Tuesday, June 13, 2006

கண்ணகியும் தேங்காய் சிரட்டையும்

நாகரீகம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. மனிதன் தன் இருப்பிடத்தில் இருந்த படியே உலக விசயங்களை அறிந்து கொண்டும் அதன் மாற்றுக்கருத்துக்களுக்கு வாதிட்டுக்கொண்டும் தனது இருப்பை ஒரு உயிர்ப்போடு வைத்திருக்க நினைக்கும் காலமிது ஆனால் இன்னும் மாறாத சில பிற்போக்கு பழமைவாத கொடூரர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
வத்தலகுண்டு விஷயத்திற்கு முதலில் வருவோம்." வத்தலகுண்டு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் பழக்கம் ஒரு பெண் கற்புள்ளவளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள ஒரு புது?வழியை காலம் காலமாக பின்பற்றுகிறது. அதாவது கற்களால் அடுப்பு அமைத்து அதில் தீமூட்டி அதன் மேல் தேங்காய் ஓட்டை (சிரட்டை) வைத்து அதில் தண்ணீரும் அரிசியும் இட்டு சமைக்க வேண்டும் அந்த தேங்காய் மட்டை அரிசி சாதமாகும் வரை எரிந்து கருகாமல் இருந்தால் அப் பெண் கற்புள்ளவள் வெந்துபோனால் கற்பிழந்தவள்"
இதுபோன்ற மனிதப் பதர்களும் நாட்டில் உலாவ நமது மக்கள் இன்னும் இருக்கிறார்கள். இது ஊர் கட்டுப்பாடு வேறாம். காலம் காலமாக இப்படியே நடப்பதாக அந்த மாக்களின் சப்பைகட்டு வேறு. இதனால் எத்தனை கண்ணகிகள் கற்பிழந்தார்களோ அந்த ஊரின் நாட்டாமைகளுக்கே வெளிச்சம். இது பெண்களுக்கு மட்டுமானது என்பதுதான் கொடுமை ஆண்களுக்கு எனக்கு தெரிந்து எந்த ஊரிலும் கற்பில் களங்கம் வருவதில்லை ஏனென்றால் கற்பு பெண்ணுக்கு மட்டுமேயான பாக்கியம் என்ற ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. "ஆம்பளடீ ஆயிரம் இடம் போவேன்" என்போறும் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.
முதலில் கற்பு என்றால் என்ன என்பது தெரியவில்லை எனக்கு. அது உடல் சார்ந்ததா இல்லை மனசு சார்ந்ததா? இல்லை அப்படி எதுவுமே இல்லையா?. எனக்கென்னவோ கற்பு என்பதை உண்மையாக இருத்தல் என்பதாக மட்டுமே கருததோன்றுகிறது. கண்ணகி கோவலன் மாதவி, மணிமேகலை எல்லாம் புராணகால கதைகள் என்றாலும் அது என்னவோ கண்ணகி மட்டும் கற்புக்கரசியாக நம் இலக்கியவாதிகளும் அரசியல் வாதிகளும் ஒரு பெறும் கூற்றை உண்டாக்கி வைத்துவிட்டனர்.
எனக்கென்னவோ கண்ணகியை நினைத்தால் வேதனைதான் மிஞ்சும். "ஆணாதிக்க உலகின் முதல் பெண்ணடிமைச் சின்னம் கண்ணகி" இதுவே உண்மை. கணவன் மாதவியோடு இருக்கும் ஒரு காமுகனாக இருந்தாலும் சரி. கணவனே கண்கண்ட தெய்வம் எனும் நிலையில் ஒரு பெண்வாழவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது எப்படி பெண்மையின் சின்னமாகமுடியும்.ஞானி சொன்னது போல கண்ணகி ஆள்பவர்களுக்கு ஒரு கரடி பொம்மைதான். ஆனால் கொஞ்சம் காஸ்ட்லி.
தேங்காய் சிரட்டில் கற்பை தேடும் வஞ்சக ஆண்களின் உலகில் நானும் ஒருவனாக இருப்பது வெட்கக்கேடு. ஹிந்தி நடிகை பூஜா பட் சொன்னது போல எ பிக் இஷ்யூ அபொட் த ஸ்மால் டிஸ்யூ இதுதான் மிகப்பொருத்தமானது. மற்றபடி கற்பெல்லாம் எதுவும் இல்லை ராமதாசும் திருமாவளவனும் வேண்டுமானால் ஒரு கலகத்தை கிளப்ப அதை கையில் எடுக்கலாமே ஒழிய. எந்த பெண்விடுதலை இயக்கமும் சமூக ஆர்வலர் களும் அதை கண்டுகொள்வதில்லை. அதற்காக யாரும் எதுவும் செய்யலாம் என்று சொல்லவில்லை. கற்பென்று ஒன்றிருந்தால் அது ஆணுக்கும் உண்டு என்பதே நிஜம். பெண்ணுக்கு மட்டும்தான் கற்பென்றால் அது பேடிகளின் கூப்பாடு என்பதை தவிற வேறெதுவும் இல்லை.
அந்த வத்தலகுண்டு சம்பவம் ஒரு உதாரணமே இதுபோல் நிறைய இடங்களில் வெவ்வேறு முறைகளில் கற்பு களவுபோகும் சம்பவங்கள் உண்டு. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தவறென்று கூறும் சமூகம் அவளை மனநிலை அளவில் காயப்படுத்தினால் தாங்க்கிக்கொள்கிறது. பாலியல் பலாத்காரம் என்பது வெறும் உடல் சம்பந்தமானது அது மறையும் ஆனால் உளவியல் ரீதியாக மறையுமா?. தன் கனவு நாயகியுடன் உல்லாசம் காண நினைக்கும் கணவன் மனைவி மாத்திரம் சேனம் பூட்டிய குதிரையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது எந்த ஊர் நியாயமென்றறியேன்.
வத்தலகுண்டு மக்களுக்கும் இன்னும் இதே கற்பு பற்றிய பரிசோதனை சமாச்சாரங்களில் ஈடுபடும் கயவர்களுக்கு ஒரு கேள்வி: அதே சிரட்டையில் நீங்கள் சமைக்கத் தயாரா?
கற்பை பொதுவில் ஆணுக்கும் வைப்போம் எனும் பாரதியின் பாடல் கூட இப்போது இல்லை எல்லாம் அப்படி போடுதான். பாரதியின் செல்லம்மா கூட பாரதிக்கு அடங்கியிருந்ததாலேயே அவரிடம் அடியோ வசவோ இல்லாமல் இருக்க முடியும் இலாவிடின் "நான் எழுதுற பாட்டு வேற என் வாழ்க்கை வேற ஒழுங்கா அடங்கியிரு என்றிருப்பார்"
1 comment:

Anonymous said...

இப்போ கண்ணகி சீசனா? இடஒதுக்கீடு முடிஞ்சு இப்போ கண்ணகிபற்றி வலைஎழுதுவது பிரபலமாகிறது?