Monday, June 19, 2006

அன்புமணிக்கு அருகதை உண்டு

அன்புமணிக்கு மருத்துவர்களை கண்டிப்பதில் உரிமை உண்டா என்பதற்கு மறுப்பு உண்டா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு காரணமாக எண்பதுகளின் கடைசியில் நடைபெற்ற தமிழக சாலைமறியல் போராட்டத்தை காரணம் காட்டியிருந்தார்.
ஆளும் போது ஒரு முகமும் இல்லாத போது ஒரு முகமும் இருப்பது அரசியல்வாதிகளுக்கு. இயல்பே இதற்கு கருணாநிதியோ செயலலிதாவோ ராமதாசோ விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு பொதுமக்கள் பிரச்சணையில் அத் துறைசாற்ந்த ஒருவர் கண்டிக்காமல் வேறு யார் அதை செய்வது என்பது விளங்கவில்லை திரு பொட்டீக்கடை அவர்கள் சொன்னதுபோல் அணைவரும் அவர்களின் முதுகை திரும்பி பார்த்தால் வெறும் அசிங்கமே மிஞ்சும்.
இன்று ஊடகங்கள் குறிவைத்து அன்புமணியை தாக்குகின்றன என்றால் அதை மறுக்க முடியுமா?. இன்றுகாலை செய்திகளில் பார்த்திருக்கலாம் அன்புமணி பிரதமரை சந்திக்கிறார். துறை மாற்றப்படுமா ஒட்டுகேட்ட விவகாரம் வெடிக்கிறது. இதுதான் தலைப்பே.
தொலைபேசிகளின் பதிவுகளை திரட்டுவது அரசுக்கு ஒன்றும் புதிதல்லவே. முன்பொருமுறை ஆதரவுதந்த ராஜிவின் தொலைபேசி பதிவு விவகாரத்தில ஆட்சியை இழந்தவர்தான் சந்திரசேகர். அன்புமணி விவகாரத்தில் அவர் துறை சார்ந்த விஷயத்தை அவர்கண்டிக்க உரிமையில்லாதுபோனால் அவ்வேலையை யார்செய்வது?. மரத்தை வெட்டினார்கள் இன்னும் எத்தனைகாலங்களுக்கு இதையே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்.
போரட்டம் என்பதற்கும் சண்டித்தனம் என்பதற்கும் தங்களுக்கு வித்தியாசம் தெரியும் என்றே எண்ணுகிறேன். தனியார் துறைகளிலும் அரசுத்துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுபவர்களுக்கும் அதை எதிர்த்து போரிடுபவர்களுக்கும் வேறுபாடு உண்டு. பசித்தவனுக்கு உணவின் தேவை தெரியும் பசியாறியவன் சேர்த்துவைக்க போராடுகிறான். நீங்கள் யாருக்கு உணவு வேண்டும் எனச் சொல்வீர்கள்.
அன்புமணி ஒரு வன்னியராக மட்டுமே பார்க்கப் படுவதால் மட்டுமே உங்களுக்கு அவர் அருகதையில்லாதவராக தெரிகிறார். அவரை அமைச்சராக பாருங்கள் அவரின் அருகதை தெரியும். கடந்தகாலங்களின் தவறுகள் திருத்திக்கொள்ளப்படுகையில் அவற்றை பாரட்டுவது மட்டுமே அவர்கள் மீண்டும் அதே தவறை செய்யாமல் தடுக்கும். மேலும் மேலும் கடந்தகால செயல்களுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு அருகதை யில்லை என்பது சரியான வாதமல்ல.
திரு வேணுகோபாலின் செயல் கண்டிக்க தக்கது என்பதை எந்த விதத்தில் மறுக்கிறீர்கள் என்பதை அறியமுடியவில்லை. அவர் தன் சக ஊழியர்கள் தவறுசெய்யும் போது சுட்டிக்காட்டியிருந்தால் அதை அன்புமணி ஏதும் சொல்லப்போவதில்லை. மாறாக தவறுகளுக்கு துணைபோவதை கண்டிக்கும் உரிமை அமைச்சருக்கு உண்டு.
தங்களின் உரிமைக்காக போராடும் மருத்துவர்கள் கடமையை மறப்பது எவ்வகையில் நியாயம் என்பதை அறியேன். அதுவும் அதை கண்டிக்கும் ஒருவர் பிற்பட்ட துறையில் இருந்து வந்தவராக இருப்பின் ஆதிக்க மனோபாவம் தலையெடுப்பது தவிற்க்க முடியாத ஒன்று.
இதே விவகாரம் தமிழகத்தில் நடைபெற்றபோது எஸ்மாவும் டெஸ்மாவும் செயல்வடிவம் பெற்றபோது அவற்றை பாரட்டியவர்கள் அதை ஒரு பிற்படுத்தப் பட்ட அமைச்சர் செய்கையில் தவறு என்பதும் அருகதை யில்லை என்பதும் வேடிக்கை. அதே துறைசார்ந்தவர் மருத்துவராகவே இருந்தாலும் அவர் வன்னியர் மற்றும் தமிழர் என்பதால் மட்டும் அன்புமணியைகுறிவைக்கிறார்கள்.
வேணுகோபாலின் விவகாரத்தில அமைச்சர் அன்புமணிக்கு முழு அதிகாரமும் அருகதையும் உண்டு.

17 comments:

Muthu said...

மகேந்திரன்,

அரசியல்வாதியாக அவர்கள் சராசரி அரசியல்வாதிகள்தான்.ஆனால் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் வேணுகோபால் செய்ததும் பத்திரிக்கைகள் நடந்துகொள்ளும் முறையையுமே விமர்சித்தேன்.

மேலும் வியாபாரிகளின் பேச்சுக்கு கிடைக்கும் முக்கியத்துவமும் அங்கு விமர்சிக்கப்பட்டது.

உங்கள் பதிவு இன்னும் தெளிவை கொடுத்தது.நன்றி

Unknown said...

நானும் அதையே சொல்கிறேன் அரசியல் வாதியாக மட்டும் அவரை பார்ப்பதாலேயே அவர்கள் அருகதையில்லாதவர்கள் எனச்சொல்வது எந்தவகையில் சரி? அன்று மரம் வெட்டியதையே மீண்டும் சொன்னதால் திரு மாயவரத்தான் அவர்களுக்கு இப் பதிவை பதிலாக தரவேண்டி வந்தது. பசுமைத்தாயகம் மூலம் பல மரங்கள் நட்டபோது பாராட்டாதவர்கள்1987ல் மரம் வெட்டியதை பேசுவது சரியா? மேலும் வேணுகோபால் ஒன்றும் நடுநிலைவாதியில்லையே. அமைச்சருக்கெதிராக பிரதமரிடம் புகார் தருமளவு பின்புலம் இருப்பதால் தான் இவ்வளவும்?. போராட்டங்களை கைவிடக்கோரி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவார்கள் ஆனால் அதே துறைசார்ந்த அமைச்சர் சொன்னால் அது தவறா? அப்படி அமைச்சரின் செயல்பாடு தவறென்றால் நீதிமன்ற தீர்ப்பும் தவறுதானே? பஸ்சை கொளுத்தும் அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்டது எனும் இவர்கள் மரத்தை வெட்டியதை இருபதுஆண்டுகளாக சொல்வது அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தான் என்பது என்ன தவறு?

மாயவரத்தான் said...

முன்பு பணிக்கிடையில் இந்தப் பதிவைப் பார்த்து விட்டு பிறகு வந்து பின்னூட்டமிடலாம் என்று சென்றேன். இப்போது வந்து பார்க்கையில் உங்களின் மேற்கண்ட பின்னூட்டத்தின் கடைசி வரியைப் படித்தவுடன் நீங்களும் 'மஞ்சள் காமாலை கண்ணுடையவர் தான்' என்பது புரிந்து போனதால், என்னுடைய விளக்கம் வேஸ்ட் என்பது புரிந்து போனது.

நன்றி.

Unknown said...

நான் மஞ்சள்காமாலை கண்கொண்டதாகவே இருக்கட்டும் உங்கள் விளக்கம் சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். நீங்கள் சொல்வதை பார்த்தால் அதிமுகவை விமர்சிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை எனும் தோற்றம் வருகிறது

VSK said...

அன்புமணி அமைச்சர் மட்டுமால்; ஒரு மருத்துவரும் கூட!
சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்.
அதேபோல, அவரது முடிவுகளைத் தவறென்றொ, சரியென்றொ விமரிசிக்க இன்னொரு மருத்துவரான வேணுகோபாலுக்கும் உரிமை உண்டு.
பொறுத்திருந்து பார்ப்போம்.

இதில் போய் அவர் வன்னியர், தமிழர் என்பதால் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் !!
பிரச்சினையைப் பற்றிப் பேசமுடியாமல், திசை திருப்பவே உதவும்.

மாயவரத்தான் said...

//நீங்கள் சொல்வதை பார்த்தால் அதிமுகவை விமர்சிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை எனும் தோற்றம் வருகிறது //

முதலில் 'பிறபடுத்தப்பட்டவர்' என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள். இப்போது இந்த வாதமா?!

சூப்பர்.

Unknown said...

மரம் வெட்டியதாக இன்றும் கூறப்படும் வன்னியர் சங்க போராட்டத்துக்காக அன்புமணிக்கு தகுதியில்லை என்று திரு மாயவரத்தான் அவர்கள் எழுதியதற்கு பதிலாகவே இப் பதிவு எழுதப்பட்டது மேலும் ஊடக தாக்குதலுக்கு ஆளாகும் ராமதாஸ் அன்புமணி திருமாவளவன் போன்றவர்களும் அவர்களுக்கு எதிராக மட்டும் ஒருதலைப் பட்சமான செய்திகளை வெளியிடும் சில பலம்பொருந்திய வடநாட்டு ஊடகங்களும் இதையே ஒரு பா.ஜ.க இல்லை ஒரு காங்கிரஸ் அமைச்சர் செய்திருந்தால் இத்தனை வெளிச்சம் போடுமா என்பதே எனது கேள்வி. அதிலும் வடநாட்டு ஊடகங்களுக்கு தென்னிந்தியா என்பது முழுவதுமே ஒரு தாழ்ந்த நோக்கோடு பார்க்கப்படுவது உண்மைதானே?

குழலி / Kuzhali said...

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_19.html

Unknown said...

//பஸ்சை கொளுத்தும் அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்டது எனும் இவர்கள் மரத்தை வெட்டியதை இருபதுஆண்டுகளாக சொல்வது அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால் தான் என்பது என்ன தவறு?//
திரு மாயவரத்தான்..
முதும் ஒரே வாக்கியம் தனித்தனியாக படித்தால் இப்படி தப்பாகவே புறிந்துகொள்வீர்கள்.

Unknown said...

நன்றி குழலி. சாட்டையடி பதிவு உங்களது

கப்பி | Kappi said...

மகேந்திரன்..
எக்ஸ்பிரஸை கொஞ்சம் http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_19.html இங்க திருப்புங்க..

Anonymous said...

அதுசரி அன்புமணின்னா யாருங்க?

Unknown said...

அவ்ர் யாறென்று தைலாபுரத்தில் கேட்கவும் அல்லது திரு பான்டேஜ் பாண்டியனிடம் கேட்கவும்
( பாண்டியன் கோச்சுக்க போறார்:))

Anonymous said...

//அவர்களுக்கு எதிராக மட்டும் ஒருதலைப் பட்சமான செய்திகளை வெளியிடும் சில பலம்பொருந்திய வடநாட்டு ஊடகங்களும் இதையே ஒரு பா.ஜ.க இல்லை ஒரு காங்கிரஸ் அமைச்சர் செய்திருந்தால் இத்தனை வெளிச்சம் போடுமா என்பதே எனது கேள்வி //


அவங்க (பாஜ.க) பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினதுக்கே
'அது லஞ்சம் இல்லை லாபி' என்று விளக்கம் கொடுத்தவர்களாச்சே.

Anonymous said...

மருத்துவமனையில் எத்தனை பேர் உயிர் போகும் நிலையில்
life supportஇல் இருந்திருக்கலாம். நிர்வாகம் நின்று போனபோது
தலையிட்டு சரி செய்ததில் என்ன தவறு என்று தெரியவில்லை.

Anonymous said...

அன்புமணி வன்னியர் என்பதை விட தென்னிந்தியர் என்பதால்தான் அதிகம் எதிர்க்கப் படுகிறார்
நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

Thanks for sharing this.