தமிழுக்கு எத்தனை 
வயதானதறியேன் ஆனால்
இத் தமிழனுக்கு வயது எண்பத்து 
மூன்று
அக் கண்ணாடிக்குள் 
இருக்கும் 
கண்களை அறியேன்
ஆனாலும் அதில் 
தமிழும் தமிழனும் என்பதை 
அறிவேன்
ஈரோடு பெரியாரின் 
இடப்புறத்தில் இருந்தாய் பின் 
அண்ணாவின் கரம் பற்றி 
அரசியலில் நுழைந்தாய்
உனைபிடிக்கவில்லை என்போனும் உன் 
தமிழ்படிக்க மறப்பதில்லை
தல்ஸ்தோய்க்கு ஒருதாய் 
அதை யும் நீ
தமிழிலே தந்தாய் 
எம் மூத்த தமிழ்த்தாய்
உன் பேனா எழுதிய தூரம் கூட 
இருக்காது கதிர்
அந்த முனைக்கு வேறேது எதிர்?
ஐந்து விரல் காட்டி அழைத்தாய் 
எங்களை
ஒற்றை விரல் நீட்டி உயர்த்தினோம் 
உங்களை
ஐந்தாவது முறையாய் 
முறையாய் ஏறினாய் 
அரசுக் கட்டில்
அதனால் சிலபேர் இப்போது 
இக்கட்டில்
எக்கட்டிலும் எனக்கு இக்கட்டில்லை 
என்பாய் அதைவிட சிறப்பு 
நீ எழுதும் தமிழ்பாட்டில் காண்பாய்
தமிழுக்கும்  தமிழனுக்கும்  
முகவரி கேட்டால் என்பதில் 
ஒருவரியில் 
அதுகதிரவனின் சுடராய் இருக்கும் 
கருணாநிதியில் 
குடும்ப அரசியல் என கூப்பாடு 
போடுவோரிடம் கூறு இது 
தமிழ் பரம்பரை அரசியல் என்று
எப்போதும் எழுதும் உடன்பிறப்புக் கடிதம் 
அது இப்போதும் எப்போதும் 
மறக்காத படிகம் 
தமிழர்களால் நீ அரியணையில் 
அதனால் இன்று 
தமிழ் அரியணையில்
அனைவரும் செய்யலாம் அர்ச்சணை
அது பெரியாருக்கு நீ தந்த தட்சணை 
குறளுக்கும் எழுதினாய் உரை 
அதை குறைத்து மதிக்க யாருண்டு பறை!
மறக்க நினைத்தாலும் நினை 
நினைத்தால் அவ் 
வை யகக் கோமாளிகளின் 
துரோகங்கள் வருவதுண்டு நெஞ்சில் 
அவர் பேச்சில் கலந்திருக்கும் நஞ்சில்
சிவன்கூட நஞ்சுண்டானென்று 
சாத்திரமுண்டு 
நீ உண்ட நஞ்சால் உனக்கு 
சரித்திரமுண்டு
வாழ்த்த வயதின்றி
வணங்குகிறோம்
 
 
1 comment:
மகேந்திரன்,
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. உண்மைய சொல்லுங்க இது சொந்த சரக்கா? வாலி வாடை வீசுதே.
சபி
Post a Comment