Monday, June 12, 2006

பின்னூட்டங்களை முன்வைத்து

பின்னூட்டங்களை முன்வைத்து இந்த பதிவை நான் எழுத வேண்டாம் என்றே சில நாட்கள் நிணைத்திருந்தேன் ஆனால் எழுதித்தான் ஆகவேண்டிய கட்டாயம் உண்டாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக பிளாகர் உடன் போராடி எனது வலைகளின் வடிவமைப்பை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்ததால் என்னால் சரியாக எதையும் எழுதக்கூட இயலவில்லை. குறிப்பாக மினுமினுக்கும் செய்திகள் டெக்னொராட்டி இனைப்பு தேன்கூடில் பதிய என்று பொழுது அதற்கே சரியானது. அதோடு நான் பயன்படுத்தும் கனிபொறி வேறு நீயா நானா என்று குவாட்டர் கோவிந்தனாய் சண்டித்தனம் செய்தது. எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு பின்னூட்ட மொடெரேசனை திறந்துபார்த்தால் என்ன ஆச்சர்யம் என்னால் நம்பமுடியவில்லை .
நீங்கள் நிணைப்பது சரிதான் ஒரு பின்னூட்டம் கூட இல்லை மொத்தமுள்ள நான்கு வலைப்பூக்களிலும் இதே நிலை. ஒருவேளை எனது டெம்பிளேட்டை மாற்றியதால் இப்படி எதுவும் பின்னூட்டம் இடுவதில் சிறமம் இருக்குமோ என்று என்னுடைய வேறு ஒரு பக்கத்தில் இருந்தும் அனுப்பினேன் சோதனை பின்னூட்டம் அது சரியாகவே வந்திருந்தது. ஆகா நம்மாளுங்க ஓசி பேப்பர்ல நியூஸ் பாத்துட்டே ஆயிரம் விமர்சனம் பன்னுவாங்களே திடீர்னு திருந்திட்டாங்களா ஒரே சந்தேகம். அதாலதான் இந்த பதிவே இத படிக்கிற யாரா இருந்தாலும் திட்டி போட்டா கூட பரவாயில்ல எனக்கு பின்னூட்டம் வருதா இல்லையாங்கிற சந்தேகத்தை போக்க ஒருவரி எழுதிட்டு போங்க,
நானும் புதுசா எழுத யோசனை பன்னி பாத்தன் ஒன்னும் சிக்கல. சரி பின்னூட்டத்த வச்சி ஒரு பதிவு போட்ற வேண்டிதுதான்னு இப்ப இத எழுதுறன். இதுக்கு நீங்க பின்னூட்டம் போட்டு என்னோட சந்தேகங்கள தீர்த்து வச்சா நல்லாருக்கும் மகராச ராசிகளா ........... மறக்காம எழுதுங்க :-((

15 comments:

ramachandranusha(உஷா) said...

இதோ போட்டாச்சு :-)

பொன்ஸ்~~Poorna said...

1... 2... 3.. comment testing... :)

குமரன் (Kumaran) said...

உங்களுக்கும் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். :-)

இலவசக்கொத்தனார் said...

//சரி பின்னூட்டத்த வச்சி ஒரு பதிவு போட்ற வேண்டிதுதான்னு இப்ப இத எழுதுறன். இதுக்கு நீங்க பின்னூட்டம் போட்டு என்னோட சந்தேகங்கள தீர்த்து வச்சா நல்லாருக்கும் மகராச ராசிகளா ........... மறக்காம எழுதுங்க :-((//

வந்தாச்சு. போட்டாச்சு. இனியாவது உங்க அழுவானை சிரிப்பானாய் மாத்துங்க. :)

VSK said...

பின்னூட்டம் வந்து சேர்ந்த தகவல் தெரிவிக்கவும்!

VSK said...

உங்கள் செய்திகளின் வேகஓட்டத்தைக் கொஞ்சம் குறைக்க முடியுமா?

சும்மா, 'பொன்ஸானை' ரேஞ்சுக்குப் பறக்கிறீங்களே!!

Unknown said...

த‌மிழ்ம‌ண‌ ர‌ஜினி ர‌சிக‌ர் சார்பில் வ‌ரும் பின்னூட்ட‌ம் இதோ.அள‌வில்லாம‌ல் பின்னூட்ட‌ங்க‌ள் பெற்று பெறுவாழ்வு வாழ்க‌

Unknown said...

:-))))
உஷாக்கா
இலவசக்கொத்தனார்
பொன்ஸ்
குமரன்
எஸ்.கே எல்லாரோட ஊசியூட்டமும் வந்ததுல நான் இப்படி சிரிக்கிறேன்
நன்றி (ஹ்ம்ம்ம்ம்.... என்ன பன்ன நம்ம எழுதறது அப்பிடி கேட்டாத்தான் பின்னூட்டமே)

Unknown said...

//பொன்ஸானை//
முதல்ல புரில இப்ப புரியுது (பொன்ஸின் யானை) வேகத்த குறைக்கிறேன் ஆலோசனைக்கு நன்றி

//ரஜினி//
ஆகா ஒரு கமல் ரசிகனுக்கு ரஜினி ரசிகரின் வாழ்த்து யான் பெற்ற பாக்கியம் நன்றி $செல்வன்
( நீங்க அமேரிக்கால இருக்கறதால $ போட்டுக்குறீங்க நான் போட்டா 111 தான் போடலாம்)
சும்மா வெளாட்டுக்கு :))

இலவசக்கொத்தனார் said...

உங்க டெம்பிளேட்டில் அலைன்மெண்ட் ஜஸ்டிஃபைடா இருப்பதை லெப்ட் அலைண்டா மாத்துங்களேன். இல்லைன்னா என்னை மாதிரி நெருப்புநரி உலாவி பாவிப்பவர்களுக்கு சரியாய் தெரிவதில்லை.

Unknown said...

//அலைன்மென்ட்//
இது சி எஸ் எஸ் சில் எடுத்தாளப்படுகிறது அதனை எப்படி மாற்றுவதென்று அறியேன் (இப்பவே ஏதோ நானா முட்டி மோதி இந்த அளவு மாத்திட்டேன்) அதயும் மாற்ற ஆமைகிறேன்( பின்ன காலம் காலமா முயலத்தான சொல்றோம் அதான் ஒரு மாறுதலுக்கு:))

இலவசக்கொத்தனார் said...

புரியுதுங்க.

முயல்கிறேன் - சீக்கிரமா ஆரம்பிக்கிறது ஆனா முடிக்காம போறது.

ஆமைகிறேன் - நிதானமா ஆரம்பிச்சாலும் கட்டாயம் முடிக்கிறது.

சரிதானுங்களே நம்ம புரிதல்!

Unknown said...

அட இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் வருமா சரி சரி நாம ஒரு சுயமின்னேற்ற நூல் எழுதி எல்லாருக்கும் ப்ரீயா கொடுக்கலாம்போல (பின்ன காசுக்கு வித்தா யாரு வாங்குவா?)

துளசி கோபால் said...

சோதனை மேல் சோதனை

பின்னூட்டம் போட்டாச்சு.

இன்றைய நாளின் முதல் பின்னூட்டம்

News from Prasanna said...

pottachu pottachu