Saturday, June 03, 2006

மாற்றவே முடியாத சில விதிகள்

நீங்கள் இங்கே காணப்படும் எதையும் அது இல்லாவிட்டால் கற்பனைகூட செய்ய முடியாது சில அடையாளங்கள் இங்கே
மாற்றவே முடியாத சில விதிகள்
1. கடிதம் எழுதியதும் கடைசியில் இப்படிக்கு
2. திரைப்படம் முடிகையில் வணக்கம் அல்லது எ பிலிம் பை
3. விஜய் பாடுகையில் இந்த பாடலை பாடியவர் விஜய்
4. சன்டிவியில் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக
5. உடன்பிறப்புக்கு கலைஞர் கடிதம்... உடன்பிறப்பே
6. கமல்ஹாசனும் முத்தமும்
7. சிவாஜியின் அப்பா........
8. வடிவேலுவின் ( அது எப்படிங்க கைப்புள்ள நீங்க வந்துதான் இடத்த புல்பன்னுங்களேன்)
9. விவேக்கின் ரஜினி எம்.ஆர்.ராதா பாணி
10.ரபி பெர்னார்டின் கேள்வி கேட்டுவிட்டு அவரே பதிலும் கூறிக்கொள்வது
11.சன் டிவி வீரபாண்டியனின் அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு..
12.காமெடி டைமின் வணக்கம்..வணக்கம்...வணக்கம்
13.சாகுல் ஹமீதின் சென்ற வார உலகம் ... அன்பு நேயர்களே சாதணைகள்......சோதணைகள்...
14.அஜீத்தின் அது
15.ஜெயலலிதாவின் ...எனது அரசு...
16.வெற்றிகொண்டானும் அச்சிலேறா வசணமும்
17.வைகோவும் புலியும்
18.ராமதாஸும் மரமும்
19.ரஜினியும் இமய மலையும்
20.மன்மோகன்சிங்கும் தலைப்பாகையும்
21. கலைஞரும்.கண்ணாடியும்
22.சாரு நிவேதிதாவும் சர்ச்சைகளும்
23. விஜய டி.ஆரும் அடுக்கு மொழியும்
24.அவர் மகனும் கிசுகிசுவும் (நயன் தாரான்னு கேள்விப்பட்டேன்?)
25.சூர்யாவும் ஜோ வும் (?)
26.குமுதமும் அரசுவும்
27.ராணியும் அல்லியும்
28.சுஜாதாவும் கணேஷ்-வசந்தும்
29.ராஜேஷ்குமாரும் விவேக்-ரூபலாவும்
30. சுவும் பாவும் (சுபா)
31. தினத்தந்தியும் கள்ளக் காதல் கொலைகளும்
32. தினமலரும் அந்துமணியும்
33. இந்தியா டுடேவும் சில நேரம் முதலில் படித்தால் புரியாத செய்திகளும்
34. விகடனும் தாத்தாவும்
35. ப.சிதம்பரமும் பட்ஜெட்டும் (கண்ணியத்தையும் சேர்க்கலாம்)
36. ஜெயலலிதாவும் சசிகலாவும்
37. ராமராஜனும் பசுவும்
38. முரளியும் காலேஜும்
39. மோகனும் மைக்கும்
40. ஜெயலட்சுமியும் போலீஸும்
41. தினத்தந்தியும் வரிவிளம்பரமும்
42. தமிழ் முரசும் நச்சுன்னு இருக்கும்
43. கவுண்ட மணியும் செந்திலும்
44. திராவிடமும் தமிழக கட்சிகளும்
45. பேரரசும் மசாலாவும்
46. பாலாவும் மனநிலை பாதிப்பும்
47. பாலச்சந்தரும் முக்கோண காதலும்
48. ஏவிஎம்மும் உலக உருண்டையும்
49. ஜெமினியும் இரட்டையர்களும்
50. விஜயகாந்தும் அவர் காலும் சுவரும்
51. பா.ஜ.க வும் ராமரும்
52. இந்தமாதிரி எழுதுனாக்கூட படிப்பீங்கன்னு நெனச்சு எழுதுர நானும் என் குசும்பும்

இன்னும் ஏதாவது விடுபட்டிருந்தால் நீங்களும் எழுதுங்கள்

முக்கியமான ஒன்னு மறந்துபோச்சுங்க

இதையும் படிச்சிட்டு பின்னூட்டம் போடப்போற நீங்களும் உங்க பொறுமையும்

4 comments:

நாமக்கல் சிபி said...

//இந்தமாதிரி எழுதுனாக்கூட படிப்பீங்கன்னு நெனச்சு எழுதுர நானும் என் குசும்பும்//

:-)

பின்னூட்டங்களும் கொத்தனாரின் பதிவுகளும்.

நாமக்கல் சிபி said...

//இதை எழுதிய நீங்களும் தருமாடியும்//

தரும அடியைத்தான் தருமாடியும் என்று எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இது சூப்பரப்பூ!

Unknown said...

//50 வது புரில// அடப் பாவமே நீங்க அவரு படமே பாக்கலயா? சுவற்றில் கால்வைத்து சண்டைபோடுவாரே?

பொன்ஸ்~~Poorna said...

மாறியவை:
1. கடிதம் எழுதியதும் கடைசியில் இப்படிக்கு - இது இப்போ எல்லாம் யாரும் போடறது இல்லீங்க..
4. சன்டிவியில் இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக - அவங்க உலகத் தொலைக்காட்சிக்குப் போய்ட்டாங்க!!


5. உடன்பிறப்புக்கு கலைஞர் கடிதம்... உடன்பிறப்பே - இது கொஞ்சம் ஓவராத் தெரியலை? உடன்பிறப்புக்குக் கடிதம்னு போட்டுட்டு வேற யாருக்கு எழுதுவாரு?!!