Thursday, May 10, 2007

தமிழ்த்தாயின் தவப்புதல்வனும் தறுதலைப் புதல்வனும்


சட்ட சபை பொன்விழா நெருங்கும் இதுபோன்ற ஒரு நேரத்தில் இந்த விவகாரம் வெடிக்கும் என எந்த திமுக தொண்டனும் நினைத்திருக்க மாட்டான் ஆனால் இதை நடத்தியது திமுக தொண்டர்கள் என நினிக்கும் போது இந்த புல்லுறுவிகளை என்ன செய்தால் சரியாகும் என வன்மம் கொழிக்க நினைப்பு வருவதை தடுக்க முடியவில்லை.


தனது மிக நீண்ட நெடிய அரசியல் சரித்திரத்தில் இப்படி ஒரு தறுதலை பிள்ளையாக பிறந்ததற்கு கலைஞர் ஒரு இரவாவது மனம் வெதும்பி அழுதிருப்பார், தினகரன் ஒரு பத்திரிகை அது கருத்துக்களை வெளியிட தார்மீக உரிமை கொண்டது மக்களின் கருத்துக்களை வெளியிட்ட தினகரனுக்கு பரிசு மூன்று உயிர்கள்.

அப்படி என்ன இல்லாததை எழுதிவிட்டது தினகரன்? கலைஞரின் மகன் என்பதால் மக்கள் மனதில் இருப்பதை இல்லை என்றா எழுத முடியும்? ஆனால் இதை பொறுக்காக அந்த தறுதலை தன்மேல் மண்ணள்ளி[ப் போட்டுக்கொள்ள எடுத்த மாபெரும் முயற்ச்சி இப் படுகொலைகள்.

பத்திரிகையை பத்திரிகையாளர்களை நேசிக்கும் ஒரு தகப்பனுக்கு பிறந்த அழகிரிக்கு புத்தி பேதலித்துப் போனது ஏன்? இதை காரணமாக கொண்டு எதை சாதிக்க நினைக்கிறார்? மக்கள் தன்மேல் மதிப்பு வைக்காமல் போனால் அதை பெருக்க முயற்ச்சிக்காமல் அதைவிடுத்து சொன்னவன் மேல் பாய்வது ஏன்? பத்திரிகைகள் ஊடகங்கள் கட்டி வைத்திருக்கும் தன்மேல் ஆன ஒரு பிம்பத்தை அது பிம்பம் இல்லை உண்மைதான் என நிரூபிக்க எடுத்த முயற்ச்சியா?
இப்படி பல ஏன்கள் ஆனால் அதற்கெல்லாம் ஒரே பதில்தான் இருக்க முடியும்

.....நீதி......

முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டுள்ள கொள்கை குன்றுகளுக்கு ஒரு கேள்வி
நடுத்தெருவில் வைத்து பத்திரிகையாளர்கள் தக்குதலுக்கு உள்ளான போது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் கண்டணம் தெரிவித்த போது உங்கள் அரசுதானே இருந்தது? அப்போது ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கலாமே? ...

இச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதற்க்காக மரணதண்டனை,தரவேண்டும் என இப்போதே வாதம் தொடுக்கும் சக வலை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் "கொலைக்கு தண்டனை கொலையாகாது"

கலைஞரின் நீண்ட அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருக்கும் இன்நேரத்தில் இதுதான் உண்மையில் அவருக்கு விடுக்கப்பட்ட, சவால், பாசம் பத்திரிகையாளர்களான ஜனநாயகத்தூண்கள் மேலா, அல்லது அந்த தறுதலை மேலா என முடிவெடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாளை வரப்போகும் அரசியல் மாற்றம் எதுவாக இருப்பினும் அது நல்ல ஒரு முன்னுதாரணம் இல்லாத குறுட்டு பாதையாகிவிடும், வாரிசு அரசியல் நடத்துகிறார் கலைஞர் என்ற வாதமும் உடைத்தெரியப்பட வேண்டும் இதற்க்கு எதை விலை கொடுக்க வேண்டும் என கலைஞருக்கு தெரியாததல்ல.
திராவிடம், தமிழ், ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இவைதான் கலைஞரை இத்தனை கால்ம் தாக்குப்பிடிக்க உதவியவை. ஏறி வந்த ஏணி, அதை ஒரு அடங்காத பிள்ளைக்காக எட்டி உதைக்கவேண்டுமா அல்லது சரித்திரமாக வேண்டுமா முடிவெடுக்க வேண்டியது கலைஞர்.

அரசின் நடவடிக்கைகள் நீதியோடு இருக்கவேண்டும் என நம்புவோமாக


11 comments:

Anonymous said...

பல பொண்டாட்டிகள் கட்டியவன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பன்பாட்டின், தமிழ்த்தாயின் தவப்புதல்வன் ஆனது எப்படி ??

இதற்க்கு முன்னர் தி.மு.க குண்டர்கள் எந்த பத்திரிக்கையையும் தாக்கியதே இல்லையா ? யாரை ஏமாளியாக்குகிறீர்கள் ?

ஸ்டாலின் உத்தமனா? பாத்திமாவை கேட்கலாமா ?

தா.கியை கொன்ற போது எங்கே போனது இந்த மனிதனின் நீதியும், தமிழ் பன்பாடும் ??

தினமலர் தாக்கப்பட்ட போது ??

சுமங்கலி நெவொர்க் உதவியுடன் மற்ற சேனல்களை இந்த ரவுடி குடும்பம் இருட்டடிப்பு செய்ததே கிடையாது இல்லையா? பத்திரிக்கை சுதந்திரம அப்போது மட்டும் காற்றில் பறந்தது ஏன் ?

Unknown said...

அ(ட)ப்பாவி சாம்பு சும்மா எதையாவது எதிரா எழுதனும்கிறதுக்காக இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கப்படாது ..... இம்மாம் பேசுற நீங்க அந்த கன்னிமேரி ஜெவுக்கும் .... வேண்டாம் பதிவின் தேவையில்லாத கேள்விகள் கேட்க இன்று எனக்கு விருப்பமில்லை

aathirai said...

சாம்பு சொல்றது சரிதானே? கடந்த காலத்தில் குமுதம்,
துக்ளக் எல்லாம் திமுக க்காரர்களால் தாக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை கொஞ்சம் வித்யாசமாக அவங்க பத்திரிகையையே
தாக்கியிருக்கிறார்கள்.

சென்னை உள்ளாட்சி தேர்தலில் வன்முறையை அவிழ்த்து
விட்டது எந்த தறுதலைப் பிள்ளை ?

எல்லா தறுதலைகளும் பொது மக்களை பாதிக்காமல்
குடும்பச் சண்டை மைதானத்தில் போய் சண்டை போடுவதுதானே?

Anonymous said...

//சென்னை உள்ளாட்சி தேர்தலில் வன்முறையை அவிழ்த்து
விட்டது எந்த தறுதலைப் பிள்ளை ?
//
கடவுளே.............:_((((
அதை கண்ணால பார்தவன் நான்...

நன்றி ஆர்தி,சம்பு.
ம்ம்ம்ம்ம்....அட போங்க சார்...

தூங்றவங்கள எளுப்பலாம்...நடிக்கிறவங்கள??

//"கொலைக்கு தண்டனை கொலையாகாது"//

எம்.பி, எம்.எல்.ஏ பதவி தான் குடுக்கனும்!!

//கலைஞரின் நீண்ட அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருக்கும் இன்நேரத்தில் //

கலைஞரின் குடும்ப சொத்தும்...... இல்லையா???

வாழ்க ஜனநாயகம்........

வெறியுடன்,பாலா

(குறிப்பு...நண்பர் மகேந்திரன்...இது அம்மாவுக்கும்...சேர்த்துதான்..
அது இன்னும் ஒரு படி மோசம்...)

Anonymous said...

///முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில்.. ///

ஹாஹா!!! நல்ல நகைச்சுவை....

*****மனுநீதி சோழரு சிபிஐ விசாரணைக்கும் லெட்டரு போட்டுட்டாரு. சிபிஐ விசாரணை செஞ்சி எப்படியும் பதினஞ்சி இருவது வருசத்துல என்ன ஏதுன்னு சொல்லலையின்னா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சிய கவுத்திடுவாரு.. அப்புறம் என்ன.. ****

டைமிங் கா நண்பர் முகமூடி ஒரு பதிவு போட்டுருக்காரு...அவரொட ஸ்ட்டைய்ல்ல!!

http://mugamoodi.blogspot.com/2007/05/blog-post.html

ஆற்றாமைஉடன்,பாலா

Anonymous said...

//திராவிடம், தமிழ், ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இவைதான் கலைஞரை இத்தனை கால்ம் தாக்குப்பிடிக்க உதவியவை//

இது தான் செம காமெடி...திராவிடம், தமிழ், ஜனநாயகம் இதையெல்லாம் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேவையான போது அவர் உபயோகப்படுத்திக் கொண்டவை...

//தமிழ்த்தாயின் தவப்புதல்வனும்//

இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே சொல்லி உங்களையும் மக்களையும் ஏமாத்த போறீங்க்ளோ...

உடனே....ஜெ.. ஜெ ன்னு ஆரம்பிக்காதீங்க.. நான் இரண்டுமே ஒரே சாக்கடைதான் சொல்றென்... நீங்க கருணாநிதி சந்தனம்னு சொல்றீங்க...சாம்பு, ஆதிரை எல்லாம் கரெக்டா தான் கேக்குறாங்கோ.. பதில் சொல்லுங்கோ...

பொதுசொத்தை சேதப்படுத்தினால், அதற்கான தொகையை சேதத்திற்கு பொறுப்பான கட்சியே கட்ட வேண்டும் என்ற சட்டத்தை நீக்கியது திருட்டுத்தன்மில்லையா???..இதுதான் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருக்கும் இன்நேரத்தில் தமிழகத்திற்கு செய்யும் தொண்டா?

போங்க சார்... எல்லா அரசியல் பொறுக்கிகள் தான்... just note.. அழகிரி மசுர கூட புடுங்க மாட்டாங்க..

Unknown said...

பின்னூட்டங்களை படித்தால் உங்கள் எண்ணம் என்ன என்பது மிகத் தெளிவாக தெரிகிறது பழமொழி சொல்வார்களே "பனைமரத்தடியில் இருந்து பாலைக் குடித்தாலும்.... " இதே கதைதான்

Anonymous said...

//பத்திரிகையை பத்திரிகையாளர்களை நேசிக்கும் ஒரு தகப்பனுக்கு //

உங்கள் நகைச்சுவை உணர்விற்கு பாராட்டுக்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு கண்ணை மூடிக் கொண்டு, அறிவையும் அடகு வைத்திருப்பதாக உத்தேசம்?

Anonymous said...

///விடுக்கப்பட்ட, சவால், பாசம் பத்திரிகையாளர்களான ஜனநாயகத்தூண்கள் மேலா, அல்லது அந்த தறுதலை மேலா என முடிவெடுக்க வேண்டும். //
//இதற்க்கு எதை விலை கொடுக்க வேண்டும் என கலைஞருக்கு தெரியாததல்ல.///
=============================
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ....
ஓன்னுமே புரியல ஒலகதுல....

:=))

கொஞம் இத பருங்கோ...........

சென்னையில் முக.அழகிரி-சமாதானப் பேச்சு

அழகிரியின் சென்னை வருகை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுரை தாக்குதலைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடந்து கொண்டுள்ளன.

பேச்சு நடத்துவதற்காக கலாநிதி மாறனையும், தயாநிதி மாறனையும் முதல்வர் கருணாநிதி பலமுறை அழைத்தும் கூட அவர்கள் வர மறுத்து விட்டனராம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.


http://thatstamil.oneindia.in/news/2007/05/11/mkazhagiri.htmல்

க‌ல‌வ‌ர‌த்துட‌ன்,பாலு
==============================

ஆனா ப‌ருங்க‌...நண்பர் மகேந்திரன் இதுக்கும் ஒரு விள‌க்க‌ம் வச்சிருப்ப‌ரு...வாழ்க ஜனநாயகம்....

Anonymous said...

மகேந்திரன் சார்,ஆனாலும் உங்களுக்கு காமெடி சென்ஸ் ரொம்பவே அதிகம், நீங்க தமிழ் சினிமாவில் முயற்சி பண்ணலாம், வடிவேலுவுக்கு டிரேக் எழுத நீங்க சரியான ஆளு சார்!

Anonymous said...

நீ கம்மண்ணு இரு நைனா! சும்மா இருந்த அழகிரியை வம்புக்கு இழுத்தவனுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும். பத்திரிகையில் வம்பு எழுதுறவனும் கொலைகார ரவுடிக்கும் என்ன நைனா வித்தியாசம்?
செய்தி இருட்டடிப்பு, பிடிக்காதவர்களை வாரி தூற்றுதல் இதெல்லாம் பத்திரிகைச் சுதந்திரமா? நடிகை வீட்டு வாசல்ல தூங்கிறவனும், அரசியல்வாதியின் வால் பிடிப்பவனும், திட்டமிட்டு பொய் எழுதுறவனும்
நாட்டின் நாலாவது தூண்!!! தூ!!!