Saturday, June 17, 2006

கூட்டணி ஆட்சிக்கு தயங்குவதேன்

கூட்டணி ஆட்சிக்கு தயங்குவதேன் - வைகோ
மதுரை திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட வைகோ திமுக தேர்தலுக்கு முன் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று கூறிவிட்டு இப்போது ஏன் தயங்குகிறார்களென்று கேள்விஎழுப்பி உள்ளார்.
அதோடு இது மைனாரிட்டி அரசு என்றும் தெரிவித்தார்
இதைக் கேட்ட நமது கு.மு.க பொதுச்செயலாலரும் கருணாநிதியின் அறிவிக்கப்படாத கொ.ப.செ வுமான குவாட்டர் கோவிந்தன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை." செல்வி. ஜெயலலிதாவின் அண்ணன் வைகோ அவர்களே! கல்யாணத்துக்கு போனமா தம்பதிகள வாழ்த்துனமான்னு இல்லாம அங்கியும் போயி அரசியல் பேசனுமா ? பாவம் அந்த புள்ளங்க எம்புட்டு நேரம் மேடைல இருக்கும். அது சரி உங்களுக்கு மைக்க பாத்தாலே பேச்சு தன்னால வருது. நமக்கு குவாட்டர் போட்டாத்தான் வருது. அவங்க அவங்க பழக்கமில்ல அது .
கூட்டணி ஆட்சிக்கு தயார்னு எங்க தல ஒருநாளும் சொல்லல யோசிப்போம்னுதான் சொன்னாரு. யோசன பன்னிட்டாரு அதால இப்ப இல்லங்கிறார். இதப்போயி என்னமோ பெரீசா பேசுறிங்களே. அட அப்பிடியே சொல்லீர்ந்தாலும் அது எலக்சனுக்கு முன்ன. இப்ப எலக்சன் முடிஞ்சு போச்சே. அப்பிடிகா பாத்தா நீங்களுந்தான் ஒங்க தங்கச்சிய சதிகாரி சர்வாதிகாரி பெண் ஹிட்லர் கொலைகாரி அப்பிடிலாம் சொன்னீங்க இப்ப அண்ணனும் தங்கச்சியும் ஒரே மேடைல கொஞ்சிக்கிறீங்க.
அதுலயும் ஒரு போட்டோ பாத்தனுங்க, நீங்களும் ஒங்க தங்கச்சியும் ஒங்க தம்பியும் ஒன்னா கைகோத்து நின்னு சிரிச்சா மாறிக்கு அதுல ஒங்க மொகத்தில இருந்த சிரிப்ப பாத்ததும் உள்ள போன ஓல்டு மங்கு கபால்னு வெளிய வந்துருச்சு. நானும் எம்மானோ குடிச்சிருக்கனுங்க இப்பிடி ஆனதில்ல .
அதெதுக்கு நீங்க சொன்னதுக்கு வாரனுங்க. எங்க ஒனரு எம்பிரண்டு ஒரு கடுதாசி ஒன்னு போட்டத பாத்தீங்களா? அதுல சொன்ன மாறி இப்ப கட்சிமாறிட்டீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்குங்க. அப்பிடி எதுவும் இருந்தா ஒரு அறிக்க குடுங்க . ஆமா லட்சக்கணக்குல திரண்டதா சொல்றீங்களே அந்த ஊருபேர சொல்லுங்க?. அது அதிமுக காரங்களா இருக்கும் ஒருவேள நீங்க அவங்கள உங்காஆளுங்கன்னு தப்பா நெனச்சிருப்பீங்க. ஒங்க தங்கச்சிக்கு தெரிஞ்சா நீங்க காலி.
அதென்னங்க மைனாரிட்டி அரசு மெஜாரிட்டி அரசு. நமக்கு தெரிஞ்சதுல்லாம் அரசு மட்டுந்தாங்க. நாங்க மைனாரிடி அரசா இருக்கறதால ஒங்களுக்கு தான் லாபம் இல்லன்னா ஒங்க ஆளுங்க சட்டசபைய கனவுலதான் பாக்கலாமுங்க. அதுலாஞ்சரி இப்ப கூட்டணி அரசப்பத்தி நீங்க ஏங்க பேசுரீங்க?. காங்கிரஸ்காரங்க காசு தந்தாங்களா? இல்ல கூட்டணி அரசு வர்ற மாதிரி இருந்தா திமுக கூட கூட்டணி வப்பீங்களா?
ஒங்கள பத்தி நம்ம சாருநிவேதிதா ஒரு வார்த்த சொன்னா லும் திரு வார்த்த சொன்னாருங்க முடிஞ்சா ஒங்க கட்சிய வளருங்க இல்லாட்டி ஏதாவது கட்சில சேருங்க."
மப்புடன்...
குவாட்டர் கோவிந்தன்,
பொதுச்செயலாளர்,
குடிகாரர் முன்னேற்ற கழகம்.
மற்றும் கருணாநிதி கொ.ப.செ.
மானிட்டர் மாடி .
1/4 (குவாட்டர்)
மதுப்பாக்கம்
கள்ளூர்.
( உங்களெ இனிமே மைக்கோன்னு கூப்பிட்லாமுன்னு இருக்கனுங்க)
2 comments:

Darren said...

சும்மா நச்சுனு இருக்கு..super..

வையகத்து கோமாளி வைகோ இதுவும் சொல்வார் இதற்கு மேலும் சொல்வார்.

Anonymous said...

Simply Superb Keep it up
:))