Monday, June 12, 2006

குவாட்டர் கோவிந்தன்

சென்னை வடபழனி சேலம் ஆர் ஆர் என் வி அருகே நம் கோவிந்தன் தனது நீண்டநாள் நண்பனுடன் (வேறயாரு கூட சேந்து தண்ணியடிக்கிற நாந்தான்)

கு.கோ: யப்பா என்னா வெயிலு இனிமே ஹாட் சாப்ட கூடாது கூல்தான் ஒன்லி பியர் மட்டும் தான்.
நான்: அடப்பாவி என்காசுல குவாட்டர் குடிக்கரதுக்கே என்னால செலவுபன்ன முடீல இதுல நீ பியர் சாப்டா என் சம்பளம் பூரா இங்கியே காலிடா.
கு.கோ: கவலையே படாத தலைவர் வந்துட்டார்ல ஒரு ரெண்டு ஏக்கர் நிலம் கிடைக்கும் அத வித்து செலவு பன்னலாம்டா.
நான்: டேய் அது நிலமில்லாத குடிமகனுக்கு நம்ம மாறி நிலத்துல விழுற குடிமகனுக்கு இல்ல.
கு.கோ: ஆமா விஜயகாந்து திருப்பி எலக்சன்ல நிக்கிறாறாம்? விருத்தாசலத்துலதான் ஜெயிச்சாரே?
நான்: இது நடிகர்சங்க தேர்தல்டா
கு.கோ: அப்றம் சட்டசபைக்கு எப்டி போவாரு? இத ராஜினாமா பன்னுவாரா?
நான்: அதெல்லாம் வேண்டாம்டா இது சும்மா பேருக்கு .
கு.கோ: அப்டியே ஜெயிச்சாலும் அவர் பதவில இருக்க முடியாது.
நான்: ஏன் ?
கு.கோ: ஒருத்தருக்கு ரெண்டு பதவி தப்பில்ல?
நான்: அது ஆதாயம் தற்ற ரெட்டை பதவிடா.
கு.கோ: ஆதாயமில்லாம எதுக்கு எலக்சன்? அதுசரி வைகோ மதிமுகவில இருந்து விலகிட்டாரே ஏன்டா?
நான்: ! எப்படா?
கு.கோ: பேப்பர்ல பாத்தனே அவர புது எலக்சன் கமிஷனரா போட்ருக்காங்க. கட்சில இருந்தா தருவாங்களா?
நான்: டேய் அது வேற கோபால்சாமிடா. ஐ.ஏ.எஸ்
கு.கோ: அப்றம் இன்னிக்கு தினமலர்ல பாத்தண்டா நெப்போலியனும் எஸ்.வி.சேகரும் கைகுடுத்துகிட்டாங்க ஒருவேள எஸ்.வி.சேகர் தி.மு.க வுக்கு வரப்போராறா?
நான்: அம்மாவுக்கு தெரிஞ்சுது மவனுக்கு சங்குதான்.
கு.கோ: அதெல்லாம் தெரியாதுடா.
நான்: ஏன் தெரியாது தினமலர் அவங்க பேப்பர்டா அத படிப்பாங்க.
கு.கோ: எப்பிடிறா எங்கம்மாதான் செத்துபோனாங்களே அப்டியே இருந்தாலும் யாரு எங்கருந்தா என்னன்னு எனக்கு குவாட்டர் வாங்க காசுகுடுப்பாங்க.
நான்: டேய் அடிக்கிற வெயிலு கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு. நான் சொன்னது ஜெயலலிதா அம்மாவ டா.
கு.கோ: அவங்க அம்மாவுந்தான் இல்லையேடா. நீ என்ன குழப்புற?
நான் : நானா? சொல்லுவடா.
கு.கோ: வர வர சென்ட்ரலு எதுக்கு எதுக்கு காசு தற்றதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சுடா.
நான்: எதுக்கு?
கு.கோ: பின்ன பாரு டெல்லி போன தலைவர் திட்ட செலவுக்குன்னு பல ஆயிரம் கோடி வாங்கிவந்தார்னு தமிழ்முரசுல போட்ருக்கு. இப்ப என்னா திட்றதுக்கு எலக்சனா வருது. அதான் கட்சி பணத்த செலவுபன்னுவாங்களே?
நான்: டேய் அது திட்டம் டா அரசு திட்டங்களுக்கு செய்யவேண்டிய செலவு.
கு.கோ: ராமதாஸ் சினிமாவுக்கு பரிசு தந்தார்ன்னு போட்ருக்கு?
நான்: அது இலக்கணம்ன்னு ஒரு நல்ல தமிழ்ப்படமாம்டா அதுக்கு தந்தார்.
கு.கோ: பிரஞ்சு ஓபன்னா என்னடா ஏதாவது பாட்டில் சமாச்சாரமா?
நான்: அது டென்னிஸ் விளையாட்டு ஏன் இப்டி ஒரு சந்தேகம் திடீர்னு?
கு.கோ. இல்ல பிரஞ்சு பியர் இருக்கே அதுமாதிரின்னு நெனச்சேன்டா. அத சாப்டிருக்கிடா? நல்லாருக்கும்னு சொன்னாங்க கமல் கூட அது நல்லாருக்கும்னு சொன்னார்டா ஒரு நாளைக்கு அத வாங்குனும்டா.
நான்: டேய்......... நீ கொஞ்சம் ஓவரா போறடா. பிரஞ்சு பியர்னா அது தாடிடா அத எப்பிட்றா குடிப்ப?
கு.கோ: டீசல் பெட்ரோல் வெலையிலாம் ஏறிபோச்சே இனிமே சாராய விலையும் ஏறுமாடா ?
நான்: இரு கலைஞர்ட்ட கேட்டு சொல்றன்.
கு.கோ: மிடாஸ் கலைஞருதாடா? அவர கேட்டா எப்பிட்றா தெரியும்? சசிய கேட்டா தெரியும்.
நான்: கோவிந்தா...... இப்ப இவருதான முதல்வர் அதால இவருதான் விலைய தீர்மாணிப்பாரு.
கு.கோ: அப்ப ஜெயலலிதா செஞ்சா தப்பா? எனக்கு ஒன்னும் புரிலடா.
நான்: புறியாதுடா ஒனக்கு இறங்கிபோச்சு வா இன்னும் ஒன்னு போட்டுகிட்டு வர்லாம்.

3 comments:

Unknown said...

Test COMMENTS

Bala said...

:-) :-) :-) :)))

வாய் விட்டு சிரிச்சேன். ரொம்ப அருமை.


http://balablooms.blogspot.com

Unknown said...

அப்டீயே நம்ம பிரண்டோட பேரயும் புகழையும் ஒரு நாளுபேருகிட்ட சொன்னா நல்லாத்தான இருக்கு
(பிரண்டு-கு.கோ தான் வேற யாரு:)