Tuesday, June 27, 2006

அதிமுக மற்றும் திமுக தொண்டர்களுக்கு

கடைசியாக வலைப்பதிவெழுதி சுமார் பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. அதன் பின் இன்றுதான் எழுதுகிறேன். கடந்த பத்து நாட்களாய் என்பதிவுகளை காணாமல் ஏங்கிக்கொண்டிருந்த கோடானுகோடி தமிழ் அன்பர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. (என்னாத்த அதிர்ச்சி எல்லாரும் நல்லா சந்தோஷமா இருந்திருப்பீங்க) மீண்டும் போட்டுத்தாக்க வருகிறேன். ( இரண்டு நாள் எழுதாமல் இருந்ததும் வேர்களைத் தேடின்னு ஒருத்தர் பின்னூட்டத்துல ப்ளீஸ் ஸ்டாப் ரைட்டிங்னு கடுதாசி போட்டுட்டாரு சரி யார்டா அதுன்னு பாத்தா ஆளே காணும் எழுதாத ஒருத்தர் எழுதுர என்னையும் ஏன் சொன்னார்னு இன்னம் புரீல) ஒன்னுமில்லீங்க கொஞ்சம் ஒடம்பு சரில்ல அதாலதான் என்னால எதும் எழுதமுடீல. நான் ஏதோ இனிமே எழுதவே மாட்டேன்னு நினைச்சி வெடிவெடிச்ச எல்லா அதிமுக தொண்டர்களுக்கும்(அன்பாய் திட்டும் முகமூடி கழகம்) அதாங்க அனானிமசுக்களுக்கும் அடடா இனிமேல் குவாட்டர் கோவிந்தனும் கோவிந்தாவா என சந்தோஷப்பட்ட பாண்டேஜ் பாண்டியனுக்கும். திமுக கொடியை அரைக்கம்பத்தில் (திட்டாமல் முயற்சியளிக்கும் கண்மணிகள்) ஒரு நல்ல சேதி ஒரு கெட்ட சேதி (என்னா இனிமே ரின் சோப்பு கிடைக்காதான்னு கேக்காதீங்க) இனிமே வாரம் ஒரு பதிவு மட்டும் மொத்தம் உள்ள நான்கு வலைக்கும் நாலு பதிவு. அத மட்டுமே ஆதரிச்சு வளக்கபோறதா இந்த அறிவிப்பு மூலமா சொல்லிக்கிறனுங்க. ஒரேடியா அதிமுகவ மட்டும் விமர்சிச்சி எழுதறதால அவங்க ரொம்ப பேமசாயிடராங்க. நான் என்னமோ அவங்க செய்யாததியா சொல்றன்.? எதாவது நல்லது செய்ங்க நானும் ஆதரிக்க காத்திருக்கன்( என்னத்த அது இந்த ஜென்மத்துல நடக்காது)இன்னிக்கு கூட வைகோ வோட தங்கச்சி திமுக நடத்துறது மட்டமான அரசியல்னு சொல்றாங்க. அட ஒங்க மானம் காத்துல ஒயர பறந்தா எல்லாமே மட்டமாத்தான தெரியும்னு நம்ம கோவிந்தன் கேக்கிறார். அவரும் ஜெயா டிவிய இரண்டு நாள் பாத்துட்டு ஊருக்கு போனவர்தான் ஆளக்கானமேன்னு தேடிப்பாத்தா பாண்டிமடத்தில சேது சீயான் கணக்கா பித்துபுடிச்சு கெடக்காரு. இப்பதான் மொள்ள எந்திரிச்சு பிதாமகன் விக்ரம் மாதிரி கொஞ்சம் பேசுறாரு. அவரு எப்ப முழுசா ஜெமினி மாதிரி வருவாருன்னு நானும் காத்திருக்க்னுங்க. ஒன்னும் ஒக்காந்து டைப்படிக்க முடீலைங்க நாளைக்கு எழ்துறனுங்க. பத்துநாளா உள்ள கிடந்த எல்லாத்தையும் பாத்து எடுத்து நாளைக்கு எழுதுறனுங்க. இனிமே தான் ஆசுபத்திரிக்கு போனும்ங்க. எதாவது சொல்னும்னா பின்னூட்டம் போடுங்க( இம்ம்ம்ம்ம்ம்ம்.......இப்டி கேட்டு கேட்டுதாங்க பின்னூட்டம் வருதுங்க இதாலதான் கோவிந்தன் பேசவே மாட்டங்கிறார். )அப்றம் அவரு ஒரு ஐடியா சொன்னாருங்க நீ ஒன்னு போலியப்பத்தி எழுது இல்ல சாதியப்பத்தி எழுது அதுவும் இல்லன்னா இப்ப பேமசு கற்புதான் அதப்பத்தி எழுது சும்மா இந்தமாதிரி எதாவது எனக்கு உடம்புசரில்ல கால்ல வலின்னு லீவ் லெட்டர் எழுதுனா யாருய்யா படிப்பா ஒங் கவுண்ட்டர பாரு ஏழாயிரத்த தாண்ட எட்டு நாளாவுது என்னா மோ போ............


4 comments:

லக்கிலுக் said...

வாங்க தலைவரே... ஏற்கனவே நிறைய அதிமுக அடிவருடிகள் எல்லாம் ஓடிட்டாங்க.... உங்களுக்கு அவ்வளவு வேலை இருக்காதுன்னு நினைக்கிறேன்....

Unknown said...

என்னது ஓடிட்டாங்களா? நான் திரும்ப வரவேமாட்டேன்னு முடிவே பன்னிட்டாங்களா? இன்னும் கொஞ்ச நேரங்கழிச்சு பாருங்க அதிமுக காரங்க வந்து பின்னி பெடலெடுப்பாங்க

Anonymous said...

தம்பி பாத்து எழுதுப்பா ஆட்டோவுல ஆள் வரப்போகுது. நல்லா எழுதுற ஆனா சிலபேரு உன்ன திமுக காரன்னு முத்திரகுத்திடுவானுங்க. இங்க எழுதுர பாப்பான் எல்லாரும் அதிமுக காரணுங்க அதாலதான்
அன்புடன்...
கிருஷ்ணமூர்த்தி

Anonymous said...

lol