை தெரியவில்லை போலும்.. so, எனது யாஹூ 360ஐ படிக்க கொடுத்தேன்.. அவ்வளவு தான் ஆள் Great escape...

அதற்கு முன் ஒரு செய்தி..

நான் பூனேவிலிருந்து வந்த புதிதில் எனக்கு வேலை பெற்றுத் தர கோரி கேட்ட நண்பர்களில் சாருவும் ஒருவர்.. தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் எந்த இலக்கிய Inteletucal sickம் குறைவில்லாத சாருவிடம் நான் ஒரு அலி, M.A.பட்டதாரி தங்களது influcenceல் தங்களுக்கு தெரிந்த (ஒரு அலிக்கு வேலை வாய்ப்பு தரக் கூடிய பக்குவமும் வாய்ப்பும் உள்ள) நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து உதவலாம் தானே என்று கேட்டேன்...

ஆம்/இல்லை இரண்டில் ஒன்று சொல்லாலாம்... உலகின் மிகச் சிறந்த நேர்மைத் திலகமாக தன்னைக் காட்டிக் கொள்ளும் சாருவால் பாவம் இது கூடவில்லை..

எத்தனையோ நழுவல்கள்.. பின்னர், வேலையும் கிடைத்து செட்டில் ஆன நிலையில் தான்.. எதற்கும் ஆகட்டுமென்று அட்ரஸில் Add செய்தேன்.. அதைப் பார்த்து வந்த சாரு பின் என் யாகூ 360 பார்த்து எந்த பதிலின்றி எஸ்கேப் ஆனார்...

மேலும், அவரின் கோணல் பக்கங்கள் 3ம் பாகம், 2ம் பாகம்(மலிவு விலையில்) படித்தபின்.. அதில் சில அலிகளைப் பற்றி நல்ல விதமாக கொஞ்சமும், புரிதலின்றி பல் உளறல்களும் இருந்தன... அது குறித்த பேசிய போதும், அப்புறம் பேசுவோம் என்று நலுவியவர்...

யாருக்காக இந்த பகல் வேஷம்? இதில் இந்தியா இவரை போன்ற பின்நவீனத்துவ, நான்-லீனியர் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்று புலம்பல் வேறு...